(சிங்கம்
சூர்யா Slang la ஆரம்பிங்க) கரடிய காட்டுல பாத்துருப்பீங்க...டிவில
பாத்துருப்பீங்க, ஃபோட்டோவுல பாத்துருப்பீங்க, zoo வுல பாத்துருப்பீங்க...
ஏன்? டி.ஆர் ரூபத்துல காமெடி பண்ணி கூட பாத்துருப்பீங்க .கப்பித்தனமா பஞ்ச்
டயலாக் பேசி பாத்துருக்கீங்களா? வெறித்தனமா வெரட்டி அடிக்கிறத (audience
ah) பாத்துருக்கீங்களா? இந்த குட்டிப்புலிய பாருங்க.. எல்லாமே உங்க கண்ணுல
தெரியும்... அழகிய தமிழ் மகன் படத்துல போய் நாம யாருடா அந்த அழகிய
தமிழ் மகன் இங்கன்னு தேடுன மாதிரி இங்கயும் போயி என்னடா புலின்னாய்ங்க இங்க
ஒரு எறுமை கண்ணுக்குட்டி இங்கயும் அங்கயும் ஓடிகிட்டு இருக்குன்னு பாக்க
வேண்டியிருக்கு. அதுலயும் பாருங்க அந்தாளு என்னானா நெப்போலியன விட 4 அடி
அதிக ஒயரமா இருக்காரு ஆனா பேரு "குட்டி" புலி... மனசாட்சி இருக்காவே
உங்களுக்கெல்லாம்...
ட்ரெயிலர் போடுறதுல நம்ம சன் பிக்சர்ஸ அடிச்சிக்க ஆளே கெடையாது... இல்லைன்னா இம்புட்டு பயலுகளையும் இத்தனை நாளா ஏமாத்தி இத்தனை படத்த ரிலீஸ் பண்ணிற முடியுமா? ட்ரெயிலர்ல பாக்கும்போது எதோ ஒரு அருமையான கிராமத்து ஆக்சன் + காதல் கதை போலருக்கு... இன்னிக்கு செம ஆக்சன் ப்ளாக்கு மாட்டிருக்குடோய்ன்னு பாத்தா அவிய்ங்கதான் நம்மள ஆக்சன் ப்ளாக்கா யூஸ் பண்ணிக்கிட்டாய்ங்க.. நேத்து வரைக்கும் இந்த சசி குமாரு நல்லாத்தானய்யா இருந்தாரு. எடுத்த 5 படத்துலயும் போராளி, ஈசன் படங்கள் below average னனாலும் எதோ வித்யாசமான ஒரு படம் பாத்த feel இருக்கும். ஆனா குட்டிப்புலி... ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்... கரடியின் கண்கள்......
ஆரம்பத்துல ஒரு அம்மா ஒரு ஊருக்குள்ள தொடைப்பம் வித்துகிட்டு வர்றப்போ சீட்டாடிகிட்டு இருக்க ஒரு கும்பல் அவங்கள கொஞ்சம் அசிங்கமா கிண்டல் பண்ணிடுறாங்க.. உடனே அந்த அம்மா அதோட தெருகாரங்கட்ட சொல்ல... "எலேய் நம்ம மேட்டுத்தெரு பொண்ண கிண்டல் பண்ணவன செய்யாம விடக்கூடாதுடா... "ன்னு உடனே அவன கொலை பண்ண ஒரு நாலு பேரு கோயில்ல சத்தியம் பண்ணிட்டு கெளம்புறாங்க... டேய் இப்ப என்னடா நடந்துச்சி... ஒரு புறாவுக்கு போரா... பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது...
