Monday, September 28, 2015

மாயா – ஜென்மம் எக்ஸ்!!!


Share/Bookmark
நா ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்க சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது அத பாக்க முடியாதபடி எதாவது சிக்கல் வந்துடும். போன வருஷம் வரைக்கும், கரெக்டா படம் ரிலீஸ் ஆகும்போது எதாவது சைட்டுக்கு அனுப்பிருவாய்ங்க. இந்த வருஷம் அந்த பிரச்சனை இல்லை. ஆனாலும் ரொம்ப நாளா எதிர் பார்த்த தலைவர் கவுண்டரோட “49-ஓ” ரிலீஸ் ஆகியும் இன்னும் பாக்க முடியல. ரெண்டு மூணு காரணங்கள். நமக்கு எப்பவுமே நைட் ஷோதான் மொத பிரிஃபரன்ஸ். Day டைம் ல படத்துக்கு போன எதோ நேரத்த வீணாக்குற மாதிரியே ஒரு ஃபீல் இருக்கும். அதே மாதிரி நம்ம கம்பெனி சிட்சுவேஷனுக்கும் நைட் ஷோ தான் கரெக்டா இருக்கும். ஆனா கவுண்டர் படம் சிட்டில வெகு சில தியேட்டர்கள்லயே ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் ஒண்ணு ரெண்டு ஷோ . எல்லாமே மதியமும் சாயங்காலமும். போனவாரம் ஊருக்கு போனா, ஊர்லயும் படம் ரிலீஸ் ஆகல. ஒரே டெலிகேட் பொசிசன். இந்த லட்சனத்துல இந்த வாரம் சனி ஞாயிறு இரு தினங்களும் கம்பெனி வச்சிட்டாய்ங்க. இந்த சமயத்துல reliable லான நண்பர்கள் சில பேர்கிட்டருந்து மாயா பத்தின இன்புட் வந்துச்சி. அதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்.

சரி மாயாவுக்கு வருவோம். மாயா ஒரு பள்ளியில ஆசிரியரா வேலை பாக்குறாங்க. அதிகம் பேச மாட்டாங்க. மணி ரத்னம் ஹீரோயின் மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தை அதுவும் துண்டு துண்டா தான் பேசுவாங்க. சோகமா இருக்கும்போது அவங்களுக்குன்னு இருக்க ஒரு தனி பீச் அவுஸ்க்கு போய் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க. இந்த சமயத்துல மாயாவுக்கு ஒரு போலீஸ் கூட லவ்வாயிடுது. அந்த போலீஸுக்கு சில வில்லன்களோட லடாய் ஆயிருது. வில்லன்கள் போலீஸ் மேல இருக்க காண்டுல மாயாவ போட்டு தள்ளிடுறாங்க.

செத்துப்போன மாயா அவங்கள கொன்ன ரவுடிங்கள பழிவாங்குறதுக்கு பேய் அவதாரம் எடுத்து வர்றாங்க. ஒவ்வொரு ரவுடியையும் பயமுறுத்தி பயமுறுத்தி அவங்கள கொன்ன மாதிரியே கொல்றாங்க. ஆனா மெயின் ரவுடி பாண்டியன மட்டும் உடனே கொல்லல. அவன் கிட்ட போய் “ உன்ன கொல்ல போறேன் பாண்டியன். இது இப்ப நடக்கலாம். இல்லை ரெண்டு நாள் கழிச்சி பொறுமையா கூட நடக்கலாம்” ன்னு அவன் பேசுன அதே டயலாக்க உல்டா அடிச்சி மெரட்டிட்டு வர்றாங்க. பாண்டியன் பயத்துலயே இருக்கான். மாயாவோட கணவர் மாயா செத்தப்புறம், மீசைய மட்டும் கொஞ்சம் மாத்திக்கிட்டு தூத்துக்குடி பக்கத்துல உள்ள நல்லூர்னு ஒரு கிராமத்துல போஸ்டிங் வாங்கிட்டுப் போயிடுறாரு. அதுமட்டும் இல்லாம அந்த ஊர்ல அவர விட உயரமான ஒரு பொண்ண பாத்து உசார் பண்ணிடுறாரு.

