Wednesday, January 1, 2014

மைண்ட் ப்ளோயிங் படங்கள் - 2013


Share/Bookmark
நிஜமான மைண்ட் ப்ளோயிங் படங்கள்னா இதுங்க தான். பாத்துட்டு வரும்போது நம்ம மைண்டு ப்ளோ ஆயி எங்கயாது போயி முட்டிக்கலாம்னு தோணும். இதெல்லாம் நான் பாத்த சில மைண்டு  ப்ளோயிங் மற்றும் ஆசம் படங்கள். படங்களின் விமர்சனங்களுக்கு டைட்டிலை க்ளிக்குங்க.

10. சிங்கம் 2



இந்த படத்த மைண்டு ப்ளோயிங்னு சொல்றத விட Ear blowing ன்னு தான் சொல்லனும். உங்க வாய தூக்கி என் காதுல வைங்க பாஸ்ங்குற மாதிரி சூர்யா பேசுறதெல்லாம் நம்ம காதுல லவுடு ஸ்பீக்கர கட்டி விட்ட மாதிரி கொய்ய்ய்ங்குது. ஆனா சூர்யாவோட மிகப்பெரிய ஹிட்டு இந்தப்படம்.

9. ஆரம்பம்




ரசிகர்கள் நெனைச்சா எந்த படத்தை வேணாலும் ஹிட்டா ஆக்கலாம்ங்குறதுக்கு இந்தப்படம் ஒரு உதாரணம். அஜித்துங்குற ஒரே பேருக்காக ஒரு காட்டு மொக்கைய மிகப்பெரிய வெற்றிப்படமா மாத்தி விட்டுட்டாய்ங்க. இதுல நூறு கோடி 200 கோடின்னு எதேதோ பேசிக்குறாங்கப்போய்..


ரீமேக் பண்றேன்னு சொல்லிகிட்டு நல்ல படத்தையெல்லாம் நாறடிச்சிட்டு திரியிற ஒரு கூட்டத்தால எடுக்கப்பட்ட ஒரு கொடுமை இது. முழுக்க முழுக்க சிரிப்பே வராத அளவு எடுக்கப்பட்ட ஒரு காமெடிப்படம்

 குட்டிக்கரடின்னு பேரு வைக்கிறதுக்கு பதிலா குட்டிப்புலின்னு இந்த படத்துக்கு பேரு வச்சிட்டாய்ங்க போல. 



 கார்த்திக்கு 2013னோட ஆரம்பமே அலெக்ஸ் பாண்டியன்ங்குற அபார ஹிட்டோட ஆரம்பிச்சிதுன்னு சொன்னா அது மிகையாகாது. இதே போல இந்த வருஷமும் அவர் பல பன்றிகளை பெற வேண்டும்ங்கறது தான் என்னோட ஆசை.



 ஜெயம் ரவி அமீர் காம்பினேசன்ல வந்த ஒரு அற்புதமான படம். மிஸ் பண்ணவங்க தயவு செஞ்சி பாருங்க. சத்தியமா அதுக்கப்புறம் அமீர் படம் பாக்க மாட்டீங்க.



சில படங்கள் ஃப்ளாம் ஆவுறது தரித்திரம். ஆனா சில படங்கள் ஃப்ளாப் ஆவுறது சரித்திரம்.  அப்படி ஒரு படம் தான் இந்த தலைவா. இதப்பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதயெல்லாம் பின்னால வரலாறு பேசும். எல்லாரும் படிப்பாங்க.. ஹையோ ஹையோ..



காலங்கள் போற்றக்கூடிய,   செல்வராகவனின் இன்னுமொரு அரிய படைப்பு.




 நேசனல் அவார்டு டைரக்டரும் நேசனல் அவார்டு ஹீரோவும் சேந்து எடுத்த ஒரு ஆஸ்கார் அவார்டு படம் இது.

1. ஆல் இன் ஆல் அழகுராஜா




ஒருத்தன் இந்தப் படத்த முழுசா தியேட்டர்ல உக்காந்து பாத்துட்டு வந்துட்டான்னா ( தூங்காம) அவன மாதிரி பொறுமை சாலி யாருமே இல்லை. வாழ்க்கையில என்ன ப்ரச்சனை வந்தாலும் அவன் சமாளிச்சிருவான். அப்படி ஒரு செம படம். இந்தப் படம் தான் முதல் இடத்த புடிச்சிருக்குற இந்த வருசத்தோட பெஸ்டு மைண்டு ப்ளோயிங் படம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Prem S said...

நையாண்டி செம நையாண்டி கமென்ட்

Anonymous said...

nice comedy post....thx

Anonymous said...

nice one..happy new year brother muthusiva

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...