Tuesday, July 9, 2013

சிங்கம் 2- ஓடிருங்கலே!!!!


Share/Bookmark
நம்மூர்ல எலெக்சன் ப்ரச்சார கூட்டம் நடக்குறப்போ, ஒரு பெரிய ஸ்பீக்கர நம்ம வீட்டு வாசல்ல கட்டி தலீவரு ஆத்தோ ஆத்துன்னு ஆத்தி அறுத்துகிட்டு இருக்கும் போது இருக்கும் போது திடீர்னு கரண்டு போனா நமக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கும்? அதே மாதிரி ஃபீலிங்தான் இந்த படம் முடியும்போது நமக்கு. வக்காளி என்ன வாயிடா அது என்ன வாயி? படம் ஆரம்பிக்கும் போது வாய தொறந்தவன் எண்டு கார்டு போடுற வரைக்கும் மூடவே இல்லை. மழை காலத்துல தவளை கத்துற மாதிரி காய் மூய் காய் மூய்ன்னு.. கருமம்.எதோ நமக்கு வசனம் நல்லா பேச வருதுங்கறதால வண்டி வண்டியாவா பேசுறது?

இந்த படம் ரிலீஸான அன்னிக்கு ஒருத்தர் விமர்சனம் பாத்தேன். நான் "C" க்ளாஸ் ரசிகனா இந்த படத்த பாக்கனும்னு முடிவு பண்ணி உக்காந்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுன்னு. அதாவது நேரடியா அவருக்கு புடிச்சிருக்குன்னு சொன்னா யாராவது காலாய்சிருவாங்களாம். ஏன்பா.. "C" க்ளாஸ் ரசிகன்னா யாரு? எத எடுத்தாலும் பாக்குறவனா? A க்ளாஸ் ரசிகர்கள் (என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள்) காமெடிக்கு வாயத்தொரக்காம சிரிச்சான்னா அதே காமெடிக்கு  சத்தம்போட்டு சிரிக்கிறவன் சி க்ளாஸ் ரசிகன். நல்ல சீன் ஒண்ணு வந்தா கை தட்டி ரசிக்கிறவன் A க்ளாஸ் ரசிகன்னா அதுக்கே விசிலடிக்கிறவன் C க்ளாஸ் ரசிகன். இவ்வளவுதான் ரெண்டுக்கும் உள்ள வித்யாசமே தவற கண்டமேனிக்கு எவன் என்ன எடுத்தாலும் C செண்டர்ல பாப்பாய்ங்கன்னு அர்த்தம் கெடையாது.

சிங்கம் படம் எனக்கு ரொம்ப புடிச்ச படங்கள்ல ஒண்ணு. நா அதிக முறை பாத்த ஹரி மற்றும் சூர்யா படமும் சிங்கம் தான். பொதுவா ஹரி படங்கள்ல வித்யாசமா நாம எதாவது எதிர்பாத்து போனா நம்மள விட கேனையன் வேற யாரும் இருக்க முடியாது. மணல் மற்றும் மணல் சார்ந்த பகுதிகளிலேயே அதிகம் படம் எடுப்பாரு. தூத்துக்குடி திருநெல்வேலி காரைக்குடி போன்ற லொக்கேஷன்களை மட்டுமே நம்புவாரு. துப்பாக்கிகள விட அருவா மேல் அதிக நம்பிக்கை வைத்து படம் எடுக்குறவரு. இவர் எடுத்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். இருந்தாலும் போர் அடிக்காது. இவரு விக்ரம வச்சி எடுத்த "அருள்", பரத்த வச்சி எடுத்த "சேவல்" படங்கள தவற மத்த எல்லா படமுமே நல்லாதான் இருக்கும். அதுவும்  திரும்ப சூர்யாவோட கூட்டணி.. படம் கண்டிப்பா நல்லா இருக்கும்ங்கற நம்பிக்கைல போனேன். முதல் இரண்டு நாள்ல வந்த விமர்சனங்கள் எல்லாமே "சூப்பரா இருக்கு" "செமயா இருக்கு" "நல்லாருக்கு" இது மட்டும் தான்.

