சென்னையில
கவுண்டர் ஆரம்பிச்ச புது சைக்கிள் கடைக்குள்ள மழைத் தண்ணி புகுந்துருது. கழுத்தளவு
தண்ணில கவுண்டரும் செந்திலும் நீச்சல் அடிச்சா மாதிரியே பேசிட்டு இருக்காங்க.
கவுண்டர் : (லேசா அழுகுற தொணியில்) டேய் மண்டையா.. உன்
பேச்சை கேட்டு ஊர்ல இருந்த சைக்கிள் கடைய காலி பன்னிட்டு சென்னையில வந்து கடை வச்சேன்.
ஊர்ல இருந்தாலாவது டெய்லி எட்டனாவுக்கு எவனாச்சும் சைக்கிள் வாடகைக்கு எடுப்பான். இங்க
அதுவும் இல்லாம முழுக்கடையும் தண்ணிக்குள்ள போச்சேடா.. இப்ப சோத்துக்கு என்னடா பன்றது?
செந்தில் : (தண்ணில மிதந்துகிட்டே ஜாலியா) அட விடுங்கண்ணே..
டைட்டானிக் கப்பல் முழுசும் தண்ணிக்குள்ள போனதுக்கே அவன் அவன் கவலப்படாம இருந்தான்.
நாலு ஓட்டை சைக்கிள் போனதுக்கு இவ்வளவு ஃபீல் பன்றீங்களே?
கவுண்டர் : எங்க மூஞ்சிய இந்தப்பக்கம் திருப்பு. த்த்துபூ..
நாயே.. கப்பல் முழுந்துனதுக்கு அப்புறம் கப்பலுக்கு சொந்தக்காரன் எத்தனை நாள் ரூம்
போட்டு அழுதுருப்பான் தெரியுமாடா? டயருக்கு காத்தடிக்கிற நாயிக்கு டாடா கம்பெனி ஓனர்
மாதிரி பேச்சப்பாரு.
கவுண்டர்
கஷ்டப்பட்டு தண்ணில நீச்சல் அடிக்க செந்தில் பலூன் மாதிரி மிதக்குறாரு.
செந்தில்: ஹை அண்ணேன் பாத்தீங்களா.. நா எப்புடி மிதக்குறேன்னு
கவுண்டர் : டேய் கிரிணி மண்டையா.. இதுக்குத்தான் மொச்சைப்
பயறுகள அதிகம் திங்காத திங்காதன்னு சொன்னேன். இப்ப பாரு. மொத்த கேஸூம் சேந்து உன்னையே
அலேக்கா தூக்கிருச்சி. குட்டிமா… பாம் எதுவும் போட்டுறாதம்மா… ஒரே நேரத்துல ரெண்டு
தாக்குதல மக்களால சமாளிக்க முடியாது.
செந்தில் : (கோவமாக)
கிண்டல் பன்னாதீங்கண்ணே.. அப்புறம் நாளைக்கு நா வேலைக்கு வர மாட்டேன்.
கவுண்டர் :
(ஹை பிட்ச்ல) ஆமா.. நா
ஹூண்டாய் கம்பெனி வச்சிருக்கேன். நீ என்கிட்ட ப்ரொடக்ஷன் மேனேஜரா வேலை செய்யிற. நீ
வரலைன்னா நாளைக்கு 500 கார்களோட உற்பத்தி பாதிக்கப்பட்டுரும். நாயே எனக்கே இன்னும்
பத்து நாளைக்கு வேலையில்லை. இதுல நீ வந்தா என்ன வராட்டி என்ன.
செந்தில் : (சுதாரித்துக்கொண்டு) இல்லைன்ணே.. சும்மா
உங்கள டெஸ்ட் பன்னி பாத்தேன்.
கவுண்டர் : என்ன… டெஸ்டு பன்னியா? அப்புடியே கொஞ்சம்
பக்கத்துல வா…
செந்தில் : ம்ஹூம்.. வந்தா நீங்க அடிப்பீங்க.
கவுண்டர் : இல்லை.. மிதிச்சே கொன்னுருவேன். கழுத்தளவு தண்ணில என்னடா
உனக்கு டெஸ்டு வேண்டி கெடக்கு. இப்ப இங்கருந்து எப்புடி எஸ்கேப் ஆகுறதுன்னு எதாவது
வழி இருந்தா பாருடா..
செந்தில் : அண்ணே அய்ங்க பாருங்க. மேல ஹெலிகாப்டரு..
நம்மள காப்பாத்த அரசாங்கமே ஏற்பாடு பன்னிருக்கு…
கவுண்டர் : ஹெலிகாப்டரா..
