Saturday, July 4, 2015

பாபநாசம் – லெவல் கமலஹாசன்!!!


Share/Bookmark
ஐந்து மொழிகள்ல ஒரு படம் ரீமேக் செய்யப்படுதுன்னா அது சாதாரண விஷயம் இல்லை. இந்தியவுலயே அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படம் தேவதாஸ். 1917 ல ரிலீஸான ஒரு நாவல அடிப்படையா கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்த இது வரைக்கும் ஆறு மொழிகள்ல பதினாறு தடவ ரீமேக் பன்னிருக்காங்க. அடுத்தது அதிக முறை ரீமேக் செய்யப்பட்ட படம் மோகன்லால் நடிச்ச மணிச்சித்ர தாழு. இதுவரைக்கும் ஆப்தமித்ரா, சந்திரமுகின்னு 10 முறை ரீமேக் செய்யப்பட்டுருக்கு. (இரண்டாவது பாகங்களையும் சேர்த்து). அடுத்தபடியா அந்த ரெக்கார்ட இந்த த்ரிஷ்யம் அடிச்சிரும் போலத் தெரியிது. இதுவரைக்கும் 4 ரிலீஸ் ஆயிருக்கு. அஞ்சாவது இந்த மாசம் கடைசியில ரிலீஸ் ஆகப் போகுது.


கமல் இந்தப் படத்த ரீமெக் பன்னப்போறார்னு தெரிஞ்சதுமே ஏகப்பட்ட கருத்துக்கள். ஒரு பக்கம் கமலத் தவற வேற யாரும் இதப் பன்ன முடியாதுன்னாங்க. இன்னொரு பக்கம் மோகன்லால் ரொம்ப நேச்சுரலா நடிச்சிருந்தாரு. அத கமல் ஓவர் ஆக்டிங் பன்னி கெடுத்து விடப்போறார்னு ஆளாளுக்கு ஒண்ணு ஒண்ணு. இன்னும் சில பேரு மோகன் லால் கண்ணு நடிச்சிது, கன்னம் நடிச்சிதுன்னு மோகன்லால தூக்க ஆரம்பிச்சாய்ங்க. அடப் பாவிகளா.. மோகன்லாலுக்கு கன்னத்துல சதை கொஞ்சம் அதிகம். வேகமா திரும்பும்போது கன்னம் கொஞ்சம் ஆடிருச்சி. அத வச்சி கன்னம் நடிக்கிது கண்ணு துடிக்கிதுன்னு கெளப்ப ஆரம்பிச்சிட்டாய்ங்க.  மோகன்லால் ரொம்ப இயல்பா நடிச்சிருந்தார்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா, தமிழ்ல கமலத்தவற இந்தப் படத்த வேற யாராலயும் இவ்வளவு செமையா பன்னிருக்க முடியாதுன்னு படம் பாத்துட்டு வரும்போது ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.

ஒரிஜினலுக்கு கொஞ்சம் கூட கலங்கம் வராம ஒரிஜினலோட தரத்த விட ஒருபடி அதிகமாவே இங்க நமக்கு குடுத்துருக்காங்க. அதுக்கு முக்கியக் காரணம் கமலோட நடிப்பு மட்டும் தான். இந்த ஸ்க்ரிப்டுல யார் நடிச்சிருந்தாலும் ஹிட்டு தான். ஆனா இந்த பர்ஃபார்மன்ஸ் கமலால மட்டுமே குடுக்க முடியும்.
  
முதல் பத்து நிமிடத்தில் நெல்லைத் தமிழோடு ஒத்துப்போக ரொம்பவே கஷ்டமா இருக்கு. அதுவும் டீ கடையில் கமல், எம்.எஸ்.பாஸ்கர், கடை பையன் மூணு பேரும் மாத்தி மாத்தி பேசும்போது எதோ வேற மொழிப் படம் பாக்குற எஃபெக்ட் கூட லைட்டா தெரிஞ்சிது. படத்தோட ஆரம்பத்துல நெல்லைத் தமிழ் வலுக்கட்டாயமா புகுத்தப்பட்ட மாதிரி தெரிஞ்சா கூட, கொஞ்ச நேரத்துல அதுவும் பழகிருது.

அப்புறம் ட்ரையிலர் பாத்துட்டு எல்லாரும் முகத்த சுழிச்ச ரெண்டு விஷயம் ஒண்ணு ஒட்டு மீசை. இன்னொன்னு கவுதமி. ஓட்டுமீசையும் பாக்கப் பாக்கப் பழகிடுது. கவுதமி மீனாவ ரீப்ளேஸ் பன்ன முடியல தான். ஆனா செகண்ட் ஹாப்ல போலீஸ்கிட்ட கெஞ்சும் போதும், பயப்படும் போதும் மீனாவ விட கவுதமி ஒரு படி மேல தான்.

கொழாப்புட்டுக்கு பதிலா இட்லி, “தலைவா சரிதம் எழுது தலைவா” க்கு பதிலா “கூகிள் கூகிள் பன்னிப்பாத்தேன் உலகத்துல” ன்னு ரொம்ப ரொம்ப சின்ன சின்ன மாற்றங்களத் தவிற பெரும்பாலும் எதுவும் மாறல. ஒரிஜினல்ல வர்ற ஒரு சில நீள காட்சிகள வெட்டித்தள்ளிருக்காங்க.