ஆனா சத்தியமா சிங்கம் முதல் பகுதியோட தரத்துல கால் பங்கு கூட இந்த இரண்டாம் பாகம் இல்லை. முதல் பகுதில ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு மளிகை கடை வைக்க போன நம்ம  தொரை சிங்கம். கடலோரத்துல நடக்குற  கடத்தல்கள கவனிக்கிறதுக்காக தூத்துகுடில ஒரு பள்ளி கூடத்துல NCC மாஸ்டரா வேலை பாக்குறாரு. படத்தோட முதல் காட்சிலயே ஹரி இப்படி ஒரு மாற்றத்த பண்ணிருப்பாருன்னு நா கொஞ்சம் கூட எதிர்பாக்கல. வழக்கமா அவர் படங்கள்ல ஃபைட்டுக்கு அப்புறம் தான் பாட்டு வரு. ஆனா இந்த படத்துல பாட்டுக்கு அப்புறம் ஃபைட்டு வருது. அப்பவே முடிவு தெரிஞ்சிது இது ஒரு வித்யாசமான படம்னு.

அந்த ஸ்கூல்ல படிக்கிற புள்ளைதான் நம்ம ஹன்சிகா. அங்க பாருங்க ஹன்சிகா ஸ்கூல்ல படிக்கிதுன்னோனயே ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சி. எனக்கும் அதே பீலிங்குதான். சூர்யாவுக்கு பெரிம்மா மாதிரி இருக்க ஹன்சிகா பள்ளி கூடத்துல பக்கிதுபா. அய்யா படத்துல நயன் தாரா, தாமிரபரணி படத்துல பானு போட்டுருந்த அதே சுடிதார் தான் இந்த புள்ளைக்கு காஸ்டியூமு. கலரு மட்டும் கொஞ்சம் வேற. முதல் காட்சில ஹன்சிகா ஸ்கூல்ல கொஸ்டின் பேப்பர திருடுறத அங்க  ஒட்டியிருந்த காண்டாக்ட் லென்ச வச்சி NCC மாஸ்டரு பல கணக்கு போட்டு கண்டுபுடிக்கிறாரு. யப்பா டேய்..டேய் யாப்பா.. ஆரம்பிச்சிட்டியாடா உன் வேலைய.

ஹரிக்கு காமெடிங்குற ஒரு விஷயம் சுட்டுப்போட்டாலும் வராது போல. ஸ்கூல்ல வேலைபாக்குறவரு சந்தானம்.  இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு காமெடி சீனுக்கு கூட சிரிப்பு வராத மாதிரி ஒரு செம காமெடி ட்ராக் பண்ணிருக்கரு பாருங்க செம. பாட்டு முடிஞ்சிது ஃபைட்டு முடிஞ்சிது. சந்தானத்தோட காமெடியும் முடிஞ்சிதா. அப்புறம் என்ன திரும்ப ஃபைட்டு வரணும்ல. வாலண்டியரா சம்பந்தமே இல்லாம ஒருத்தன் பள்ளி கூடத்துல தேசிய கீதம் பாடும் போது வந்து வம்பிழுக்க, இப்பிடி ஒரு சிட்சுவேசனதான தொரைசிங்கமும் எதிர்பாத்தாரு தொறந்துருவான் வாய... தேசிய கீதம்னா என்னனு தெரியுமாடா கொடின்னா என்னனு தெரியுமாடான்னு ஒரு ரெண்டு நிமிஷம் வாய மூடாமா டயாலாக்க ஒப்பிச்சிட்டு பின்னி பெடலெடுக்குறாரு.  இத பாத்ததும் நம்ம ஹன்சிகாவுக்கு லவ்வு லவ்வுதான் கவ்வு கவ்வுதான். அப்புறம் என்ன  போடுங்கடா பாட்ட.

படத்துக்கு எந்த மொழி வில்லன போடுறதுன்னு ஒரே கன்பீசன் போல.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய அனைத்து மொழிகள்லருந்தும் ஒவ்வொரு வில்லன கூட்டிவந்துருக்காய்ங்க. வக்காளி ஒரு படத்துக்கு எத்தனை வில்லண்டா. இது பத்தாதுன்னு ஒரு சவுத் ஆப்ரிக்கா வில்லன் வேற. பன்னி பத்து குட்டி போடும். ஆனா யானை ஒரே குட்டி தான் போடும். ஆனா பன்னிகுட்டி யானை குட்டிக்கு ஈடாகாதுங்கற மாதிரி (இதுவும் ஹரி படம் தான்) எத்தனை வில்லன் இருந்தா என்ன?  ஒரு ப்ரகாஷ்ராஜ் குடுத்த impact ல  கால் பங்கு கூட  இவிங்களால குடுக்க முடியல.  "ஆவடில துப்புனா அம்பத்தூர் நனையும்... தாம்பரத்துல தட்டுனா பாரிஸ் எகுரும்...இது மயில் வாகனம் கோட்டைடீ"ன்னு ப்ரகாஷ் ராஜ் கர்ஜிக்கும் போது யாப்பா... எப்புடி  இருக்கும். ஆனா இங்க அத்தனையும் டம்மி பீசு. சூர்யா தான் ஓவரா கத்துறான்னா இந்த பாஸ் என்கிற பாஸ்கரன்ல வர்ற ஒனிடா தலையன் அதுக்கு மேல. என்ன பேசுறான்னே தெரியாத மாதிரி ரகுமான். டம்மி பீஸா நம்ம வாஸிம் கான்.

