Saturday, September 20, 2014

அரண்மனை - Upgraded!!!


Share/Bookmark
சுந்தர்.சி யோட முப்பது படங்கள்ல முதல் முதலா வந்திருக்கிற ஒரு பேய் படம். எத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் போர் அடிக்காத படங்களை சுந்தர்.சியால குடுக்க முடியிறதுக்கு முக்கியமான  காரணம் அவர் எடுத்துக்கிட்ட காமெடிங்குற தீம் தான். எத்தனை தடவ பாத்தாலும், காட்சிகள் ரிப்பீட்  ஆனாலும் சலிக்காத ஒரு விஷயம் காமெடி. சதுரங்க வேட்டை படத்துல நட்ராஜ் ஒரு வசனம்  பேசுவாரு. “இப்பல்லாம் அம்மா, தங்கச்சி செண்டிமெண்ட் வச்சி படம் எடுத்தாலே க்ளீஷேன்னு  சொல்றாங்க. என்னிக்குமே க்ளீஷே ஆகாத ஒரே விஷயம்னா அது பணம் தான் சார்”ன்னு. பணத்தோட  சேத்து காமெடியையும் அந்த லிஸ்டுல சேத்துக்கலாம். எத்தனை தடவையானாலும் காமெடிங்க நமக்கு  சலிக்கிறதில்லை. இதுக்கு மிகச் சிறந்த உதாரணம் சுந்தர்.சி படங்கள் தான். அவர் படங்கள்ல அவர்  எடுத்த காட்சிகளே பல முறை ரிப்பீட் ஆயிருக்கு. இருந்தாலும் நமக்கு சுத்தமா போர் அடிக்கிறதில்லை.  அதே வரிசையில இன்னொரு காமெடி கலக்கல் தான் இந்த அரண்மனை.

”ஏன் திடீர்னு ஹாரர் படம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க?”ன்னு சுந்தர்.சிய கேட்டதுக்கு இப்ப உள்ள  ட்ரெண்டுக்கு ஹாரர் படஙக்ள் தான் நல்லா போகுது அதான் எடுக்குறேன்னு சொல்லிருக்காரு. காலம்  மாற மாற தன்னையும் update  பண்ணிக்கிறதும் சுந்தர்.சியோட வெற்றிக்கு இன்னொரு காரணம். ரொம்ப  நாளுக்கப்புறம் அவர் எடுத்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள பாக்கும் போது,  அது எதோ இப்ப வர்ற சின்ன பசங்க எடுத்த படம் மாதிரி எல்லாமே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கேத்த  மாதிரியான காமெடி.  இப்ப வந்துருக்க அரண்மனையும் அப்டித்தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னால வந்து செம்ம ஹிட்டான காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களோட  ஃபார்முலாவான திகில்+காமெடி கலவையில வந்திருக்க படம் தான் இந்த அரண்மனை. காமெடிங்குறது  சுந்தர்.சி யோட ஹோம் பிட்ச். அதுவும் பெரிய அரண்மனை, சந்தானம், சுவாமிநாதன், மனோபாலா,  கோவை சரளான்னு கும்பலான காமெடி பட்டாளம். எல்லாரையும் ஓவ்வொரு காரணத்த காமிச்சி   ஒண்ணா ஒரே அரண்மமனைக்கு கொண்டு வந்துடுறாரு. அப்புறம் என்ன சொல்லவா வேணும் அடிச்சி  நாசம் பண்ணிருக்காரு. குறிப்பா மனோபாலா கோவைசரளா காம்போ காமெடி  தாறுமாறு.  மனோபாலாவயும் பெஸ்டா யூஸ் பண்றது சுந்தர்.சி தான்.

பெரும்பாலும் சுந்தர்.சி படத்துல ஹீரோக்கள் மிக்சர் திங்கும் கேரக்டர்கள் தான். படத்துக்கு ஹீரோ ப்ரச்சனை வந்துடக்கூடாதுன்னு எதாவது டம்மிக்கள தூக்கி போட்டு அவனுங்கள சைடாக்கிட்டு  சந்தானத்த மெயினாக்கி தான் இப்ப படம் எடுக்குறாரு. அதுதான் நல்லா ஒர்க் அவுட்டும் ஆகுது.

படத்துல காமெடி பார்ட்டுக்கு யோசிச்ச அளவு Horror part க்கு சொந்தமா யோசிக்கலன்னு தான் சொல்லனும்.  The Conjuring, The Grude, Insidious, The mirror ன்னு சில ஹாலிவுட் படங்களப் பாத்து பேயிங்களோட  உருவத்தையும் சரி அதுங்க வர்ற சீனும் சரி அதே மாதிரி தான் எடுத்துருக்காங்க. ஆனாலும் நல்லாவே எடுத்துருக்காய்ங்க.

சந்திரமுகி ஷரவணாவாக இந்த படத்துல தலைவர் சுந்தர்.சி. ரொம்ப நாளுக்கப்புறம் திரையில  வந்திருக்காரு. சந்திரமுகில தலைவர் டாக்டர். இதுல சுந்தர்.சி வக்கீல். அவ்வளவு தான் வித்யாசம்.  மத்தபடி பேய் யாருன்னு கண்டுபுடிக்கிறதுலருந்து பேய்கிட்டருந்து நண்பர காப்பத்த கஷ்டப்படுற வரைக்கும் அதே கேரக்டர்.

