Thursday, March 17, 2016

சாதிகள் உள்ளதடி பாப்பா!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு எந்த சாதியையோ சமூகத்தையோ சார்ந்தோ அல்லது ஆதரித்தோ எழுதப்பட்டது அல்ல. 
.
எந்திரன்ல சிட்டி ரோபோவ பரிசோதனை பன்னும்போது ஒருத்தர் “ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு கேப்பாரு. அதுக்கு சிட்டி “அது எந்த உயிருங்குறதப் பொறுத்து” ன்னு பதில் சொல்லும். அந்த பதில் நூற்றுக்கு நூறு உண்மை. நமக்கு வேண்டப்பட்ட ஒரு உயிர் போகும் போது அது நமக்கு ஏற்படுற வலி, வேதனை, கோபம் போன்றவை யாரோ ஒரு உயிர் போகும் போது நிச்சயம் வராது. உதாரணமா ஆஸ்திரேலியாவுல தீப்புடிச்சி ஒரு 50 பேர் இறந்துட்டா அது நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சாதாரண செய்தி. அதே இந்தியாவுக்குள்ள நடந்தா அத இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் குடுத்து படிப்போம். அதே தமிழ்நாட்டுல நடந்தா அது ரொம்ப முக்கியமான செய்தி. அது நம்ம ஊர்ல நடந்தா அந்த செய்தியே நம்மதான்.
.
மூணு நாளா டைம்லைன் ஃபுல்லா வெறும் உடுமலைப்பேட்டை காதல் ஜோடிய நடுரோட்டில் வெட்டுனதப்பத்துன ஸ்டேட்டஸ் மட்டும் தான் ஓடிக்கிட்டு இருக்கு. ஒவ்வொருத்தனும் டிசைன் டிசைனா பொங்குறாய்ங்க. ”பாவிகள்” “கொடூரர்கள்” “அவர்களை உடனே தூக்கிலிடவேண்டும்” “அவர்களை நடுரோட்டில் வைத்து வெட்டி எறிய வேண்டும்” ன்னு. ஏம்பா அதத்தான அவனுங்க பன்னாய்ங்க. இவய்ங்க இருக்க ஆர்வத்துக்கு விட்டா இவய்ங்களே தீர்ப்பெழுதிருவாய்ங்க போல. தினத்தந்தி  மாவட்ட செய்திகள் படிக்கிறவியிங்களுக்கு நல்லா தெரியும் வாரத்துக்கு இந்தமாதிரி எத்தனை கொலை நடக்குதுன்னு.
.
வழக்கத்துக்கு மாறா இதுக்கு ஏன் இவ்வளவு பொங்கல்னு பாக்கப்போனா ரெண்டே விஷயம். ஒண்ணு அந்தப் பையன கொலை பன்ன விஷயம் நியூஸ் பேப்பர்ல மட்டும் வந்திருந்தா அத பத்தோட பதினொன்னாதான் நம்மாளுக ட்ரீட் பன்னிருப்பாய்ங்க. மாறா வீடியோ வேற கிடைச்சிபோச்சி. பாத்த ஒவ்வொருத்தனும் என்ன ஒரு கொடூரமா வெட்டுராய்ங்கன்னு வெறிக்கிறாய்ங்க. ஏன்ப்பா பேப்பர்ல ”வெட்டிக் கொன்றனர்” ன்னு வந்ததயெல்லாம் என்ன மயக்க மருந்து குடுத்து வலிக்காம வெட்டுனாய்ங்கன்னு நினைச்சிட்டு இருந்தீங்களா? ரெண்டாவது எந்த விஷயம் கிடைச்சாலும் அதுக்கு அரசியல் சாயம் பூசி ரெண்டு மூணு நாளுக்கு அத வச்சி வண்டிய ஓட்டுறது.
.
இங்க கவனிக்கப்பட வேண்டியதும் ஹைலைட் பன்னப்பட வேண்டியதும் ஒரே ஒரு விஷயம் தான். ஒரு உயிர் எடுக்கப்பட்டிருக்கு. ஒரு உயிர எடுக்குற அளவு கொடூரமா ஒருத்தர் மாறிருக்காரு. அவ்வளவுதான். அதுக்கு என்ன வேணாலும் காரனங்கள் இருக்கலாம். இப்ப பொங்குற யாருக்கும் கொலைபன்னது பெரிய ப்ரச்சனையா தெரியல. ”சாதி வெறியை ஒழிக்க வேண்டும்” “கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும்” ன்னு அது கவுரவக் கொலைங்குறதுதான் எல்லாருக்கும் உருத்துதே தவற வேற சொத்து ப்ரச்சனையிலயோ இல்ல முன்பகையிலயோ இந்த சம்பவம் நடந்திருந்தா எவனும் கண்டுக்கிட்டு இருக்க மாட்டாய்ங்க போல.   

