Saturday, September 5, 2015

பாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க!!!


Share/Bookmark
ஆஃபீஸ் கேண்டீன்லயோ, இல்ல வீட்டுலயோ திடீர்ன்னு ஆளுங்களுக்கு சாப்பாடு பத்தாமப்போச்சின்னு வைங்க, அந்த சமயத்துல மேனேஜ் பன்றதுக்குன்னே ப்ரத்யேகமா கண்டுபுடிக்கப்பட்ட ஒரு சாப்பாடு இருக்கு. அதான் உப்புமா. எண்ணை தண்ணி, மிளகா வெங்காயம் எல்லாத்தையும் போட்டு கொத்திக்க வச்சி, ரவா அள்ளி உள்ள கொட்டி, மழைச்சாரல் மாதிரி கொஞ்சம் உப்ப அங்கங்க தூவி நாலு கிண்டு கிண்டி இறக்குனா உப்புமா ரெடி. மேகி பன்ற நேரத்துல உப்புமா செஞ்சிடலாம். ஆனா அத திங்கிறவனுக்கு தான் தெரியும் அது எவ்வளவு கண்றாவியா இருக்கும்னு. அந்த மாதிரியான ஒரு அவசர உப்மாதான் இந்த பாயும் புலி. இவிங்க அவசரத்துக்கு கிண்டி நம்மள சாப்புட வச்சி டெஸ்ட் பன்னிருக்காய்ங்க.

விஷாலுக்கும் கடைசி ரெண்டு படம் சரியாப்போகல… சுசீந்திரனுக்கும் கடைசி படமம் சரியாப் போகல. ஆக ரெண்டு பேரும் சேந்து “வாங்க ஜீ, வாங்க ஜீ,, நாம ரெண்டு பேரு சேருரோம்… பாண்டிய நாடு மாதிரியே ஒரு படத்த குடுக்குறோம்.. பின்றோம்” ன்னு முடிவு பன்னி இறங்கிருப்பாய்ங்க போல. நம்மள பின்னிட்டாய்ங்க

ஒரு படம் எடுக்கும்போது ஒண்ணு ஹரி, லிங்குசாமி மாதிரி முழுசா இறங்கிடனும். அடிச்சா கின்னுன்னு இருக்கது, ஆளுங்கள தூக்கி பனை மரத்துல வீசுறதுன்னு. இல்லையா  எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஏர்ல பரக்குறதெல்லாம் இல்லாம மிஷ்கின், பாலா மாதிரி  இறங்கிடனும். ரெண்டும் இல்லாம, ரெண்டுக்கும் நடுவுல இருக்கமாதிரி “படம் விஷாலுக்கு ஏத்தா மாதிரி ஆக்‌ஷன் படமாவும் இருக்கனும், சுசீந்திரன் எடுக்குற மாதிரி கொஞ்சம் ரியலிஸ்டிக்காவும் இருக்கனும்னு எடுத்தா இப்புடி கப்பியாத்தான் ஆகும்.

சரி படம் பாக்கனும்னு நினைக்கிறங்க, கதை தெரிஞ்சா படம் சுவாரஸ்யமா இருக்காதுன்னு நினைக்கிறவங்க அப்புடியே கடைசிக்கு பாராவுக்கு ஜம்ப் பன்னிடுங்க. ஆனா படம் பாத்ததுக்கப்புறம் “ஏம்மா இதெல்லாம் ஒரு பொண்ணாம்மா” ங்குற ரேஞ்சுல ஃபீல் பண்ணுவீங்கங்குறது உறுதி.

மதுரையில பெரிய தொழிலதிபர்கள மிரட்டி பணம் பறிக்குது ஒரு கும்பல். அவங்கள புடிக்கப்போன ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர கொன்னுடுறாங்க. கோவமான போலீஸ்காரங்க மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் பன்ன ப்ளான் பண்றாங்க. இத போலீஸ் தான் பண்ணாங்கன்னு தெரியனும். ஆனா நாம நேரடியா பன்னக்கூடாது. ரவுடிகளுக்கு பயம் வரனும் ஒரு மிகப்பெரிய அண்டர்கவர் ஆப்ரேஷன் பன்றாங்க. அத பன்னப்போறவருதான் நம்ம விசாலு.

ஒண்ணும் இல்லை. ஷேர் பேசுறேன் ஷேர் பேசுறேன்னு ஒவ்வொருத்தரையா மீட் பண்ணி அந்த இடத்துலயே சுட்டுக் கொல்றாரு. அந்த காட்சிகள் ஒரு பரபரப்பாவும் இல்லை த்ரில்லிங்காவும் இல்லை. “இதான் உங்க அண்டர் கவர் ஆப்ரேசனாடா… அண்டர் கவருக்கு உள்ள மரியாத போச்சேடா உங்களால”

இதுல இடையில இடையில சூரி காமெடி பன்றேங்குற பேர்ல நம்ம வைகைப் புயல் பன்ன அத்தனை பழைய காமெடியையும் சுட்டு செஞ்சிக்கிட்டு இருக்காரு. ஒண்ணு ரெண்டு இடத்துல லேசா சிரிப்பு வரும். ஆனா நம்ம அந்த காமெடிக்கு சிரிக்கிறத விட படத்துல விசாலுதான் சூரி காமெடிக்கு ரொம்ப சிரிக்கிறாரு. ஹரி படத்து காமெடிய விட கப்பியா இருக்கு.

