Tuesday, September 2, 2014

என்னது சூர்யா குள்ளமா? இய்ய்யாய்!!!


Share/Bookmark
ரெண்டு வாரத்திற்கு முன்னால ரிலீஸ் ஆகி சூப்பர், டூப்பர், பம்பர், மெகா, ஜிகா ஹிட்டாகி இன்னும்  திரையரங்கை விட்டு ஓடாமல் ஓடிக்கொண்டிருக்கும் அஞ்சான் படத்தப் பற்றி எழுதிய விமர்சனத்துல சூர்யா குள்ளமா  இருக்காருன்னு பொருள்படுற மாதிரி “டேய்… என்னடா இது டீப்பாய் உயரம் இருக்க இவந்தான் ராஜூபாயா” அப்டின்னு ஒரே ஒரு வரி எழுதியிருந்தேன். அது சில நண்பர்கள் மனச புண்படுத்திருச்சின்னு  நெனைக்கிறேன். சூர்யா குள்ளமா இருந்தா என்ன, உயரமா இருந்தா உங்களுக்கென்ன? படத்த பத்தி மட்டும் விமர்சனம் பண்ணுங்கன்னு ப்ளாக்லயும்  ஃபேஸ்புக்லயும் சில நண்பர்கள் சொல்லிருந்தாங்க. முதல்ல சூர்யாவ  குள்ளமா இருக்கார்னு சொன்னத வாபஸ் வாங்கிக்குறேன். சொல்லிட்டு வாப்பஸ் வாங்குறது தானே இப்போ லேட்டஸ்டு ட்ரெண்டு. அதோட மட்டும் இல்லாம இனிமே எழுதுற பதிவுகள்ல இதுமாதிரியான விமர்சனங்கள்  இல்லாமயும் பாத்துக்க முயற்சி செய்றேன்.

சரி அவர குள்ளம்னு சொல்றதுக்காக அவரோட மனசு வருத்தப்படும். குள்ளமாக இருக்க அனைவரும் வருத்தப்படுவாங்க அதனால அந்தமாதிரி எழுதுறத தவிர்க்கச் சொல்றீங்க. ரொம்ப கரெக்ட். ரொம்ப நல்ல எண்ணமும் கூட. தப்பா எடுத்துக்காதீங்க. இப்போ எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. அதயும் பொதுவா கேக்குறேன்.

1. நாம கடையில ஒரு பொருள் வாங்குறோம். அந்தப் பொருள்ள எதோ குறை இருக்கு. எதுவா இருந்தா என்னன்னு வாங்கிட்டு வருவோமா இல்லை சண்டை போட்டு வேற பொருள் வாங்குவோமா?

2. கவுண்டமணி செந்தில் காமெடி பாத்து சிரிக்காதவங்க யாரும் இருக்க மாட்டீங்க. அதுல கவுண்டமணி செந்தில “பன்னி வாயா” “தகர டப்பா தலையா” “டேய் ஆப்ரிக்கா வாயா” “பேரிக்கா மண்டையா” “அரை மண்டையா” இப்படியெல்லாம் சொல்லி கூப்பிடும் போது நமக்கு சிரிப்பு வருமா இல்லை கவுண்டமணி செந்தில உடல் ரீதியா இப்படி இழிவுபடுத்தி பேசுறாறேன்னு உங்களுக்கு மனித நேயம் பொத்துக்கிட்டு வருமா?

3. இப்போ கீழ இருக்க படத்தப் பாருங்க. அந்தப் புள்ளை பக்கத்துல இருக்கவரு காமெடியன் இல்லை பல படங்கள் நடிச்ச ஒரு கன்னட ஹீரோ.



இந்தப் படத்தப் பாத்து நமக்கு ”என்னடா இவன்லாம் ஹீரோவா நடிக்கிறான்.அதுவும் இவனுக்கு இப்புடி ஒரு ஹீரோயினா? ”ன்னு கோவம் வருமா இல்லை அவருதான் ஹீரோன்னு நா ஃபிக்ஸ் ஆயிட்டேன். மத்த படத்த பாக்குறது மாதிரியே இந்தப் படத்தையும் பாப்பேன்னு தோணுமா?

