சென்றபதிவின் தொடர்ச்சி: கவுண்டரும் செந்திலும் சென்னை மழை தண்ணில சிக்கிக்கிட்டு இருக்கும்போது
ஒவ்வொருத்தரா வர்றாங்க. அப்போ ஒரு போட்ல “சேதாரத்த அடிச்சி நொறுக்கிட்டோம்ல” ன்னு டான்ஸ்
ஆடிக்கிட்டே வெள்ளை வேஷ்டி சட்டையில ஒருத்தர் அவங்கள நோக்கி வர்றாரு.
கவுண்டர் : (செந்திலப் பாத்து) டேய்… அவன் அவன் வீடு
வாசலெல்லாம் சேதாரமாயிருச்சின்னு அழுதுகிட்டு இருக்கான். இவன் யாருடா சேதாரத்த அடிச்சி
நொறுக்கிட்டோம்னு டான்ஸ் ஆடிக்கிட்டு வர்றான்.
செந்தில் : அண்ணேன்… இவரத் தெரியல.. நம்ம சின்னத் தம்பி
கவுண்டர் : என்னது சின்னத்தம்பியா..
பாத்தா பெரிய தம்பியோட பெரிப்பா மாதிரி இருக்கான்.
செந்தில் : (சைலண்டாக கவுண்டர் காதுக்குள்) அண்ணேன்..
இவர பத்தி எதாவது சொன்னீங்கன்னா “உருவத்த வச்சி கிண்டல் பன்றீங்க” ன்னு நாளைக்கு நாலு
பேரு உங்களக் கேக்க கெளம்பி வருவாய்ங்க.. அதனால இவர விட்ருங்க..
கவுண்டர் : ஏண்டா அவனுக்கு மட்டும் தான் உருவமா? ஏன்
உனக்கெல்லாம் இல்லையா.. 20 வருசமா உன்னைநான் அவன விட கேவலமா திட்டிருக்கேன்… கோவம்
வந்தா தூக்கி போட்டு மிதிச்சிருக்கேன்.. உனக்கெல்லாம் கேக்க ஆளே இல்லையா..
செந்தில் : (அழுதுகிட்டே) எனக்குன்னு யாரு இருக்கா…
கவுண்டர் : டேய்.. தென்னதுக்கு இப்ப நீ அழுகுற.. இப்ப
உனக்கு என்ன.. இவன எதுவும் சொல்லக்கூடாது அவ்வளவு தானே.. இப்ப பாரு… சின்னத் தம்பியா
இவரு? தம்பிக்கு தம்பி கடைசி தம்பி மாதிரில்ல இருக்காரு… போதுமா..
செந்தில் : இப்ப ஓக்கே..
கவுண்டர் : ஆமா அவன் பக்கத்துல வர்றது யாரு… மூக்குல
ஏன் துணி காயப்போடுற க்ளிப்ப மாட்டிக்கிட்டு நிக்கிறான்?
செந்தில் : அண்ணேன்.. அவரு மூக்கே அப்டித்தான். சின்ன
தம்பியோட மகர்…
கவுண்டர் : என்னது மகரா?
செந்தில் : ஆமாண்ணேன்.. மரியாதையா சொன்னேன்.
போட்
பக்கத்துல வருது. கவுண்டர் பக்கத்துல வந்து சின்னத்தம்பி ஹைபிட்ல, அடித்தொண்டையிலருந்து
சின்னத்தம்பி
: போராடுவோம்.. போராடுவோம்… இது கல்யான் ஜூவல்லர்ஸ்
நடத்தும் புரட்சிப் போராட்டம்..
கவுண்டர் : ஆஆஆங்… சுத்தி எங்க பாத்தாலும் ஒரே நீரோட்டமா
இருக்கு. இதுல எங்கருந்து போராட்டம்
சின்னத்தம்பி
: வேற கடைக்கு போயிடாதீங்க… செய்கூலி சேதாரம்னு
உங்கள ஏமாத்திருவாங்க….
