Monday, June 20, 2016

முத்தின கத்திரிக்கா!!!


Share/Bookmark
உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி நம்ம ஒரு சுந்தர்.சி ஃபேன். அவர் இயக்குனரா இருக்கப்ப மட்டும் இல்லை. ஒரு நடிகராக் கூட எனக்கு அவர ரொம்பப் புடிக்கும். அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது எனக்கு எதோ ஒரு நல்ல ஃபீல் இருக்கும். நீங்கல்லாம் இதுவரைக்கும் டிவில கூட பார்த்திராத “தீ” “ஐந்தாம்படை” போன்ற படங்களையெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பன்னி பாத்தவன் நானு. இதக் கேட்டவுடனே சேரன் பாண்டியன்ல கவுண்டர் சொல்ற மாதிரி “இய்ய்… இவனையா கும்புட்டோம்.. வீட்டுக்கு போனோன அடுப்புல கைய வச்சி கருக்கிரனும்” ங்குற ரேஞ்சுல எதாவது ஒரு வசனம் உங்க மைண்டுல ஓடும்னு எனக்கு தெரியும். என்ன பன்றது சில பேருக்கு சில டேஸ்டுகள்.

ஊருக்கு போற வெள்ளிக்கிழமைகள்ல ரிலீஸ் ஆகுற படங்கள முதல்நாளே பாக்க முடியிறதில்லை. சுமார் 8 மாசத்துக்கு முன்னால Lenovo K3 note ன்னு ஒரு ஃபோன் வாங்குனேன். கடந்த ஒரு மாசமா என்னப்போட்டு அது பாடா படுத்துனதால சர்வீஸுக்கு விடனும்னு முடிவு பன்னி ஒரு அரை நாள் லீவப் போட்டுட்டு மவுண்ட் ரோட்டுல உள்ள சர்வீஸ் செண்டருக்கு மதியம் போற ப்ளான். சரி படம் வேற இன்னும் பாக்கலயேன்னு, ஷோ செக் பன்னா எஸ்கேப்ல 3:30 மணிக்கு ஒரு ஷோ. டிக்கெட்டும் இருந்துச்சி. முன்னாலயே புக் பன்னப்புறம் சர்வீஸ் செண்டர்ல லேட் ஆக்குனாய்ங்கன்னா வேஸ்டா போயிருமே… இன்னிக்கு திங்கக் கிழமைதானே ஒருபயலும் இருக்கமாட்டன். நேராப் போயே எடுத்துக்குவோம்னு நினைச்சி ஆஃபீஸ்லருந்து வண்டில கிளம்பிட்டேன்.

எல்லாம் ப்ளான் படி கரெக்டா தான் போச்சு. “சார் ஒரு ஒருவாரம் கழிச்சி ஃபோன் பன்னி கேட்டுக்கிட்டு வந்து ஃபோன வாங்கிக்குங்க சார்” ன்னு சர்வீஸ் செண்டர்ல சொல்ல, 3:15 க்கெல்லாம் டான்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். அங்கிருந்து ரெண்டே நிமிஷத்துல எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. பைக்க பார்ர்க்கிங்ல விட்டுட்டு கரெக்ட்டா நாலு ஃப்ளோரு ஏறி எஸ்கேப் குள்ள நுழையும் போது மணி 3:25. ”என்னா டைமிங்கு.. ச்ச.. டைமிங்ல வெள்ளக்காரனயே மிஞ்சிருவ போலருக்கேன்னு” மனசுக்குள்ளயே மகிழ்ச்சிய வச்சிக்கிட்டு, பாக்ஸ் ஆபீஸ்ல நின்ன புள்ளைக்கிட்ட போய் “முத்தின கத்திரிக்கா 3:30 ஷோ ஒண்ணு  குடுங்க” ன்னேன்.

“Sold out Sir” ன்னுச்சி. சரியாக் கேக்காததால  “என்னங்க?” ன்ன்னு திரும்ப கேட்டேன்.. சத்தமா “Sold Out sir” ன்னுச்சி. அடக் காவாளிப்பயலுகளா.. ஊர்ல முக்காவாசி பயலுக வேலையில்லாமதான் இருக்கீங்களா.. என் உழைப்பெல்லாம் வீணாப் போச்சே.. என்னோட வெள்ளக்கார டைமிங்கெல்லாம் நாசமா போச்சே.. விடக்கூடாதுன்னு இடுப்புல கைய வச்சிக்கிட்டு “ ஒரு சுந்தர்.சி யோட வெறி புடிச்ச ஃபேன் வந்துருக்கேன். எனக்கே டிக்கெட் இல்லைங்குற” ன்னு கண்ணாலயே ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு அந்தப்புள்ள “ சுந்தர்.சி யே வந்தாலும் டிக்கெட் இல்லை.. மூடிட்டு கெளம்பு” அப்டின்னு கண்ணாலயே சொல்லுச்சி. அப்டி டீசண்ட்டா பேசிப் பழகிக்கன்னு வந்ததுக்கு ரெஸ்ட் ரூம்ல போய் பிஸ் அடிச்சிட்டு 30 ரூவா பார்க்கிங் குடுத்துட்டு வந்தேன். ஒரு பிஸ்ஸுக்கு 30 ரூவாங்குறத நினைக்கும் போது இன்னொரு மேட்டர் ஞாபகம் வருது. மைண்ட்ல வச்சிக்குங்க கடைசில சொல்றேன்.. விமர்சனம் எழுத வந்து எங்கெங்கயோ போயிருச்சி.

