Sunday, January 12, 2014

வீரம் - இனிதான்ஆரம்பம்!!!


Share/Bookmark
ஒருபெரியகிராமம், அங்க ஒருபெரிய வீடுஅந்த வீட்டுல கண்டிப்பா வெள்ளை தலையோட ஒரு வயசான பாட்டி, சந்தைஊர்த்திருவிழா, வயக்காடு, வெள்ளை வேட்ஷ்டிசட்டை இந்த மாதிரி சூழல்ல ஒரு படம் எடுத்தால நம்மளையும் அறியாமஅந்தபடம்புடிச்சிடும். கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வீ.உதயகுமார், சுந்தர்.சிக்கு அப்புறம் அந்த டைப் படங்கள் வர்றதே ரொம்ப கம்மி ஆயிடுச்சிஇப்போ இந்த டைப் படம் எடுத்துக்கிட்டு இருக்கவரு நம்ம ஹரி.ஆனா அதுலயும் எப்பபாத்தாலும் வெட்டுங்கலேகுத்துங்கலேதூத்துக்குடிலே,திருநெல்வேலிலேஅதுலேஇதுலேன்னு ஒரு ப்ளசண்டான விஷயத்த விட அடி தடி தான் தூக்கலா இருக்கும். அப்டியில்லைன்னா முதல் பாதி காமெடி கிராமத்துலயும் ரெண்டாவது பாதி ஆக்ஷன் சிட்டிலயும் எடுத்து நம்மள வெறுப்பேத்துவாய்ங்க. ரொம்ப நாளுக்கு அப்புறம் நா மேல சொன்ன மாதிரியான சூழல்ல முழுக்க முழுக்க கிராமத்து லொக்கேஷன்லயே ஒரு சூப்பரான ஆக்ஷன் மசாலாவ எந்த குறையும் இல்லாம அதுவும் தல அஜித்த வச்சி எடுத்து குடுத்ததுக்கு முதல்ல நம்மாளு சிவாவுக்கு நன்றி.

அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற மாதிரியான ஒரு படம்வழக்கமா விஜய் படம் கூட அஜித் படம் ரிலீஸ் ஆகுற சமயங்கள்ல பாத்தா விஜய் படம் மொக்கையா இருக்கும்ஆனா அஜித் படம் ரொம்ப மொக்கையா இருக்கும்அதனால விஜய் படங்கள் ஹிட்டாயிட்டு இருந்துச்சிமாறா இந்த தடவ அப்புடியே மாறி அஜித் படம் பட்டைய கெளப்ப ஆரம்பிச்சிருக்குஏன்னா காத்து என்னிக்குமே ஒரே பக்கம் அடிக்காதுல்ல. என்ன நாஞ்சொல்றது?  ஆரம்பத்தோட ஓப்பனிங்க பாத்தாவது ஜில்லா டீம் கொஞ்சம் யோசிச்சி களத்துல எறங்கிருக்கலாம்.

படத்தோட கதையோ இல்லை அங்கங்க வர்ற டிவிஸ்டோ புதுசுன்னு சொல்ல முடியாதுஏன்னா பல தெலுங்கு படங்கள்ல வந்த மாதிரியான கதைதான்ஆனா அந்த இடத்துல அஜித்த வச்சி பண்ணும் போது எல்லாமே புதுசா இருக்கு.அஜித் இந்த மாதிரி ஃபுல்&ஃபுல் ஆக்ஷன்,  காமெடி செண்டிமெண்ட் கலந்த மசாலா பண்ணதில்லைன்னு சொல்லலாம். பண்ணிருந்தாலும் இவ்வளவு சிறப்பா இதுக்கு முன்னால வந்ததில்லை.தெறிக்க விட்டுருக்காரு. முதல் பாதில அஜித்த தேவையான அளவு யூஸ் பண்ணிகிட்டு மத்த இடத்துலயெல்லாம் சந்தானத்த வச்சி காமெடில பூந்து விளையாடிருக்காங்க.

