Friday, September 25, 2015

புடிச்சி கொல்லுங்க சார் அவன!!! (18+)


Share/Bookmark
இப்பல்லாம் ஒரு எந்த ஒரு கேஸ்லயும் க்ளியர் கட் ஆதாரங்கள் இருந்தாகூட, அதுக்கு தீர்ப்பு ஆகி வர்றதுக்கு வருஷக்கணக்காகுது. அதுவும் குத்துமதிப்பா, “கொலை பன்னது இவர மாதிரியும் இருக்குங்க இல்லாத மாதிரியும் இருக்குங்க” ன்னு இழுக்குற மாதிரி கேஸெல்லாம் இன்னும் ப்ரமாதம். அசால்ட்டா பத்து பதினைஞ்சி வருஷம் வச்சி செய்யலாம். இப்ப இருக்க சூழல்ல, ஒருசில நாடுகளைத் தவிற மரண தண்டனைங்குறது ரொம்ப குறைவாதான் கொடுக்கப்படுது. கொடுக்குறதே கம்மிதான்னாலும் கருணை மனு, அது இதுன்னு போட்டு நிறைவேற்றப்படுற மரண தண்டனைகள்னு பாத்தா இந்தியாவப் பொறுத்த வரைக்கும் வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டே அதிகம். வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் மட்டும்தான் அதிக எதிர்ப்புகள் இல்லாம நிறைவேற்றப்படுது எத்தனை உயிர்கள அவன் எடுத்திருந்தாலும், அவனோட உயிர எடுக்குறதுக்கு யாருமே உடனே அனுமதிக்கிறதில்லை. . இது எல்லாம் நாம ஒரு உயிருக்கு கொடுக்குற மதிப்பத்தான் காட்டுது.

இப்பதான் இப்டியெல்லாம் மதிப்பு குடுக்குறோம். ஆனா சில நூற்றாண்டுகளுக்கு முன்னால மனித உயிர் ரொம்ப ரொம்ப குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு. அதுவும் ஒருத்தன எப்படியெல்லாம் டார்ச்சர் பன்னி கொல்ல முடியுமோ அத்தனையும் பன்னித்தான் சாகடிச்சிருக்காய்ங்க. நரகத்துக்கு போனா அங்க எமன் நம்மள எண்ணை சட்டில போட்டு வருப்பாரு, தோல உரிச்சி தொங்கவிடுவாருன்னு சும்மா கதைக்காகத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனா இது அத்தனையையும் ஒரு காலத்துல உண்மையாவே செஞ்சிருக்காய்ங்க. எப்படியெல்லாம் மனுஷங்கள டிசைன் டிசைனா சாகடிச்சிருக்காய்ங்கன்னு கொஞ்சம் பாப்போம்.

கழுமரமேற்றுதல்னு ஒரு தண்டனை பெரும்பாலும் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. மிக கொடூரமான தண்டனைகள்ல இதுவும் ஒண்ணு. தேச துரோக குற்றம், போர்குற்றம் போன்ற நாட்டுக்கு எதிரான செயல்கள் செய்யிறவிங்களுக்கு அதிகமா இந்த தண்டனைதான் கொடுக்கப்பட்டது. தப்பு செஞ்சவியிங்க கையை பின்னால கட்டி, அவன அப்டியே குண்டுக்கட்டா தூக்கி, நட்டு வைச்சிருக்க ஒரு கூரான கம்பில நச்சின்னு உக்கார வச்சிருவாய்ங்க. அந்தக் கம்பி பின்னால வழியா உள்ள இறங்கி இறங்கி கொஞ்ச நேரத்துல வாய் வழியாவோ தலை வழியாவோ வெளில வந்துடும்.