முதல் பாதி முழுசுமே செம இழுவை. முதல் பகுதிய ரிலேட் பண்றமாதிரி வர்ற நாசர் அனுஷ்கா காட்சிங்க, ராதாரவி சுமித்ரா காட்சிங்க எல்லாமே எதோ நேரத்த கடத்தவே யூஸ் ஆகுது.படத்துல ரொம்ப பாவப்பட்ட ஜீவன் அனுஷ்காதான். மொத்தாமே ரெண்டு பாட்டுக்கு மட்டும் தான்யா வருது. படம் எதோ ஒரு மாதிரியா போயிட்டு இருக்க, திடீர்னு ஒரு புள்ளைய ஒரு கலவரத்துல ஒரு புள்ளைய அந்த ஒனிடா மண்டையன் தூக்கிட்டுறான். 

அவ்ளோதான் துரைசிங்கம் போலீஸா அவதாரம் எடுத்து அந்த புள்ளைய கண்டுபுடிச்சி குடுக்குறாரு. செம பர பரசீன்... அந்த புள்ளைய கண்டுபுடிச்சி அந்த ஒனிடா மண்டையன அடிச்சி தூக்கிட்டு வர்ற சீனெல்லாம் செம கெத்து.  அதுலருந்து இண்டர்லவல் வர்ற வரை ஒரு கால் மணி நேரம் படம் நல்லா தான் போச்சு. ஆனா இண்டர்வல் காட்சி அப்புடியே சிங்கம் 1ல ப்ரகாஷ்ராஜ் நல்லூர்ல மாட்டிக்கிற அதே சீன்.


அப்புறம் செகண்ட் ஆஃப்ல சூர்யா கையில எவன் எவன்லாம் மாட்டுறானோ அவனயெல்லாம் பொளேர் பொளேர்னு அடிச்சிகிட்டே இருக்காரு. கதை திரைக்கதைய வச்சி படம் ஓட்டி நான் பாத்துருக்கேன். ஆனா ஃபைட்ட வச்சே படம் ஓட்டுறத நா இங்கதான் பாக்குறேன். படத்துல  மொத்தம் ஒரு இருபத்தஞ்சி முப்பது ஃபைட்டு இருக்கும். இரண்டாவது பாதில வர்ற காட்சிகள் அத்தனையுமே சிங்கம் முதல் பகுதில வந்த காட்சிகளை கேரக்டருங்கள மட்டும் மாத்தி திரும்ப எடுத்த மாதிரி இருந்துச்சி. 

உதாரணமா நிழல்கள்ரவிகிட்ட ஒரு செமயான வசனம் பேசிட்டு உடனே ப்ரகாஷ்ரஜ் வீட்டுக்கு போயி "ஓங்கி அடிச்சா ஓண்ணரை டன் வெயிட்டு" டயலாக்க பேசுவாரு. அதே மாதிரி இங்க இன்னொரு மேலதிகாரிய புடிச்சி காய் மூய்னு திட்டிட்டு  நேரா வாசிம்கான பாக்க போயி "ஊரு விட்டு ஊரு நாடு விட்டு நாடு காடு விட்டு காடு"ன்னு வசனம் பேசுவாரு.

செகண்ட் ஹாஃப்ல படம் திக்கு தெரியாம எங்க எங்கயோ ஒடுது. அதுவும் ரொம்ப நேரம். ஸ்கார்ப்பியோ, பொலேரோன்னு காருங்க போறத வீடியோ எடுத்து அத fast farward பண்ணி விட்டுருக்காங்க. படம் ஸ்பீடா போகுதாம். எல்லா ஹரி படத்துலயும் உள்ள அருவை இது.  கார் போறத ஸ்பீடா காட்டுறதும், எப்போ பாத்தாலும் செல் ஃபோன்ல பேசுறமாதிரியே காட்சிங்க வைக்கிறதும். ஃபோன் பேசுற மாதிரி சீன் இல்லாம இவரால படமே எடுக்க முடியாது போல.