ஏண்டா கிண்டல் பண்ணதுக்கெல்லாம் உங்க ஊர்ல கொல்லுவீங்களாடா.. அவன பழி வாங்கனும்னா போய் ஒரு கைய வெட்டுங்க... காலை ஒடைங்க... கொல்லுற அளவு என்னப்பா நடந்துச்சி... உடனே அந்த அசிங்கமா பேசுன நாய கொல்ல கெளம்புறாய்ங்க. அதுவும் சும்மா இல்லை அரவான் படத்துல ப்ளான் பண்ணி கொள்ளையடிக்கிற போற மாதிரி போறீங்க... இதுல பெரிய காமெடி என்னன்னா கிண்டல் பண்ணவன் மொத சீன்ல தெரு முக்குல உக்காந்து மூணு சீட்டு ஆடிகிட்டு இருப்பான். ஆனா அடுத்த சீன்ல இவங்க அவன் ஒரு பல காவலாளிகள் இருக்க பங்களாக்குள்ள வச்சி கொல்றாய்ங்க... என்னப்பா
நீங்களும் உங்க சீனும். அவன ஓரமா ஒரு சந்து பக்கம் கூப்டு கழுத்தறுத்துருந்தாலும் நல்லாருந்துருக்கும், இந்த வீரப்போர்ல ஒருத்தர் உயிர விட, அவர மேட்டுத்தெருவே சாமியா கும்புடுது..
அவரோட பையந்தேன் நம்ம சசி.. அவருக்கு ஒரு இண்ட்ரோ வச்சிருக்காய்ங்க பாருங்க.. ஒருபய கெடையாது அடிச்சிக்கிறதுக்கு. யாருமே ஓட்டமுடியாத சைக்கிள்ல ரெண்டு கையயும் விட்டுட்டு "ஈஈஈஈஈஈஈஈ" ன்னு இளிச்சா மாதிரி நம்மள நோக்கி வர்றாரு.. இத பாத்துட்டு நா கூட இவரு படத்துல சர்கஸ் காமிக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காரு போலன்னு நெனைச்சிட்டேன்... படம் ஆரம்பிச்சதுலருந்து வெறும் மொக்கை மொக்கை காமெடியா பண்ணிக்கிட்டு திரியிறாரு. இதுக்கு நடுவுல அப்பப்போ "தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்ஸ கூப்புடுவேன்.. தாய் நாட்டுக்கொரு ஆபத்துன்னா நானே ஓடுவேன்" மாதிரி "பொம்பளை நெனைச்சாதாண்டா நாமெல்லாம் ஆம்பள" ன்னு லேடீஸ கவர் பண்ற மாதிரி வசனம் பேசிட்டு திரியிறாரு.
வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரியே இவரும் கல்யாணம் வேண்டாம்னு அடம் புடிக்க அவங்க அம்மா சரண்யா கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் புடிக்கிறாங்க... இந்த கேப்புலதான் நம்ம டார்லிங் லஷ்மி மேனன் அதே தெருவுக்கு குடி வருது... கும்கிய கம்பேர் பண்ணும்போது இந்த படத்துல அழகு கொஞ்சம் கம்மிதான். லக்ஷ்மி மேனன் வீட்டுகு பீரோ எறக்கி வக்கப்போற நம்ம கரடி சார பாத்ததுமே அதுக்கு காதல் லைட்டா எட்டிப்பாக்குது.. என்னடா இவன் இந்தாள கரடி கரடின்னு சொல்றானேன்னு என்னை பாத்து வெறிக்காதீங்க.. சாதாரணமா விலங்குகளுக்கு தான் உடம்பு பூர முடியாவும் கண்ணு மட்டும் இல்லாமயும் இருக்கும்.. இந்த படத்துல சசிகுமாரும் அப்புடித்தான் இருக்காரு.. மூஞ்சி எங்கடா இருக்கு.? இருக்குன்னு எழுதிபோடுங்கடா...
ஒரு தடவ ஒரு குரூப் சம்பந்தமே இல்லாம (இனிமே சம்பந்த படுத்திக்குங்க) புலிவேஷம் போட்டுகிட்டு ரெண்டு வாலோட மேட்டுத்தெருவுக்குள்ள ஆடிட்டு வர கலவரம் வந்துருது. சிலம்பு போட்டி வக்கிறாங்க மேட்டுத்தெருவுலருந்து ஒரு பெருசும், ஒரு ஸ்கூல் பையனும் கம்பு சுத்தி அசத்துறாங்க. அப்புறம் வர்றாரு தலைவரு.. "பெருசாட்டம் பாத்த.. சிறுசாட்டம் பாத்த... இப்போ புலியாட்டம் பாக்குறியான்னு கம்பெடுத்தவுடனே பிண்ணி பெடலெடுக்கப் போறாருடோய்ன்னு நெனைப்போம்.. அதான் இல்லை... கோவில் படத்துல வடிவேலு கம்ப நடுவுல நட்டு வச்சி சுத்துன மாதிரி நம்மாளு கம்புசுத்தும்போது
கால காமிக்கிறாய்ங்க... பின்னாடிருந்து முதுக காமிக்கிறாய்ங்க... டேய் கம்பு எங்கடா... சரி போய் தொலைங்க...