Vellimoonga ங்குற மலையாளப் ஹிட்டோட ரைட்ஸ் வாங்கி தயாரிச்சி நடிச்சிருக்காரு தல சுந்தர்.சி. முரட்டுக்காளைல கால் உடைஞ்சதோட நடிப்ப நிறுத்திருந்த சுந்தர்.சி அரண்மணை 1& 2 மூலமா சைடு ஹீரோவ வந்து திரும்பவும் மெய்ன் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிருக்காரு. அவரு ஆளுக்கும் சைஸுக்கும் செட் ஆகுற மாதிரியான கேரக்டர் தான்.

தாத்தா காலத்துலருந்து அரசியல் அல்லக்கைகளா இருந்த சுந்தர்.சி ஃபேமிலில, அப்பா சீக்கிரமே இறந்துபோயிட குடும்பத்தோட மொத்த பொறுப்பும் சுந்தர்.சி மேல விழுது. தம்பி தங்கைய படிக்கவச்சி கல்யாணம் பன்னிக்குடுத்த பிஸில தலைவர் கல்யாணம் பன்னிக்க மறந்துடுறாரு. வயசு நாப்பதுக்கு மேல ஆயிடுது. சைடுல ADBD ங்குற கட்சியையும் நடத்திட்டு வர்றாரு. அந்த கட்சில கேங்கும் அவருதான் லீடரும் அவருதான். அவர ”தலைவா தலைவா”ன்னு சொறிஞ்சி விட்டுக்கிட்டு கூடவே வர்ற அல்லக்கையா சதீஷ்.

ஊர்ல உள்ள ரெண்டு எதிர் கட்சித் தலைவர்களா VTV கணேஷும், சிங்கம் புலியும். ஒரு கட்டத்துல சுந்தர்.சி பூணம் பாஜ்வாவ பாத்து லவ்வாயிடுது. அந்தப் புள்ளைக்கும் லவ்வு தான். ஆனா பொண்ணு பாக்கப் போகும் போது நெஞ்சைக் கிழிக்கிற அளவுக்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கு. பொண்ணோட அப்பா அம்மாவா ரவிமரியா & கிரன். அதுக்கப்புறம் கட்சிய கவனிச்சாரா, பூணத்த கல்யாணம் பன்னாராங்குறதுதான் ரெண்டாவது பாதி.

வழக்கமா சுந்தர்.சி இயக்குர படங்கள்ல இருக்க மாதிரியே காமெடில கலக்குறதுக்கு ஏத்த ஸ்கிரிப்டு. நிறைய இடங்கள்ல வயிறு குலுங்க சிரிக்கவும் வச்சிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய சிரிக்க வச்சிருக்கலாம். அந்த கதைக்களத்துக்கு சுந்தர்.சி படத்த இயக்கிருந்தாருன்னா படத்தோட ரேஞ்சே வேற.

படத்தோட முதல் drawback casting தான். ”கோரிப்பாளையம்” “எத்தன்” மாதிரியான மொக்கை காமெடி படங்கள்ல நடிச்சி சிங்கம் புலிய ஸ்க்ரீன்ல பாத்தாலே இப்பல்லாம் அந்தப்  படத்தோட மதிப்பே போயிருது. இன்னொன்னு VTV கணேஷ். அவருக்கு ஒரு சின்ன ரோல் குடுத்து ரெண்டு மூணு சீன் குடுக்குறது ஓக்கே. ஆனா ஒரு மெய்ன் கேரக்டரக் குடுத்து படம் ஃபுல்லா அவர் பேசுறது அப்பப்ப படத்துக்கு நடுவுல ஒரு எறுமை வந்து கத்திட்டு போற மாதிரியே இருக்கு.

அடுத்தது சதீஷ். சும்மாவே அவர் மூஞ்ச பாக்க முடியாது. இதுல படு மொக்கையான ஒட்டுமீசை வேற. சகிக்கல. அவருக்கு எழுதிருக்க counter வசனங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா அத அவர் சொல்றது நல்லா இல்லை. தேசிங்கு ராஜா படத்துல ரவி மரியாவ வச்சி ரொம்ப சீரியஸான சீன்ல கூட காமெடி பன்னிருப்பாங்க. இதுலயும் அந்த மாதிரி எதாவது செஞ்சிருக்கலாம். ஆனா ஒண்ணும் இல்லை.

