Saturday, June 15, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு- தாறு மாறு!!!


Share/Bookmark
"தீயா வேல செய்யனும் குமாரு... தியாகம் தான் உன்னை உயர்த்தும்"ன்னு புதுப்பேட்டை படத்துல தனுஷ பாத்து அழகம் பெருமாள் சொல்லுவாரு. அந்த டயலாக் ஃபேமஸ் ஆகி இப்போ பட டைட்டிலா வந்து நிக்குது. நிறைய பேரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்குறேன்னு சொல்லிகிட்டு வந்து நம்மள கொன்றுவாய்ங்க. உதாரணத்துக்கு நம்ம பாண்டிராஜ் ரெண்டு மாசத்துக்கு முன்னால கேடி பில்லான்னு ஒண்ண ரிலீஸ் பண்ணி நம்மள வெறிச்சி ஓடவச்சிட்டாரு. இன்னொருத்தரு spoof பண்றேன்னு வந்து "9 ல குரு"ன்னு ஒண்ணு ரிலீஸ் பண்ணாரு. மாடே டைரக்டா போயி அந்த போஸ்டர்ல எல்லாம் சாணி அடிச்சிது. உண்மையிலயே முழுநீள காமெடி படம் எடுக்குற தகுதி நம்மூர்ல ஒருத்தருக்கு இருக்குன்னா அது தலைவர் சுந்தர்.சி க்கு தான்.

முந்தாநாளூ என் தம்பி ஒருத்தண்ட "டேய் நம்ம தல சுந்தர்.சி எடுத்த TVSK போவோமானாணேன்.. அதுக்கு அவன் "அய்யோ அண்ணே...அதுல கழுதப்புலி (சித்தார்த்) நடிச்சிருக்கு போனா நம்மள கடிச்சி வச்சிரும்ணே"ன்னு பயமுறுத்துனான்.  நல்ல வேளை அந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கல. தல சுந்தர்.சி பெரும்பாலும் ஹீரோக்களை நம்பி படம் எடுக்கறதில்லை. சந்தானத்து மேல மட்டுமே நம்பிக்கை வச்சி எடுத்த படம் தான் இந்த தீயா வேலை செய்யனும் குமாரு.  தெலுங்குலயும் படத்த ஹிட்டாக்கனுமேன்னு தான் நம்ம சித்தார்த்த புடிச்சி போட்டுருப்பாங்க போல.

சுமார் பையனான குமாரு சூப்பர் புள்ளையான ஹன்சிகாவ எப்படியெல்லாம் கோல்மால் பண்ணி லவ் பண்ண வக்கிறாருங்கறதுதான் கதை. மெயின் ஹீரோவாக சந்தானமும் சைடு ஹீரோவாக சித்தார்த்தும் நடிச்சிருக்காங்க. காஃபி கப் உடைஞ்சதுக்கெல்லாம் ட்ரீட் கேக்குற மாதிரியான ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலைசெய்யிற சுமார் சித்தார்த் புதுசா join பண்ற ஹன்சிகாவ பல போட்டிக்கப்புறம் வலையில விழ வைக்கிறாரு. விஷயம் தெரிஞ்ச அடுத்த செகண்ட் கம்பெனில உள்ள எல்லாருக்கும் SMS அனுப்பி தண்டோரா போடுற ஒருத்தர், ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருக்க கணேஷ் வெங்கட்ராம கரெக்ட் பண்றதுக்காக ஃபுல் மேக்கப்புல சுத்துற கேர்ஸ்,  FM la பேசுற மாதிரியே இங்கயும் "சர்ர்ர் புர்ர்ர்ர்ன்னு " செம ஸ்பீடா பேசுற BIG FM பாலாஜின்னு அந்த கம்பெனில உள்ள  எல்லா கேரக்டருமே சூப்பர்.

முதல் இருபது நிமிஷம் BIG FM பாலாஜியோட சுமார் காமெடில பயணம் செய்யிற கதை சந்தானத்தோட "அதிரடிக்காரன்" ஸ்டைல் எண்ட்ரியிலருந்து டாப் கியர் போட்டு எகிரிடுது.  பொண்ணுகளை கரெக்ட் பண்றதுக்கு ஐடியா குடுக்குறதுக்காகவே ஆஃபீஸ் வச்சி அதுல டோக்கன் சிஸ்டம்லாம் வச்சி, ஓவ்வொரு ஐடியாவுக்கும் பல ஆயிரம் பணத்த பசங்ககிட்ட புடுங்குற கேரக்டர்ல சந்தானம். இந்த படத்துல இவர காமெடியன்னு சொல்றத விட ஹீரோன்னு சொல்றதே கரெக்ட்.

ஒரு சீன்ல விஷால் வர்றாரு. எல்லாரும் விஷால் கிட்ட ஆட்டோ கிராஃப் வாங்க, சந்தானம் வந்தோன டக்குன்னு விஷால் அவர்கிட்ட ஆட்டோஃக்ராப் வாங்குறாரு. “ஆர்யாவெல்லாம் ஆறு  மாசத்துக்கு ஆறு லட்ச ரூவா பில்லுகட்டுற அளவுக்கு என்கிட்ட ஐடியா கேப்பான்” ன்னும் “சல்மான் கானுக்கு லவ்வுல ஒரு ப்ராப்ளம் அதான் சால்வ் பண்ணி வக்க போயிருந்தேன்” ன்னு அங்கங்க செம ரவுசு.  சந்தானம் சித்தார்த்துக்கு ட்ரெயிங் குடுக்குற சீன்ஸ் எல்லாமே செம.