இதுல காஜல் அகர்வால் வேற.. வந்தாலே பாட்டு. முதல் பாதி முழுசுமே முதல்ல காமெடி சீன், அடுத்து லவ் சீன், அடுத்து ஒரு பாட்டு, அடுத்து ஒரு ஆக்‌ஷன் சீன், ஒரு குடும்ப சீன் ஒரு சைக்கிள் முடிஞ்சிது. திரும்ப முதல்லருந்து காமெடி சீன் லவ் சீன்னு, ஒரு பாட்டுன்னு இதே ஆர்டர்ல தான் நாலு ரவுண்டு போயி முதல் பாதி முடியிது. இண்டர்வல்ல ஒரு டுஸ்டு. அப்டின்னு சொல்லிக்கிறாங்கப்பா.

இண்டர்வலுக்கு முன்னாலயே மொத்த ரவுடிகளையும் ஒழிச்சிக்கட்டிருறாரு. ஆனாலும் மெய்ன் வில்லன் ஒருத்தன் இருக்கான். அவன கண்டுபுடிச்சி தூக்குறதுதான் ரெண்டாவது பாதி. விஷாலோட அண்ணனா சமுத்திரக்கனி. அவர ஸ்கிரீன்ல பாக்குறது மட்டுமே நமக்கு கொஞ்சம் ஆறுதலக் குடுக்குதே தவிற, அவருகுன்னு எந்த சீனும் நல்லா இல்லை. ஜிம்முக்கெல்லாம் போவாரு போல. முக்கால்வாசி காட்சில பனியனோட உடம்ப முறுக்கிக்கிட்டே நிக்கிறாரு. அதுவும் அவரு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் குடுப்பாரு  பாருங்க. ” நீ போட்டுருக்க பாடி ஸ்ப்ரேக்கும், உன் பல்லுல இருக்க கரைக்கும் நீ சொல்ற கதைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?” ன்னு சிங்கம் சூர்யா கேப்பாரே. அதே தான் கேக்கனும்போல இருந்துச்சி. ஏண்டா சும்மா எதாவது சொல்லனும்னு சொல்றீங்களேடா.

இந்த மாதிரி படங்களுக்கு விஷுவல் கொஞ்சம் ரிச்சா இருந்தாதான் எடுபடும். ஆனா படம் முழுசும் பயங்கர லோ பட்ஜெட் படங்கள் மாதிரி, மொக்கையாவே இருக்கு. அதுவும் இவிங்க குத்துபாட்டு, ஐட்டம் சாங்கு எடுக்கவெல்லாம் செட்டு போட்டுருக்காய்ங்க பாருங்க. கண்றாவி. ஹைடெக் செட்டுகள்ள ஆடிக்கிட்டு இருந்த காஜல் ஜிலேபி இப்புடி கப்பியான செட்டுகள்ல ஆடிக்கிட்டு இருக்கதா பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சி.

சுசீந்திரன் படங்கள்ல பாண்டிய நாடு தவிற வேற எதுவும் எனக்கு அவ்வளவா புடிச்சது இல்லை. அவரோட மேக்கிங்க் ஸ்டைல் மற்றும் காட்சிங்க AL.விஜய் படங்கள்ல வர்ற காட்சிகள் மாதிரி எதுவுமே இல்லாம சற்று டொம்மையாக இருக்கும். இந்தப் படத்துலயும் எனக்கு அப்டித்தான் தோணுச்சி. இந்த மாதிரி மசாலா படங்களை இயக்க இன்னும் சற்று பயிற்சி வேணும்.

படத்த மொக்கையாக்குனது மட்டும் இல்லாம இமான் போட்ட ரெண்டு நல்ல ட்யூனையும் செம கப்பியாக்கிவிட்டாய்ங்க. “சிலுக்கு மரமே” யும் “புலி புலி புலி” பாட்டும் தான் சமீபத்துல நா அதிகமுறை கேட்ட பாட்டுங்க. ரெண்டுமே பிக்சரைசேஷன் கப்பி. கலா மாஸ்டரோட மானாட மயிலாடவுல ப்ராப்பர்ட்டி ரவுண்டுன்னு ஒண்ணு வைப்பாய்ங்களே.. எதாவது ப்ராப்பர்ட்டிய வச்சி ஆடனும்னு.  அதுக்கு ப்ராக்டிஸ் எடுத்தாய்ங்களா என்னன்னு தெரியல.. சிலுக்கு மரமேல ஃபுல்லா கையில குச்சி, வேல்கம்பு, மான்கொம்புன்னு கண்டத வச்சிக்கிட்டு கடுப்பேத்துறாய்ங்க.

அவன் அவன் எரிச்சலாயி க்ளைமாக்ஸ பாத்துக்கிட்டு இருக்கும்போது இமான் BGM போடுறேங்குற பேர்ல ஹை பிட்ச்ல கத்துறாரு பாருங்க. சுசீந்திரனே தேவலாம் போல இருந்துச்சி. நிகிதா ஒரு பாட்டுக்கு வருது. அதுவும் அவ்வளவு சிறப்பா இல்லை. ஜெப்பிரக்காஷ்ங்குற நல்ல நடிகர இன்னும் எத்தனை படத்துல மொக்கை பன்னப் போறாய்ங்கன்னு தெரியல. அவரு ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க ஒத்துக்கிறார்னும் தெரியல. விஷால் ஆள் பாக்க நல்லா இருக்காரு. அவ்ளோதான். மத்தபடி படத்துல வேற பெர்மார்மன்ஸ் காட்ட எதுவும் சிறப்பான காட்சிகள் இருந்தா மாதிரி தெரியல.


மொத்தத்துல பாயும் புலி மேல சொன்ன மாதிரி அவசர அவரமா கிண்டப்பட்ட அரைவேக்காட்டு உப்மா தான். சொல்லிக்கிற மாதிரி பெருசா எதுவும் இல்லை. இன்னொரு தலைவர் பட டைட்டிலும் காலி.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...