ரவுடிங்கள கும்பலா கூட்டிட்டு வந்து ஒரு ஏரியாவுக்குள்ள விட்டு "உங்களுக்கெல்லாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்புடி நடந்துச்சின்னு காட்டுறேன்னு போட்டு நாயடி அடிக்கிறாய்ங்க. அதுக்கும் மேல ஒரு சீன்ல அருவாலால சண்டை போடனும்ங்கறதுக்காவே சூர்யா துப்பாக்கிய ஒடைச்சி சர்வீஸுக்கு குடுக்குறாரு. என்னங்கடா டேய்.

படத்துல சந்தானம், விவேக் பண்ணாத காமெடிய நம்ம விஜயகுமார் பண்ணிருக்காரு. அவரு ஹோம் மினிஸ்டரு. அவரோட வேலை என்னனா நம்ம துரைசிங்கம் என்ன சொல்ராரோ அதுக்கு "சரியா சொன்னீங்க துரை சிங்கம்" "நீங்க இப்பவே சார்ஜ் எடுத்துக்குங்க துரைசிங்கம்" "அதே தான் துரை சிங்கம்" "ஆமா துரைசிங்கம்" "அப்புடி போடுங்க துரை சிங்கம்னு" சூர்யாவுக்கு ஆமாஞ்சாமி போடுறவேலை தான். விஜயகுமார்கிட்ட ஆப்ரேஷன் "D" ஆரம்பிக்கனும்னு மூச்சு விடாம சூர்யா பத்து ரூல்ஸ் சொல்றது அப்புடியே தென்னவன்ல கேப்டன் எலெக்ஷன் ரூல்ஸ் சொன்ன மாதிரியே இருந்துச்சி.

லோக்கல் வில்லன்களான வாசிம்கான், ரஹ்மான் ரெண்டு பேரும் சூர்யா பேசுற டயலாக்க கேக்க முடியாம காதுல ரத்தம் வந்து அவங்களா வந்து மாட்டிக்குறாங்க. ஆனா இண்டர்நேஷனல் வில்லன் டேனி சவுத் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச்சி போயிட ஓவர் நைட்டுல நம்மாளு சவுத் ஆப்ரிக்கா கெளம்பி போயி அங்க உள்ள ஆபீசர்களுக்கெல்லாம் ப்ளான் போட்டு குடுக்குறாரு. ஓட்ணது போதும்பா ரீலு அந்து போச்சி. நடுக்கடலுக்கு போட்ட எடுத்துட்டு வில்லன தொறத்தி 'U" turn எல்லாம் போட்டு வில்லனை புடிச்சி கொண்டுகிட்டு திரும்ப தூத்துகுடிக்கு  வந்துடுறாரு.

சூர்யாவ பத்தி சொல்லியே ஆவனும். ஆளு செம ஃபிட்டா இருக்காரு.போலீஸ் ஆஃபீசர் கேரக்டர் தான். ஆன அதுக்குன்னு எப்போ பாத்தாலும் கைய பின்னாடி இழுத்து வச்சி கான்கிரீட் போட்டு விட்ட மாதிரி வெரப்பாவே இருக்காரு. ஆனாலும் இது உலக வெரப்புடா சாமி. என்னதான் டயலாக் அதிகம் பேசினாலும், இப்போ இருக்க ஹீரோக்கள்ல எவ்வளவு பெரிய டயலாக்கயும் அசால்ட்டா பேசுறதுக்கு சூர்யாவையும் கார்த்தியையும் அடிச்சிக்க முடியாது.

yo yo... this is dspeeeeee.... lets sing and dance its singam dance இந்த மாதிரி கப்பிதனமான வேலையெல்லாம் பாக்க நம்ம DSP யால மட்டுமே முடியும். நா ஏற்கனவே ஒரு பதிவுல சொன்ன மாதிரி ஹாரிஸ் ஜெயராஜ் ஒரே அஞ்சி ட்யூன எல்லா பட்த்துலயும் போடுறவரு. ஆனா DSP  ஒரே ட்யூன ஒரே படத்துல 5 விதமா போடுறவரு. வாலே வாலே பாட்டும் அச்சமில்லை அச்சமில்லை பாட்டும் ஓக்கே. மத்தபடி BGM லாம் கப்பி.


