Wednesday, November 11, 2015

வேதாளம் – அசால்ட்டுப் புலி!!!


Share/Bookmark

ஒரு நடிகர் அல்லது ஒரு தனிப்பட்ட நபர் மேல நமக்கு இருக்க ரசனை, அதாவது நம்ம உலகநாயர் ஸ்டைல்ல சொல்லனும்னா அபிமானம்ங்குறது எல்லாருக்கும் கிடைக்கிற ஒரு விஷயம் இல்லை. அதுவும் வெறித்தனமான ரசனைங்குறது யாரும் சொல்லியோ, கேட்டோ வர்றதில்ல. உள்ளுக்குள்ளருந்து வர்ற ஒரு விஷயம். அது யார் மேல எப்படி , எப்போ வரும்னு சொல்ல முடியாது. அதை நாம வெளிக்காட்டிக்க எந்த ஒரு தயக்கமோ, பயமோ தேவையில்லை. எதோ ஒரு வகையில நம்மள ட்ரைவ் பன்ற ட்ரைவிங் ஃபோர்ஸ் அது.

இந்த ட்ரைவிங் ஃபோர்ஸ் சிலபேருக்கு சினிமா சார்ந்த ஆட்கள் மேல இருக்கும். முதல் நாள் முதல் காட்சிக்கு போய் ரசிகர்கள் கட் அவுட்கள்ல பால் ஊத்துறதப் பாத்து சில பேரு, ஏதோ அந்தப் பால அவய்ங்கட்ட குடுத்துருந்தா நைஜீரியால சோறு இல்லாம இருக்க அத்தனை குழந்தைங்க பசியையும் போக்கிடுற மாதிரி பேசுவாய்ங்க. ஆனா அவன் யாருன்னு பாத்தா பசிக்கிதுன்னு நம்மூர்ல பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாதவனா இருக்கும். இன்னொன்னு அந்த நடிகனுக்காக இப்புடியெல்லாம் பன்றியே உனக்கு அவனா சோறு போடப் போறாம்பாய்ங்க? எவனும் எவனுக்கும் சோறு போட மாட்டாய்ங்க. நம்ம சாப்டனும்னா நம்ம தான் சம்பாதிக்கனும்.  இந்தக் கேள்விய நம்மகிட்ட கேட்டவன் யாருன்னு பாத்தா டெய்லி டாஸ்மாக்குல 100ரூவா மொய் எழுதுற குரூப்பா இருப்பான்.

அப்புறம் உன் ஆளு நாட்டுக்கு என்னய்யா செஞ்சாரு? ம்பாய்ங்க. நடிகர் ஏன்யா நாட்டுக்கு செய்யனும். ஒரு நடிகர் அவரோட ரசிகர்களுக்கு செய்யவேண்டிய ஒரே விஷயம் நல்ல படங்களைக் கொடுக்குறது மட்டும்தான். கடைசில இந்த அறிவுப்பூர்வ கேள்வியைக் கேட்டவன் யாருன்னு பாத்தா எவனாவது ஆட்டையைப் போட்ட அரசியல்வாதிக்கு ஜிங்க் ஜா அடிச்சிட்டு இருப்பான். சரி இப்ப எதுக்கு இப்டி சுத்தி வளைச்சி பேசுறேன்னா அந்த மாதிரி அபிமானமுள்ள பெரிய ரசிகர் கூட்டம் உள்ள ஒரு நடிகர் அஜித். உண்மைய சொல்லனும்னா, அவருக்கு ரசிகர்கள் கொடுக்குற மரியாதையும், ஆதரவும் அவரோட deserving level ah விட பல மடங்கு அதிகம்.

