Thursday, September 10, 2015

WAYWARD PINES!!!


Share/Bookmark
ஆங்கிலப் படங்கள் பாக்க ஆரம்பிச்சதுலருந்தே இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படங்கள் மேல ஒரு தனி பிரியம். Free wifi கிடைச்ச காலத்துல mystery genre படங்களா டவுன்லோட் பண்ணி பாத்துக்கிட்டு இருந்தேன். கல்லூரி காலங்கள்ல SAW, Hostel மாதிரியான ஹாரர் படங்கள்ல இருந்த ஆர்வம், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாறி சஸ்பென்ஸ் த்ரில்லர் மிஸ்ட்ரி படங்கள்ல ஒட்டிக்கிச்சி. இந்த மாதிரி படங்களைப் பாத்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு வேளை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேளை அப்புடி இருக்குமோ என யோசிச்சிட்டே பாக்குற பழக்கம் பலரைப் போல எனக்கும் கொஞ்சம் உண்டு. அப்டி நாம “இப்டி இருக்குமோ” ன்னு கணிச்சி வைக்கிற விஷயங்கள் எதுவும் இல்லாம, நம்ம அறிவுக்கு எட்டாத  ஒரு ட்விஸ்ட் வரும்போதுதான் நமக்கு அது நல்ல ட்விஸ்ட்டாத் தெரியும்.

அதே மாதிரி எனக்கு பயப்பட ரொம்ப பிடிக்கும். அதாவது நா மட்டும் தனியா ரூமுக்குள்ள டோர லாக் பன்னிட்டு பேய் படம் பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும். நோட் திஸ் பாய்ண்ட் டோர லாக் பன்னிக்கிட்டு.. கதவு தொறந்திருந்தா அடிக்கடி வெளில யாரோ க்ராஸ் பன்ற மாதிரி மன ப்ராந்தியாகி ஒரு பீதி வந்து இன்னும் டர்ர்ர கிளப்பும். அதுனால எப்பவும் பேய் படம்னா நாலு பக்கமும் சீல் பன்னிட்டு தான் பாக்குறது.

அந்த வகையில முதல் முதல்ல காலேஜ்ல நா பாத்த ஒரு படம் எனக்கு ரொம்ப பிடிச்சிது. அந்தப் படம் House of Wax. நிறைய பேர் பாத்துருப்பீங்க.
ஒரு ஃபுட்பால் மேட்ச்சுக்கு போற ஒரு ஆறு பேர் ஒரு நாள் ராத்திரி வழியில டெண்ட் அடிச்சி தங்குறாங்க. காலையில எழுந்து பாத்தா அவங்க கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. எதோ ஒரு ஸ்பேர் பார்ட் போயிடுச்சின்னு கண்டுபுடிச்சப்புறம், ரெண்டு பேர் மட்டும் பக்கத்துல உள்ள ஒரு ஊருக்கு போய் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிட்டு வர்றதுக்காகக் கிளம்புறாங்க. அந்த ஊருக்குள்ள நுழையும் போது, ஊரே ரொம்ப அமைதியா இருக்கு. தெருவுல யாருமே இருக்கமாட்டாங்க. ஒரு குப்பைத் தொட்டிக்குள்ள ஒரு அஞ்சாறு நாய் குட்டிங்க கத்திக்கிட்டு இருக்கும்.

ஒரு சர்ச் இருக்கும். அதுக்குள்ள ஒரு பத்து பேர் ப்ரே பன்னிட்டு இருப்பாங்க. இவங்க அந்த தெருவுக்குள்ள வந்ததுமே, ஒரு வீட்டு மேல் மாடில ஒரு ஆண்டி ஜன்னல் வழியா பாத்துட்டு டக்குன்னு ஸ்க்ரீன மூடிரும். அங்க உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில ஒருத்தன் இவங்களுக்கு தேவையான பொருளை குடுப்பான்.