அங்கங்க கொஞ்சம் மாஸ் சீனுவழக்கம்போல செமையான இண்டர்வல் ப்ளாக்செகண்ட் ஹாஃப்ல கொஞ்சம் கூட ஃபோர் அடிக்காத சீன்ஸ்ன்னு ஒரு மசாலா படத்துக்கு உண்டான எல்லாமே பக்காவா செட் ஆயிருக்கு. விஜய் கில்லி, திருப்பாச்சி, சிவகாசி படங்கள் நடிச்சப்போ இது மாதிரி ஒரு பார்முலாவ புடிச்சிதான் ஹிட்டடிச்சிகிட்டு இருந்தாருஅங்கங்கமிஸ் ஆயிட்டு இருந்த அஜித் இப்போ ட்ராக்க கரெக்டா கப்புன்னு புடிச்சிருக்காருக்ளைமாக்ஸ்ல அஜித் முகத்துல சிரிப்ப பாக்கும் போது வின்னர்ல வடிவேலு சொல்ற டயலாக் தான் ஞாபகம் வந்துச்சி. “ஏன்பா இதவச்சிச்தானே சிட்டில இருக்க அத்தனை பேரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க. இந்த அண்ணேன் கிராமத்துல இருக்கவிங்கள ஏமாத்திக்க கூடாதா?” ன்னு கேக்குற மாதிரி இருக்கு.

ரஜினி பட டைப் மாஸ் சீன்கள் சிலவும் அங்கங்க இருந்துச்சிபடைப்பாவுல மன்சூர் அலிகான் மணிவண்ணன வீட்ட விட்டு காலி பண்ணிட்டு இருப்பாரு.“ நீயும் இப்போ தர்றேன் அப்போ தர்றேன்ங்குற நானும் நீ கேட்ட டைமெல்லாம் குடுத்து பாத்துட்டேன்இனி யார் வந்தாலும் ஆட்ட முடியாதுஅந்த ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாதுங்குறேன்ம்பாறுஅப்போ ஒரு சின்ன பையன் ஒரு துண்டு சீட்ட கொண்டு வந்துகுடுப்பான்ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாதுன்னு சொன்னவரு தலைவர் கிட்டருந்து வந்த அந்த துண்டு சீட்ட பாத்து கால் நடுக்கம் எடுத்து எந்திரிப்பாரு. இதுக்கு மேல ஒரு மாஸ் சீன் வைக்க முடியாதுஅதேமாதிரி ஒரு சில சீனும் இந்த படத்துல அங்கங்க வச்சி பட்டைய கெளப்பிருக்காங்க.

பில்லா 2 ல அஜித்த போட்டு குத்து குத்துன்னு குத்துவாய்ங்க. ஆனா அதபாக்கும் போது எனக்கு எதுமே தோணல.“ரத்தம் சரியா வரல பாரு இன்னும் ரெண்டு போடுன்னு சொல்லத்தான் தோணுச்சிஆனா இந்த படத்துல அஜித் அடிவாங்கும் போது என்னவோ ரொம்ப கஷ்டமா இருந்துச்சிஎப்போ ஒரு ஹீரோ அடி வாங்கும் போது நமக்கு வலிக்குதோ, ஹீரோ அழும்போது நமக்கும் அழுகை வருதோ அப்போவே அந்த படம் நம்ம மனசுல நின்னுருச்சின்னு அர்த்தம்ஜெயிச்சிருச்சின்னு அர்த்தம். இதுக்கு மேல என்ன நாஞ்சொல்றது?

படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ்ஸும் ஒருத்தர்தான்மைனஸூம் ஒருத்தர் தான்யாரு அந்த ஒருத்தர்ன்னு தானே கேக்குறீங்க. சரிக் கமப் பதநீசே.. கபக் கபக் கப கபக் கபக் கப ஜல்சே..நம்ம  DSP தான்பாட்டை ஒழுங்கா போட்டவரு அங்கங்க BGMல சொதப்பிட்டாருஇண்டர்வல் சீன்லயெல்லாம் தல வெறித்தனமா சண்டை போட்டு கிட்டு இருப்பாரு இந்த நாயி கப்பித்தனமா எதோ மியூசிக் போட்டு கிட்டு இருக்கு. அந்தநல்லவன்னு சொல்வாங்க” தீமும், “வீரம்” தீமும் போட்டு எல்லா இடத்துலயும் ரொப்பிருக்கதால ஓரளவுக்கு பரவால. ஆனா  BGM இன்னும் சிறப்பா பண்ணிருக்கலாம்ஆயிரம் தான் சொன்னாலும் BGM ல யுவன் யுவன் தான்பா.