செந்தில் : அண்ணேன்… என்ன சொல்றாரு ஒண்ணுமே புரியலையே
கவுண்டர் : அதாவது நாம தங்கம் வாங்க வேற கடைக்கு போயிருவோமா…
போனா ஏமாத்திருவாங்களாம்.. அதனால அவுரு கடைக்கே வரச்சொல்றாரு. (அழுகுற தொணில சின்னத்தம்பிய பாத்து) டேய்.. முப்பது
ரூவாடா… முழுசா முப்பது ரூவாய்க்காக மூணு நாள் கண்ணு முழிச்சி பஞ்சர் ஒட்டுவோம்டா..
நீ என்னன்னா செய்கூலிங்குற சேதாரம்குற…
சின்னத்தம்பி
: நம்பிக்கை…. அதானே எல்லாம்
கவுண்டர் : தும்பிக்கை
மட்டும் தான் உனக்கு இல்லை… மத்தபடி எல்லாமே கரெக்டா இருக்கு
செந்தில் : அண்ணேன் நா சொல்லிக்கிட்டே இருக்கேன் திரும்ப
திரும்ப உடல் ரீதியா தாக்குறீங்க
கவுண்டர் : சரிடா சொல்லை… வாய் தவறி வந்துருச்சி விடு..
ஆமா அந்த கரண்டி மூக்கன் ஏன் அமைதியாவே இருக்கான்
சி.த.மகன்
: (செந்திலப் பாத்து) உங்களப் பாத்தா எங்க
சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கு
(செந்தில்
வெக்கப்பட்டு சிரிக்க)
கவுண்டர் : ஈஈஈஈஈஈஈஈஈஈஈய்ய்ய்ய்… இந்த நாய் சிவாஜிய
பாத்துருக்கானா இல்லையா… சிலோன் குரங்கு மாதிரி இருக்கான் இவனப் போய் சிவாஜிங்குறான்.
செந்தில் : (கோவமாக) போங்கன்னே… இப்புடித்தான் நா மண்டைய
ப்ளிச்சு பன்னாலும் புடிக்காது. என்னை யாராவது அழகா இருக்கான்னு சொன்னாலும் புடிக்காது.
கவுண்டர் : (முறைச்சிக்கிட்டு) தம்பி.. நா தண்ணிக்குள்ள இருக்கதால கொலை
பன்ன மாட்டேன்னு நினைக்காத.. மரியாதையா அவனுங்கள கெளம்பச் சொல்லு..
கொஞ்ச
நேரத்துல இன்னொரு boat la ஒரு மூணூ நாலு பசங்க வந்துகிட்டு இருக்காங்க.
கவுண்டர் : டேய்
அழகேசா.. இதுவரைக்கும் தனித்தனியா வந்தானுக.. இப்ப என்னடா கும்பலா வந்துகிட்டு இருக்கானுக
செந்தில் : அதாண்ணே
எனக்கும் டவுட்டா இருக்கு… அதுவும் ஏண்ணே எல்லாரும் ஆளுக்கு ஒரு டிவிய கையில கொண்டு
வர்றானுங்க
கவுண்டர் : டேய்
வால்ட்யூப் வாயா.. அதெல்லாம் டிவி இல்லடா.. டிவி சைஸுல லேட்டஸ்ட்டா வந்துருக்க ஃபோனு..
அந்த
boat பக்கத்துல வருது. பக்கத்துல வந்தோன எல்லாரும் அந்த ஃபோன்ல சராமாரியா கவுண்டரையும்
செந்திலையும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காங்க.
கவுண்டர் : டேய்
அழகேசா.. இவங்க ப்ரஸ்லருந்து வந்துருப்பாங்க போலருக்கு.. நாளைக்கு நம்ம ரெண்டு பேரு
ஃபோட்டோவும் பேப்பர்ல வரும். அத எடுத்து நான் ஏன் செகப்பிகிட்ட காமிக்கனும். ஹைய்ய்யோ… (பசங்களப் பாத்து) ஆமா தம்பிங்களா நீங்க எந்த பத்திரிக்கையிலருந்து
வர்றீங்க
பசங்க : பத்திரிக்கையா…
ச்ச.. ச்ச… நாங்கல்லாம் சமூக ஆர்வலர்கள்
கவுண்டர் : (கடுப்பாகி)
அடடடா… நாட்டுல இந்த சமூக ஆர்வலர்கள் தொல்லை தாங்க முடியலப்பா… கஞ்சா அடிக்கிறவன் கள்ள
ஓட்டு போடுறவன்லாம் சமூக ஆர்வலரு..