ஸ்பேர் வாங்கிட்டு அந்த ஊர்ல ஃபேமஸான Wax Museum ah போய் பாப்பாங்க. அங்க உள்ள எல்லா மெழுகு பொம்மைங்களுமே ரொம்ப ரியலா இருக்கும். கொஞ்ச கொஞ்சமா இவங்களுக்கு அந்த ஊர்ல எதோ ஆபத்து இருக்கது தெரியவரும். அப்புறம்தான் அவங்களுக்கு தெரியும் அந்த ஊர்லயே மொத்தமா ரெண்டே பேர்தான் இருப்பாங்க. அந்த ரெண்டு பேர், வர்றவங்க எல்லாரையும் கொன்னு மெழுகு பொம்மைங்களா ஆக்கி வச்சிருவாய்ங்க. அவிய்ங்க ரெண்டு பேர்கிட்டருந்து எப்டி தப்பிக்கிறாங்கங்குறது தான் அந்தப் படம்.   அந்த தொட்டிக்குள்ள கிடந்த நாய்குட்டிங்க, ஸ்கிரீன மூடுன ஆண்டி, சர்ச்ல ப்ரே பன்ற ஃபாதர் & Co எல்லாமே செட்டப். அந்த ஊரை நார்மலா காட்டுறதுக்காக அதெல்லாம் ரிமோட்டான ஒரு இடத்துலருந்து இவய்ங்களே கண்ட்ரோல் பன்னுவாய்ங்க.  

இப்ப இந்தப்படம் எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. IMDB la இதோட ரேட்டிங்க் பாத்தா கூட வெறும் 5.3 தான். ஆனா எனக்கு இப்ப வரைக்கும் mystery டைப் படங்கள்னதுமே மைண்டுல வந்துபோற ஒரு சில படங்கள்ல இதுவும் ஒண்ணு.

படம் பாக்குறவங்கள ரெண்டு வகையில பயப்பட வைக்க முடியும். வெறும் இருட்டையும், முகம் கிழிந்து தொங்கும் பேய்களையும், டமால் டுமீல்ன்னு எதிர்பாக்காத நேரத்துல மியூசிக்கயும் போட்டும் கண்டிப்பா எல்லாரையும் பயப்பட வைக்க முடியும். ஆனா இது எதுவுமே இல்லாம அமானுஷ்யமான சில விஷயங்களக் காமிச்சும் பாக்குறவங்கள பயமுறுத்தலாம். அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் மனோஜ் நைட் ஷாமலன். ஆரம்பத்துல பெரிய லெவல்ல பேரெடுத்துட்டு போகப்போக தொடர் தோல்விகளால பெயரைக் கெடுத்துக்கிட்டவரு.

இந்த அமானுஷ்யங்கள வச்சி பயமுறுத்துற ரெண்டாவது டைப்ப சேந்தவரு இவரு. எந்த விதமான க்ராஃபிக்ஸ் காட்சிங்களும் இருக்காது. கொடூரப் பேய்களும் இருக்காது. ஆனா இவரோட கதைகள் எல்லாத்துலயும் அந்த அமானுஷ்யத்தன்மை விரவிக் கிடக்கும். Sixth sense ,Signs ரெண்டு படங்களும் பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பீங்க. எல்லாரும் ஏலியன காமிக்க என்னெனவோ பன்னிட்டு இருக்க, மொத்தமே ஒரே ஒரு ஏலியன வச்சி,  அதிகபட்சம் அஞ்சே நிமிஷம்தான் அந்த ஏலியன காமிச்சி படம் முழுசும் மிரட்டிருப்பாரு Signs ல.

அதே மாதிரி தான் The Village உம். ஊர் எல்லையை தாண்டி யாரும் வெளில போகக்கூடாதுங்குற கட்டுப்பாட்டோட இருக்க ஒரு தனி கிராமம். எல்லைக்கு அந்தப்பக்கம் கொடூரமான சில விஷயங்கள் இருப்பதாக நம்பி, அதுங்களுக்கு பயந்துகிட்டு இருக்க கிராமம். அதுல கண்ணு தெரியாத ஒரு ஹீரோயின் காதலனுக்காக தனியா அந்த எல்லைய கடந்து போற மாதிரி ஒரு படம். எந்தெ ஜிம்மிக்ஸ் வேலையும் இருக்காது. ஆனா பயமா இருக்கும்.