அப்புறம் நம்மாளுக்கு ஒரு மேனரிசம் வேற... "வா வா வா" ன்னு ஒரு டயலாக்கு... சரி இத ஃபைட்டுல வில்லன பாத்து யூஸ் பண்ணா ஓக்கே... இப்ப பாருங்க... ஒரு குடிசை தீப்புடிச்சி எரிஞ்சிகிட்டு இருக்கு.. உள்ள ஒரு அம்மா தீயில எரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கு. உடனே மேலேருந்து குதிச்சி உள்ள போயி அதுக்கிட்ட நின்னு "வா வா வா வா வா" ன்னு எதோ டவுண் பஸ்ஸ ரிவர்ஸ் எடுக்குற மாதிரி கத்திக்கிட்டு இருக்காரு.. காப்பாத்த போனாமா படக்குன்னு காப்பாத்திட்டு வந்தமான்னு இல்லை.
பலபேர் கூடியிருக்குற மார்க்கெட்டுல ஒருத்தர கொலைபண்ற தமிழ்சினிமாவின் பாரம்பரிய வில்லன் ஒருத்தர் இருக்காரு. ஆளு செம கெத்து... அவரோடவும் சம்பந்தமே இல்லாத குட்டிப்புலி சம்பந்தப் படுத்திக்கிறாரு. எதுக்கா? படத்துல ஃபைட்டு வேணாமா? அதுக்கு தான்.. இந்த சைடு கேப்புல லக்ஷ்மி மேனன் கூட ரொமாண்ஸ் வேற ஓடிக்கிட்டு இருக்கு. சசிகுமார்- லக்ஷ்மிமேனன் காம்பினேஷன பத்தி நா சொல்லலியே... சும்மா சக்கரைப்பொங்கலுக்கு வடைகறி மாதிரி அப்புடி ஒரு ப்ரமாதமான காம்பினேசன். அருவைக்கு இருக்குறவிங்க பத்தாதுன்னு காலெஜ் ஸ்டூடண்ஸ்னு ஒரு நாலு பயலுகள போட்டு இன்னும் அருத்து கொண்ணுருக்காய்ங்க.
இன்னொரு கொடுமையான விஷயம் மியூசிக்கு... "அருவாக்காரன்... அழகன் பேரன்" பாட்ட தவற (அழகன் பேரன் - நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்) மத்த பாட்டெல்லாம் கப்பி. படத்துக்கு BGM புதுசா எதுவும் போடல... பழைய பாட்டுகள சில பல உருவி சுப்ரமணியபுரம் மாதிரி போட்டு காத கிழிச்சிட்டாய்ங்க.
எப்பவும் கைலிய கட்டி மடிச்சி விட்டுகிட்டு "பாலிருக்கீ... பலமிருக்கீ" காமெடில வர்ற கறிக்கடை பாய் மாதிரி திரிஞ்சிகிட்டு இருக்க சசிகுமாரு, திடீர்னு அவங்க அம்மா சரண்யா வாங்கி குடுத்த புது ட்ரெஸ போட்டுகிட்டு ஸ்பைக்ஸ் எல்லாம் வச்சிகிட்டு "yo yo" பாய் ஆயிடுறாரு. ஆயிட்டு சும்மா இருக்காரா.. சுரேஷ் பீட்டர்ஸோட "அக்கா மக அககா மக எனக்கொருத்தி இருந்தாடா " பாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடி பின்னி பெடலெடுக்குறாரு. படத்துல எனக்கு புடிச்சதே இந்த மூணு நிமிசம் மட்டும் தான். முனைவர் கு.ஞானசம்பந்தம் ஒரே சீன்ல வந்தாலும் செம.
