ரவி தேஜாவுக்கு சில வருஷங்களவே கட்டம் சரியில்லை. ஒரு சமயத்துல தொட்டதெல்லாம் ஹிட்டான காலமெல்லாம் மாறி இப்போ அவரு ஹிட்ட பாத்தே பல வருமாகிப்போச்சி. கடந்த ரெண்டு மூணு வருஷத்துல அவர் நடிச்ச அத்தனை படமும் ஃப்ளாப். ஓண்ணு ரெண்டு படத்துக்கு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் ஓரளவு ஓக்கேன்னாலும் படங்களோட தரத்த பாக்கப்போனா கப்பிதான். ரவிதேஜாவோட வாழ்க்கையில மிகப்பெரிய ஹிட்டுகளா அமைந்த விக்ரமார்குடு மற்றும் மிரப்பகாய் படங்கள்ல அவர் போலீஸா நடிச்சிருந்தாரு. அதற்கடுத்து இந்த ”பவர்” லயும் போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இந்தப்படம் எப்புடி? இப்புடுச் சூடுவோம்.
நம்மூர்ல படத்துக்கு எதாவது சீன் பஞ்சம்ன்னாலோ இல்லை படத்துக்கு கதையே பஞ்சமுன்னாலோ என்ன பண்ணுவாய்ங்க.. அஞ்சாரு ஹாலிவுட் படங்கள போட்டு பாப்பாய்ங்க. ஹாலிவுட் படங்கள்ல ஆட்டைய போட்டா அழகா கண்டு புடிச்சிடுறாய்ங்கண்ணு கொரியன் படங்கள்லருந்து ஆட்டைய போடுவாய்ங்க. இப்போ அதையும் கண்டுபுடிச்சிடுறாய்ங்கண்ணு வேற எதாவது மொழில நல்ல படங்கள் வந்துருக்கான்னு தேடிகிட்டு இருக்காய்ங்க. இதானைய்யா ஒரு படைப்பாளிக்கு அழகு. இதானைய்யா தொழில் கத்துக்குற முறை. ஆனா தெலுகுல என்ன பண்றாய்ங்க தெரியுமா? அவிங்க ஊர்ல கதைக்கோ, காட்சிக்கோ பஞ்சமுன்னா அவிங்க ஊர்ல அதுக்கு முன்னால எடுத்த படங்களையே போட்டுப் பாத்து அதுலருந்தே சீன உருவுறாய்ங்க. அடாப்பாவி அடாப்பாவி.. நரேந்த மோடி இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டும் உபயோகியுங்கள்னு சொன்னத தப்பா புரிஞ்சிகிட்ட குரூப்பு போலருக்கு.
விக்ரமார்குடு, சாமி, ஜெண்டில்மேன், டான் சீனுன்னு பல படங்கள்லருந்து கொஞ்ச கொஞ்ச துணிய உருவி பவருங்குற இந்த பல கலர் ட்ரெஸ்ஸ தச்சிருக்காய்ங்க. ACP பல்தேவ் (ரவிதேஜா) ஒரு பெரிய corruption பேர்வழி. பல கோடி ரூவாய் லஞ்சமாக வாங்கியிருக்கவரு. எந்த ஊர்ல போனாலும் பெத்த பெத்த அமவுண்ட்ட லஞ்சமா வாங்கி பதுக்குறவரு. முதல் காட்சிலயே கல்கத்தாவுல ”கங்குலி பாய்” ங்குற பெரிய ரவுடிய கோர்டுக்கு கொண்டு போகும் போது பல்தேவ் அவன கடத்தி கொண்டு போயிடுறாரு. கங்குலி பாய கடத்தி ஒரு இடத்துல வச்சிட்டு தப்பிக்கும்.
போது போலீஸால சுடப்பட்ட கார் வெடிச்சி பல்தேவ் இறந்து போயிடுறாரு.
தமிழ் படத்துலயாவது ஹீரோ இறந்து போறதுக்கு ஒரு பத்து சதவீத வாய்ப்பு இருக்கு. ஆனா தெலுங்கு படத்துல யாராவது இது மாதிரி கார் வெடிச்சி மலையிலருந்து உருண்டு சாகுற மாதிரி காமிச்சா சத்தியமா அவனுங்க செத்துருக்க மாட்டானுங்க. எப்பிடியாது எஸ்கேப் ஆயிருப்பானுங்க இல்லை எவனாவது காப்பாத்திருப்பானுங்க. அப்டியே கட்பண்ணி ஓப்பன் பண்ணா இன்னொரு ரவிதேஜா போலீஸாகனும்ங்குற கனவோட ஊருக்குள்ள லந்து பண்ணிட்டு அப்டியே ஹன்சிகாவ கரெக்ட் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காரு.