4. சரி சூர்யா பாட்டுன்னாலும் சரி ஃபைட்டுன்னாலும் சரி படக் படக்குன்னு சட்டைய கழட்டி சிக்ஸ் பாக்ஸ காமிக்கிறாரே.. அத பாக்கும் போது சூர்யாவோட கடின உழைப்பு தெரியுமா இல்லை “ச்ச.. இப்புடி சிக்ஸ் பேக்ஸ் காமிக்கிறாரே.. இதப்பாத்தா குண்டா தொப்பையோட இருக்கவங்க மனசு கஷ்டப்படுவாங்களே” ன்னு ஃபீல் பண்ணுவீங்களா?


சினிமாங்குறது ஒரு வியாபாரம் தான். நாம அத காசு குடுத்து பாக்குறோம். அதுல எதாவது குறை இருந்தா அத சொல்றதுக்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கு. எப்படி சிக்ஸ் பேக், லோ நெக் ஜாக்கெட், ஜன்னல் வச்ச ஜாக்கெட், ஷார்ட் ஸ்கர்ட் போட்ட ஹீரோயின்கள்னு உடல் ரீதியான விஷயங்கள முன் வச்சி படங்களை விளம்பரப்படுத்தும் போது,  அதே சினிமாவுக்கு தேவையான உடல் ரீதியான விஷயங்கள் இல்லைன்னா அத குறை சொல்றது மட்டும் எப்படி தப்பாகும்? 

சூர்யாவ குள்ளம்னு சொன்னத பொறுத்துக்க முடியாதவங்க ப்ரனிதா கூட நிக்கிற ஹீரோவயும் முகம் சுழிக்காம பாத்தீங்கன்னா நீங்க தான் மகாத்மாக்கள். உங்கள் காலில் விழவும் நான் தயார். ஆனா அப்படி இல்லைன்னா, சூர்யாவுக்காக பொங்குறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை. 

சக மனிதர்களை நீங்க எப்படி மதிக்கிறீங்களோ அதே மாதிரி தான் நானும் மதிக்கிறேன். உங்களுக்கு இருக்க அதே மனித நேயம் எனக்கும் இருக்கு. சக மனிதர்களோட உடல் ரீதியான குறைகளை சொல்லி காயப்படுத்துறத நானும் விரும்பமாட்டேன். ஆனா நகைச்சுவைக்காக சில இடங்கள்ல, மற்றவர்கள் மனம் புண் படாத மாதிரி தான் எழுதிருக்கேன். எந்த இடத்துல சிரிக்கனும், எந்த இடத்துல மொறைக்கனும் எந்த இடத்துல வெறிக்கனும்ங்குற இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுதல் நலம்.

உங்களுக்கு எப்படி குள்ளம்னு சொல்றத தப்புன்னு சொல்றதுக்கு ஒரு தியரி இருக்கோ அதே மாதிரி எனக்கும் அந்த விமர்சனத்துல அவர குள்ளம்னு சொன்னது கரெக்ட்ங்குறதுக்கு ஒரு தியரி இருக்குன்னு சொல்றதுக்காவே இந்தப் பதிவே தவிற யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

சூர்யா வாழ்க!!!  தமிழ்நாட்டின் அமிதாப் பச்சன் வாழ்க!!!

இணையத்திலிருந்து பெறப்பட்ட மேலுள்ள முதல் படமும்  நகைச்சுவைக்காகவே... திரும்பவும் மொதல்லருந்து ஆரம்பிச்சிடாதீங்க!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Unknown said...

அருமை. அவன் பக்கத்துல பிரணிதா நிக்குறத பாத்தா வயிறு எரியுது முத்து. நானும் தான் 3 வருஷம் பெங்க்ளூருல இருந்தேன். ஒரு பிகர் கூட பிக்கப் ஆவலையே. வீணாப்போன மேனேஜர் என்னை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்கினானே.

சிவசிவா. தென்னாடுடைய சிவனே போற்றி . எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. எனக்கும் ஒரு சூப்பர் பிகர் கிடைக்க அருள் செய்யப்பா. எனக்கு அப்படி ஒரு பிகர் கிடைச்சா முத்துவுக்கு மொட்டை போட்டு பழனிக்கு பால் காவடி எடுக்க சொல்லுறேன்

மெக்னேஷ் திருமுருகன் said...

சூப்பர்ணே !!! தெளிவான கேள்விகள் !!!

மகிழ்நிறை said...

சூப்பர் கேள்விகள் சார்:)
பல ஹீரோயின் கூட ரெண்டடி தள்ளிதானே சூர்யா டான்ஸ் பண்ணுவார்? அதை கூட நோட்டு பண்ணலையா ரசிக கண்மணிகள்:))

aghampuram said...

super

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...