கழுமரமேற்றப்பட்டவிங்க சில பேரு ஒருசில நிமிடங்கள்ல இறந்துடுவாங்க. சில பேரு சில மணி நேரம் வரை உயிரோட இருப்பாங்க. அதிகபட்சமா 5 நாட்கள் வரை கூட உயிரோட இருந்துருக்காங்கலாம். எவ்வளவுக் கெவ்வளவு நேரம் ஆகுதோ அந்த அளவு கொடுமை. கூரான அந்தக் கம்பி உள்ள இறங்கும்போது நுரையீரல், இதயம்னு இப்டி முக்கியமான பகுதிகள்ல குத்திருச்சின்னா உடனே இறந்துடுவாங்க. அப்டி இல்லைன்னா உயிர்போக நேரமாகுமாம்.

இவய்ங்களோட நோக்கமே அவன கொடுமைப் படுத்தி சாகடிக்கனும்ங்குறதுதான். அதனால உடனே அவன் சாகக்கூடாதுங்குறதுக்காக, கழுமரமேத்துறதுக்கு முன்னால ஒரு மழுங்கிப்போன கட்டைய முதல்ல உடல்ல பின் வழியா இறக்கி, முக்கியமான ஆர்கான்ஸயெல்லாம் ஓரம் கட்டுவாய்ங்களாம். என்னடா அமைச்சர் வரும்போது ரோட்டுல நிக்கிற ஆளுங்கள ஓரங்கட்டுற மாதிரி  சிம்பிளா சொல்றீங்க.. ஆனா அதத்தான் பன்னிருக்காய்ங்க.  அப்பதான் கழுமரமேத்தும்ப்போது அந்த ஆர்கான்ஸெல்லாம் டேமேஜ் ஆகாம, அவன் ரொம்ப நேரம் உயிரோட இருந்து துடிச்சி சாவான்.

இதாச்சும் பரவால்ல. அவன் தப்பு பன்னிட்டான்னு தெரிஞ்சப்புறம் குடுக்குற தண்டனை. ஆனா அவன் தப்பு பண்ணானா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்கே சில டெஸ்டுகள வச்சிருக்கானுங்க பாருங்க. அதுக்கு பேச்சாம தப்பு பன்னிட்டேம்பான்னு ஒத்துக்கிட்டு நச்சின்னு அந்த கம்பில நம்மளாவே வாலண்டீரா ஏறி உக்காந்துக்கலாம் போல. Game of Thrones ல 4th சீசன்ல Tyrion Lannistor கோர்ட்டுல நின்னு “ I Demand Trail by Combat” ன்னு கேக்கும் போது நமக்கு புல்லரிக்கும். குற்றம் சுமத்தப்பட்டவன் ஒருத்தனோட சண்டை போட்டு ஜெயிச்சி, தப்பு பண்ணலன்னு நிரூபிக்கிற முறைதான் அது.

 அதே மாதிரி கரகாட்டக்காரன்ல கனகாவையும், ராமராஜனையும் தீ மிதிக்கச் சொல்லி, அவங்க ஒழுங்கா வெளில வந்துட்டாங்கன்னா அவங்க தப்பு பன்னாதவங்க, இல்லைன்னா தப்பு செஞ்சவங்கன்னு தீர்ப்பு சொல்லுவாய்ங்களே.. அதே மெத்தடத்தான் ரொம்ப நாளா யூஸ் பன்னிட்டு இருந்துருக்காய்ங்க. உடல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவன வருத்தி, அதிலருந்து அவன் தப்பு செஞ்சிருக்கானா இல்லையாங்குறத முடிவு செய்யிறது. (Trail by Ordeal) அந்த முடிவ கடவுளே கொடுக்குறதா நம்புனாங்க.