 என்னதான் ஏற்கனவே பாத்த பேயகள்னாலும் டக்குன்னு பேயிங்கள காட்டும்போது உள்ளுக்குள்ள பீதி  கெளம்பத்தான் செய்யிது. குறிப்பா ஒரு சின்ன புள்ளை எப்பவும் தனியா யார் கூடவோ பேசிட்டே  இருக்கும். அத எல்லாரும் லூசுன்னு முடிவு பண்ணிருவாங்க. சுந்தர்.சி மட்டும் அதுகிட்ட போய்  யார்கிட்டம்மா பேசுறன்னு கேப்பாரு.. அதுக்கு அந்த புள்ளை செல்வி அக்காட்ட பேசிட்டு இருக்கேன்னு  சொல்லும். செல்வி அக்காவா இங்க யாரும் இல்லையேன்னு சுந்தர்.சி கேக்கவும் அந்தப் புள்ளை ஒரு வெறும் இடத்த காமிச்சி  “நல்லா பாருங்க இங்கதான் செல்வி அக்கா உக்காந்துருக்காங்க. அதுவும் உங்களையே தான் பாத்துட்டு  இருக்காங்க” ன்னு சொன்னதும் சுந்தர்.சி யவிட நமக்கு லைட்டா கலக்குது. 



ஹன்சிகா, லட்சுமி ராஜ், ஆண்ட்ரியான்னு முணு கில் பஜக் கில்மாஸ இறக்கி ஹாரரோட கவர்ச்சியையும்  அங்கங்க அள்ளித் தெளிச்சிருக்காங்க. ஹன்ஸிகா செம்ம அழகு. First half ஃபுல்லாவே நம்மள  கொஞ்சம் கூட யோசிக்க விடாம பயங்கரமா சிரிக்கவச்சும் பயங்கரமா பயமுறுத்தியும் கொண்டு  போயிடுறாங்க. ஆனா ஃபர்ஸ்ட் ஹாப்ல இருந்த அந்த சுவாரஸ்யம் செகண்ட் ஹாஃப்ல இல்லை.  சந்திரமுகிய திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க். அதுவும் ஃப்ளாஷ்பேக் பழைய புளிப்பானைக்குள்ள  வச்சி எடுத்த மாதிரி அருதப் பழசு. பேய் படம் என்று வந்துவிட்டால் வேறு என்னதான் ஷெய்ய  முடியும்.   

பரத்வாஜோட பாடல்கள் சுமார்தான்னாலும் ரொம்ப அருக்கல. செகண்ட் ஹாஃப்ல வர்ற சாதனா  சர்க்கம் பாட்டு ஓக்கே ரகம். அதுக்கும் மேல ரொம்ப பாட்டு வக்காம 3 பாட்டோட நிறுத்துனது மிகப்  பெரிய ஆறுதல். Background ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.  படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் CG. சுந்தர்.சி கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு பேட்டில இந்த  படத்தோட கிராஃபிக்ஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு. கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியாதுன்னு  சொல்லிருந்தாரு. கிட்டத்தட்ட உண்மைதான். பேய் வர்ற காட்சிகளும் சரி மத்த கிராஃபிக்ஸும் சரி  ரொம்பவே நல்லாருக்கு. பேய்களயெல்லாம் ஆங்கிலப்படங்கள்லருந்து கடன் வாங்கியிருந்தா கூட அதே  மாதிரி நல்லா ”குவாலிட்டி”யான பேய்களையே காமிக்கிறாங்க. அதுக்கும் மேல க்ளைமாக்ஸ்ல சூரிய  கிரகணம் வர வர கார் ஓட்டிக்கிட்டு வரும் போது அந்த கிரகணமும் background கலரும் செம.

அரண்மனை இதுக்கு முன்னால வந்த காஞ்சனா படத்தோட அதே ஃபார்முலாதான்னாலும், காஞ்சனா  கூட அரண்மனைய கம்பேர் பண்ணும் போது பயமுறுத்துறதுல காஞ்சனாதான் பெஸ்ட். காஞ்சனாவிலயும் இடையில காமெடி வந்தாலும்  அதவிட அதிகமா பேய் வர்ற சீன்கள்ல பயமுறுத்திருப்பாங்க. இப்ப கூட  காஞ்சனாவ தனியா உக்காந்து பாக்க முடியாது. அதே அரண்மனையில காமெடி பார்ட் காஞ்சனாவ விட  பெஸ்டா இருந்தாலும் பேய்  வர்ற காட்சிகள் ரொம்ப பெரிய தாக்கத்த ஏற்படுத்தாததும், எல்லா  காட்சிகளையும் நாம ரொம்ப ஈஸியா கணிச்சிடுற மாதிரி இருக்கதும் படத்துக்கு மைனஸ்.

எது எப்படியா இருந்தாலும் காமெடிக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதுவும் மேற்கூறிய Conjuring,   Insidious, The mirror, The grudge படங்களை பார்த்தது இல்லைன்னா பேய்களும் உங்கள மிரளவைக்கும்.  மொத்ததில் இந்த படத்துலயும் சுந்தர்.சியோட மேஜிக் ஒர்க் அவுட் ஆயிருக்கு. இந்த வருடத்தின்  வெற்றிப் படங்கள் வரிசையில அரண்மனையும் விரைவில் சேரும். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே

Suresh said...

எனக்கு இந்த படத்தின் காமெடி பிடித்திருந்தது. சுந்தர் சி யின் காமெடி சென்ஸ் சான்சே இல்ல.
படத்தின் மூன்று ஹீரோயன் இருந்தும் , அவர்களின் கவர்ச்சி படங்களை போடாமல் விமர்சனம் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...