Sunday, November 15, 2015

தூங்காவனம் - கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்!!!


Share/Bookmark
திருஷ்யத்தை முன்னாலயே பாத்துட்டு திரும்ப பாபநாசத்த பாக்குறப்போ ஏண்டா ஒரிஜினலை முன்னாலயே பாத்தோம்ங்குற ஃபீலிங் இருந்துச்சி. ஒரிஜினலை பாத்துட்டு திரும்ப அதோட தமிழ் வெர்ஷன பாக்குறப்போ, திரும்ப முதல் தடவை பாக்குறது மாதிரி நம்மால நடிக்க முடியாது. பாபநாசத்தை பாக்குறப்போ எந்த ஒரு த்ரில்லிங்கோ, பதற்றமோ ஒரு எதிர்பார்ப்போ எந்த காட்சிக்கும் ஏற்படல. ஏன்னா எல்லாமே ஏற்கனவே பார்த்தது. பாபநாசம் விமர்சனத்துல கூட திருஷ்யம் பாக்குறப்போ எனக்கு என்ன ஃபீலிங் இருந்துச்சிங்குறத, மோகன்லால் இடத்துல கமல வச்சித்தான் எழுதிருந்தேன். முதல்ல படத்துக்கு போனதே கமலுக்காக மட்டும்தான். நா பாத்த ஒண்ணு ரெண்டு ஹிந்தி படங்கள்ல 3 Idiots உம் ஒண்ணு. திரும்ப தமிழ்ல அத சுத்தமா பாக்கனும்னே தோணல. இப்ப வரைக்கும் நண்பன் படம் நா பாக்கல.

அதே மாதிரி தூங்காவனம் ஆரம்பிச்சி அது Sleepless Night டோட ரீமேக்குன்னு தெரிஞ்ச பிறகு நிறைய நண்பர்கள் அந்தப்படத்த பாத்துட்டு, என்னை பாக்கவும் சொல்லி குடுத்தாங்க. இடையில படத்தோட இயக்குனர் இது அந்தப் படத்தோட ரீமேக் இல்லைன்னு ஒரு ப்ரஸ்மீட்ல சொல்லிருந்தாலும், ட்ரெயிலரப் பாத்த மக்கள் இது அதேதான்னு அடிச்சி சொன்னாங்க.  “கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”ங்குற மாதிரி தமிழ்லயே வர்றப்போ ஏன் மெனக்கெட்டு வேற மொழியில சப்டைட்டில மட்டும் உத்து உத்து படிச்சி பாக்கனும்னு விட்டுட்டேன்.

ஒரு நாலு வருஷத்துக்கு முன்னால நம்ம சூப்பர் இயக்குனர் AL.விஜய் “I am Sam” படத்த தமிழ்ல எடுத்து பெரிய ஹிட்டாக்குனாரு. அப்போ இயக்குனர் A.R.முருகதாஸ்கிட்ட மீடியா கேள்வி கேக்குறாங்க. “என்ன சார் இந்த மாதிரி ஆங்கிலப்படங்கள்லருந்து ஆட்டையப் போட்டு எடுக்குறது நியாயமா? இயக்குனர்கள் இத செய்றது சரியா?” ன்னு. அதுக்கு அவுரு பதில் சொல்றாரு பாருங்க.. “அதாவது வேற்று மொழிப்படங்கள்லருந்து கதைக்கான கருவை மட்டும் எடுத்துக்குறது தப்பில்லை. ஆனா மொத்தப் படத்தையும் அப்டியே எடுக்குறதுதான் தப்பு” ன்னு. இப்ப ஏன் இவுரு கருவ எடுக்குறது தப்புல்லைன்னு சொன்னாரு தெரியுமா? ஏன்னா அவுரு ஏற்கனவே ஒரு கருவ அங்கருந்து ஆட்டையப் போட்டுத்தான் (கஜினி) இங்க வண்டிய ஓட்டுனாரு. அதுனால அவுரு செஞ்சது தப்பில்லை அடுத்தவங்க செஞ்சது தப்பு”ன்னு சொன்னாப்ல.