தமன்னாவ i am like very much. ஆனா அஜித்தோட இந்த கெட்டப்புக்கும், தல முடிக்கும் தமன்னாவ பக்கத்துல நிக்க வச்சா சர்க்கரை பொங்கலுக்கு வடைகறி காம்பினேஷன்ல இருக்குமேன்னு ரொம்ப பயந்தேன்ஆனா அந்த அளவு மோசமா இல்லைஆனா இதுல டைரக்டரோட டேலண்ட்ட நாம புரிஞ்சிக்கனும்கூட்டி கழிச்சி பாத்தா பாட்ட தவற ஒரு 5 ஷாட் தான் அஜித்தும் தமன்னாவும் ஸ்கிரீன்ல ஒண்ணா இருப்பாங்க. சிவா ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறாரைய்யா... தமன்னா சூப்பர். செம அழகு (டயலாக் பேசாம இருக்க வரைக்கும்). அந்த சிரிப்புக்காகவே என்ன வேணாலும் செய்யலாம்.

படத்த ஃபுல்லா கிராமத்துல எடுத்தவங்க பாட்டுகளையும் அப்டியே எடுத்துருக்கலாம்இண்ரோ சாங் சூப்பர் picturization சூப்பர்படத்துல மொத்தமேபாட்ட மட்டும் வச்சது அதவிட சூப்பர்ஆனா ரெண்டு பாட்டுக்கு ஃபாரின் பொய்ட்டாங்க.  அது கூட பரவால்லைஅஜித்துக்கு கோட்ட மாட்டி விட்டு கடுப்பேத்துறாங்க மை லார்ட்இப்போ கோட்டு ரொம்ப முக்கியாமா? என்னங்க?பாட்டு ஸ்னோவுல எடுத்ததால தல குளுருதுன்னு கோட்டு போட்டுருக்காரா?யோவ் ஃபுல் ட்ரெஸ் போட்டுகிட்டு ஆடுற உங்க தலைக்கே இவ்வளவு குளுருதுன்னா இடுப்பெல்லாம் ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு டான்ஸ் ஆடுற எங்க தமன்னாவுக்கு குளுறாதாகுளுருதுன்னு அதுக்கும் ஒரு கோட்ட மாட்டி விட்டுட்டா யாராவது பாட்ட பாக்க முடியுமாய்யா?

சிறுத்தை சிவாவ பத்தி சொல்லியே ஆவனும்அவரு கடைசியா ரவிதேஜாவ வச்சி தெலுகுல  “தருவுன்னு ஒரு படம் எடுத்தாருஅத பாத்துட்டு எனக்கு மூணு நாளு உடம்பு சரியில்லாம போயிருச்சிஆனா இந்த படத்துல உசாரா முழிச்சிக்கிட்டு தெலுங்கையும் தமிழையும் கலந்து விட்டு அடிச்சிதலக்கு ஏத்த மாதிரியான ஒரு சூப்பர் மசாலா படத்த கரெக்டான டைமுல குடுத்துருக்காரு. அஸிஸ்டண்ட் டைரகடர் கதைங்களையும் சுட்டுகதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்”  அத்தனைக்கும் தன்னோட பேர போடுற டைரக்டருங்க மத்தியில  A film by Siva & Team ன்னு போட்டதுல எதோ வித்யாசமானவரா தெரியிறாரு சிவா.