இதுல இன்னும் கொஞ்சம் பேரு ”ஆமா அவனுங்க வெட்டும்போது சுத்தி இத்தனை பேரு நிக்கிறாங்களே.. யாராவது போய் அவனுங்கள தடுத்து அடிச்சிருக்கலாமே”ன்னு வேற யோசனை. இவனுங்கதான் zoo la புலிக்கூண்டுக்குள்ள விழுந்தவன புலி கடிச்சித்தின்ன வீடியோவப் பாத்துட்டு “நா மட்டும் வக்காளி ஸ்பாட்டுல் இருந்துருந்தேன் நடக்குறதே வேற” ன்னு அள்ளி விட்டுக்கிட்டு இருந்தவிய்ங்க. வீடியோல பாத்த நீங்களே இவ்வளவு பொங்குனா நேர்ல பாக்குறவனுக்கு எதும் தோணாமயா இருக்கும். ரவுடின்னு ஃபார்ம் ஆன ஒருத்தன் கையால ஒருத்தன போட்டு அடிச்சாலே நம்மள எதுவும் பன்னிருவானோன்னு யாரும் பக்கத்துல போகமாட்டாய்ங்க. அருவாள வச்சி ஒருத்தன கண்ணுமண்ணு தெரியாம வெட்டிக்கிட்டு இருக்காய்ங்க. அவய்ங்க பக்கத்துல போகவும் எவனுக்கும் தைரியம் வருமா?

ஒரு உயிரப் பறிக்கிறதுங்குறது மன்னிக்கப் படக்கூடிய விஷயம் இல்லை. சாதாரணமா இருக்க யாரும் யாரையும் கொல்லனும்னு நினைக்கிறதில்லை. ஏதோ ஒரு விதத்துல கொலை செய்யவோ இல்லை ஆள் வச்சி கொலை செய்ய சொல்லவோ தூண்டப்படுறாங்க. அது நம்பிக்கை துரோகமா இருக்கலாம், வெறுப்பின் உச்சமாக இருக்கலாம் அல்லது பழியுனர்வா கூட இருக்கலாம். இன்னிக்கு இந்த ரெண்டு பேர வெட்டுனதுக்கு “கெளரவக்கொலை”  ன்னு சொல்றாங்க. நடத்தை தவறிய மனைவியையும் அதுக்கு காரணமானவனையும் ஒருத்தன் வெட்டிப்போடுறான். அப்ப அத என்ன சொல்லுவீங்க? உண்மையா பாக்கப்போனா அதுதான் கெளரவக் கொலை. அந்த நியூசயெல்லாம் படிக்கும்போது “இவளுகளயெல்லாம் இப்டித்தான் கொல்லனும்” ன்னு சொல்ற வாயிதான் இன்னிக்கு ஜாதிடா, ஒழிப்புடான்னு சவுண்டு விடுது.

அதுல ஒரு மனைவி புருஷன் வச்சிருந்த நம்பிக்கைய உடைக்கிறா. இதுல ஒரு பொண்ணு அப்பா தன் மேல வச்சிருக்க நம்பிக்கைய உடைக்கிறா. இது ரெண்டுமே ஒரே விஷயம் தான். அளவுக்கதிகமான நம்பிக்கை உதாசீனப்படுத்தும்போது பலருக்கு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கு. சிலருக்கு அந்தப் பக்குவம் இல்லாமல் இந்தமாதிரி ஏடாகூடமா யோசிக்க வச்சிருது அவ்வளவுதான்.