அவிங்க வைக்கிற டெஸ்டுல பாஸ் பன்னா அவன் நல்லவன்னு கடவுள் சொல்லிட்டாரு. அவன விட்டுடலாம். டெஸ்டுல மட்டையாயிட்டான்னா கடவுள் போட்டுத்தள்ள சொல்லிட்டாருன்னு எடுத்துகிட்டு போட்டுத்தள்ளிடலாம். Trail by Combat லயாவது ஓரளவுக்கு திறமையானங்க எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. ஆனா Trial by Ordeal லருந்து எஸ் ஆகுறதுங்குறது சாதாரண விஷயமே இல்லை. இதுல நிறைய வகை இருக்கு. ஒவ்வொன்னையும் ரசிச்சி ருசிச்சி உருவாக்கிருப்பாய்ங்க.

முதல் வகையில, ஒரு பானையில எண்ணை கொதிச்சிட்டு இருக்கும். அந்த பானைக்கு அடியில ஒரு சின்ன கல்லு கிடக்கும். எண்ணை கொதிச்சிட்டு இருக்கும்போதே குற்றவாளி, உள்ள கைய விட்டு அந்த கல்ல எடுக்கனும். கிட்டத்தட்ட முழங்கை வரைக்கும் உள்ள விட்டாதான் கல்ல எடுக்க முடியும். கல்ல எடுக்குறதுக்கு முன்னால அரவிந்தசாமி கை மாதிரி இருக்கது, எண்ணை சட்டிக்குள்ள கைய விட்டு கல்ல எடுத்தப்புறம் அடுப்புல வெந்த சாமி கைமாதிரி தீஞ்சி போயிரும்.

இப்ப நம்ம என்ன நினைப்போம். ஒரு வேளை எண்ணைக்குள்ள கைய விட்டு கல்லை எடுத்துட்டா அவன் நல்லவன். கல்லை எடுக்க முடியலைன்னா அவன் தப்பானவன்னு. ஆனா அது தான் இல்லை. வெளில கல்ல எடுத்தோன, தப்பு செஞ்சிருக்கானா இல்லையான்னு தெரியாது. வெளில வந்தோன நல்லவனுங்க மாதிரி வெந்துபோன கையிக்கு மருந்து போட்டு கட்டெல்லாம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டுருவாய்ங்க.

மூணு நாள் கழிச்சி, அந்த கட்ட அவுத்து பாப்பாங்க. அந்த புண்ணு ஓரளவு குணமாயிட்டு வர்ற மாதிரி இருந்தா அவன் நல்லவன். இல்லை குணமாகாம இன்னும் மோசமா இருந்தா அவன் குற்றவாளின்னு தீர்ப்பு சொல்லி அவன மட்டை பன்னிருவாய்ங்க. ஏண்டா அவனுக்கு சுகர் எதுவும் இருந்தா அவன் நிலைமை என்னடா ஆகுறது?

இதுல இன்னொரு முறை நம்ம கரகாட்டக்காரன் டைப்.. நல்ல பழுக்க காய்ச்சின கம்பிங்க மேல ஒரு பத்தடி நடந்து போவனும். இல்லைன்னா பழுக்க காய்ச்சின அதே கம்பிய கையில கொஞ்ச நேரம் புடிச்சிருக்கனும். காப்பி டம்ளர் கொஞ்சம் அதிக சூடுன்னாலே நம்மளால புடிக்க முடியல.. எப்புடித்தான் அதையெல்லாம் புடிச்சாய்ங்களோ? புடிச்சப்புறம் மேல சொன்ன மாதிரி காயத்துக்கு மருந்து வச்சி ஆறப்போட்டு, மூணு நாள் கழிச்சி காயத்தோட current status ah பாத்துட்டு மர்கயா சாலா.

அட என்னப்பா யார் நடந்து போனாலும் காலு கையி பொசுங்கப்போறது உண்மைதான். இதுலயெல்லாம் எப்புடி ப்ரூப் பன்றதுன்னு தோணும். பன்னிருக்காங்களே.. ஒரு அம்மா பன்னிருக்காங்களே.. Emma of Normandy ங்குற ஒரு அம்மா, அவங்கமேல சுமத்தப்பட்ட குற்றத்துக்காக, நெருப்பு கொழம்புல நடந்து கொஞ்சம் கூட காயமே படாம, குற்றமற்றவர்னு ப்ரூப் பன்னிருக்கதா வரலாறு சொல்லுது.

