Wednesday, June 17, 2015

ஒபாமாவத் தூக்குறோம்!!! – 2


Share/Bookmark
முதல் பகுதி உலகத்துலயே அதிக Threat அமெரிக்க அதிபர்களுக்குத்தான் இருக்கு. அதுலயும் ஒபாமா அதிபரானதுக்கு அப்புறம் அது கிட்டத்தட்ட 400% அதிகமாயிருச்சாம். ஜார்ஜ் புஷ் இருக்கும்போது வருஷத்துக்கு 3000 ah இருந்த number of threats ஒபாமா வந்தப்புறம் கிட்டத்தட்ட 12000 ah  increase ஆயிருச்சாம். போறவன் வர்றவன்லாம் கொளுத்தி போட்டுக்கிட்டு இருப்பான் போல. ரொனால்டு கெஸ்லர்ங்குறவரு In The President’s Secret Service ங்குற புத்தகத்துல அமெரிக்க அதிபர்களுக்கு வந்த மிரட்டல்களையும் அதை எப்படி சமாளிச்சாங்கங்குறதப் பத்தியும் எழுதிருக்காரு. 

ஒரு தடவ சோமாலியாவச் சேர்ந்த ஒரு தீவிரவத அமைப்பு ஒபாமா நியூ இயர் ஸ்பீச் குடுக்கும்போது போட்டுத்தள்ள ப்ளான் பன்றதா இண்டெலிஜன்ஸுக்கு ஒரு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்துடாம இருக்க, அந்த சீக்ரெட் சர்வீஸ் , போலீஸ் டிப்பார்ட்மெண்ட், மிலிட்டரி டிபார்ட்மெண்ட், செக்யூரிட்டி ஏஜென்ஸின்னு கிட்டத்தட்ட 40,000 பேர் உதவியோட பாதுகாப்பு ஏற்பாட்ட கவனிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லாம 12 Sniper டீம அந்த ஃபங்க்‌ஷன்ல இன்வால்வ் பன்னிருக்காய்ங்க.  அந்த ஃபங்ஷன் நடக்குற இடத்துக்கு பக்கத்துல இருக்க ஒவ்வொரு ஹோட்டல்ல தங்கியிருந்த அத்தனை பேரோட க்ரிமினல் ரெக்கார்ட்ஸயும் அலசி ஆராய்ஞ்சிருக்காய்ங்க.

2005 ல ஜார்ஜ் புஷ் ஜார்ஜியாங்குற நாட்டுல சொற்பொழிவு ஆத்திக்கிட்டு இருக்கும்போது, அருவை தாங்க முடியாம விளாடிமீர்ங்குற 28 வயசு இளைஞன் ஒரு க்ரானைட்ட தூக்கி வீசிருந்துருக்கான். அது கூட்டத்துல இருந்த ஒரு புள்ளை மேல அடிச்சி கீட விழுந்துருச்சி. தூக்கி வீசுன நாயி, நம்மூர் படங்கள்ல வாயல ஆப்பிள கடிக்கிற மாதிரி திரிய கடிச்சிட்டு வீசிருந்தான்னா அப்பவே குண்டு வெடிச்சி புஷ் புஸ்வானமாயிருப்பாரு. ஆனா அவன் அந்த க்ரானைட்ட ஒரு செகப்புத் துணிக்குள்ள வச்சி வீசிருக்கான். கடைசி வரைக்கும் அந்த க்ரானைட்டுல உள்ள ஃபைரிங் பின் வெளில வரமா பொய்ட்டதால, புஷ் அன்னிக்கு எஸ்கேப் ஆயிருக்காரு.

அமெரிக்க அதிபரா இருந்தா கூட, சீக்ரெட் சர்வீஸ் சொல்பேச்சு கேட்டுத்தான் நடக்கனும். இந்த வழியாத்தான் போகனும் இப்படித்தான் வரனும்னா அத கண்டிப்பா அதிபருங்க ஃபாலோ பண்ணித்தான் ஆகனும். அப்படி இல்லைன்னா குஸ்டமாயிரும். சொல்பேச்சு கேக்காம ஒருத்தரு கிட்டத்தட்ட உயிர விடப்பாத்தாப்ள.

1963, நவம்பர்.22  மதியானம் ஜான் கென்னடிய கார்ல போகும் போது சுட்டுக் கொன்னுட்டாய்ங்க. நம்ம ஓபிக்கு அடிச்ச லக்கு மாதிரி லிண்டன் ஜான்சன்ங்குறவர உடனே அதிபரா அறிவிச்சி அன்னிக்கு சாயங்காலமே பதவியும் ஏத்துக்கிட்டாப்ள. அவர பாதுகாக்குற சீக்ரெட் ஏஜெண்ட்டா ஜெரால்டு ப்ளெய்ன்ங்குறவனையும் போட்டுருக்காய்ங்க. நைட்டு ஆயிருச்சி. நம்ம ப்ளெய்ன் மட்டும் எவனாச்சும் வர்றாய்ங்களான்னு பாத்துக்கிட்டு காவலுக்கு இருந்துருக்கான்.