ஒரு சில சீன்கள் அங்கங்கருந்து சுட்டு போட்டுருக்கார். ஒரு ஃபைட்டுல தர்மத்தின் தலைவன் படத்துல ரஜினி படுத்துக்கிட்டு பிரபுகிட்ட “ஏர்ல சுத்தி ஒரு கிக்குகுடு கண்ணா” “பின்னால வர்றான் பாரு..அப்டியே மிதி” ன்னு சொல்ல சொல்ல பிரபு சண்டை போடுவாறு. அதேமாதிரி இங்கயும் ஒண்ணு இருக்கு. அத்தாரிண்டிக்கி தேரெதிங்குற பவன் கல்யான் படத்துல வர்ற ப்ரம்மாணந்தம் ட்ராமா காமெடிய அப்டியே இங்க தம்பி ராமையாவ வச்சி எடுத்துருக்காரு. ஆனா அதெல்லாம் ஒண்ணும் பெரிய குறையா தெரியல. ட்ரெயிலர்ல வந்தஅண்ணன்டாதம்பிங்கடா” டையலாக்க பாத்து சிரிப்பாவந்துச்சி.ஆனாபடத்துலயே அத காமெடி சீனுக்குதான் வச்சிருக்காய்ங்க.

ஜில்லா டீமுதான் ட்ரெயிலர்ல அஜித்த தாக்குற மாதிரி டயலாக் வச்சிருக்காய்ங்கன்னு பாத்த இவிங்க சைலண்டா அங்கங்க ரெண்டு மூண சொருகி விட்டுருக்காய்ங்கஒரு சீன்ல வில்லன் அஜித்த பாத்துதல கால் புரியாம ஆடிட்டேன் விநாயகம். .இப்போ தல எது கால் எதுன்னு கரெக்டா புரிஞ்சி போச்சின்னுசொல்றாருஇன்னொரு சீன்ல வில்லன் அஜித்த பாத்து  “டேய்... விழுந்துட்ட விழுந்துட்டன்னு பாத்தா எத்தனை தடவ விழுந்தாலும் எழுந்து நிக்கிறியேடா” ங்குறாரு. .சரி சரி நடத்துங்கடா நடத்துங்கடா...

இந்த படம் விஜய் ரசிகர்கள் சிலர எப்படி பாதிச்சிருக்குங்குறதுக்கு ஒரு சின்ன உதாரணம்எங்க கம்பெனில ஒரு அண்ணன் விஜய் ஃபேன்வீரம் ட்ரெயிலரபாத்து மெரண்டுடேய் என்னடா இந்த படம் செமய ஓடிரும் போலவேன்னு பாவமா சொன்னாரு.அதுக்கு நாஅண்ணேன் அப்டியெல்லாம் இல்லைண்ணே..சிறுத்தை சிவா எடுத்த கடைசி படத்த பாத்தா ரத்த வாந்தி எடுப்பீங்க. .அவனல்லாம் நம்ப முடியாது.. கண்டிப்பா கவுத்துருவான்” ன்னு சொல்லி மனச தேத்தி விட்டுருந்தேன்அப்புறம் வீரம் நல்லாருக்குன்னு தெறிஞ்ச உடனே நேத்து போன்ல மனசுடைஞ்சி பேசிட்டு இருந்தவரு டேய் அஜித்துக்கு அடுத்த படம் கெளதம் மேனனாண்டா.. . போச்சு. .அதுவும் ஓடிரும் ன்னாருஅதுக்கு நாஅண்ணேன்.. கவலையே படாதீங்க..கெளதம் மேனன்லாம் வேலைக்கே ஆவமாட்டான்கண்டிப்பா கவுத்துருவான்ண்ணேன்” உடனே அவரு டென்சனாயிடேய் யார் பேச்ச வேணாலும் கேப்பேன்இனிமே உன் பேச்ச மட்டும் கேக்கவே மாட்டேண்டா.. இப்டிதான் சிறுத்தை சிவா மொக்கைன்னு சொன்ன..அவன் என்னன்னா மூணுமாசத்துல செமையா படம் எடுத்து இப்புடி வாங்கிப் போட்டு குத்திருக்கான்இனிமே இவனுங்கள ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வச்சிட்டாரு.