செந்தில் : அப்டின்னா
நீங்க எங்கள காப்பாத்த வந்துருக்கீங்களா..
சமூக ஆர்வலர்கள்: அதெல்லாம்
நாங்க பன்ன மாட்டோம். உங்கள ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்குல போட்டு உங்களுக்கு லைக் வாங்கி
குடுப்போம்.
கவுண்டர் : என்னது
லைக்கு வாங்கி குடுப்பீங்களா? என்னடா எதோ பைக்கு வாங்கி குடுக்குற மாதிரி சொல்றீங்க.
அத வச்சி ஒரு சிங்கிள் டீ வாங்க முடியுமா நாயே… சரி இதத் தவற வேற என்னென்ன பண்ணுவீங்க..
சமூக ஆர்வலர் 1 : அயல்நாட்டுல எதாவது அசம்பாவிதம் நடந்தா அவங்களுக்காக ப்ரே பண்ணுவோம்
சமூக ஆர்வலர் 1 : அயல்நாட்டுல எதாவது அசம்பாவிதம் நடந்தா அவங்களுக்காக ப்ரே பண்ணுவோம்
சமூக ஆர்வலர் 2 : ஏழைக்குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கும் ஃபோட்டோவ ஷேர் பன்னி ஃபேஸ்புக்குலருந்து காசு வாங்கி குடுப்போம்
சமூக ஆர்வலர் 1 : ஆளுங்கட்சியையும் எதிர் கட்சியையும் மாத்தி மாத்தி குறை சொல்லுவோம்
சமூக ஆர்வலர் 2 : வெள்ள
நிவாரண நிதி குடுக்காத நடிகர்கள அசிங்க அசிங்கமா திட்டுவோம்
கவுண்டர் : இய்ய்…
ஆமா அவனுங்க எதுக்கு வெள்ள நிவாரண நிதி குடுக்கனும்? ஏண்டா நாட்டுல நடிகர்கள் மட்டும்தான்
சம்பாரிக்கிறாங்களா? மத்தவன்லாம் என்னடா பிச்சையெடுத்தா சாப்புடுறீங்க? ஊருக்குள்ள
தண்ணி வந்தா நடிகண்ட்டதான் காசு கேக்குறீங்க.. ஆத்துல தண்ணி வரலன்னாலும் நடிகன்கிட்டதான்
காசு கேக்குறீங்க. நம்ம அரசாங்கத்துக்கிட்டயெல்லாம் பணமே இல்லையா?
சமூக ஆர்வலர் 2 : அதெல்லாம்
எங்களுக்கு தெரியாது.. நாங்க திட்டுவோம்
கவுண்டர் : சரி
நடிகன் குடுக்குறது இருக்கட்டும்.. நீ எவ்வளவு குடுத்துருக்க?
சமூக ஆர்வலர் 2 :
நா எதுக்கு குடுக்கனும்? நா என்ன அவங்கள மாதிரியா சம்பாதிக்கிறேன்.
உடனே
கவுண்டர் தாவி அவன் பொடனிய புடிச்சி
கவுண்டர் : ஏண்டா
நாயே.. ஸ்ரீலங்கா மேப்பு மாதிரி மண்டைய வச்சிக்கிட்டு நீயெல்லாம் சமூக ஆர்வலரு… இன்னொருக்கா
இந்தப்பக்கம் உன்னப் பாத்தேன் மண்டையில நாலே முடி விட்டு வெட்டுப்போடுவேன்
இவங்க
இங்க சீரியஸா பேசிக்கிட்டு இருக்கையில படகுல இருந்த மூணாவது பையன் ரொம்ப சீரியஸா எதோ
ஃபோன்ல நோண்டிக்கிட்டு இருக்க
கவுண்டர் : ஃபோன
உத்து பாக்குறேன்னு உள்ள போயிராத நாயே.. அப்புடி என்ன பன்னிட்டு இருக்க (ன்னு அவன்
ஃபோன புடுங்கி பாக்குறாரு
அவன்
ஃபோன்ல அவனோட ஃபேஸ்புக் அக்கவுண்டுல செந்தில் ஃபோட்டோவ போட்டு
“இவர்
கருப்பு.. அதனால் இவருக்கு லைக் வராது” ன்னு போஸ்ட் போட்டுருக்கான்
கவுண்டர் : ஆமா...