 திடீர்னு சம்பந்தமே இல்லாத ஒரு பக்கத்துலருந்து யாரோ அவன நோக்கி வர்ற மாதிரி சத்தம் கேட்டுருக்கு. ஆஹா… இந்த சமயத்துல எவனா இருக்கும்? மொத அசைன்மெண்டுல்ல.. எவனா இருந்தாலும் போட்டுத்தள்ளிர வேண்டியதுதான்னு ஃப்ரண்ட்ஸ் விஜய் கட்டைய கையில எடுக்குற மாதிரி ப்ளெய்ன் ஒரு மிஷின் Gun ah கையில எடுத்துகிட்டு சுடுறதுக்கு ரெடியா நின்னுருக்கான். என்னாடா கையில Gun ah எடுத்தவுடனே வந்தவன் ஓடிருவான்னு பாத்தா, அந்த உருவம் இவன நோக்கி தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்துருக்கு. சுடுறதுக்கு ஸ்ட்ரைக்கர்ல கைய வச்சிட்டு ரெடியாகுறப்போதான் வந்தவன் மூஞ்சி தெரிஞ்சிருக்கு. ”டேய் நாதான்ண்டா உன் பாஸ் நேசமணி நீ எங்கிட்ட வேல பாக்குற கிச்சின மூர்த்தி” ன்னு சொல்லிக்கிட்டு நின்னுருக்காரு புதுசா அப்பாய்ண்ட் ஆன அதிபர்.

கடுப்பான ப்ளெய்ன் அப்புறமா “யோவ் இன்னும் ஒரு செகண்ட் விட்டுருந்தா உன்ன சுட்டுருப்பேன்யா” ன்னு சொல்லிருக்கான்.  ஜான் கென்னடி சுடப்பட்ட அன்னிக்கே இவர் பதவி ஏத்துக்கிட்டதால, கலவரத்துல இவருக்கு செக்யூரிட்டி procedure எல்லாம் சொல்லிக்குடுக்க மறந்துட்டாய்ங்களாம். அதனால அவருக்கு எந்தப்பக்கம் போகனும் போகக்கூடாதுன்னு தெரியல போல. ஜஸ்டு மிஸ்ஸூ. இல்லைன்னா அன்னிக்கே ரெண்டு அதிபரு அவுட் ஆயிருப்பாய்ங்க.

கார்ல போயிட்டு இருந்த கென்னடியா கூட்டத்துல இருந்துகிட்டே அசால்ட்டா சுட்டு கொன்னுட்டாய்ங்க. ஆனா இன்னிக்கு ஒபாமாவ அப்புடி கார்ல போயிட்டு இருக்கும்போது சுடனும்னு கனவு கூட காண முடியாது. சுடுறது என்ன பாம் போட்டாலே ஒண்ணும் ஆகாதுங்குறாய்ங்க. அப்படிப்பட்ட காருலதான் அவுரு போயிட்டு இருக்காப்ள. அவரோட காரப் பத்தின ஸ்பெஷல் ஆர்ட்டிக்கிள் ஒண்ணு போன வாரம் சுத்திக்கிட்டு இருந்துச்சி. பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க. அதப் படிக்காதவங்களுக்காக ஒரு ரிப்பீட்டு.

ஒபாமா யூஸ் பன்னிட்டு இருக்க காரோட செல்லப்பேரு “The Beast” ஆம்.
கிட்டத்தட்ட அந்தக் காரோட நீளம் மட்டும் 18 அடி உயரம் அஞ்சேகால் அடி. அதாவது ஒரு ஆள் உயரம். அந்தக்காரோட window 5” thickness ஆம். அந்த window என்ன material la செஞ்சதுங்குற இன்ஃபர்மேஷன் ரொம்ப சீக்ரெட்டாம். அதே மாதிரி அந்தக் காரோட வெய்ட்டு எவ்வளவுன்னு யாருக்கும் தெரியாது. அதுவும் சீக்ரெட்.

