தியேட்டருக்கு
எப்படி நம்ம படத்த ரசிச்சி பாக்கனும்னு நினைச்சி போறோமோ மத்தவங்களும் அப்டித்தான் வந்துருப்பாங்கன்னு
முதல்ல நாம புரிஞ்சிக்கனும். நம்ம எஞ்ஜாய் பன்றதுக்காக அடுத்தவங்களோட மகிழ்ச்சியை குறைக்கிறது
காவாலித்தனம். தியேட்டர்ல படம் பாக்கும்போது கமெண்ட் அடிக்கிறதுங்குறதும் ஒரு கலை.
டைமிங் ரொம்ப முக்கியம். எப்ப அந்த கமெண்ட்ட பாஸ் பன்னா எல்லாரும் ரசிப்பாங்கன்னு தெரிஞ்சி
செய்யனும். ஒரு படம் ரண கொடூரமா அருத்துக்கிட்டு இருக்கும்போது கமெண்ட் அடித்து காட்சிகளை
ஓட்டும்போது நமக்கு மட்டும் இல்லாம மத்தவங்களுக்கும் அது ஜாலியா இருக்கும். அது இல்லாம
நாம நாலு பேர் ஒண்ணா சேர்ந்து போயிருக்கோம்ங்குற ஒரே காரணத்துக்கு சும்மா சும்மா மழைகாலத்துல
தவளை கத்துற மாதிரி காய் மூய்னு சிரிப்பு வராத கமெண்ட்டா அடிக்கிறது மன நலம் குன்றியவங்க
செய்யிற வேலை.
பெரும்பாலும்
எல்லா பேய் படங்களுக்கும் இந்த வேலை நம்மூர்ல நடக்கும். பேய் வர்ற மாதிரி காமிச்சாலே
இங்க இவனுங்க வித்யாசமான சவுண்ட குடுக்க ஆரம்பிச்சிருவானுங்க. பயப்படுறதுக்குதான் பேய்
படங்களுக்கு போறோம். இந்த நாயிங்க அதயே கெடுத்து விட்டுருதுங்க. சனிக்கிழமை சங்கம்
சினிமாஸ்ல இந்தப் படத்துக்கு போனோம். அதிகபட்சம் 12 வது படிக்கும் ஒரு ஆறு ஏழு நாதாரிங்க
எங்களுக்கு பின் வரிசையில உக்காந்துகிட்டு கமெண்ட் அடிக்கிறேன்குற பேர்ல கத்தி போட்டுக்கிட்டு
இருந்தாய்ங்க. “கொஞ்சம் அமைதியா பாருங்க பாஸ்”
ன்னா “தியேட்டர்ல எஞ்சாய் பன்னத்தான பாஸ் வந்துருக்கோம்” ன்னுச்சி ஒரு நாயி. த்தா மத்தவன்லாம்
உன் வாயப் பாக்க வந்துருக்காய்களா. எந்திரிச்சி சப்புன்னு ஒருத்தனுக்கு கன்னத்துல விடலாம்
போல இருந்துச்சி. ஆனா அந்த ஏரியா நம்ம கண்ட்ரோல்ல இல்லாததால முறுக்கிட்டு இருந்த என்னோட
நரம்ப, கூல்டவுன் பன்னி படம் பாத்துட்டு வந்தேன்.
Conjuring
1 பெரும்பாலும் எல்லாரும் பாத்துருப்பாங்க. அந்தப் படத்தோட தாக்கத்தால சென்னையில கிட்டத்தட்ட
இந்த weekend எல்லா தியேட்டர்கள்லயும் Conjuring 2 க்கு நல்ல வரவேற்பு. அரங்கு நிறைந்த
காட்சிகளா ஓடுது. சுந்தர்.சி க்கு காமெடிப்படங்கள் மாதிரி James Wan க்கு பேய் படங்கள்.
ஒரு வீட்ட மட்டும் புடிச்சி குடுத்துட்டா இன்னும் ஒரு 10 படம் கூட எடுப்பாரு போல.