ஆமா அந்தப் புள்ளைய நமக்கு எத்தனை நாளா தெரியும்? வீடியோவ பாத்தப்புறம் தான் நமக்கு அப்டி ஒரு புள்ளை இருக்கதே தெரியும். நாமளே இவ்வளவு ஃபீல் பன்றோம்னா இத்தனை வருஷமா அந்தப் புள்ளைய பெத்து வளர்த்த அவங்க அப்பாவுக்கு பாசம் இல்லாமையா இருந்துருக்கும். அதையும் தாண்டி இப்படி ஒரு கொடூரமான செயலை செய்ய தூண்டியிருக்குன்னா அவர் எப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்த சந்திச்சிருப்பாரு.
எவ்வளவுதான் நம்ம பெயரளவுல “அடுத்தவங்களுக்காக நாம வாழவில்லை” ன்னு சொல்லிக்கிட்டாலும் முடியிறதில்லை. நம்ம சமூகமும் நம்மை சுத்தி இருக்கவங்களும்தான் நம்ம வாழ்க்கை முறைய தீர்மானிக்கிறாங்க. நம்ம வீட்டு பொண்ணு வேற ஜாதியில கல்யாணம் பன்னிக்கிச்சின்னா அத நம்ம ஏத்துக்குறோமா என்பதை விட நம்ம ஏத்துக்கிட்டா நம்ம சமூகம் நம்மள என்ன ஏளனம் செய்யப்போகுதோங்குற ஒரு பயம்தான் இந்தமாதிரி கொலைகளுக்கு முக்கியமான காரணம்.

எல்லாரும் ஜாதி ஒழிப்பு ஜாதி ஒழிப்புன்னு தம் கட்டி பேசுறோம். முதல்ல ஜாதிங்குறது என்ன? ஒரே மாதிரி பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக்க ஒரு பேரு வச்சிக்கிட்டாங்க. ஒவ்வொரு தொழில் செஞ்சவனும் ஒரு ஜாதி. கள்ளர், தேவர், பறையர், கோணார்ங்குறது மட்டுமே ஜாதி இல்லை. ”தமிழண்டா” னு சொல்றோமே அதுவும் ஒரு ஜாதி. இந்தியண்டான்னு சொல்றோமே அதுவும் ஒரு ஜாதி. ஒரு வெளிமாநிலத்துல போய் இருக்கும்போது தமிழ் ஆளுங்க மட்டும் தனியா செட்டு சேருறது இல்லையா? ஒரு வெளிநாட்டுல இருக்கும்போது இந்தியர்கள்லாம் ஒண்ணு சேருறது இல்லையா? அதோட மைக்ரோ வியூதான் சின்ன சின்ன ஜாதிகளா நம்மூர்ல மக்கள் சேர்ந்துக்கிறது.

கலப்பு திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கு வழிவகுக்கும்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் வேற எதுவும் இருக்காது. இன்னிக்கு ஜாதி ஒழிப்புன்னு பேசுற எத்தனை பேரு எல்லா வேலையும் செய்ய தயாரா இருக்காங்க. சிட்டிக்களத் தவற எல்லா ஊர்லயும் இன்னும் நாவிதர்கள்தான முடிவெட்டி விடுறாங்க. ஒரு பொணத்துக்கு முன்னால தப்படிச்சிக்கிட்டு ஆடுறதுன்னா பறையர்கள்தான வர்றாங்க. இன்னும் இதுபோல நிறைய. அந்தந்த ஜாதிக்காரங்கதான் அந்தந்த வேலைய செய்யனும்னு ஒரு லிஸ்டே வச்சிருக்கோம்.

இன்னும் சொல்லப்போனா நம்ம ஊர்ல இன்னும் இந்த ஜாதி வேறுபாடும் சகிப்புத்தன்மையும் பணத்தைப் பொறுத்துதான் வேறுபடுது. இதே அந்த தலித் பையன் காரு, பங்களா பெரிய பிஸினஸ்னு பெரிய லெவல்ல இருந்துருந்தான்னா பொண்ணோட அப்பாவுக்கு அவன கொல்லனும்ங்குற எண்ணம் வந்திருக்குமான்னு சொல்ல முடியாது. “எங்க நம்ம பொண்ணு புகுந்த வீட்டுல போய் ரொம்ப  கஷ்டப்பட்டுருவாளோ” ங்குற நினைப்புதான் பெத்தவங்க காதலை எதிர்க்குறதுக்கு முதல் காரணம்.

