Wednesday, June 10, 2015

காக்கா முட்டையும் ரெண்டு கூமுட்டையும்!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு காக்கா முட்டை படத்தை பற்றிய விமர்சனமோ அல்லது படத்தைப் பற்றிய கருத்தோ அல்ல. ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலயே தேசிய விருது வாங்குன படம். ரிலீஸே ஆவாத படத்துக்கு எப்புடி நேஷனல் அவார்டு குடுத்தாய்ங்க.. எல்லாம் உள்குத்து போலன்னு தமிழ் சினிமாவைக் கரைத்துக் குடித்த சினிமா “ஆர்வலர்களும்”, சில இணைய தளங்களும் கூட அந்த சமயத்துல என்னென்னமோ எழுதுனாங்க. போன வாரம் ரிலீஸ் ஆன காக்கா முட்டை படம் பார்த்த எல்லாரோட மனசையும் கவர்ந்திருக்குங்குறது விமர்சனங்கள் மூலமாவும், நண்பர்கள் மூலமும் நல்லாவே தெரியிது.

இப்ப மேட்டர் அது இல்லை. நம்ம சமூக வலைத்தள “பொங்கிகள்” அவங்களோட அதிமேதாவித்தனத்தையும், அவங்களோட ரசிப்புத் திறனையும் மத்தவங்களுக்கு எடுத்துக்காட்ட சீசனுக்கு சீசன் ஒரு படத்த தெரிவு செஞ்சி அந்த ஒரு படத்த பயங்கரமா ப்ரோமோட் பண்ணுவாய்ங்க. சிலர் போஸ்டர மட்டுமே பாத்து. ஆஹா ஓஹோ அமர்க்களம் அட்டகாசம், குறியீடு, கணக்கீடுன்னு அவிய்ங்க எங்கெங்கையோ படிச்சதெல்லாம் அந்த ஒரு படத்துல தெரியிதுன்னு சொல்லுவாய்ங்க. சொல்லிட்டு போங்க தப்பு இல்லை.

ஆனா ஒருத்தனுக்கு புடிச்ச படம் அடுத்தவனுக்கும் நிச்சயம் புடிக்கனும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஒரு டேஸ்டு. ஆனா, இப்ப facebook ல சில பேரு காக்க முட்டையப் பத்தி போடுற போஸ்டுங்களையெல்லாம் பாத்தா சத்தியமா சிரிப்புத் தான் வருது. ஒருத்தன் என்னடான்னா “காக்கா முட்டைய எவன் மொதல்ல நல்லா இல்லைன்னு சொல்றானோ அவன ஸ்பாட்லயே காலி பண்றேண்டா”ங்குறான். இன்னொருத்தன் என்னடான்னா “காக்கா முட்டை நல்லா இல்லைன்னு சொல்றவன் ரத்தம் கக்கிச் சாவான்” ங்குறான்.

ஒருத்தரு அந்தப் படத்த “சூப்பர்லாம் இல்லைய்யா.. சுமாராத்தான் இருக்கு” ன்னு சொல்லிருந்தாரு. அவரு எதோ மிகப்பெரிய குத்தம் பன்னிட்ட மாதிரி “இவரோட டேஸ்ட் இவ்வளவு தான்.. இவருடைய கலை ஞானம் இவ்வளவுதான்” ன்னு என்னென்னமொ ஓட்டுறாய்ங்க. ஏண்டா டேய் உனக்கு புடிச்சா, நல்லாருக்குப்பா, செமப்பா குறியீடுப்பான்னு எதயாவது சொல்லி பில்ட் அப் பண்ணு. ஆனா அடுத்தவனும் அந்தப் படத்த நல்லா இருக்குன்னுதான் சொல்லனும்னு எதிர்பாக்குறது என்னங்கடா  நியாயம்.