படத்துல சுந்தர்.சி போராட்டம் பன்ற வர்ற ஒரு பெரிய சீக்வன்ஸூம், ஒரு பன்னி மூஞ்சி வாயன் வர்ற ரெண்டு மூணு சீனும் செம காமெடி. முதல் பாதி நல்லாவே இருந்துச்சி. முதல் 5 நிமிஷம் RJ பாலாஜி பன்ற narration னும் நல்லாருந்துச்சி. எந்த சீனுமே அருக்கல. அப்பப்பா நல்ல நல்ல காமெடிய வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பன்னி வச்சிருந்தாங்க.

ரெண்டாவது பாதில அரசியல், ப்ரச்சாரம்னு படம் போறதுல காமெடி கொஞ்சம் கம்மி. அதும் ரொம்பவே யூகிக்கிற மாதிரியான க்ளைமாக்ஸ். கிரணுக்கும், சுந்தர்.சிக்கு இடையில உள்ளது கொஞ்சம் காரித்துப்புற மாதிரியான கெமிஸ்ட்ரின்னாலும் காமெடிங்குறதுக்காக ஒண்ணும் பெருசா தெரியல.

நான் சுந்தர்.சி க்கு எப்டி ஃபேனோ அதே மாதிரி பூணம் பாஜ்வாக்கும் “சேவல்” படத்துலருந்தே ஃபேனு. அதனால அந்தப் புள்ளையையும் படத்துல  ரொம்ப புடிச்சிருந்துச்சி. ஆனா சற்று பல்க் ஆயிருச்சி. க்ளோஸ் அப் காட்சிகள்ல கொஞ்சம் டெடரா இருக்கு. படம் முழுக்க சுந்தர்.சி வெள்ளை வேஷ்டி சட்டையில நீட்டா வந்துட்டு போறாரு. குத்துப்பாட்டுங்குற பேர்ல கொல்லல. ரெண்டே பேர கட்சில வச்சிக்கிட்டு டெல்லி, MLA சீட்டுன்னு அடிச்சி விடுறதெல்ல்லாம் படத்துக்கு பொய்ட்டோமேன்னு தாங்கிக்க வேண்டியிருக்கு. சுந்தர்.சி யோட கோ-டைரக்டரா இருந்த வெங்கட் ராகவன்ங்குறவர் இயக்கிருக்காரு. ரீமேக்குங்குதால பெருசா சொல்ல ஒண்ணும் இல்லை. “சும்மா சொல்லக்கூடாது” பாட்டத்தவற மத்ததெல்லாம் கப்பி. BGM ரொம்ப சுமார் ரகம்.

மத்தபடி படத்துல எந்த சீனும் போரடிக்கல. சில சீன் வயிறு குலுங்க சிரிக்க வச்சிருக்காங்க. ஃபேமிலியோட இந்த வாரம் எதாவது படத்துக்கு போக ப்ளான் பன்னிருந்தா இந்தப் படத்துக்கு நம்பி போகலாம். ஆனா பெரிய லெவல்லயும் எதும் எதிர்பாக்காதீங்க.


சரி மேல எதோ சொல்றேன்னு சொல்லிருந்தேனே.. அந்த 30 ரூவா குடுத்து ரெஸ்ட் ரூம் பொய்ட்டு வந்தத நினைச்சா , சில வருஷங்களுக்கு முன்னால அயல் நாட்டுல இருந்தப்ப நடந்த சம்பவம் ஓண்ணு ஞாபகம் வந்துச்சி. ”PIRELLI TYRES” ங்குற கஸ்மர்  சைட்ல வேலை பாத்துட்டு இருந்தப்போ திடீர்ன்னு அடிவயிற்றிலே ஜலபுலஜங்க்ஸ் ஆகி, கலக்கி விட்ருச்சி. கொடுமை என்னன்னா அந்த ப்ளாண்ட் ஃபுல்லாவே எந்த டாய்லெட்லயும் தண்ணி இருக்காது. ஒன்லி பேப்பர். இங்க கொடம் கொடமா ஊத்துன நமக்கு பேப்பர் காலாச்சாரத்தோட சேர்றது ரொம்பக் கடினம். அப்புறம் என்ன டாக்ஸி வரச் சொல்லி ஹோட்டலுக்கு போய், ஃப்ரீயா பொய்ட்டு திரும்ப கம்பெனிக்குப் போனேன். அன்னிக்கு கக்கா போறதுக்காக டாக்ஸிக்கு குடுத்தது கிட்டத்தட்ட 2000 ரூவாய்க்கு மேல. அதுக்கு இது பரவால்லன்னு நினைச்சிட்டு வந்தேன்.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

Nalla Vimarsanam. Intha padam Malayalam movie velimoonga remake sir.

Madhu said...

//நீங்கல்லாம் இதுவரைக்கும் டிவில கூட பார்த்திராத “தீ” “ஐந்தாம்படை” போன்ற படங்களையெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பன்னி பாத்தவன் நானு.//

OMG.. nijamava solringa ? athai ellam partha apram kudava Sundar.C fan ah irukinga ;-);-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...