The Happening ன்னு இன்னொரு படம். திடீர்ன்னு ஒரு சிட்டில இருக்க எல்லாரும் அவிங்களா தற்கொலை பன்னிக்கிட்டு சாவுவானுங்க. ஏன் சாவுறாங்கன்னு தெரியாது. ஆனா நல்லாதான் இருப்பாய்ங்க. டக்குன்னு துப்பாக்கிய எடுத்து அவன அவனே  சுட்டுக்கிட்டு செத்துப்போயிருவாய்ங்க. பில்டிங் மேல நல்லா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கவிய்ங்க, திடீர்னு மேலருந்து கூட்டம் கூட்டமா குதிச்சி சாவுவானுங்க. பாத்தவய்ங்கல்லாம் பீதியெட்டுத்து எஸ்கேப் ஆயி ஓடுவானுங்க. தப்பிச்சி போறவனுங்களே வேணும்னே கார நேரா கொண்டு போய் மரத்துல மோதி சாவுவானுங்க. இப்டி ஏன் சாவுறானுங்கன்னு கொஞ்ச கொஞ்சமா சொல்றதுதான் the happening.

ஒரு அப்பார்ட்மெண்ட், ஒரு Swimming pool இத மட்டும் வச்சே Lady In the water ன்னு fantasy கலந்த ஒரு ஹாரர் படம். ஒருசில இடங்களத் தவற இந்தப் படமும் நல்லா தான் இருக்கும்.  ஆனா நிறைய பேருக்கு பிடிக்கல. நைட் ஷாமலன கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாய்ங்க. இந்தப் படத்த கழுவ ஆரம்பிச்சவிங்க இப்ப வரைக்கும் அவர கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காய்ங்க. ஏன்னா நம்மாளு அடுத்தடுத்து எடுத்த படங்கள் அப்டி.

சரி விடுங்க. இப்ப எதுக்கு டைட்டில் என்னவோ போட்டுட்டு என்னென்னவோ சம்பந்தம் இல்லாம பேசுறேன்னு பாக்குறீங்களா? வர்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால ஒளிபரப்பப்பட்ட Wayward Pines சீரியல்ல நைட் ஷாமலனும் One of the directors. அந்த ஒரு காரணத்துக்காகவே அந்த சீரியல் பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு மாசத்துக்கு முன்னால Predestination ன்னு ஒரு படத்த பாத்தப்போ படம் பாத்த அன்னிக்கு நைட்டு ரொம்ப நேரம் தூக்கம் வராம அந்தப் படத்தப் பத்தியே நினைச்சிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட அதே எஃபெக்ட் இந்த சீரியல்ல ஒரு சில எபிசோடுகளப் பாத்தப்புறமும் இருந்துச்சி. இந்தப் பதிவு எழுத முக்கியக் காரணமும் அதான்.

காணாமல் போன ரெண்டு சீக்ரெட் ஏஜெண்டுகள தேடிப்போற இன்னொரு ஏஜெண்டுக்கு வழில ஆக்ஸிடெண்ட் ஆயிடுது. அவர் கண் முழிச்சி பாக்கும் போது எதோ ஒரு காட்டுக்குள்ள கிடக்குறாரு. எழுந்து நடந்து வந்தா Wayward Pines ங்குற ஊர். அந்த ஊர்ல எல்லாமே விசித்திரமா இருக்கு. அவர் ஆஃபீஸுக்கு ஃபோன் பன்னா லைன் வேற எங்கயோ போகுது. அவர் தேடி வந்த ஒரு லேடி ஏஜெண்ட அந்த ஊர்ல பாக்குறாரு. ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வயசான மாதிரி இருக்கு. வேற யாரோடயோ குடும்ப நடத்திக்கிட்டு இருக்கு. கேட்டா எட்டு வருஷமா அந்த Wayward Pines ல இருக்கதா சொல்லுது. ஆனா அந்தப் புள்ள போன வாரம்தான் காணாமப் போயிருக்கும்.

அவர் தேடி வந்த இன்னொரு ஏஜெண்டு  பாடி ரொம்ப டீகம்போஸ் ஆன நிலையில ஒரு தனி வீட்டுல பிணமா கிடக்குறாரு. மத்தவங்ககிட்ட விசாரிக்கும்போது அவரு Wayward Pines ல ஒரு வருஷத்துக்கும் மேலா தங்கிருந்ததா சொல்றாங்க. போன வாரம் பாத்த ரெண்டு ஏஜெண்டுங்கள்ள ”ஒருத்தர் எட்டு வருஷமா இங்க இருக்கதா சொல்றா, இன்னொருத்தன் ஒண்ணரை வருஷாமா இங்க இருந்ததா சொல்றாங்க” ன்னு நம்ம ஹீரோவுக்கு ஒரே குழப்பம்.