இந்த நாய் கருப்புன்னு யாருக்கும் தெரியாது பாரு. இவரு அத உலகத்து வெளக்குறாரு. படுவா…
கட்டிங் ப்ளேயர எடுத்து முன்னாடி நீட்டிக்கிட்டு இருக்க ரெண்டு பல்லையும் வெடுக்கு
வெடுக்குன்னு புடுங்கிப்புடுவேன். ஓடிப்போயிர்….
செந்தில் : அண்ணேன்..
இப்புடி வர்றவனுங்களையெல்லாம் திட்டி திட்டி அனுப்புனா நாம எப்பதான் தண்ணிக்குள்ளருந்து
வெளில போறது
.
கவுண்டர்: டேய்…
நா என்ன வேணும்னாடா பன்றேன்.. வர்றவனுங்கல்லாம் அப்டி இருக்கானுக.. (கவுண்டர் வானத்த
பாக்குறாரு)
கவுண்டர் : டேய்…
அழகேசா.. என்னாடா வானம் திரும்ப இருளோன்னு இருக்கு… மழை வரும் போலருக்கேடா
செந்தில் : இல்லைண்ணே..
அய்ங்க பாருங்க சனி மூலை வெளிச்சமா இருக்கு.. அதுனால மழை வராது
கவுண்டர் : அது
சனி மூலைன்னா இது என்ன ஞாயிறு மூலையா.. கண்டிப்பா வரும்டா…
செந்தில் : அட…ங்க..
வராதுண்ணே ன்னு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்ப்போது தூரத்துலருந்து
இன்னொரு boat ல கோட் சூட் போட்ட ஒருத்தர் பேசிக்கிட்டே வர்றாரு
(நீயா
நானா கோபிநாத் ஸ்லாங்குல தூய தமிழ்ல படிங்க)
கோபிநாத் : வானம்
கருத்திருப்பதால் மழை கண்டிப்பாக வந்தே தீரும் என்கின்றனர் ஒரு தரப்பு. ஒரு புறம் வெளிச்சமாக
இருப்பதால் மழை வர வாய்ப்பே இல்லை என்கிறது மறு தரப்பு. இதில் எது உண்மை… தொடர்ந்து
பேசுவோம்.. stay tuned… இது லயன் டேட்ஸ் சிரப் வழங்கும் நீயா நானா.
செந்தில் : அய்யோ…
அண்ணேன்.. அஜித்து…
(கோபிநாத்
போட் பக்கத்துல வருது. கோபிநாத் அவங்க பக்கத்துல வந்து, கவுண்டரப் பாத்து)
கோபிநாத் : நான்
கொஞ்சம் நாகரீகமானவன்
கவுண்டர் : அப்ப
நாங்கல்லாம் என்ன நாத்தம் புடிச்சவங்களா?
கோபிநாத் : இல்லை…
இல்லை… நான் அப்படிச் சொல்லவில்லை.
(கவுண்டர்
முகம் டக்குன்னு மாறுது.. எதையோ மோப்பம் புடிச்சி மூக்கால ரெண்டு தடவ உறுஞ்சுறாரு)
கவுண்டர் : என்ன திடீர்னு எலி செத்த நாத்தம் அடிக்கிது
ன்னு
சொல்லிட்டு டக்குன்னு ஸ்லோமோஷன்ல திரும்பி செந்தில முறைக்கிறாரு
செந்தில் : (பதறியபடி)
அய்யோ அண்ணேன்.. நா போன வாரம் தான் குளிச்சேன். என்மேல நாத்தம் அடிக்கல
கவுண்டர் : இங்க
நம்ம மூணூ பேர்தான் இருக்கோம். என் மேலயும் அடிக்கல உன் மேலயும் அடிக்கல.. (கோபிநாத்த
பாத்து) ராஜா இப்புடி கொஞ்சம் கிட்டக்க வா
ன்னு
சொல்ல கோபிநாத் கவுண்டருக்கு நல்லா பக்கத்துல வர கோபிநாத் கோட் கவுண்டர் முகத்துல படுது.