ஆனா எறுமை மாடெல்லாம் ஹெலிகாப்டர்ல ஏத்த மாட்டாங்களேடா
ஹெலிகாப்டர்
கொஞ்சம் கீழ பறக்க, அதிலருந்து ரெண்டு பேரு தண்ணிக்குள்ள தொப்புன்னு குதிக்கிறானுங்க.
குதிச்ச
உடனே ஒருத்தன் வீடியோ கேமராவ எடுக்க இன்னொருத்தன் கேமராவ பாத்து பேச ஆரம்பிக்கிறான்.
(Man
Vs Wild Bear Grylls ஸ்லாங்ல படிங்க)
BG : எனக்கு இன்னிக்கு இருக்குற சவால் என்னன்னா
இந்த ஏரியக் கடந்து அடுத்தப் பக்கத்துக்கு போகனும். இது ரொம்ப ஆபத்தான ஒரு விஷயம்தான்
இருந்தாலும் நாம இத செஞ்சி தான் ஆகனும்.
கவுண்டர் : (செந்திலப் பாத்து) டேய்
கம்ரான் அக்மல் வாயா.. இவன் நம்மள காப்பாத்த வரலடா.. டிவில ப்ரோகிராம் பன்னறவன். இந்த
நாயி தினம் எதாவது ஒரு காட்டுக்குள்ள போய் அங்க இருக்க மிருகங்களையெல்லாம் பச்சையாவே
பிச்சி திண்ணுறுவான். இவனால காட்டு விலங்குகளோட எண்ணிக்கை குறைஞ்சி போச்சுன்னு இவன
எந்த காட்டுக்குள்ளயுமே விடமாட்டேங்குறானுக.
செந்தில் : இவன் எதுக்குண்ணே இங்க வந்துருக்கான்?
கவுண்டர்: மேலருந்து பாத்துருப்பான். நீ நீந்துறத பாக்க
நீர்யானை மாதிரி இருந்துருக்கும். அதான் தொப்புன்னு குதிச்சிட்டான். சரி வா என்ன பன்றான்னு
பாப்போம்
கவுண்டரும்
செந்திலும் தண்ணில மிதந்துக்கிட்டே பியர் க்ரில்ஸ நோக்கி போறாங்க.
BG: எனக்கு இப்ப ரொம்ப பசிக்கிது. உடனே எதாவது
உணவு சேகரிச்சி ஆகனும். (மிதந்து வர்ற செந்திலப் பாத்து) அங்க பாருங்க.. அங்க பாருங்க..
எதோ ஒண்ணு மிதந்து வருது. அதப் புடிச்சா இன்னிக்கு இரவு உணவ அத வச்சே ஓட்டிறலாம்.
(கவுண்டர்
பக்கத்துல போய்)
கவுண்டர் : டேய்.. இவனப் புடிச்சா இரவு உணவு மட்டும்
இல்லடா…. இன்னும் இருவது நாளுக்கு வச்சி திங்கலாம். ஆனா என்ன ஒரு வேளை சாப்டா அடுத்த
வேளை சாப்ட நீ உயிரோட இருக்க மாட்ட. அவ்வளவும் பாய்சன்.
BG : (செந்திலப் பாத்து) இதுல புரதச் சத்து நிறைய
இருக்கும்னு நினைக்கிறேன்.
கவுண்டர் : ஆமா புரதச் சத்து புண்ணாக்கு சத்து எல்லாமே
இதுல இருக்கு.
BG : இதோட வயிற்றுப் பகுதிய வெட்டி எடுத்துட்டா
எடை கொஞ்சம் கம்மியா இருக்கும். வேறு பகுதிக்கு எடுத்துட்டு போகவும் ஈஸியா இருக்கும்.
செந்தில் : அய்யோ அண்ணேன் பயமா இருக்கு.
BG: இங்க இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்னு
நினைக்கிறேன். நா உடனே தங்குறதுக்கு ஒரு நல்ல இடமா ஏற்பாடு செய்யனும்
கவுண்டர் : அந்த தெரு முக்குல ஒரு ஃப்வ் ஸ்டார் ஓட்டல்
இருக்கு அதுல தங்கிக்கிறியா
BG : உடனே சில காஞ்ச மூங்கில் குச்சிகளையும்,
சில மரக் கிளைகளையும் கொண்டுவாங்க.. நா உடனே ஒரு படுக்கை செய்யனும்
கவுண்டர் :
(காடுப்பாகி) ஒக்கா மவனே..
அவன் அவன் கிட்னிலருந்து சட்னி வரைக்கும் நனைஞ்சி போய் உக்கார்ந்திருக்கான். இவனுக்கு
காஞ்ஜ மூங்கி குச்சி வேணுமாம். டேய் மண்டையா இவன க்ளியர் பண்ணு
செந்தில்
பியர் கிரில்ஸ பாத்து “வவ் வவ்”ன்னு குறைக்கிறாரு
CG : இது ரொம்ப விசித்திரமான மிருகமா இருக்கு.