இப்ப மேட்டர் என்னன்னா தூங்காவனம் படம் வர்றதுக்கு முன்னால இந்தப் படத்துக்கும் sleepless night க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்ன இயக்குனர் , படத்தோட ஆரம்பத்துலயே “இது sleepless night டோட தழுவல்னு” ஸ்லைடு போடுறாரு. அதுவும் அந்த ஸ்லைட யாரும் ஒழுங்கா படிச்சிற கூடாதுன்னு மைக்ரோ செகண்ட் அளவுக்குதான் வருது.  சரி போய்த் தொலைங்க. சரி தழுவல்தானே… தழுவிட்டு போறாங்கன்னு படம் பாத்தப்புறம் அந்த Sleepless night ah வந்து பாத்தா, தெலுங்கு போக்கிரிக்கும் தமிழ் போக்கிரிக்கும் கூட ஆறு வித்யாசம் கண்டுபுடிச்சிடலாம் போலருக்கு. இதுல கண்டுபுடிக்கிறது ரொம்ப கஷ்டம். இதுல இன்னொரு கொடுமை ”திரைக்கதை கமலஹாசன்”ன்னு வேற போடுறாய்ங்க. ஏன்யா எதாவது மனசாட்சி? அடுத்தவன் குழந்தைக்கு நீங்க அப்பான்னு சொல்லிப்பீங்களா? சரிவிடுங்க நம்ம படத்த பத்தி பாப்போம்.

படத்தோட ட்ரெயிலர் பாத்தாலே தெரியும் படத்தோட கதை என்னன்னு. சிலப்பல மேட்டர்களால போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான கமலுடைய மகன ப்ரகாஷ் ராஜ் கடத்திடுறாரு. அவரிடமிருந்து கமல் மகனை எப்படி காப்பாத்துறாரு என்பது தான் கதை. “என் பையன் சட்டையில சின்ன கறை பட்டாலும் உன்ன சிதைச்சிடுவேன். நா சொன்னா செய்வேன்” ன்னு கமல் ட்ரெயிலர்ல பேசுனப்போ ”ஆத்தாடி நாலவது முறையா Taken ah தமிழ்ல ரீமேக் பன்றாய்ங்களோ” ன்னு பயந்துட்டேன். ஆனா அப்படி எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்.

சக அதிகாரிகளாக கிஷோர், த்ரிஷா மற்றும் யூகி சேது. ரொம்பவும் குறைவான கேரக்டர்களோடவே முழுக்கதையும் நடந்து முடியிது. வழவழ கொழகொழ வென ஆரம்பத்துல இழுக்காம இந்தக் கதை நடக்குறதுக்கு என்னென்ன காட்சிகள் தேவையோ கச்சிதமா வச்சிருக்காங்க. கமலுக்கும் அவர் மகனுக்கும் இடையில உள்ள bonding, அப்புறம் கமலுக்கும் டைவர்ஸ் ஆன அவர் முந்நாள் மனைவிக்கும் இடையில உள்ள bonding ன்னு அத்தனையும் தனித்தனியே விளக்க காட்சிகள எடுத்துக்காம கதையோட ஓட்டத்தில போற போக்குல தெளிவு படுத்துறாங்க.

கமலுடைய கேரக்டரும் அப்படித்தான். கிட்டத்தட்ட படம் முடியிறதுக்கு ஒரு அரைமணி நேரம் முன்னால வரைக்கும் கமலுடைய கேரக்டர்லயே நமக்கு ஒரு தெளிவு இல்லாம இருக்கும். அதன் பிறகு தேவையான ஒரு இடத்துல அதையும் தெளிவு படுத்துறாங்க. படத்துல பாடல்களும் இல்லை. இன்னொரு நிம்மதி.