ரொம்ப நாளா கண்ணை மூடிக்கிட்டு கண்ட கதையில யெல்லாம் நடிச்சிகிட்டு இருந்த அஜித் இப்போ ஒரு ரெண்டு வருஷமா ஒரளவு முழிச்சிக்கிட்டு இருக்காரு .அதுக்கு ஒரு நல்ல உதாரணம் தான் இந்த வீரம்இனியாவது ரசிகர்கள ஏமாத்தாம அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல பொழுதுபோக்கு படங்கள தல தருவார்னு நம்புவோம். 2014 லோடஆரம்பமே” ”வீரத்தோட ரொம்ப  ”அமர்களமா” தொடங்கிருக்கு. இதுல எந்தவில்லன்கமும் இல்லாம அட்டகாசமா”  தொடரனும்னு  ஆஞ்சினேயா” வயும்,திருப்பதிஏழுமலையானையும் வேண்டிக்குவோம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

19 comments:

Anonymous said...

Good one mate

Anonymous said...

veeram - sagikila.... Jilla - mudila....

Anonymous said...

mokka review for mokka film... boss unga style review illa ithu... don't post these kind of jalra review...

Anonymous said...

semma review ma.. sila peru commercial nale oru madhiri mattamana review a eludhuvaanga.. pidichirundha kooda othuka maatanga..

Rajarajan said...

super boss, if u remember last time u reply one of my comment for ARRAMBAM review..."i'm not against thala, padam nalla illa na nalla illanu than solluvan...nalla iruntha kandipa nalla irukunu solluvan, veeramavathu nalla irukanu papaom" ...sonna solla maintain panitinga bosss....expecting jilla review in style......Raja

Anonymous said...

Super film from thala....super review from you..happy pongal...

Anonymous said...

aarambam is better than dis movie

Anonymous said...

Eppa than sir correct review koduththirukkinka

Anonymous said...

ithu oru mokka padam... ithuve vijay intha type padathil nadithal neenga semmaya kalaipinga... but ajith filmku massnu solringa..

முத்துசிவா said...

//Anonymous //

//mokka review for mokka film... boss unga style review illa ithu... don't post these kind of jalra review.//

பாஸ் உங்க கமெண்டுல இருந்து ஒண்ணு மட்டும் தெரியிது. நான் எல்லா படத்தையும் நல்லா இல்லைன்னு சொல்ற ஆள் கிடையாது. எனக்கு பிடிக்காத படங்களை மட்டும்தான் நல்லா இல்லைன்னு சொல்லுவேன். யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டியதில்லை. அஜித்துக்குநான் ஜால்ரா அடிக்கிறேன்னு நீங்க நெனைச்சா ஆரம்பம, பில்லா 2 விமர்சனங்களை கொஞ்சம் பாத்துட்டு வாங்க

முத்துசிவா said...

@rajarajan:
// if u remember last time u reply one of my comment for ARRAMBAM review..."i'm not against thala, padam nalla illa na nalla illanu than solluvan...nalla iruntha kandipa nalla irukunu solluvan, veeramavathu nalla irukanu papaom" ...s//

ஆமாமா .. ஞாபகம் இருக்கு :-)

முத்துசிவா said...


Anonymous
//ithuve vijay intha type padathil nadithal neenga semmaya kalaipinga... but ajith filmku massnu solringa.. //

எல்லா ரோலும் எல்லாருக்கும் செட் ஆயிடாது நண்பா. நமக்கு என்ன வருமோ அதத்தான் பண்ணனும். விஜய் இந்த படத்துல நடிச்சிருந்தா கண்டிப்பா நல்லா இருந்துருக்காது. கொஞ்சம் யோசிச்சி பாருங்க :-)

Unknown said...

Nice review. .

Unknown said...

Nice review. .

Unknown said...

Nice review. ...

vivek kayamozhi said...

Mass film for thala...
Happy thala pongal...

aghampuram said...

அருமை

Unknown said...

Veeram opening vida jilla opening athikam

JILLA- 11.23cr
VEERAM- 9.36cr

Anonymous said...

super movie.....super review bosss...thala summa therikka vidararu..............

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...