இதுகிட்ட மாட்டினா என்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம். அதானல இந்த இடத்த விட்டு நா
உடனே கிளம்பியாகனும்.
ன்னு
சொல்லிட்டு அவர் நீந்தி வேற பக்கம் போயிடுறாரு.
அப்ப
ஒல்லியா பாப் கட்டிங் வச்ச பொண்ணு ஒண்ணு போட்ல (boat) இவங்கள நோக்கி வருது
கவுண்டர் : டேய். அழகேசா.. அங்க பாருடா.. ஆல் யங்க்
கேர்ள்ஸ்.. அந்த தவளை திங்கிறவன நம்பிதான் நாம ஏமாந்துட்டோம். ஆனா இப்ப பாத்தியா தாய்க்குலம்.
இவங்க கண்டிப்பா நமக்கு உதவி செய்வாங்க..
(அந்தப்
பொண்ணு பக்கத்துல வருது)
கவுண்டர் :
(வெக்கத்தோட) ஹேய்… ஹெஹேய்…
எங்களையும் படகுல ஏத்தி காப்பாத்த தானே வந்துருக்கீங்க..
பெண் : காப்பாத்துறதுக்கு முன்னால நீங்க ஒரு சேலஞ்ச்
எடுக்கனும்
கவுண்டர் ; என்னது சேலஞ்ச்சா?
பெண் : ஆமா… இது ஏர்டெல் 4G சேலஞ்ச். இத விட ஃபாஸ்டான
நெட்வொர்க்க நீங்க காமிச்சீங்கன்னா வாழ்நாள் முழுக்க உங்க மொபைல் பில் ஃப்ரீ.
செந்தில் : அண்ணேன் அண்ணேன் ஃப்ரீயா தர்றாங்களாம்னே..
வாங்குவோம்னே…
கவுண்டர் : என்னது வாங்குவோமா? ஃபோர்ஜி ன்னா என்னன்னு
தெரியுமாடா?
செந்தில் : எண்ணன்ணே இதுகூடவா தெரியாது. இந்த முட்டையில
செய்வாங்களே அதானே..
கவுண்டர் : என்னது முட்டையிலயா?
அடேய்ய்ய்ய்…. அது புர்ஜிடா.. இது 4G…
செந்தில் : ஏதோ ஒண்ணு…
இப்ப நீங்க வாங்கி தருவீங்களா மாட்டீங்களா?
கவுண்டர் : (4G புள்ளைய பாத்து) இத
பாருங்க பாப் கட்டிங் மேடம்… நாங்களே எந்த வழியா கரையேறுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். தயவு செஞ்சி போயிருங்க..
பெண்: இத விட ஃபாஸ்டான
நெட்வொர்க்க காமிச்சீங்கன்னா……. (ன்னு பேச ஆரம்பிக்க)
கவுண்டர் : (ஹை பிட்ச்ல) வக்காளி அவன் அவனுக்கு ஒண்ணுக்கு வரலன்னு கஷ்டப்பட்டுக்கிட்டு
இருக்கான் இவளுக்கு இளநில தண்ணி வரலயாம். ஓடிப்போயிர்ர்ர்ர் ந்னதும் அந்தப் பொண்ணு
வேற ஒருத்தர பாத்து ”4G சேலஞ்ச் எடுக்குறீங்களா”ன்னு சொல்லிக்கிட்டே போயிருது.
கவுண்டர் : டேய் மண்டையா
என்னடா குளு குளுன்னு இருந்த தண்ணி திடீர்னு சுடுது…
செந்தில் : ஆனது ஆயிருச்சி
இன்னொரு அஞ்சி நிமிஷம்ணே. நானும் எவ்வளவு நேரம் தான் அடக்குறது
கவுண்டர் : அட அசிங்கத்துக்கு
பொறந்தவனே… எதுக்கும் நீ ஒரு டூ ஸ்டெப் பேக்குலயே வா..
அப்போ ஒரு போட் தனியா இவங்கள நோக்கி வருது.
செந்தில் : அண்ணே ஆளு
இல்லாத போட் ஒண்ணு நம்மள நோக்கி வருது
கவுண்டர் : டேய்… ஆள்
இல்லாம எப்புடிடா போட் மட்டும் வரும். நல்லா பாரு
செந்தில் : ஆமாண்ணே..
உள்ள யாரோ இருக்காங்க…
கவுண்டர் : யார்ரா இவன்
டைனிங் டேபிள் ஹைட்டுல உள்ள நிக்கிறான்.