முக்கால் மணி நேரத்துல இண்டர்வல் விட்டுறுவாங்க. முதல் பாதி படத்த பார்த்து முடிச்ச நமக்கு எதோ ஒரு பரபரப்பான படத்தை பார்த்துக்கொண்டிருப்பதைப் போல தோணுது. ஆனா ரெண்டாவது பாதி அந்த ஃபீலிங்க அப்படியே காலி பண்ணி எப்படா படம் முடியும்ங்குற மாதிரி ஆக்கி விட்டுடுது.

இதுக்கு முதல் காரணம் முழுப்படமும் ஒரே நாளில் இன்னும் சொல்லப்போனா ஒரே ராத்திரிலயே நடக்குற மாதிரியான கதை அமைப்பு. அதுமட்டும் இல்லாம ஒரே ஒரு இடத்தை சுற்றி மட்டும் கதை நடப்பது மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. ரொம்ப கம்பியான கேரக்டர்கள், ரொம்ப கம்மியான லொக்கேஷன்கள், ரொம்ப கம்மியான காட்சித் திருப்பங்கள்னு நமக்கு எதோ பாத்த சீனையே திரும்பத் திரும்ப ஒரு நாலஞ்சி தடவ பாக்குற மாதிரியா ஒரு ஃபீல் வருது ரெண்டாவது பாதில.

கதவுக்கு கதவு கமல் ஒளிஞ்சி ஒளிஞ்சி ஓடுற மாதிரியே நிறைய காட்சிங்க. அத பாக்கவே செம கடுப்பாயிடுது செகண்ட் ஹாஃப்ல. மேலும் கதையில பெரிய திருப்பங்களோ, சுவாரஸ்யங்களோ இல்லை. இருக்க ஒண்ணு ரெண்டு ட்விஸ்டுகளையும் முதல் பத்து நிமிடங்கள்லயே காமிச்சிடுறாங்க. அதானல கடைசில “டேய் யாராவது சாவுங்கடா… யாரையவது சாவடிங்கடா.. எதாச்சும் பன்னுங்கடா” ன்னு தோணுது.

வழக்கமான ராஜ்கமல் தயாரிப்பு படங்கள்ல வர்ற மாதிரியே இதுலயும்  நாசர் தவிற  சந்தான பாரதி, உமா ரியாஸ்ன்னு மற்றங்க இருக்காங்க. பார்டெண்டரா வர்றாங்க உமாரியாஸ். ஒரு காட்சில உமா ரியாஸ் பார் டெண்டர் ட்ரெஸ்ல கமலோட பேசிட்டு இருக்காங்க. அப்டியே கட் பண்ணி அடுத்த காட்சில பாத்தா உமாரியாஸ் செம ஸ்லிம்மா கோட்டெல்லாம் போட்டுட்டு நிக்கிறாங்க. அட இய்ங்க பாருய்யா… ”ஐ” விக்ரம் மாதிரி உமா ரியாஸ் செமையா உடம்ப குறைச்சிருக்குன்னு நல்லா பாத்தா அது உமா ரியாஸ் இல்லை.. நம்ம திரிசா… அட ரெண்டு பேருக்கும் எடை மட்டும்தான் வித்யாசம். மத்தபடி ஒரே மாதிரி தான் இருக்காங்க.

படத்துல நடிச்சிருக்க அத்தனை கேரக்டர்களும் அவங்க வேலைய கரெக்டா செஞ்சிருக்காங்க. ப்ரகாஷ்ராஜுக்கு இந்த கேரக்டரெல்லாம் அல்வா சாப்டுற மாதிரி. அசால்டு பன்னிருக்காரு. ஜாவா சுந்தரேசன் ரனகளத்துலயும் கொஞ்சம் ஆறுதல். சந்தான பாரதியை வச்சி கருத்து சொல்லும் நடிகர்களை தாக்குற மாதிரி ஒரு சீன் தேவையே இல்லாத இடைச்சொருகல் மாதிரி இருக்கு. செகண்ட் ஹாஃப்ல கமலும் அவர் பையனும் ஃபோன்ல பேசுற சீன் செம.