குடும்பமே கஷ்டத்துல இருக்கும்போது அவங்களை கமல் அஞ்சானுக்கு அழைச்சிட்டு போறது வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிற மாதிரி இருக்காதா. அதுவும் கமல் அஞ்சான் பாக்குற  தியேட்டர்ல  அஞ்சானுக்கு எல்லாரும் விசில் அடிச்சி தெறிக்க விடுறாங்க. எழுந்து நின்னு ஆடுறாய்ங்க. லிங்குசாமி போனமாசம் கமல கலாய்ச்சதுக்காக கமல் திரும்ப கலாய்க்கிறாரான்னு தெரியல அவ்வ்

க்ளைமாக்ஸ் சீன்ல கமல் பேசிக்கிட்டு இருக்கும்போதே டக்குன்னு கண்ணுத்தண்ணி கொட்டுறது செம. அஞ்சி போலீஸ்காரனுங்களும் குழிய தோண்டி பாத்து ஏமாந்து at a time ல கமல திரும்பிப் பாக்கும் போது கமல் குடுக்குற ரியாக்சன் செம மாஸ்.

ரொம்பநாளுக்கப்புறம் சார்லிக்கு வாய்ப்பு குடுத்துருக்காங்க. ஆனா ரெண்டே சீன் மட்டும் வர்றது தான் கொஞ்சம் கொடுமை. டெல்லி கணேஷ், இளவரசு எல்லாமே அவங்கவங்க வேலைய கரெக்டா செஞ்சிருக்காங்க. கலாபவன் மணி சுகர் வந்த கவுண்டமணி மாதிரி ரொம்ப சுருங்கிப்போய் இருக்காரு. ஆனா அந்த கேரக்டருக்கு என்ன வெறுப்ப சம்பாதிக்கனுமோ அத பக்காவா செஞ்சிருக்காரு.

ஹாரி பார்ட்டர் படத்துல வர்ற ஹெர்மாயினி (Emma Watson) முதல் பாகத்துல குழுந்தையா அறிமுகமாயி, ஹாரி பாட்டர் கடைசி பாகம் வரும்போது ஹீரோயினா நடிக்கிற அளவு வளந்துருச்சி. அதே மாதிரிதான் இங்க வர்ற சின்ன பொன்னும். மலையாளம், தெலுங்கு, தமிழ்ன்னு வரிசையா எல்லா படத்துலயும் அதே பொண்ணு தான். எல்லா மொழி ரீமேக்கும் முடியிறதுக்குள்ள இந்த பாப்பாவும் ஹீரோயின் ஆயிரும் போல.

சிவாஜிங்குற சிங்கத்துக்கு கடைசி வரைக்கும் நம்ம சினிமாவுல தயிர்சாதத்த மட்டுமே குடுத்துட்டாங்க. அதுனாலதான் எனக்கான சமையல நானே சமைச்சிக்கிறேன்னு கமல் சொன்னதா சமீபத்துல ஒரு பதிவுல படிச்சேன்.  எனக்கென்னவோ கமல்ங்குற மகாநடிகன மற்ற டைரக்டர்கள் செதுக்கும்போது தான் அதோட அவுட்புட் நல்லா வருது. அதுக்கு ஒரு சாட்சி இந்தப் படம். அவருக்கான சாப்பாட்ட அவரே சமைச்சிக்கும்போது பெரும்பாலான சமயங்கள்ல அந்த சாப்பாடு அவர் மட்டுமே சாப்புடுற மாதிரிதான் அமையிது.

மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்தெ வெனைங்குற மாதிரி படம் பாக்குறப்போ பக்கத்துல உக்காருறவனுங்க எப்பிடி பட்டவனுங்கங்குறதும் அவனவன் செய்த வெனை தான். கருமம் எனக்கு முன் சீட்டுல ஒருத்தன் பின் சீட்டுல ஒருத்தன்னு கமல் என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டு இருக்காய்ங்க. அடேய்
இருங்கடா காமெடி வரும்போது சிரிக்கலாம். படத்துல ஒரு சில வசனங்களைத் தவற பெரிய காமெடின்னு எதுவும் இல்லை. எவனோ அவிங்ககிட்ட கமல் காமெடிப்படம் எடுத்துருக்காருன்னு சொல்லி அனுப்பிட்டாய்ங்க போல. கருமம். கமல் எச்சி துப்ப வாயத்தொறந்தா கூட கெக்க புக்கன்னு காதுக்குள்ள வந்து சிரிச்சிட்டு இருக்காய்ங்க. 

குடும்பத்தோட படத்துக்கு அழைச்சிட்டு போகும்போது நாம சங்கோஜப்படுற மாதிரி வரும் முத்தக்காட்சிகளோ, முகம் சுழிக்கிற மாதிரி படுக்கையறை காட்சிகளோ இல்லாத ஒரு கமல் படத்த பாக்குறதுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதுவும் மோகன்லால் மீனா கான்வர்சேஷ்ன்ல கூட ஒரு சில டபுள் மீனிங் வசங்கள் வரும். ஆனா தமிழ்ல அதுகூட இல்லாம ரொம்ப நீட்டா எடுத்துருக்காங்க.

திரிஷ்யம் பாக்காம முதல் தடவ இந்தப் படத்த பாக்குறவங்களுக்கு நிச்சயம் ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Anonymous said...

First time in the history you appreciated Kamal's movie. But at the same time what ever you said about your kamal "i.e when ha hand over himself to the director completely, the movie and Kamal acting is super" is 100% correct.

Unknown said...

Good Review

https://www.facebook.com/TamilCineNewz?ref=hl
www.cinenewz.in

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...