போட் பக்கத்துல வருது
செந்தில் : அண்ணேன் நம்ம சூர்யாண்ணேன்
இவங்க பக்கத்துல வந்ததும், உடனே சூர்யா படக்குன்னு
சட்டைய கழட்டுறாரு
கவுண்டர் : டேய் இப்ப
எதுக்கு நீ சட்டையக் கழட்டுற
(சூர்யா ஸ்லாங்குல படிங்க)
சூர்யா : அது என்னமோ
தெரியல.. தண்ணியப் பாத்தாலே உடனே சட்டையக் கழட்டனும்னு தான் தோணுது.
கவுண்டர் : எனக்கும் உன்ன
பாத்ததும் செருப்ப கழட்டனுனுதான் தோணுது…
சூர்யா : நீங்கல்லாம்
பெருமையா சொல்லிக்கலாம்
கவுண்டர் : ஆங்ங்ங்..
தண்ணிக்குள்ள நிக்கிறது எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு
சூர்யா : எங்கப்பா அடிக்கடி
சொல்லிருக்காரு
கவுண்டர் : என்ன நாங்கல்லாம்
தண்ணிக்குள்ள நிப்போம்னா
சூர்யா : இல்லைங்க சின்ன
வயசுலருந்தே…..
கவுண்டர் : சின்ன வயசுலருந்து
உன்னயெல்லாம் அடிச்சி வளர்த்துருந்தா நீ இப்டியெல்லாம் பேசமாட்ட நாயே
சூர்யா : எனக்கு ரொம்ப
பெருமையா இருக்கு… நா உங்களை காப்பாத்த வந்துருக்கேன்.. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
கவுண்டர் : டேய் கேடி…
நீ எங்கள காப்பத்த வந்துருக்கியா
சூர்யா : ஆமாம்.
கவுண்டர் ; முட்டிக்கால்
அளவு தண்ணிலயே நீ முழுந்தி போயிருவ. முதல்ல உன்ன நீ காப்பாத்திக்க.. எங்கள காப்பாத்திக்க
எங்களுக்குத் தெரியிங்
சூர்யா : (கோவமாக) ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு
கவுண்டர் : (செந்திலப்
பாத்து) டேய் உனக்கு பசிக்குதுன்னு சொன்னியல்லோ… இந்த லில்லிபுட்ட கடிச்சி திண்ணுறு…
இதயெல்லாம் ஊருக்குள்ள நடமாடவிடவே கூடாது.
சூர்யா பதறியடிச்சிக்கிட்டு ஓடுறாரு.
கவுண்டர் : என்னடா நம்மளக்
காப்பத்த உருப்படியா எவனுமே வர மாட்டேங்குறாங்க
(டக்குன்னு தண்ணி லெவல் ஒரு அடி ஏறுது)
தூரத்துல ஒரு பெரிய போட்ல பெரிய சைஸ்ல ஒருத்தர்
“சேதாரத்த அடிச்சி நொறுக்கிட்டோம்ல” ன்னு
டான்ஸ் ஆடிக்கிட்டே கவுண்டர் நோக்கி வர்றாரு.
(தொடரும்)
நன்றி : நண்பன் பாலவிக்னேஷ்
நன்றி : நண்பன் பாலவிக்னேஷ்
12 comments:
ha ha ha.. Surya part than highlight.. sema
ஹஹாஹ் ரொம்ப ரசித்தோம்..
தல ரொம்ப நாளைக்கப்புறம் இப்போ தான் உங்க பழைய பாமுக்கு வந்திருக்கீங்க!
அடிச்சி தூள் பண்ணுங்க!!
அம் வெய்ட்டிங்!!!
நண்பரே,
அதிரடியான கலக்கல்.
பாவம்பா. சூர்யாவை விட்ருங்க... அழுதுரப் போறாரு ...
அட்டகாசம்! ரசித்தேன்!
Super Boss!!! Semma creativity.
Sema boss, super
போர்ஜி / புர்ஜி காம்பினேசன் ஆசம், ஆசம்
Super ji. Senthil Goundamani comedy pakkura mathiriye iruthuchu. Great.
Hi Siva Na, As usual, சூப்பர்.....waiting for the next....அப்டியே நம்ம ரமணனையும் இழுத்து விடுங்க... na :)
அருமை அன்பரே. 90 களின் நகைச்சுவையை இன்றைய காலத்திற்கு. கொண்டுவந்துள்ளீர்
யார்ரா இவன் டைனிங் டேபிள் ஹைட்டுல உள்ள நிக்கிறான்./// ஹ ஹ ஹ... பயங்கரம்...
Post a Comment