ஜிப்ரானுக்கு பெருசா எதுவும் வேலையில்லை. படம் முழுசும் வெறும் Pub மியூசிக் மட்டும்தான். கேமரா இன்னொரு தலைவலி. கேமராவ கையியே வச்சி ஆட்டி ஆட்டி எடுத்துருக்காய்ங்க. சில இடங்கள்ல கண்ணு வலிக்கிது. ஏன் இப்டி எடுத்துருக்காய்ங்கன்னு பாத்தா…. ஒரிஜினலும் அப்டித்தான் எடுத்துருக்காய்ங்க. படம் முடிஞ்சப்புறம், ஃபினிஷிங் டச்சுக்காக நம்ம ஹரி படத்துல வர்ற மாதிரி ஒரு சீன்  வச்சிருந்தாய்ங்க. என்னடா நல்லாத்தான இருந்தாய்ங்கன்னு பாத்தா, அது ஒரிஜினல்ல இல்லாம நம்மாளுக சேத்த சீனு. அதான் இப்டி.

இதெயெல்லாம் தாண்டி படத்துல நம்மள உக்காரவச்சிருக்க விஷயம் கமல். அவர் நல்லா நடிச்சிருக்காருன்னு சொல்றது சரியான வார்த்தையா இருக்காது. அவர் கதாப்பாத்திரத்தையும் அவரையும் பிரிச்சிப் பார்க்கவே முடியிறதில்லை.

படம் முடிஞ்சி வெளில வந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துல ரெண்டு பேரு பேசிக்கிட்டு வந்தாய்ங்க. ஒருத்தன் “டேய் மச்சி… விஸ்வரூபம் நல்லா இருந்துச்சிடா… இது ஒரு மாதிரி இருக்குடா..” ன்னான்.. உடனே இன்னொருத்தன் “இல்லை மச்சி.. உனக்கு இந்தப் படம் புரியல” ன்னான். அப்டியே மெல்ல விலகி அவிங்களுக்கு தூரமா நடக்க ஆரம்பிச்சிட்டேன்.


என்னைப் பொறுத்த வரை ”தழுவல்” ன்னு சொன்னதுக்காகவச்சும் தமிழுக்காக இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை வச்சி கொஞ்சம் வித்யாசப்படுத்தி எடுத்து ரெண்டாவது பாதி போர் அடிப்பதை தவிர்த்திருக்கலாம். இந்த தீபாவளியைப் பொறுத்த அளவுல வேதாளம் ”சுமார்”ன்னா தூங்காவனம் அதவிட ஒருபடி கீழதான். 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

15 comments:

Anonymous said...

Vedhalam ku idhu sumaar ah? That's enough

Anonymous said...

Siva, neenga yen movie pathi matum post poduringa ? either movie review or your personal diary, social view ellam share panna matingala unga blog la ? we expect more from you.

காரிகன் said...

கமல் படத்தை கடைசியாக நான் திரையில் பார்த்தது மகாநதி. அதன் பிறகு அவருடைய அதி மேதாவித்தனம் தியேட்டருக்கு செல்வதிலிருந்து என்னை தடுத்து விட்டது. நீங்கள் பாவம். இன்னும் அவரை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். வரும் காலங்களில் இன்னும் நிறைய துன்பப்படப் போகிறீர்கள்.

Arul JK said...

Ada pavigala vedhalam padatha oru thatava pakkalam sonnapodhey unnga standard therinchirruchu...u dont deserve to write review on kamal films. poi ethavadhu ramarajan padam paru

முத்துசிவா said...

//Ada pavigala vedhalam padatha oru thatava pakkalam sonnapodhey unnga standard therinchirruchu...u dont deserve to write review on kamal films. poi ethavadhu ramarajan padam paru//

அப்டின்னா நீங்க இன்னும் ரெண்டு படமுமே பாக்கலன்னு நினைக்கிறேன். போய் புள்ளை குட்டிய படிக்க வைங்க...ஏன் கமல் படத்துக்கு விமர்சனம் எழுத வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வரனுமோ?