என்னப் பொறுத்த அளவு ஒரு பையன் தன்னை விட வசதியில குறைஞ்ச இடத்துல பொண்ணு எடுக்கலாம். ஆனா ஒரு பொண்ணை அவங்க வீட்ட விட வசதி கம்மியான இடத்துல நிச்சயம் கட்டிக்கொடுக்க கூடாது. பையன்ங்குறவன் எப்பவும் ஒரே வீட்டுல இருக்குறவன். ஆனா ஒரு பொண்ணு இருபது இருவத்தஞ்சி வருஷம் வளர்த்த அம்மா அப்பாவப் பிரிஞ்சி யாருமே அறிமுகம் இல்லாத ஒரு வீட்டுல வாழப்போறது. புதுசாபோற பொண்ணுக்கு அங்க இருக்கவங்களோட பழகி புரிஞ்சிக்கிறதே மிகப்பெரிய கஷ்டம். அதுக்கும் மேல மத்த எந்த கஷ்டத்தையும் அத படவைக்க கூடாது.

காதல் கல்யாணம் பன்னிக்கிட்டவங்க கூட தங்களோட பையனைனோ பொண்ணோ காதல்னு வந்து சொல்லும்போது முதல்ல எதிர்க்கத்தான் செய்றாங்க. ஒண்ணு அவங்க காதல் கல்யாணம் பன்னிக்கிட்டு அனுபவிச்ச கஷ்டங்கள மனசுல நினைச்சி எதிர்க்கலாம். இன்னொன்னு மேல சொன்ன மாதிரி எங்க தப்பான முடிவெடுத்து கஷ்டப்பட்டுருவாங்களோன்னு தான். எத்தனையோ முற்போக்கு கருத்துக்களப் படத்துல சொன்ன சேரன் அவர் பொண்ணு லவ் பன்னப்ப என்ன செஞ்சாருன்னு நமக்கே தெரியும். எல்லா படத்துலயும் லவ் பன்னி ஹீரோயினோட டூயட் பாடுன சிரஞ்சீவி அவர் பொண்ணு லவ் பன்னி கல்யாணம் பன்னப்போ முதல்ல என்ன பன்னாருன்னும் எல்லாருக்கும் தெரியும்.

நம்மளப் பொறுத்த அளவு ஜாதி ஒழிப்புங்குறது “லவ் மேரேஜ் பன்னுங்கப்பா வாழ்க்கை நல்லாருக்கும்” ன்னு சொல்றதும் பார்ப்பனர்கள ஓட்டுறதும் தான். “வொய்ட் க்ராஸ்னா அவனுங்க ஆளுங்கள மட்டும் தான் தூக்கி விடுவானுங்க” ன்னு வயித்தெரிச்சலோட சொல்லுவோம். என்னையும் சேத்து தான் சொல்றேன். ஆனா அதுல என்ன தப்பு இருக்கு? அவன் ஆளுங்கள எங்க பாத்தாலும் கண்டு புடிக்க ஒரு பாஷ வச்சிருக்காங்க. ஒரு அடையாளம் வச்சிருக்காங்க. அவங்க சமூகத்த அவங்க முன்னேத்திக்கிறாங்க. மத்தவங்களால இதப் பன்ன முடியுமா? இவன் எந்த குரூப்புன்னு கண்டுபுடிக்கவே மண்டை காஞ்சிரும். நீங்க கேக்கலாம் இப்புடி பன்றது தப்பு இல்லையான்னு? சரி நீங்க ஒரு கம்பெனில ஜெனரல் மேனேஜரா இருக்கீங்க. உங்க சொந்தக்காரப்பையன் ஒருத்தன் உங்களுக்கு கீழ வேலை பாக்குறான். சிறப்பா செய்வீங்களா மாட்டீங்களா? அட்லீஸ்ட் ஒரு சாஃப்ட் கார்னராவது கண்டிப்பா அவன் மேல இல்லாம இருக்காது.

மதத்தாலயும் மொழியாலயும் பிரிஞ்சிருக்க மனிதர்களிடையே இருக்க ஜாதிங்குற மைக்ரோ பிரிவினை நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டியது தான். ஆனா இந்த மாதிரி கேஸ்களப் பாத்து ரெண்டு நாள் சமூக வலைத்தளங்கள்ல பொங்குறதால மாறக்கூடிய விஷயம் அல்ல அது. இன்றைய தலைமுறை பெற்றோர் பெரும்பாலும் சாதிங்குற பிரிவினையிலயும், நம்பிக்கையிலயும் வாழ்ந்துட்டாங்க. அவர்களோட பிள்ளைகளாகிய நாம அவங்களோட நம்பிக்கைய உடைச்சித்தான் சாதி ஒழிப்ப செய்யனும்னு இல்லை. உங்களுக்குள்ள சாதி ஒழிக்கனும்னு ஒரு வெறி இருந்தா கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல உங்க பையனோ பொண்ணோ பெரியவங்களா வளர்ந்துருவாங்க. உங்க பெற்றோர்களிடத்துலருந்து உங்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்த நீங்க உங்க குழந்தைகளுக்கு குடுங்க. இன்னும் ரெண்டு தலைமுறையில சாதி காணாம போயிரும்.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

13 comments:

Madhu said...