மேல சொன்னது மாதிரி ஒரு நடிகனா அவரோட ரசிகர்களுக்கு அவர் செய்ய வேண்டியது நல்ல படங்களைக் கொடுக்குறது மட்டும் தான். ஆனால் பெரும்பாலான சமயங்கள்ல அஜித் ரசிகர்களை ஏமாத்தி தான் இருக்காரு. அவர் நடித்த 50க்கும் மேற்பட்ட படங்கள்லயும் நல்ல படங்கள்னு விரல்விட்டு எண்ணுனா நிறைய விரல் பேலன்ஸ் இருக்கும். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு கொடுக்குற ஆதரவு பெருகுனுச்சே தவிற கொஞ்சம் கூட குறையல. ஏனோ தானோன்னு கண்டபடி கதைகள்ல, கண்ட இயக்குனர்கள் படங்கள்ல நடிச்சி ஒரு standard eh இல்லாமதான் அஜித் படங்கள் போயிட்டு இருந்துச்சி. ஆனா கடந்த மூணு படங்களா ஓரளவுக்கு அஜித் ரசிகர்களுக்காக கொஞ்சம் கேர் எடுக்குறாருன்னு நினைக்கிறேன். சரி வேதாளத்த கொஞ்சம் பாப்போம்.

கொஞ்ச நாளா தமிழ் சினிமாவுல பெரிய ஹீரோக்களுக்கான கதை ரொம்பவே வறண்டு போச்சின்னு நினைக்கிறேன். நல்ல நல்ல புது காட்சிகள் அமைக்கிற இயக்குனர்கள் நல்ல கதையை உருவாக்க ஏன் கொஞ்சம் மெனக்கெடுறதில்லைன்னு புரியல. தமிழ் சினிமா வரலாற்றுல 45,415 வது முறையா அதே பழிவாங்குற கதை. அதுவும் மூணு வில்லன்கள ஒவ்வொருத்தனா போட்டுத்தாள்ளுற பழைய டெம்ளேட் கதை.

ஆனாலும் போர் அடிக்காத காட்சிகள், அங்கங்க மாஸ் ஹீரோவுக்கான பஞ்ச் சீன்ஸ்ன்னு வச்சி நல்லாதான் ப்ரசண்ட் பன்னிருக்காங்க.  கொல்கத்தாவுக்கு தங்கச்சிய காலேஜ்ல சேக்க கிளம்பி வர்றாரு அஜித். அங்கயே கார் ஓட்டுற வேலைக்கும் சேர்றாரு. தங்கச்சிப் பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பாம்போலயேன்னு எல்லாரும் நினைக்கிற மாதிரி பாசத்த புழியிறாரு. இப்புடி ஓவர் பாசத்த தங்கச்சி மேல புழியும்போதே நமக்கு ஒரு உண்மை புரிஞ்சிடும். என்ன உண்மை? நீங்க  A.வெங்கடேஷின் ”ஏய்” பாத்துருந்தீங்கன்னா உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

பெரும்பாலான முதல் பாதி காட்சிங்க அப்படியே பாட்ஷாவை ஒத்துருக்கு. இதுவும் 5,135 வது முறையாக. டாக்ஸி ஓட்டுற ஹீரோ, தங்கச்சிய லவ் பண்ற பையன்கிட்ட சென்டிமெண்ட்ன்னு அதே மாவு. படத்துல ரொம்ப கடியா இருக்க ரெண்டு விஷயம்னா சூரியும், சுருதியும் தான். சூரி காமெடி பண்றேன்னு அவர் குடுக்குற மாடுலேஷன்லாம் வாந்தி வராத கொறை. அதுவும் மீசையை வேற எடுத்துட்டு அவர் வாய ஸூம் பன்னி வேற காமிச்சிட்டே இருக்காய்ங்க. ஆண்டவா ஏண்டா இந்த சோதனை. சுருதியின் அறிமுகக் காட்சி கலகலப்பா இருந்தாலும் அடுத்தடுத்து சுருதி மொக்கை போட ஆரம்பிச்சிருச்சி. மொட்டை ராஜேந்திரன் 5 நிமிஷம் வந்தாலும் கலக்கல்.