ஒருதடவ எதேச்சையா இந்த ரவிதேஜா டிவில வர அத கல்கத்தா ஹோம் மினிஸ்டர் பாத்து ஸாக் ஆயி ஃபீல் ஆயிடுறாப்ள. இவனையே ACP பல்தேவா நடிக்க வச்சி காணாம போன கங்குலி பாய கண்டுபுடிக்கலாம்னு ப்ளான் போடுறாப்ளே. ஏற்கனவே போலீஸ் வேலையில சேர துடிக்கிற நம்ம ரவிதேஜா இந்த ஆப்ரேசனுக்கு ஒத்துக்குறாரு. அப்டியே விக்ரமார்குடு செகண்ட் ஹாஃப்ல பாத்தது இங்க ஃபர்ஸ் ஹாஃப்லயே ஓடுது. அப்புறம் கங்குலி பாய கண்டுபுடிச்சி ஹோம் மினிஸ்டர்கிட்ட ஒப்படைக்கும் போது ஒரு ட்விஸ்டு. இண்டர்வல்ல ஒரு ட்விஸ்ட் வச்சே ஆகனும்ங்குறது இப்போ தெலுங்கு படங்கள்ல எழுதப்படாத விதியாயிடுச்சி.
அப்புறம் செகண்ட் ஹாஃப்ல ACP பல்தேவோட ஃப்ளாஷ்பேக்க ஓப்பன் பண்றாய்ங்க. அப்பதான் நம்ம சாமி படமும், ஜெண்டில்மேன் படமும் ஓடுது. பல்தேவ் ஏன் இவ்வளவு லஞ்சம் வாங்குறாருன்னு வெளக்குறானுங்க. வில்லன் லஞ்சம் வாங்குனா அவன் கருப்பு பணம் சேக்குறான். ஆனா ஹீரோ லஞ்சம் வாங்குனா அவர் அனாத இல்லங்களுக்கு குடுப்பாரு இல்லை எதாவது நல்ல காரியம் செய்யறதுக்கு பயன்படுத்துவாரு. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா பாஸூ. ஃப்ளாஷ்பேக்குல வருது நம்ம கேடிபில்லா கில்லாடி ரங்கா ரெஜினா.. ஃப்ளாஷ்பேக் முடியும் போது வில்லன்களால குண்டடி பட்டு சாவுறதுக்குண்ணே அளவெடுத்து தச்சா மாதிரி ஒரு கேரக்டர்.
ஃப்ளாஷ்பேக் முடிஞ்சப்புறம் க்ளைமாக்ஸ் ஃபைட்டு.. அங்க ட்விஸ்டுன்னு இன்னொன்னு வக்கிறாய்ங்க. வேலையில்லா பட்டதாரி விவேக் மாதிரி “என்னது இது ட்விஸ்டா.... இல்லை இதான் உங்க ட்விஸ்டா”ன்னு கேட்டேன்னு நெனைச்சிகிட்டேன். படம் முழுக்க எல்லாமே பாத்த சீன்கள்னாலும் பெருசா ஒண்ணும் போரடிக்கல.
ஃபர்ஸ்ட் ஹாஃப்ல தலைவர் ப்ரம்மி கொஞ்ச நேரம் சிரிப்பு காட்டுறாரு. க்ளைமாக்ஸ்ல ரஜினியோட லுங்கி டான்ஸ் மாதிரி இவருக்கு செட்டு போட்டு “ப்ரம்மி டான்ஸு ப்ரம்மி டான்ஸூ”ன்னு ஒண்ணு எடுத்துருக்காய்ங்க.. தாறு மாறு. அப்புறம் ஹன்ஸிகா செம.. பயங்கர ஸ்லிம்மாவும் ஆயிடுச்சி. ரெஜினா தூரத்துலருந்து கொஞ்சம் அழகா இருந்தாலும் பக்கத்துல காட்டும் போதும், வசனங்கள் பேசும் போதும் சற்று டொம்மை போல் இருக்கு. ரவிதேஜா வழக்கம் போல அருமை. போலீஸ் கெட்டப்புல செம கெத்தா இருக்காரு. ஆனா என்ன கண்றாவி டைரக்டர்கிட்ட கதைய மட்டும் ஒழுங்கா கேட்டு நடிக்க மாட்டாரு போல.
நம்ம ப்ரகாஷ்ராஜ் கிட்ட ரெண்டே ரெண்டு நாள் மட்டும் கால்ஷீட் வாங்கி அந்தாளுக்கு மேக்கப் கூட போடாம ரெண்டு சீன எடுத்துருக்காய்ங்க. செம டம்மி கேரக்டர். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் என்னன்னா தமன். எல்லா பாட்டுமே பக்கா. அதவிட BGM செம்ம. பாட்டு எடுத்ததும் நல்லாதான் இருக்கு. அனைத்து ஃபைட்டுகளும் வழக்கம் போல தெறி.
மத்தபடி பெருசா ஒண்ணும் போரடிக்கல. எதிர்பார்த்த டிவிஸ்டுகளோட வழக்கமான சுமார் மூஞ்சி குமாரு டைப் படமே இந்த பவர்.

2 comments:
தெலுங்குல இந்தமாதிரி எடுக்கலைனா தான் ஆச்சரியம் !! என்னதான் தெலுங்குங்ற ஒரே குட்டைனாலும் , அதுல ஊருன மட்டைங்க வேறவேறமாதிரி தான் இருக்கு .
அடுத்த மாதம் என் தலைவன் சிம்பு அவர்களின் திரைப்படம் வெளி வர உள்ளது . அதை நீங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து மெய் சிலிர்த்து அந்த காவியத்தை எங்களுக்கு சுவாரஸ்யம் தளும்ப தளும்ப தருமாய் கேட்டு கொள்கிறேன்.
Post a Comment