இப்புடி எக்ஸ்ட்ரா பில்ட் அப் குடுத்து குடுத்தே தான் ஒரு டைரக்டர ஒழிச்சே கட்டுனாய்ங்க. அது வேற யாரும் இல்லை. தங்க மீன்களை எடுத்த டைரக்டர் ராம் தான். “மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்தே தீரவேண்டிய அருமையான காவியமடா அது” ன்னு இதே குரூப்பு அந்தப் படத்துக்கு வெளம்பரம். அதுவும் படம் வர்றதுக்கு முன்னாலயே. செண்டி மெண்டுன்னாதான் நம்மாளுக படக்குன்னு விழுந்துருவாய்ங்களே.. ”ரிலீஸ் பண்ண விட மாட்டேங்குறாங்க… ரிலீஸ் பண்ண காசு இல்லை…. தியேட்டர் குடுக்க மாட்டேங்குறாங்க” ராம் அவர்கள் அவர் கஷ்டத்த சொல்ல, நம்மாளுக படத்த பாக்கமலேயே ப்ரமோட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க. கடைசில நடந்தது என்ன? அது ஒரு ரொம்ப சுமார் படம்.


இவியிங்க பின்னாலருந்து குடுத்த ஊக்கம், அகில உலக சினிமாவையே ஒரே படத்துல அடக்கி எடுத்துட்ட மாதிரி அவருக்குள்ளையே ஒரு மன பிராந்திய உருவாக்கிருச்சி. இல்லைன்னா, அவ்ளோ பேர் முன்னால ஏன் சார் என் படத்துக்கு விருது குடுக்கலைன்னு கேப்பாரா? தெளிவான மனநிலையில இருக்க ஒருத்தன் நிச்சயம் இதுமாதிரி கேக்க மாட்டான். விஜய் அவார்ட்ஸ் சும்மா கண் துடைப்பு அவார்டாவே இருக்கட்டும். Fake polling பன்னி விருது குடுக்குறவங்களாவே இருக்கட்டும். இவர மதிச்சி ஸ்டேஜ்ல கூப்டு பேச வச்சா, கொஞ்சம் கூட ஸ்டேஜ் மேனர்ஸ் இல்லாம “என் படத்துக்கு ஏன் அவார்டு குடுக்கல… அந்தப் பாட்ட போடுங்க நா கேக்கனும்”ன்னு எத்தனை காமெடி. இவர மாதிரியே கோபிநாத்தும் கொஞ்சம் கூட யோசிக்காம, ”உங்க படம் அந்த அளவு ஒர்த் இல்லை சார்” ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருந்தா, அதுக்கப்புறம் மூஞ்ச எங்க வச்சிருப்பாரு.

எத்தனையோ நேஷனல் அவார்டு படங்களுக்கு உள்ளூர் விருதுகள் கிடைக்காம போயிருக்கு. எத்தனையோ சிறந்த நடிகருக்கான நேஷனல் அவார்டு வாங்குனவங்கள கண்டுக்காம கூட விட்டுருக்காங்க. அவங்கல்லாம் ஏன் எனக்கு விருது குடுக்கலன்னா கேட்டுக்கிட்டு இருக்காங்க.

இதுல காமெடி என்னனனா, இவிங்க பில்ட் அப் குடுக்காம சும்மா இருந்தாலே நல்ல படங்கள் ஒரளவுக்கு ஓடும். எந்த ஒரு மொக்கை படத்தையும் பில்ட் அப் குடுக்குறதால தூக்கி நிறுத்திடவோ, எந்த ஒரு நல்ல படத்தையும் தப்பான விமர்சனங்களால கவுத்திடவோ முடியாது. பெருவாரியான மக்களுக்கு அந்தப் படம் என்ன தாக்கத்த குடுக்குதோ அதான் படத்தோட ரிசல்ட். மக்கள்கிட்ட இந்த மாதிரி சின்ன படங்களை கொண்டு சேர்க்க சில பில்டப்புகள் இருக்கலாம்தான். அதுல அடாவடித்தனம் இருக்கக் கூடாது. 