ஆமா ராமராஜன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? கமலைக்காட்டிலும் அதிக ஹிட்டு குடுத்தவரு.. போங்க தம்பி.. சும்மா வடை சுட்டுக்கிட்டு

Anonymous said...

Siva, of course I should not say what you have to write and you should not write. But little bit disappointed with your posts. Only movie reviews you are writing. Please put post like தாய் நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைன்னா நானே ஒடுவேன்!!! that was awesome. In between movie reviews you can write something like this for your fans :-)
PS : previous anonymous comment um nan than.

suresh said...

Saw the movie yesterday.. A refreshing movie from Kamal. No need for comparing his films with other movies he made movies in different style and also liked by majority of peoples otherwise he may not able to survive such a long span. Reviewers like you always point out his movies don't have commercial element which is universal known factor.. Ten y you peoples always point out this in every review and make us boring. Don't expect rajini on Kamal...

Anonymous said...

Rajini fan kita vera enna review expect panna mudium..? Kamal movie pathi review elutharatha niruthidunga please.. ungaluku antha level understanding illa

முத்துசிவா said...

/// ungaluku antha level understanding illa/// இத வச்சே இன்னும் எத்தனை வருசத்துக்கு ஓட்ட போறீங்கன்னு தெரில.. அந்த கருமத்துக்கு level of understanding ஒரு கேடு...

// always point out this in every review and make us boring//

படத்த விட ஒன்னும் இது போரிங்கா இருந்துருக்காது..

முத்துசிவா said...

@ Anonymous


//Siva, of course I should not say what you have to write and you should not write. But little bit disappointed with your posts. Only movie reviews you are writing. Please put post like தாய் நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைன்னா நானே ஒடுவேன்!!! that was awesome. In between movie reviews you can write something like this for your fans :-)//


நிச்சயம் கொஞ்சம் மாறுபட்ட பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி!!!

Anonymous said...

//நிச்சயம் கொஞ்சம் மாறுபட்ட பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி!!!//

Great!! thanks :-)

முத்துசிவா said...

விருப்பப்பட்டால் உங்க பெயரை சொல்லலாமே

suresh said...

Every film is boring for somebody.. None is. Perfect. I am not saying thoongavanam is better movie.. It is made for people who love movies show somewhat different from usual masala films. Befor write something about movies better try to understand its genre..

முத்துசிவா said...

//Every film is boring for somebody.. None is. Perfect. I am not saying thoongavanam is better movie.. It is made for people who love movies show somewhat different from usual masala films. Befor write something about movies better try to understand its genre..//

ஹாஹா.. நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்பதும் புரிகிறது புரியவில்லை என்பதும் வேறு வேறு விஷயங்கள் அதை தாங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். ஒருவன் ஒரு படத்தை நன்றாக இல்லை என்று கூறினால் அவனுக்கு அது புரியவில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது.

நான் genre தெரியாமல் படம் பார்த்தேன் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த படத்தை பொறுத்த அளவில் genre தெரியாமல் நான் பார்த்தேன் என நீங்கள் நினைக்கும்படி அப்படி என்ன தவறாக எழுதியிருக்கிறேன் எனவும் தெரியவில்லை.

”ஆம்பள” படத்தில் விஷால் காரில் பறப்பதையும், ஒரு மசாலா படத்தில் ஹீரோ 50 பேரை அடிப்பதையும் அந்தப் படத்தின் குறையாக கூறிய மங்கினிகளே genre தெரியாமல் பார்ப்பவர்கள்.

Anonymous said...

//விருப்பப்பட்டால் உங்க பெயரை சொல்லலாமே //
I am Madhu, I read all of your posts. Your writing style is impressive

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...