முதல் பாதி ஹீரோவுக்கு பில்ட் அப் ஏத்தி ஏத்தி எப்படியும் படத்த ஸ்வாரஸ்யமாக்கிடலாம். ஆனா அந்த பில்ட் அப்ப backup பன்ற மாதிரி வெய்ட்டான ஃப்ளாஷ்பேக் அவசியம். ஆனா அவ்வளவு வெய்ட்டான ஃப்ளாஷ்பேக் இல்லை. 10,155 வது முறையா அதே ஃப்ளாஷ்பேக். அஜித்தோட ஃப்ளாஷ்பேக் கேரக்டர் ஒழுங்கா முறைப்படுத்தப்படல. ஆனாலும்  தம்பி ராமைய்யா ஒரு சில காட்சிகள்ல காப்பாத்துறாரு. ஆலுமா டோலுமா பாட்டு தாறுமாறு. செம choreography and editing. அஜித்தோட பெஸ்ட் பாட்டு.

அனைத்து ஏரியா ஓட்டைகளையும் அடைச்சி, ஆடியன்ஸ ஒழுங்கா படம் பாக்க முடியுதுன்னா அதுக்கு காரணம் அஜித் தான். ரொம்ப அலட்டல் இல்லாத நடிப்பு நல்ல pleasant ஆன லுக்கு, ஒரு சில புது ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ்னு நல்லா பன்னிருக்காரு. ஆனாலும் ஒருசில ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸ் சகிக்க முடியலங்குறது வேற விஷயம்.

படத்துக்கு இன்னொரு பெரிய பலம் அனிரூத். ஆலுமா டோலுமாவத் தவற மத்த பாட்டுங்கல்லாம் கப்பிதான்னாலும் BGM சூப்பரா பன்னிருக்காரு. ஃப்ளாஷ்பேக் மாஸ் காட்சிகள்ல மட்டும் சிவகாசி ஸ்ரீகாந்த் தேவா ரேஞ்சுக்கு ”டகர டகர” ன்னு ஒரே இறைச்சல்.

இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்த எப்புடி ஒழுங்கா யூஸ் பன்னனும்னு நிறைய analysis பன்னிருப்பாரு போல. கூடுமான வரை effective ah யூஸ் பன்னிருக்காரு. படம் அங்கங்க கொஞ்சம் இழுக்குற மாதிரி இருந்தா டக்குன்னு ஒரு நல்ல சீன இறக்கி ஆடியன்ஸ கடைசி வரை hold பன்னி வச்சிருக்காரு. சிம்பிளான வசனங்கள்தான். நிறைய இடங்கள்ல நச்சின்னு இருக்கு. குறிப்பா அஜித் பேசுற சில செண்ட்டிமெண்ட் வசனங்களும், தம்பி ராமைய்யா பேசுற சில வசனங்களும் ரொம்ப சூப்பர்.

ஒரு சில இடங்கள்ல கப்பித்தனமாவும் இருக்கு. ஒரு சீன்ல அஜித் “நீ கெட்டவன்னா.. நா கேடு கெட்டவண்ட்டா” ங்குறாரு. ஏன்யா இதெல்லாம் ஒரு பெருமையா. அப்புறம் “எங்கெல்லாம் அநியாயம் நடக்குதோ அங்கெல்லாம் வேதாளம் ”இருப்பாண்டா”.. ஏண்டா எங்கெங்க “இருக்குறது” ன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா? இதெல்லாம் எதிரணிக்கு நீங்களே பாய்ண்ட் எடுத்துக்குடுக்குற மாதிரில்ல இருக்கு.

இயக்குனர் ஹரியின் சினிமா உக்திகளை நிறைய ஆட்டையப் போட்டுருக்கார் சிவா. குறிப்பா காட்சிகள் வேகமா நகர்வது போல காண்பிக்கவும், ஒரு பரபரப்பை க்ரியேட் பன்னவும் ஹரி படங்கள்ல எடிட்டிங் படு ஸ்பீடா இருக்கும். ஒரு செகண்ட்ல ஏழெட்டு ஃப்ரேம் காமிப்பாய்ங்க. இங்கயும் அதே டெக்னிக்க நிறைய இடங்கள்ல யூஸ் பன்னிருக்காய்ங்க. இண்டர்வல் காட்சியில எடிட்டிங் செம.

பொதுவா அஜித் விஜய் படங்களைக் கம்பேர் பண்ணும் போது, விஜய் படங்கள் மொக்கையா இருக்குறப்போ கூட படத்துல ஒரு completeness இருக்கும். அஜித் படங்கள்ல பெரும்பாலும் அது இருக்குறதில்லை. ஆனா வீரம், வேதாளம் ரெண்டு படங்கள்லயும் அந்த completeness ah ஃபீல் பன்ன முடியுது.

