Thursday, January 2, 2014

சூப்பர் படங்கள் - 2013


Share/Bookmark
போன வருஷத்த கம்பேர் பண்ணி பாக்கும்போது இந்த வருஷம் எவ்வளவோ பரவால்ல. போன வருசம் நல்ல பத்து படத்த தேடி கண்டுபுடிக்கிறதே பெரும்பாடா போச்சு. இந்த வருஷம் எக்கச்சக்கமான நல்ல படங்கள் வந்து பட்டைய கெளப்பிருக்கு. படம் ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலயே ஹிட்டாக்கப்பட்ட தங்கமீன்கள், ராஜா ராணிய மட்டும் என்னவோ இன்னும் பாக்க பிடிக்கல.  மத்தபடி நான் பார்த்த சில நல்ல படங்களோட வரிசை. விமர்சனத்துக்கு டைட்டில க்ளிக்குங்க.

10. a.ஹரிதாஸ்

 சிம்பிளான ஒரு கதைய எடுத்துக்கிட்டு ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் ஒரு நீட்டான ஸ்க்ரீன் ப்ளேல கொண்டு போயிருந்த ஒரு நல்ல படம்.




கமர்ஷியலா படம் ப்ளாப்.. நிறைய பேருக்கு படம் பிடிக்கலை. ஆனா  செகண்ட் ஹாஃப்ல வர்ற ஒரு சில காட்சிகள தவற மற்றபடி தரமான ஒரு படம்.  ஆடுகளத்துக்கு அப்புறம் தனுஷ் ஒரு செம ஆக்டர்னு மறுபடி ப்ரூப் பண்ண படம்






நம்ம டீம்ல ஷேவாக் விக்கெட்ட மட்டும் கணக்குல எடுக்கவே முடியாது. சில சமயம் மொத விக்கெட் எப்பவுமே ஃப்ரீ விக்கெட் மாதிரி தான். 9 விக்கெட் கணக்குல வச்சிகிட்டு மத்தவங்க தான் டீம காப்பாத்தனும். அது மாதிரி இந்த படத்துல இருந்த ரெண்டு விக்கெட்டுல பாலாங்குற விக்கெட் ஃப்ரீ விக்கெட்டு. எந்த ப்ரயோஜனமும் இல்லைன்னாலும் தனி ஆளா படத்த தூக்கி நிறுத்திய பெருமை விஜய் சேதுபதிக்கு தான். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்த தியேட்டர விட்டு சீக்கிரமா ஒழிச்ச பெருமையும் இந்த படத்தையே சாரும்




அவன் இவனுக்கு  ஒரு கப்பிக்கு அப்புறம் பாலாகிட்டருந்து வந்த இன்னொரு தரமான படம்


வருஷ கடைசில வந்தாலும் கார்த்திக்கு கைகுடுத்த ஒரு படம்

 

8. எதிர் நீச்சல்

இந்த வருஷத்தோட most successful hero நம்மாளு தான்.  கேடிபில்லா கில்லாடி ரங்கா கைவிட்டாலும் அடுத்த மாசமே எதிர்நீச்சல இறக்கி ஹிட்டடிச்சவரு.




ரொம்ப நாளுக்கு அப்புறம் விஷாலுக்கு ஒரு நல்ல படம். வழக்கமான விஷால் படங்கள் மாதிரி இல்லாம எடுத்ததே இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம்



6.மூடர் கூடம்

பாண்டிராஜின் தயாரிப்புல வந்த இந்த படம் வந்ததும் போனதும் தெரியலன்னாலும் சூப்பரான ஒரு படம்.  பெரிய செட்டு, நிறைய பணம்னு இல்லாம கம்மியான கேரக்டர்களோட ஒரு வீட்டுக்குள்ளயே கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்து பட்டைய கெளப்பிருந்தாரு டைரக்டர் நவீன்.  அந்த நாலு மெயின் கேரக்டரோட வடிவமைப்பும், கடைசி வரைக்கும் அத மெயிண்டெய்ண் பன்னி கொண்டு போனதும் சூப்பர். செண்ட்ராய் படத்துக்கு இன்னொரு பலம்





 அதுவா வந்துருந்தா சுமாரா ஓடி ஒரு வாரத்துல போயிருக்கும். ஆனா சும்மா இருந்த படத்த நோண்டி விட்டு எக்கச்சக்கமா விளம்பரம் குடுத்து இந்த வருஷத்தோட மெகா ஹிட் படமாக்கிட்டாங்க. இரண்டாவது பாதி மொக்கன்னாலும் கமலுக்காகவும், அவரோட வித்யாசமான முயற்சிகளுக்காவும் கண்டிப்பா பாக்கவேண்டிய ஒரு படம்



4. வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இந்த வருஷத்தோட இன்னொரு சூப்பர் ஹிட் படம். அதுக்கு முக்கியமான் ஒரு காரணம் இமான். எல்லா பாட்டும் பட்டைய கெளப்பிருந்தாரு. படம் ஹிட்டாச்சோ இல்லியோ நம்ம ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீ திவ்யா செம ஹிட்டாயிருச்சி. ஒரே படம் ஓஹோன்னு வாழ்க்கைங்குறது இது தான். 



விஜய் சேதுபதிய அடுத்த லெவலுக்கு கொண்டு போன படம். விஜய் சேதுபதி ரசிகர்களை ரெண்டு மடங்காக்கிய படம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் படம் ஓட காரணமா இருந்த படம்.   பீட்சாவுக்கு அப்புறம் அவருக்கு பெரிய மார்க்கெட் கிடைக்க காரணமே இந்த படத்தோட தாறு மாறு வெற்றிதான்.

 
 

 தலைவர் சுந்தர்.சி இன்னொரு தடவ காமெடில அவர அடிச்சிக்க ஆள் இல்லைன்னு ப்ரூப் பண்ண இன்னொரு படம்.




முகமூடிங்குற பள்ளத்துல விழுந்த மிஷ்கின் டக்குன்னு எழுந்த படம். இந்த வருஷம் வந்த படங்கள்ல தீயா வேலை செய்யனும் குமாருக்கு அப்புறம் ரொம்ப  satisfied ah பாத்துட்டு வந்த படம் இது தான். ஆன  படம் 4 நாள்தான் தியேட்டர்ல ஓடுனுச்சிங்குறதுதான் ரொம்ப சோகமான விஷயம். 

 



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கணிப்பு

sakthi said...

Where is aarambam?
Haridass copy of forest gump

sakthi said...

Where is aarambam?
Haridass copy of forest gump

ganesh said...

Really onayum attukuttiyum a milestone in tamil cinema. Namma makkal hollywoodla inthamathiri padam eduthathan aha ohonu solvanga

Karthik said...

I think balu mahendra's Thalaimuraigal should deserve a place in the list

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...