I agree with your view 80%. But the one opinion that cannot be digested is the below
"அதையும் தாண்டி இப்படி ஒரு கொடூரமான செயலை செய்ய தூண்டியிருக்குன்னா அவர் எப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்த சந்திச்சிருப்பாரு. "

Reason behind the murder is certainly not because of the daughter's betray. If that girl married any other man who is not a 'dalit' then this murder wouldn't happened.

க கந்தசாமி said...

இதே அந்த தலித் பையன் காரு, பங்களா பெரிய பிஸினஸ்னு பெரிய லெவல்ல இருந்துருந்தான்னா பொண்ணோட அப்பாவுக்கு அவன கொல்லனும்ங்குற எண்ணம் வந்திருக்குமான்னு சொல்ல முடியாது // unfortunately correct

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

//இந்த ஜாதி வேறுபாடும் சகிப்புத்தன்மையும் பணத்தைப் பொறுத்துதான் வேறுபடுது. இதே அந்த தலித் பையன் காரு, பங்களா பெரிய பிஸினஸ்னு பெரிய லெவல்ல இருந்துருந்தான்னா பொண்ணோட அப்பாவுக்கு அவன கொல்லனும்ங்குற எண்ணம் வந்திருக்குமான்னு சொல்ல முடியாது.// //இதையேதான் நானும் சொல்கிறேன்//
இதையேதான் நானும் சொல்கிறேன்//
இதையேதான் நானும் சொல்கிறேன்//
karthik amma
kalakarthik

Anonymous said...

Like ur posts.... try 2 write often

குட்டிபிசாசு said...

உங்களுடைய கட்டுரையில் மூலம் உங்கள் எண்ணம் புரிகிறது. உங்கள் கருத்தை சொல்வது உங்கள் விருப்பம்.

தன் விருப்பப்படி வாழ்க்கை அமைத்துக்கொள்வது எப்படி நம்பிக்கை துரோகமாகும். அப்படியே செய்தாலும் கொல்வது எப்படி சரியாகும்.

//காதல் கல்யாணம் பன்னிக்கிட்டவங்க கூட தங்களோட பையனைனோ பொண்ணோ காதல்னு வந்து சொல்லும்போது முதல்ல எதிர்க்கத்தான் செய்றாங்க. ஒண்ணு அவங்க காதல் கல்யாணம் பன்னிக்கிட்டு அனுபவிச்ச கஷ்டங்கள மனசுல நினைச்சி எதிர்க்கலாம். இன்னொன்னு மேல சொன்ன மாதிரி எங்க தப்பான முடிவெடுத்து கஷ்டப்பட்டுருவாங்களோன்னு தான்.
எத்தனையோ முற்போக்கு கருத்துக்களப் படத்துல சொன்ன சேரன் அவர் பொண்ணு லவ் பன்னப்ப என்ன செஞ்சாருன்னு நமக்கே தெரியும். எல்லா படத்துலயும் லவ் பன்னி ஹீரோயினோட டூயட் பாடுன சிரஞ்சீவி அவர் பொண்ணு லவ் பன்னி கல்யாணம் பன்னப்போ முதல்ல என்ன பன்னாருன்னும் எல்லாருக்கும் தெரியும். //

நீங்க சொன்ன சிரஞ்சீவியும் சேரனும் காதல் கல்யாணம் பண்ணியவர்கள் அல்ல. ரெண்டு பேரும் ஜாதியில் கல்யாணம் செய்தவர்கள் தான். உங்க தலைவர் காதல் கல்யாணம் செய்தவர். தன் மகளுக்கும் காதல் கல்யாணம் செய்துவைத்தவர்.

சித்திரை said...

Superb... Nice thought.

vivek kayamozhi said...