வேதாளத்த  ஒரு புதிய முயற்சின்னோ அல்லது சிறப்பான படம்னோ சொல்ல முடியாது. இதற்கு முன்னால அஜித் நடிச்ச ஆரம்பம் படத்தின் கதைக்கும் இதுக்குமே பெரிய வித்யாசம் இல்லை. ஆனா திரைக்கதை அமைப்பு மற்றும் technically வேதாளம் கொஞ்சம் முன்னால நிக்கிது.

சிலர் கிளப்பி விடுவதைப் போல இது “உக்கார முடியவில்லை” டைப் படம்லாம் இல்லை. நிச்சயம் ஒரு தடவ பாக்கலாம். ஆனா எனக்கு வீரம் பாத்துட்டு வந்தப்போ இருந்த ஒரு satisfaction வேதாளம் பாத்துட்டு வர்றப்போ இல்லை.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

15 comments:

suresh said...

இப்ப பாருங்களேன் அந்த சில பேர் வந்து நீ அஜஇத் பேன்தானடா. பிலி நூத்தி நாப்பத்தி ஏழு கோடியே அருபத்தி ஏழு லட்சத்து இருபத்தி நாலாயிரத்து எனனூத்தி பத்து ரூபா முப்பது பைசா வசூல்டான்னு சம்பந்தம் இல்லாம ஒளருவானுங்க

Mohan CP said...

Padam theatre la pakka I'm waiting,, neenga periya hero padam oru thadava pakalam sonnale adhu pala kodi peruku kandipa pudikum, enna ratatouille padathula vara climax vasanam suits u,.. Kandipa padam hit than according to the reviews I got.. Apara aluma doluma, first round ketkum bothu kappi Thana ma than irunthuchu,, aana poga poga thaaru maaru... Gonna see in theatre with more expectations..

Anonymous said...

Boss again u show ur soft corner on ajith... because ithu baasha and aei padathoda remake... if vijay act these kind of masala film u definetely troll him... any way its ur point of view... but accept the fact... it is worst film like alex pandiyan...

suresh said...

அண்ணே புலிடா நூத்தி அம்பது கோடிடாவ மறந்துட்டீங்க

காரிகன் said...

---அவர் நடித்த 50க்கும் மேற்பட்ட படங்கள்லயும் நல்ல படங்கள்னு விரல்விட்டு எண்ணுனா நிறைய விரல் பேலன்ஸ் இருக்கும். ---

எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? நல்ல நக்கல். ரசித்தேன். உண்மையே.

Anonymous said...

This is not only true for thala.. It is true for all mass hero's including rajini..

Anonymous said...

Thanks for reminding me bro... Mankatha daaaw... 130 kodi da... ipa ok va...

ஜீவி said...

சூப்பரப்பு

suresh said...

Anee athu epdinne Nanga yethu pannalum atha appadiye copy adichi thiruppi panreenga... Sonthama yethavathu try pannunga bro. Torrow I will see sonthama yochichi repeat comment illama yennai troll panniyirukkanum bro..i am weighting

Anonymous said...

Neenga gandu aaneengala athuve pothum... more over neenga comedy reply'nu nenachu essay type paneerkinga...

Anonymous said...

waste time

suresh said...

Kirrrrrrr... Ok bro kalakittenga.. Semma kalai.. Aama entha schoolla padikkireenga bro? Essay competitionlam vachcha participate panniratheenga .. Kevalapaduthiduvaanuka..

Siva said...

Superabbu

Anonymous said...

Ok bro... troll'la ph.d vanguna neenga sonna sarithan. u better to take tution for how to troll... atha pathu naanga kathukirom... i don't want a troll fight with unknown person.. cheers... gud bye...suresh said...

இந்த அறிவு மிதல் கமெண்ட் போடுறதுக்கு முன்னாடியே இருந்திருக்கனும் புரோ. பரவால ிப்பவாவது வந்துச்சே.. Your opinion about movie may be anything don't try to make others accept your imagination (opinion)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...