இப்டித்தான் போன மாசம், உத்தம வில்லன்ல அது தெரியிது, இது தெரியிதுன்னு ஏத்தி விட்டுக்கிட்டு இருந்தாய்ங்க. படம், முழுசா நாலு நாள் கூட ஒழுங்கா ஓடல. இதுல நா உத்தம வில்லன நல்ல இல்லைன்னு சொன்னதுக்காக என்னை ஒரு நாய் “மூன்றாம் தர நாயெல்லாம் விமர்சனம் எழுதுது” ன்னு திட்டிருந்தான். நா அவனுக்கு பதில் சொல்ல தேவையில்லை. படத்தோட ரிசல்ட்டே அவனுக்கு பதில் சொல்லிருக்கும். 

காஞ்சனா-2வும், உத்தமவில்லனும் தெலுங்குல ஒண்ணாத்தான் ரிலீஸ் ஆச்சு. ஒரு வார முடிவுல காஞ்சானா 11 கோடி கலெக்‌ஷன். உத்தம வில்லனோட கலெக்‌ஷன்  வெறும் 1.5 கோடி.. கலெக்சன்ல என்ன இருக்கு? படம் எப்புடி இருக்குன்னு தான் முக்கியம்னு வியாக்யானம் பேசலாம். ஆனா end of the day படம் எத்தனை பேருக்கு புடிச்சிருக்குங்குறத படத்தோட கலெக்சன் தான் சொல்லும்.

ஒரு படத்த பாராட்டுறது, ப்ரமோட் பண்றது நிச்சயமா நல்ல விஷயம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அடுத்தவங்களும் அதயேத்தான் சொல்லனும்னு நினைக்கிறது தான் ரொம்ப ரொம்ப தப்பு.


இந்த காக்கா முட்டைகள் அவங்களத் தரமான சினிமா ரசிகரா மத்தவங்களுக்கு காட்டிக்கொள்ள இந்த சீசன்ல தேர்ந்தெடுத்திருக்கும் படம் தான் காக்கா முட்டை. ஒரு வேளை படம் புடிக்கலைன்னாலும் யாரும் படத்த பத்தி தப்பா சொல்லிடாதீங்க. அப்புறம் சாமி குத்தம் ஆயிரும். உங்களை வேற வண்டை வண்டையா திட்டுவாய்ங்க. 

ஸ்க்ரோல் பன்னி கடைசி பாராவை மட்டும் படிப்பவர்கள் கவனத்திற்கு, கடைசி பாராவ மட்டும் படிச்சிட்டு திட்டுறதுக்கு கிளம்பி வந்துடாதீங்க. இது சினிமா விமர்சனம் இல்லை. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Anonymous said...

அதே மாதிரி ரஜினி படத்தையும் தப்பா சொல்லிட கூடாது சொன்னா சாமி கண்ணை குத்திடும் ...........................

படுமட்டமான ரஜினி படமாக இருந்தாலும்

Sivashankar S said...

எனக்கும் இந்த மாரிதான் தோன்றியது ..

Anonymous said...

That vadivel picture shows your timing sense.. that is awesome.. super siva

Anonymous said...

As much as I agree with the points you said, sometimes you get highly irritated when someone speaks wrong about Rajni Movies. Think abt that Muthusiva....

முத்துசிவா said...


ஒருவர் கருத்து தெரிவித்த பின்னர், அதில் நமக்கு உடன்பாடு இல்லையென்றால், நமது கருத்தை justify செய்வதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்தப் பதிவு மற்றவர்கள் கருத்து கூறுவதற்கு முன்னரே எதிர்கருத்து எவரும் சொல்லவே கூடாது என்பவர்களைப் பற்றியது.

andygarcia said...

அப்போ 100 கோடி வசூல்னால lawrence தான் சூப்பர் ஸ்டார்னு சொல்றிங்க

ThaMaRai said...

Good article keep it up Siva

முத்துசிவா said...

@Andygarcia:

வரிசையா இன்னும் ஒரு பத்து படம் 100 கோடி வசூல் பன்னாருன்னா, சத்தியம் பன்னி சொல்றேன் அவர் தான் சூப்பர் ஸ்டாருன்னு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...