என்னங்க தூக்கம் வருதா... இதோ க்ளைமாக்ஸ் வந்துருச்சி. வழக்கமா க்ளைமாக்ஸ்னா யாரையாச்சும் கொல்லனும். இந்தப் படத்துல சாவப்பொறது யாருன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கீங்களா? நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஓண்ணே ஒண்ணு தான். உங்கள் வீட்டின் அருகில் குட்டிப்புலி ஓடும் திரையரங்கத்துக்கு போய் படம் பாருங்க. என்சாய் பண்ணூங்க. படத்தோட முடிவுல உங்களுக்காக ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு. (குட்டிப்புலி க்ளைமாக்ஸ்ல கொல்லப்போறது உங்களத்தான்ன்னு நா சொல்லமாட்டேனே). பழைய சசிகுமாரின் தரமான படங்களின் எந்தவித தாக்கங்களும் இல்லாத இந்தப் படம் சன்பிக்சர்ஸால் வெளியிடப் படவேண்டிய அத்தனை தகுதிகளும் உடையது.

11 comments:
அட்டகாஷ்
வழமையான அட்டகாச பதிவு
"இந்தப் படம் சன்பிக்சர்ஸால் வெளியிடப் படவேண்டிய அத்தனை தகுதிகளும் உடையது" - வரிகள் மிகவும் நச்சென்று உள்ளது
வழமையான பதிவு....
கலக்கி எடுத்தீட்டிங்க
கலக்கி எடுத்தீட்டிங்க
குட்டி புலியின் ஜட்டியை உருவிட்டீங்க !! சூப்பர் விமர்சனம் ...சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு:)
http://www.facebook.com/bloorockz
இந்தபடம் ஒரு குப்பை, இன்னும் நல்லா விமர்சனம் பண்ணி இருக்கலாம்.
குட்டிபுலி இந்த படத்தின் இயக்குநர் மட்டும் கையில் கிடைத்தால்................
உங்களை படம் எடுக்க சொன்னால் கொலை,திருடு என்று பாடமா? நடத்துரிங்க,
படத்தில்,ஒரு காட்சி ஒரு பள்ளி சிறுவன் பள்ளி பேச்சுபோட்டியில் பேசுகிறார், அதற்காக அந்த சிறுவனை கொள்ள குலிபடை வைத்து கொள்கிறார், (இயக்குநர் உன்னை முதலில் உதைக்க வேண்டும்)ஏன் சமுதாயத்தை கெடுகின்றிர்
சசி அண்ணன் நீங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டிங்க......
போய் பழைய தொழில் இயக்குநர் வேலைய மட்டும் பாருங்க,
உங்க மனதில் ரஜினி என்று நினைப்போ!
சரண்யா மேடம் தேசிய அவார்டு வாங்கி இருக்கிறிங்க
கடைசி சீன்ல கழுத்தை அறுப்பது போலவா நடிப்பது ,
நீங்க அறுத்தது உங்க மேல் நம்பிக்கையை.....
மலேசியா பாடல் ரீமிக்ஸ் வேற........
மொத்தத்தில் இந்தப்படம் குப்பை..........

ஒரு சீனில் இவரு குடிப்பாரு அடுத்த சீனில் ஏன்டா குடிக்கிரது நாட்டுக்கு வீட்டுக்கு கேடுனு டயலாக் வேற.அடுத்த தெரு பையன் இவரு தெரு பொண்ண பார்த்த கொலை நடக்கும் ஆன இந்த பிக்காலி பய தெருவுல இருக்குர வயசான கிழடு முதல் வயசு பையன் வரைக்கும் ரூட்டு போடுவாங்க கேக்க ஆளு இல்லை.ஆத்த மேல சதிய இனிமேல் அறுவா தூக்க மாட்டேன் சொல்லிட்டு அடுத்த 5வது நொடியில் சண்க்குடை போறாரு....சரியான விளாங்கா வெட்டி படம். எம் பையன் சிங்கம் மாதிரி ஆன பேர்ர்ர் புர்ர்ர்லி.
"பலபேர் கூடியிருக்குற மார்க்கெட்டுல ஒருத்தர கொலைபண்ற தமிழ்சினிமாவின் பாரம்பரிய வில்லன் ஒருத்தர் இருக்காரு. ஆளு செம கெத்து... அவரோடவும் சம்பந்தமே இல்லாத குட்டிப்புலி சம்பந்தப் படுத்திக்கிறாரு. எதுக்கா? படத்துல ஃபைட்டு வேணாமா?"
"இன்னொரு கொடுமையான விஷயம் மியூசிக்கு... "அருவாக்காரன்... அழகன் பேரன்" பாட்ட தவற (அழகன் பேரன் - நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர்)"
Post a Comment