பாண்டியன மட்டும் கொண்ணுட்டு பொத்துனாப்புல போயிடலாம்னு இருந்த மாயா பேய், அவங்க ஹஸ்பண்டு வேற ஒரு பொண்ணு கூட டூயட் பாடுறத கேள்விப்பட்டு வெறியாயி, அந்த ஊருக்கு போய் அவ புருஷன கொல்றதுக்காக ஓட ஓட விரட்டுது. தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னே தெரியாத போலீஸ் புருஷன் டக்குன்னு பாக்கெட்ல இருந்த போன எடுத்து அதுல ஹெட் செட்ட சொருகி, பேய் காதுல வச்சி ஒரு பாட்ட போட்டு விடுறான். “ Yo Yo… This is DSP…. Lets sing and dance… இது சிங்கம் டான்ஸ்” ன்னு எதோ ஒரு பாட்டு ஓட, அத கேட்ட மாயா பேய் அங்கனயே துடிதுடிச்சி செத்துப் போயிருது. ”உயிரோட இருக்கவன சாவடிச்சா வெறும் ஸ்டார். பேயையே சாகடிக்கிறவந்தாண்டா ராக்ஸ்டார்” ன்னு DSP க்கு ராக்ஸ்டார் பட்டம் குடுக்குறதோட படம் முடியிது. சரி காக்க காக்க படத்துக்கு ஒரு சீக்குவல் எடுத்தா எப்டி இருக்கும்ங்குறது தான் இந்தக் கதை. சரி நம்ம இப்ப ஒரிஜினல் மாயாவப் பத்தி பாப்போம். Activate serious mode.

கடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல நிறைய புது இயக்குனர்களோட வரவால தமிழ் சினிமா ரொம்பவே மாறிருக்குன்னு சொல்லலாம். நிறைய வித்யாசமான கதைக்களங்கள். குறைந்த முதலீட்டுலயே நல்ல தரமான படங்கள் வரத் தொடங்கிருக்கு. நாம எது எதையெல்லாம் நம்ம  சினிமாவுல குறையா சொல்லிக்கிட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நிவர்த்தி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. உதாரணமா கதைக்குள்ள போறது. ஆங்கிலப்படங்கள்ல முதல் காட்சியே கதைக்குள்ள போயிருவாங்க. ஆனா நம்மூர்ல படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோ இண்ட்ரோ, ஹீரோயின் இண்ட்ரோ, கொஞ்சம் காமெடின்னு சுத்தி சுத்தி குறைஞ்சது இருபது நிமிஷம் கழிச்சிதான் கதைக்குள்ளயே போவோம். அந்த மாதிரி சூழல் சமீபத்தைய புது இயக்குனர்கள் படங்கள்ல ரொம்பவே குறைஞ்சிருக்கு. நேரடியா கதைக்கான காட்சியிலயே ஆரம்பிக்கிறாங்க.

மேலும் தமிழ்ல ஆடியன்ஸ ரொம்ப கொடூரமா பயமுறுத்துற மாதிரி இதுவரைக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே வந்துருக்கு. ஒரு சில படங்கள் கொஞ்ச நேரம் பயமுறுத்தினாலும் படம் முழுசும் அத தக்க வச்சிக்க முடியிறதில்லை. காஞ்சனா மாதிரி படங்கள் முதல் பாதி பயத்துல உறைய வச்சாலும் மறுபாதியில இழுவையான காட்சிகளாலும், பேயோட்டுதல் சாமியார் டைப் காட்சிகளாலயும் போரடிக்க வச்சிடும். சமீபத்துல வந்த டிமாண்டி காலனி ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம எடுத்துட்டு போயிருந்தாங்க. அதே வரிசையில, டிமாண்டி காலனியவிட இன்னும் பயங்கரமா, நல்ல தரத்தோட வந்திருக்க படம்தான் மாயா.