முதல்பாதி என்னதான் காமெடி நல்லா இருந்தாலும் அதுல சுந்தர்.சியோட டச் கொஞ்சம் கம்மியா இருந்தமாதிரி ஒரு ஃபீல். ஆனா செகண்ட் ஆஃப் ஆரம்பிச்சதுமே படத்துல தல சுந்தர்.சி யின் ரகளை ஆரம்பிச்சிடுது. தெறிக்க விட்டுருக்காரு. உண்மையிலயே ஒரு லெவல்ல சிரிச்சி சிரிச்சி வயித்து வலியே வந்துருச்சி. குறிப்பா சந்தானமும், மனோபாலாவும் வர்ற சீன்ஸ். மனோபாலா வர்ற  அந்த பத்து நிமிஷத்துல சந்தானம் "டேய் நட்ராஜ் பென்சில்" "டேய் குச்சி ஐஸ்" ன்னு எத்தனை  பேரு வக்கிறாரு. யப்பா...

ஹன்சிகா செம்ம அழகு. ரெண்டு நாளுக்கு முன்னால சுந்தர்.சி ஒரு டி.வி ஷோவுல "இந்த படத்துல ஏன் ஹன்சிகாவ ஹீரோயினா போட்டீங்க?"ங்குற கேள்விக்கு பதில் சொன்னாரு. "ஒரு அழகான  பொன்ன மாஞ்சு மாஞ்சு லவ் பண்றதுதான் கதையே.. இந்த கேரக்டருகு டக்குன்னு பாத்தோன புடிக்கிற மாதிரி ஒரு பேரழகியா இருக்கனும். உடனே டக்குன்னு எங்களுக்கு ஞாபகம் வந்தது  ஹன்சிகாதான்" ன்னாரு. கண்டிப்பா உண்மைதான்... அனுஷ்காவ கூட ஹன்சிகா பக்கத்துல நிக்க வச்சி பாத்த அசிங்கமா தான் இருக்கும் போல... அவ சிரிப்புக்கு முன்னால நா செதஞ்சி பொய்ட்டென் ஹையோ... ஐ லைக் இட். இந்த படத்துல ஹன்சிகா உடம்பு செமயா இளைச்சிடுச்சி. ஆனா மூஞ்சி மட்டும் இட்லி குண்டான் மாதிரி அப்டியே தான் இருக்கு.

பாஸ்கி கொஞ்ச சீனே வந்தாலும் சூப்பர். கலகலப்புல இருக்க அத்தனை பேரயும் இதுலயும் யூஸ் பண்ணிருக்காரு. மண்டை கசாயம், பேயி, திமிங்கலம் மூணு பேரும் ஒரு காமெடிக்கு வந்து  அசத்துறாங்க. சூது கவ்வும் இயக்கிய நளன் குமாரசாமியும் இதுல வசனம் எழுதிருக்காரு.  மியூசிக்ல கொறை சொல்ற மாதிரி எதுவும் இல்லை. எல்லா பாட்டுமே நல்லாதான் இருக்கு. பாட்டுங்க படமாக்கப்பட்ட லொக்கேஷன்ஸும் செம. ஆனா பாட்டுல காஸ்ட்யூம்ஸ்தான் கொஞ்சம் கப்பித்தனமா இருந்துச்சி.  படம் முடிஞ்சப்புறம் வர்ற "திருட்டு பசங்க" பாட்டுல ஹன்சிகாவயும் குஷ்பூவயும் மாத்தி மாத்தி காட்டுறாங்க.. ஆத்தாடி ரெண்டுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபுடிக்க முடியாது போல. அப்புடியே ஒரே மாதிரி இருக்காங்க.

சித்தார்த்தோட நடிப்பும் குறை சொல்ற மாதிரி இல்லை. ஆனா இந்த படத்து கதைக்கு 100%  பொருத்தமான ஆளூ தனுஷ் தான். தனுஷ் மட்டும் நடிச்சிருந்தா இந்த படம் எங்கயோ  போயிருக்கும். ஆரம்பத்துலருந்து படத்தோட கடைசி நிமிஷம் வரைக்கும் சிரிப்புக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு படம்.

சுருக்கமா சொன்னா சுந்தர்.சியோட இன்னொரு கலகலப்பு. கண்டிப்பா பாருங்க. நம்ம இமாம் அண்ணாச்சி ஸ்டைல்ல சொன்னா “எலே மிஸ் பண்ணிடாதிய... அப்புறம் வருத்தப்படுவிய...”   


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_8499.html) சென்று பார்க்கவும்... நன்றி...

முத்துசிவா said...

தகவலுக்கு நன்றி தல... :)

Anonymous said...

Hansika kevalama irukkku, adhu azhagiya, ayoo ayoo

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...