அவரே ஐசுவர்யா காதலை எப்படி எதிர்கொண்டார், சவுந்தர்யா காதலை எப்படி எதிர்கொண்டார்?
சாதி என்பது இரண்டாம் பட்சம் தான், வசதி, தகுதி யே முதலாக வருகின்றது.
ஒரே சாதி, நெருங்கிய சொந்தத்தில் வந்த காதலே காசு,வசதி பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணமாக பொசுங்கிய கதை எத்தனை சொல்ல?
மற்ற எதையும் யாருக்கும் விட்டுக்கொடுப்பர், தன் வீட்டு பெண்ணை கொடுக்க ஆயிரம் முறை யோசிப்பவரே நாம் யாவரும்.
மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி தன் பெண்ணை 35 வயது வரை திருமணம் செய்யாமல் வைத்திருக்கும் பெற்றோர் எத்தனை? காரணம் தகுதியான இடத்தில் தன் பெண் போய் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே...
அந்த பெண் பழனி யில் மிக வசதியாக வாழ்ந்தவர், BE படித்துக்கொண்டும் இருப்பவர். பொருந்தாத வயதில் பாலின கவர்ச்சியில் திருமணம் செய்து கொண்டு வாழ வழி இல்லாமல் உடுமலைபேட்டை யில் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்துள்ளார்.
அந்த தகப்பன் மனது என்ன நினைத்திருக்கும்? கண்டிப்பாக கொலை செய்வது காட்டுமிராண்டித்தனம் தான்...
ஆனால் படிக்க வேண்டிய வயதில் பொருந்தா திருமணம் செய்து வாழ்வை சீரழித்தது என்ன செயல்? இன்னும் பச்சை யாக செல்ல விரும்பவில்லை...

man said...

Naayae nee enna thevan'aa.romba sombu adikara. Un thalaivan sottai maathiri neeyum mutaal thasn

Dhanasekar N said...

உங்களுக்குள்ள சாதி ஒழிக்கனும்னு ஒரு வெறி இருந்தா கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல உங்க பையனோ பொண்ணோ பெரியவங்களா வளர்ந்துருவாங்க. உங்க பெற்றோர்களிடத்துலருந்து உங்களுக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்த நீங்க உங்க குழந்தைகளுக்கு குடுங்க. இன்னும் ரெண்டு தலைமுறையில சாதி காணாம போயிரும்.

Agreed.

Unknown said...

i am one of the avid reader of your blog.i used to read it when i am stressed and i am a big fan of how you narrated the bus travel to Agra. i can easily relate myself to it.i have to confess that for the first time i felt upset after reading your blog especially this post.

The way you compared the love to infidelity of husband and wife.Thats not right. If customs dictate that only certain communities should do certain work,then its high time to change that custom.Even after 60 years of freedom still we subject our own citizens,our own indians to such brutal mental torture,then we have to impart that kind of education where we see everyone as human beings.

In western countries if someone is begging they feel oh my fellow swiss is begging or my fellow french is begging. People say you dont find a punjabi sikh begging. Like that let us work towards a society where there is no tamilian is made to clean the drainage. Let us mechanize that cleaning.
is it so important some set of people should dance in front of a corpse.let us work towards where we find alternate employment to them and stop this dance.

i dont have that talent like you to write somethingfunny which is etched in the memory. But the only forward is progressive thinking and building a better society. so please allow me to contradict your title
saathigal illaiyadi paapa

A said...

//"அதையும் தாண்டி இப்படி ஒரு கொடூரமான செயலை செய்ய தூண்டியிருக்குன்னா அவர் எப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்த சந்திச்சிருப்பாரு. "//

This is not acceptable. 50% (mistake - ?) is by his daughter also. How can he murder the boy? What right he has? If doesn't like that marriage, he should have stayed away. He doesn't even have right to beat.

Your Last point is well worth.

Anonymous said...

//"அதையும் தாண்டி இப்படி ஒரு கொடூரமான செயலை செய்ய தூண்டியிருக்குன்னா அவர் எப்படிப்பட்ட ஒரு ஏமாற்றத்த சந்திச்சிருப்பாரு. "//

This is not acceptable. 50% (mistake - ?) is by his daughter also. How can he murder the boy? What right he has? If doesn't like that marriage, he should have stayed away. He doesn't even have right to beat.

Unknown said...

நீங்க ஒரு கம்பெனில ஜெனரல் மேனேஜரா இருக்கீங்க. உங்க சொந்தக்காரப்பையன் ஒருத்தன் உங்களுக்கு கீழ வேலை பாக்குறான். சிறப்பா செய்வீங்களா மாட்டீங்களா? அட்லீஸ்ட் ஒரு சாஃப்ட் கார்னராவது கண்டிப்பா அவன் மேல இல்லாம இருக்காது.

Exactly my thoughts

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...