நல்லா கொழுத்த கோழி ஒண்ணு,  சிக்கன் கடைக்கு முன்னாலயே போயி நின்னு தொடைய தட்டிக் காமிச்சிச்சாம். அது மாதிரி நமக்கு நாமே ஆப்ப எடுத்து சொருவிக்க கூடாது. ஒருத்தர் இதே மாதிரி தான் அவருக்கு அவரே வெடி வச்சிக்கிட்டு செத்துருக்காரு.

இயேசுவ சிலுவையில அறைஞ்சு கொடுமைப் படுத்திட்டு இருக்கும்போத போது, அவரோட கால் ரெண்டையும் உடைக்கிறதா ரோமன்ஸ் முடிவு பன்னிருக்காங்க. ஆனா இயேசு முன்னாலயே இறந்துட்டதா அவங்களுக்கு சந்தேகம் வந்துருச்சி. அப்போ அங்க இருந்த ஒரு ரோமன் போர் வீரன், அவர் உயிரோட இருக்காரா இல்லையான்னு பாக்க, அவன் கையில வச்சிருந்த ஈட்டிய வச்சி இயேசுவோட ஒரு பக்கதுல குத்துனானாம். குத்துன உடனே இயேசு உடல்லருந்து  ரத்தமும் தண்ணியும் வந்ததாக எஸ்டிடி சொல்லுது. இப்ப மேட்டர் என்னன்னா அவர குத்துன அந்த ஈட்டியத்தான் புனித ஈட்டின்னு சொல்றாங்க. அந்த ஈட்டி ”எங்ககிட்டதான் இருக்கு” எங்ககிட்டதான் இருக்குன்னு உலகத்துல நிறைய கிறிஸ்தவ தேவாலயங்கள் சொல்லிக்கிறாங்களாம்.  

இப்போ  Peter Bartholomew ங்குறவரு ஒரு பெரிய ஆட்டக்காரரு. ராகவன் இன்ஸ்டிங்க்ட் மாதிரி அவருக்கு நிறைய இன்ஸ்டிங்க்ட், நிறைய விஷன்லாம் அப்ப வருமாம். அவரு என்ன பன்னிருக்காரு 1099 ல அந்த புனித ஈட்டிய தான் கண்டுபுடிச்சிட்டதா  எல்லார்கிட்டயும் சொல்லி, கண்டுபுடிச்சத கொண்டாடுறதுக்காக ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு பன்ன சொல்லிருக்காரு. மக்கள் எல்லாம் அந்த ஈட்டிய பாக்க ஆர்வமா காத்திருக்க, நம்மாளு செந்தில் குடுத்த காசுக்கு முறுக்கு வாங்கி திண்ணுட்டு ஒரே ஒரு வெத்தலை வாங்கிட்டு வர்ற மாதிரி, ஒரு சின்ன மெட்டல் பீஸை கொண்டு வந்து “இதாண்ணே அது” ன்னு சொல்லிருக்காரு. வக்காளி.. வெறியாயிட்டாய்ங்க எல்லாரும். உடனே நம்மாளுமேல 420 கேஸ போட்டுப்புட்டாய்ங்க.

கடுப்பான பீட்டரு நம்ம இதற்குத்தானே ஆசைபட்டாய் ரோஸ்மிக்கு மாதிரி “இருடா… இப்ப என்ன பண்ணுறேன்னு பாரூடா.. நா தப்பு பன்னலன்னு ப்ரூப் பண்றேண்டா” ன்னு வாலண்டியரா அவரே போய் தீமிதிச்சிருக்காரு. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மிதிச்சிட்டாரு போல. அப்புறமென்ன.. கதம் ஆயிட்டாரு. 

அடுத்த பதிவில் தொடரும்... 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...