மொத்ததுல ஒரு சில நல்ல காட்சிங்கள தவற வெறும் சத்தமும் வெட்டு குத்தும் தான். சிங்கம் முதல் பகுதியுடன் இதை ஒப்பிட்டு கூட பார்க்க முடியாது. ஹரி பட விரும்பிகள் பார்க்குறதுன்னா பாருங்க. ஹரி படம் பாத்த satisfaction கொஞ்சம் கூட இருக்காது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். இங்கே தில்லியிலும் பி.வி.ஆர்-ல் வெளியிட்டு இருக்கிறார்கள். போகப் போவதில்லை! :)

Manimaran said...

செம கலாய்ப்பு...

குரங்குபெடல் said...


அருமையான நகைச்சுவை அலசல் . .

"செகண்ட் ஹாஃப்ல படம் திக்கு தெரியாம எங்க எங்கயோ ஒடுது. அதுவும் ரொம்ப நேரம். ஸ்கார்ப்பியோ, பொலேரோன்னு காருங்க போறத வீடியோ எடுத்து அத fast farward பண்ணி விட்டுருக்காங்க. படம் ஸ்பீடா போகுதாம். எல்லா ஹரி படத்துலயும் உள்ள அருவை இது. கார் போறத ஸ்பீடா காட்டுறதும், எப்போ பாத்தாலும் செல் ஃபோன்ல பேசுறமாதிரியே காட்சிங்க வைக்கிறதும். ஃபோன் பேசுற மாதிரி சீன் இல்லாம இவரால படமே எடுக்க முடியாது போல.

ரவுடிங்கள கும்பலா கூட்டிட்டு வந்து ஒரு ஏரியாவுக்குள்ள விட்டு "உங்களுக்கெல்லாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை எப்புடி நடந்துச்சின்னு காட்டுறேன்னு போட்டு நாயடி அடிக்கிறாய்ங்க. அதுக்கும் மேல ஒரு சீன்ல அருவாலால சண்டை போடனும்ங்கறதுக்காவே சூர்யா துப்பாக்கிய ஒடைச்சி சர்வீஸுக்கு குடுக்குறாரு. என்னங்கடா டேய்.

படத்துல சந்தானம், விவேக் பண்ணாத காமெடிய நம்ம விஜயகுமார் பண்ணிருக்காரு. அவரு ஹோம் மினிஸ்டரு. அவரோட வேலை என்னனா நம்ம துரைசிங்கம் என்ன சொல்ராரோ அதுக்கு "சரியா சொன்னீங்க துரை சிங்கம்" "நீங்க இப்பவே சார்ஜ் எடுத்துக்குங்க துரைசிங்கம்" "அதே தான் துரை சிங்கம்" "ஆமா துரைசிங்கம்" "அப்புடி போடுங்க துரை சிங்கம்னு" சூர்யாவுக்கு ஆமாஞ்சாமி போடுறவேலை தான். விஜயகுமார்கிட்ட ஆப்ரேஷன் "D" ஆரம்பிக்கனும்னு மூச்சு விடாம சூர்யா பத்து ரூல்ஸ் சொல்றது அப்புடியே தென்னவன்ல கேப்டன் எலெக்ஷன் ரூல்ஸ் சொன்ன மாதிரியே இருந்துச்சி."


உச்சகட்டமாய் சிரிக்க வைத்த வரிகள்


பகிர்வுக்கு நன்றி

Unknown said...

என்னடா நம்ம முத்து இன்னும் களத்துல்ல இறங்களைஎன்னு நினச்சேன் சூப்பர் ஹாஹா

Anonymous said...

இந்தக் கால இளைஞர்கள் இப்படிப்பட்ட படங்களைக் காரித் துப்புகிறார்கள். படம் தோல்விதான்.

பல திரையரங்குகளில் காற்றாடத் தொடங்கி விட்டது. ஏதோ வெற்றி என பம்மாத்து வித்தை காட்டுகிறார்கள்.

Jayadev Das said...

படம் ரிலீசான மூணாம் நாளே வெற்றி விழா கொண்டாடும்போதே டவுட் பட்டேன்.........

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/cinema-reviews.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Bala said...

mariyaan padam paatheengala? padam yepdi?

RAVI said...

ஹா..ஹா..செம கலக்கல். தமிழ் சினிமா எப்பவுமே குண்டுசட்டிக்குள் குதிரைதான். திருந்தாது :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மரணக்கலாய்ங்கோ.............

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...