முதல்ல பேயோட்டுரவங்களோ, இல்லை சாமியார்களோ இல்லாம வந்திருக்க முதல் பேய் படம் இதுதான்னு நினைக்கிறேன். முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சிலயும் பீதியக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க. வழக்கமா ஒரு கதைய narrate பன்னும் போது அவ்வளவா interesting ah இருக்காது. ஆனா இங்க மாயவனம்ங்குற காட்டப்பத்தியும், அங்க இருந்த காப்பகத்த பத்தியும், அதுக்கப்புறம் அங்க நடந்த விஷயங்களப் பத்தியும் ஒருத்தர் சொல்ல சொல்ல நம்மளயும் அறியாம அள்ளு கிளம்புது.

ஒவ்வொரு சீனும், சீன் லொக்கேஷனுமே பயமுறுத்துது. அர்ஜூன் நடிச்ச ”யார்” நிறைய பேர் பாத்திருப்பீங்க. அந்த கதைக் களமும், லொக்கேஷனுமே நம்மள ரொம்ப பயமுறுத்தும். அதே ”யார்” கண்ணன் இயக்கிய டிவி சீரியலான “ஜென்மம் X” எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. டிவில வந்த திகில் சீரியல்கள்ல ரொம்ப முக்கியமான ஒண்ணு. அதுல வந்த பேய் முகங்களும், கதைகளும் இப்ப நினைச்சாலும் பயமா இருக்கும். 

ஒருநாள் ராத்திரி பிரசவ வலியில துடிச்சிட்டு இருக்க ஒரு அம்மாவ ஏத்திட்டு போற ஆட்டோக்காரன் ஒயின் ஷாப்ப பாத்து நிறுத்திட்டு குடிக்க போயிருவான். இந்த அம்மா ஆட்டோவுலயே வலி தாங்காம இறந்து போயிடும். திரும்பி வந்து பாத்த ஆட்டோகாரன் என்ன பன்றதுன்னு தெரியாம, பக்கத்துல உள்ள ஒரு குப்பை கிடங்குல அந்தம்மாவ பொதைச்சிட்டு வந்துடுவான். திரும்ப வந்து ஆட்டோவுல உக்காந்து ஸ்டார்ட் எடுக்கும்போது பின்னால யாரோ உக்கார்ந்துருக்க மாதிரி இருக்கும். பயத்தோட மெதுவா திரும்பி பாக்க, அந்தம்மா, கிழிஞ்சி தொங்குற முகத்தோட கொடூரமா பின்னால உக்காந்திருக்கும். 

இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. இன்னும் எத்தனையோ பேய் கதைகள் ஜென்மக் எக்ஸ்ல வந்துருக்கு. இந்தப் படத்துல வர்ற ஆட்டோ பேய் காட்சிகளைப் பாக்கும்போதும், லொக்கேஷன்களப் பாக்கும்போதும் எனக்கு ஜென்மம் எக்ஸ் ஞாபகம்தான் வந்துச்சி. Youtube ல தேடுனதுல மனோ வாய்ஸ்ல ஜென்மம் எக்ஸோட டைட்டில் சாங்க் மட்டும் தான் கிடைச்சிது. இதயே பாருங்க எப்டி இருக்குன்னு.


மாயாவுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள் கேமராவும், மியூசிக்கும். பெரும்பாலான காட்சிகள் கருப்பு பேக்ரவுண்டுலதான். அதுவே நல்லா எடுத்து குடுக்குது. அதுக்கேத்த மாதிரி பயமுறுத்துற மியூசிக். நயன்தாரா வயசு ஆக ஆக அழகாயிட்டே போவுது. செம அழகு. சின்னப் புள்ளை மாதிரி இருக்கு. அதுவும் அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி எப்பொதும் ஒரு சோகத்த முகத்துல வச்சிக்கிட்டு, செமையா நடிச்சிருக்கு. கருப்பு பேக்ரவுண்ட்ல எடுத்துருக்கதால பளிச்சின்னு இருக்கு.