குபீர்ன்னு வாடை.
கவுண்டர் : அடங்கப்பா…
நாத்தம் கொடலைப் புடுங்குதுடா சாமி… ஏண்டா வாங்குன அன்னியிலருந்து இன்னும் இந்த கோட்ட
நீ துவைக்கவே இல்லியா
கோபிநாத் : நான்
கொஞ்சம் நாகரீகமானவன்
கவுண்டர் : ஆஆங்….
பாத்தாலே தெரியிது.
கோபிநாத் : நீங்கள்
எப்போதெல்லாம் மழையை ரசித்திருக்கிறீர்கள்? மழைக்கும் உங்களுக்கும் உண்டான தொடர்ப்பு
என்னென்ன? மழை நமது ஊருக்கு நல்லதா கெட்டதா?
கவுண்டர் : தம்பி..
இதெல்லாம் நல்லதில்லை.. ஸ்டூடியோன்னு நினைச்சி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனா வாய்க்குள்ள
கம்பிய எடுத்து சொருகி விட்டுருவேன். எனக்கு வெறி வர்றதுக்குள்ள போயிறு..
கோபிநாத்: நான்
கொஞ்சம் நாகரீகமானவன். தொடர்ந்து பேசுவோம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள்
கோபிநாத் ன்னு சொல்லிட்டு
(போட்
திரும்பி போகுது. கவுண்டர் பின்னால நின்னு)
கவுண்டர் : டேய்….
வீட்டுக்கு போனோன அந்த கோட்ட அடுப்புல வச்சி கருக்கிறனும்.
அப்போ
தூரத்துல இன்னொரு போட்டு வருது. செந்தில் சந்தோஷத்துல கவுண்டரப் பாத்து
செந்தில் : அண்ணேன்
இன்னொரு நடிகரு நம்மளத்தேடி வர்றாருன்னே…
கவுண்டர் : எங்கடா…
செந்தில் : அய்ங்க
பாருங்க… டி.ஆரு நம்மளப் பாக்கத்தான் வர்றாருன்னு நினைக்கிறேன்.
கவுண்டர் : (ஷாக்காகி)
அடப்பாவி… அது டிஆர் இல்லைடா. காட்டுக்குள்ளருந்து தப்பிச்சி வந்த நிஜக்கரடிடா.. வா ஓடிரலாம்.
செந்தில் : ஆமாண்ணே..
அந்தக் கரடி பக்கத்துல யாரோ ராஜா கெட்டப்புல இருக்காங்கண்ணே.. யாரு அது?
கவுண்டர் : அதுவா.. காட்டுக்கு வேட்டைக்கு போன ராஜாவ புடிச்சி வச்சிக்கிட்டு அந்தக் கரடி ரொம்ப
நாளா விட மாட்டேங்குதுடா.. மழைத்தண்ணி காட்டுக்குள்ள போனதும் அது ஊருக்குள்ள வந்துருச்சி
போல…வா அந்தப் பக்கம் எதோ கூட்டமா தெரியிது. அங்க நீந்தி போயிடலாம்
(ரொம்ப லென்த்தா பொய்ட்டதால இதோட முடிச்சிக்குவோம்)
4 comments:
//ஆமா அவன் பக்கத்துல வர்றது யாரு… மூக்குல ஏன் துணி காயப்போடுற க்ளிப்ப மாட்டிக்கிட்டு நிக்கிறான்?//
Hiyo innum sirichu mudiyala.. sema.. kalakitinga ponga.. ROFL :-)
வாவ்.. செம செம..
Your post is published in thatstamil. Congrats !!
thanks :-)
Post a Comment