அதுலயும் இந்தக் கார கூட்டம் பார்க் பன்னும்போது, கூட்டம் ஒபாமாவ நெருங்காத மாதிரி ஒரு டாக்டிக்ஸா தான் நிறுத்துவாய்ங்களாம். வண்டி போயிட்டு இருக்க வழியில வண்டிய பஞ்சர் பன்னி, இவர ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சா அதுவும் நடக்காது. இந்த கார்ல உள்ள டயர் பஞ்சரே ஆகாதாம். அப்படியே பஞ்சர் ஆகல.. நா டயரையே கிழிச்சி எடுத்துடுறேன்னு நினைச்சா கூட, எந்த ப்ரச்சனையும் இல்லை. டயரே இல்லாம நடுவுல உள்ள ரிம்ம மட்டும் வச்சே இந்த கார ஓட்டிக்கிட்டு வந்துடலாமாம்.


கார் முழுசுமே air tight. அதாவது வெளிலருந்து எந்த கேஸூம் உள்ள போகாது. ஒரு வேளை poisonous gas அட்டாக் எதாவது முயற்சி பன்னாலும் பன்னுவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஒரு வேளை கார சுத்தி கும்பல் எதாவது கூடி ஆர்ப்பாட்டம் பன்னா கூட, அவங்கள கலைக்க, கண்ணீர் புகை (tear gas) வெளிப்படுத்துறதுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதுமட்டும் இல்லாம ஒரு பட்டன அழுத்துனா வண்டிக்கு முன்னால ரெண்டு மூணு short gun வந்து நிக்குமாம். லைட்டெல்லாம் ஆஃப் பன்னிட்டு கும் இருட்டுல கூட கார ஓட்டிக்கிட்டு போற மாதிரி நைட் விஷன் கேமரா ஒண்ணும் இந்தக் கார் முன்னால பொறுத்திருக்காய்ங்களாம்.

ட்ரைவர் பக்கத்துல இருக்க window வ தவிற கார்ல உள்ள எந்த விண்டோவும் ஓப்பன் ஆகாது. டிரைவர் விண்டோ கூட வெறும் மூணு இன்ச் மட்டும் தான் ஓப்பன் ஆகுமாம். அதுவும் எதுக்குன்னா ட்ரைவர் எதாவது டாக்குமெண்ட் எடுத்துக் குடுக்க வேண்டியிருந்தா, அதுக்காம். இந்தக் கார் டைரவர் CIA வால ட்ரெயிங் குடுக்கப்பட்டவனாம். ரொம்ப குஷ்டமான கண்டிஷன்லயும் வண்டி செமையா ஓட்டுற கெப்பாகுட்டி உள்ளவனத்தான் இந்த வண்டி ட்ரைவரா போடுவய்ங்களாம்.


ஒபாமா எந்த ஊருக்குப் போனாலும் இந்தக் காரும் கூட போகுமாம். பீஸ்ட் வெளியூர்ல இருக்கும்போது, அதுக்கு முன்னால ஒரு அமெரிக்க கொடியும், இன்னொன்னு எந்த நாட்டுல இருக்கோ அந்த நாட்டுக் கொடியும் பறக்குமாம். அப்புறம் காருக்குள்ள எந்த சிக்னலும் இருக்காதாம். என்னது Vodafone எல்லா இடத்துலயும் சிக்னல் இருக்குமா? அட ஓடஃபோனா இருந்தாலும் உள்ளுக்குள்ள சிக்னல் இருக்காது. காருக்குள்ளயே ஒரு built in சாட்டிலைட் ஃபோன் இருக்குமாம். அது டைரக்டா Vice president கூட பேசிக்கலாமம். என்னது? ச்ச ச்ச… ரீச்சார்ஜெல்லாம் பன்ன வேண்டியதில்லை. Monthly பில் தான். அத ஆஃபீஸ்லயே கட்டிருவாய்ங்களாம்.

இல்லை எவ்வளவு safety இருந்து என்ன? ஒரு பாம் போட்டா எல்லாம் சுக்கு சுக்காயிரும்னு நினைக்கலாம். ஆனா அதுக்கும் வழி இல்லை. இந்த மாதிரி பாமோ இல்லை க்ரேனைட்டோ தூக்கி வீசுனாலும் வீசிருவாய்ங்கன்னு தான் இந்தக் காருக்கு கீட ஒரு பெரிய ஸ்டீல் ப்ளேட் வச்சிருக்காய்ங்கலாம்.  


இதுக்கு மேலயும் நமக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமா… அவ்வ்வ்!!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Anonymous said...

Ƭɦere's definately a lot to find out about
this subject. I liκe all the points you madе.


Feel free tߋ ssurf tо my page; nitrous oxide booster

Madhu said...

Details are good siva

Anonymous said...

எப்ப அடுத்த பகுதி வரும் பாஸ்.. நாங்க காத்துகிட்டு இருக்கோ,.. ஒருவேளை FBI-ல இருந்து ஏதாவது செய்தி வந்ததுனால் நிப்பாட்டிங்களா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...