அதுமட்டும் இல்லாம அந்த Wayward Pines எல்லாமே விசித்திரமா இருக்கு. அந்த ஊர் என்ன? ஏன் அப்படி இருக்கு? நம்மாளு அந்த ஊர்லருந்து எஸ்கேப் ஆனாராங்குறத சொல்றதுதான் இந்த சீரியல். அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒரே சீசன் தான்.  பத்து எபிசோடுல முடிஞ்சிருது. மேல நா சொன்ன The Village படத்துக்கும், இதுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருக்கும். ஆனாலும் இதுல கதைய கொண்டு போயிருக்க விதம், அங்க நடக்குற ஒவ்வொரு அமானுஷ்யமான விஷயங்கள் மற்றும் இதுல வர்ற ட்விஸ்டுன்னு எல்லாமே வேற லெவல்.

முதல் ஆறு எபிசோடுகள் செமையா இருக்கும். அடுத்த நாலு சொன்ன கதைய முடிக்கனுமேங்குறதுக்காக எடுக்கப்பட்டது. ஆனா முதல் ஆறு எபிசோடுகளுக்காகவும், இந்த கதைக்காகவும் Mystery டைப் பிரியர்கள் தவறவிடாமல் பாக்கவேண்டிய ஒரு சீரியல்.

Torrent கீழே:





பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

Anonymous said...

Hi Muthusiva even I like horror movies..I mean not exactly "Horror" but "disturbing" genre movies Eg., Sanctum, The Ruins, The Mist, Da vinci Code etc. Have you watched these movies?

முத்துசிவா said...

DA VINCI CODE மட்டுமே பார்த்திருக்கிறேன்

Anonymous said...

Orphan, hide and seek - movie...paarunga ji. Suspense Thriller...I liked it.
I'm downloading Wayward Pines. Thanks - Amar

Anonymous said...

question no 2. Have you ever been irritated by horrible Tamil dubbing? It is highly annoying to hear the Stupid Tamil Dubbing artists voice. What's your taste? Watching Tamil dubbed or Original Screenplay?

Karthick Shanmuganathan said...

இந்த சீரிஸின் டைரக்டர்களில் ஷாமளானும் ஒருவர் என்பது நீங்கள் சொல்லிதான் தெரிந்துகொண்டேன்... சீரிஸை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்... மற்ற படங்களை பற்றிய தகவல்தான் அதிகம் உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தவறிருந்தால் மன்னித்து கொள்ளவும்.

முத்துசிவா said...

@karthick:

Wayward pines ஐ பற்றி அதிகம் எழுதினால் அது பார்க்கும்போது சுவாரஸ்யத்தை குறைக்கலாம். எனவேதான் கொஞ்சமாக நிறுத்திக்கொண்டேன்.

முத்துசிவா said...

@Anonymous

//Have you ever been irritated by horrible Tamil dubbing? It is highly annoying to hear the Stupid Tamil Dubbing artists voice. What's your taste? Watching Tamil dubbed or Original Screenplay?//

ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பிப்பதற்கு முன்னால் டிவில டப்பிங் படங்கள் பார்ப்பதுண்டு. தொடர்ந்து ஆங்கிலப் படங்கள் பார்க்க ஆரம்பித்தபிறகு டப்பிங் படங்கள் தற்போது அறவே பார்ப்பதில்லை.

ஆனாலும் டப்பிங் படங்களில் நம்மூர் ஆட்களின் காமெடி சென்ஸ் பாராட்டப்பட வேண்டியது. :-)

மிரட்டல் அடி - 2 my all time favourite

முத்துசிவா said...

@Anonymous

Orphan பாத்துட்டேன். hide and seek பாக்க முயற்சி பன்றேன்.

P.Karthikeyan said...

Downloading.. இதுக்கு சப் டைட்டில் லிங்க் கொடுத்தா நல்லா இருக்கும் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...