நல்ல தெளிவான மற்றும் முழுமையான திரைக்கதை. முதல் பாதியில ஒரு சில காட்சிகளுக்கு தொடர்ச்சி இல்லாத மாதிரியும், கொஞ்சம் எடிட்டிங் மிஸ்டேக் இருக்குதோன்னும் தோணும். ஆனா ரெண்டாவது பாதிய பாத்தப்புறம் எல்லாமே பக்கான்னு புரியும். நெகடிவ்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம். ஒரு சில ட்விஸ்டுகள் மற்றும் காட்சிங்கள நாம முன்னாலயே கணிக்கும்படியா இருக்கு. நயன்தாரா குடும்ப கஷ்டத்துல குழந்தைய வச்சிக்கிட்டு எப்பவுமே சோகமான முகத்தோட வர்றாங்க. அது ப்ரச்சனை இல்லை. ஆனா அவங்க நடிக்க வாய்ப்பு தேடி அலையிறாங்க. நயன்தாரா நடிச்சி காட்டுறமாதிரி வைக்கப்பட்ட காட்சிகள்ல கூட அதே சோகம்தான் இருக்கே தவற வேற எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

ஹீரோ ஆரி. ஹீரோன்னு சொல்ல முடியாது. ரொம்ப நேரம் வர்ற அமெரிக்க மாப்ளன்னு சொல்லலாம். கதையில அவருக்குன்னு பெருசா எதுவும் ஸ்கோப் இல்லை. நடிப்பு ஓக்கே. ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம சூர்யா மாதிரி இருக்கார். இன்னொரு ஆங்கிள்ல பாத்த நம்ம இண்டியன்  பவுலர் ப்ரவின் குமார் மாதிரி இருக்கார். ”நெடுஞ்சாலை” படத்துல தாடியும் மீசையுமா காட்டான் மாதிரி இருந்தவரு இதுல yo yo boy மாதிரி இருக்காரு.



படத்துல கேரக்டர்களும் ரொம்ப இல்லை. தேவையான அளவு தான். இந்தப் படத்தோட ட்ரெயிலர் பாக்கும்போது “மனநல காப்பகம், பேய், காடு” ன்னு வந்தோன பெருசா ஈர்ப்பு வரல. ஏன்னா நிறைய ஆங்கில பேய் படங்களோட ஃப்ளாஷ்பேக் இந்தமாதிரி மனநல காப்பக நோயாளிகளை வச்சி வந்துருக்கு. ஆனா படம் பாத்தப்புறம் டைரக்டர் அஷ்வின் சரவணன் மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருக்கு. ஒரு சில காட்சிகள் மட்டும் சில ஆங்கில பட போஸ்டர்கள் ஞாபகப் படுத்துது. குறிப்பா வீல்சேர்ல உக்காந்திருக்க பேய், அந்த குழந்தை விளையாடுற பொம்மைகள் எல்லாம் conjuring type la இருக்கு.

மத்தபடி என்னைப் பொறுத்த அளவுல தமிழ்ல இதுவரைக்கும் வந்த சிறந்த பேய் படங்கள்ல மாயாவும் ஒண்ணு. நிச்சயம் பாக்கலாம். சின்ன குழந்தைகளை கூட்டிட்டு போறது உசிதமல்ல. படம் பாதி ஓடிக்கிட்டு இருக்கும்போதே நிறைய குழந்தைங்க தியேட்டர்ல அழ ஆரம்பிச்சிருச்சுங்க.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Siva said...

அதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்." - nice lines. Nalla yeludhareenga. Nanru

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...