Insidious
1, Insidious 2, Conjuring 1, Conjuring 2 ன்னு ஒரே பேய் படமா எடுக்குறதால எது எதோட
லிங்குன்னே கன்பீஸ் ஆகுற ஸ்டேஜ்ல இருக்கேன். இதுக்கிடையில Annabelle, Insidious 3 ன்னு ரெண்டு துயர
சம்பவத்த பாத்த கதைய ஏற்கனவே சொல்லிருக்கேன்.
வழக்கம்போல
ஒரு நான்கைந்து குழந்தைகளோட ஒரு அம்மா ஒரு வீட்டுல குடியேறுறாங்க. ரெண்டு மூணு நாள்ல
பேய் வேலையக் காட்ட ஆரம்பிக்கிது. அப்டியே கொஞ்ச நாள்ல அந்த குழந்தைகள்ல ஒரு பொண்ண
புடிச்சிருது. அதுக்கப்புறம் அந்தப் பொண்ணு அப்பப்ப ஆம்பள வாய்ஸ்ல பேச ஆரம்பிக்கிது.
“இது என் வீடு… இங்க யாரும் இருக்கக்கூடாது” ன்னு எல்லாரையும் பயமுறுத்துது.
பெரும்பாலும்
ராத்திரியில் நடக்குற காட்சிகள் தான். கேமரா செம. இரவு நேர காட்சிகள்ல ரொம்ப ரொம்ப
கம்மியான வெளிச்சத்துல படம் புடிச்சிருக்காங்க. அந்த காட்சிகள்ல தெரியிற இருட்டே ஒரு
மாதிரி பயத்த கிளப்பி விடுது. அந்தக் குழந்தைக்கு பேய் முத்திப் போயிட, அதன் பிறகு
எண்ட்ரி ஆகுறாங்க நம்ம பேய் ஓட்டும் தம்பதிகள். பேய் இருக்கா இல்லையான்னு இவங்க கண்டுபுடிச்சி
சொன்னாதான் அதுக்கப்புறம் சர்ச் மூலமா Exorcism பன்னுவாங்க.
பேயோட்டும்
தம்பதிகள் அந்த வீட்டுக்கு வந்தோன்ன பேய கூப்டு வச்சி ஒரு இண்டர்வியூ எடுக்குறாய்ங்க.
அடேய் என்னடா டிவி ப்ரோகிராமுக்கு பேட்டி எடுக்குற மாதிரி எடுக்குறீங்க.
ஹீரோ: “நீங்க யாரு?”
பேய்: “என் பேரு பில்”
ஹீரோ: “நீங்க எப்டி செத்தீங்க?
பேய்:
“செத்தத கூடவா மறப்பாங்க.. அந்த முக்குல ஒரு சேர் இருக்குல்ல… அதுல உக்காந்தபடியே
வாயப் பொளந்துட்டேன்”
ஹீரோ: “ஆமா இப்ப எதுக்கு இங்க இருக்கீங்க?”
பேய்: “அட செத்து ரொம்ப நாள் ஆச்சேன்னு என்னோட குழந்தை
குட்டிங்கள பாக்க வந்தேன்… ஆன அவங்க யாரும் இங்க இல்லை”
ஹீரோ: அதான் யாரும் இல்லையே மூடிகிட்டு கெளம்ப
வேண்டியது தானே? இங்க ஏன் இவங்கள பயமுறுத்துற?”
பேய்: அவங்க பயப்படுறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதான்
இங்கயே இருக்கேன்
அடக்
கெழட்டுப் பேயே… செத்ததுக்கப்புறமும் உனக்கு குஜால்ஸ் கேக்குதான்னு அந்தப் பேய திட்டிக்கிட்டு
இருப்போம். ஆனா கடைசில ஒரு செண்டிமெண்ட போட்டாய்ங்க பாருங்க.
ஹீரோயினுக்கு
பேய்களோட communicate பன்ற ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கும். அதவச்சி அந்த கிழவன் பேய போய்
பாத்தா, அது பாவமா ஒரு கதை சொல்லுது “அட அந்தக் கொடுமைய ஏம்மா கேக்குற.. நா என் குழந்தைகள
பாக்க தான் வந்தேன். அவங்க இல்லைன்னதும் நா போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா ஒரு பெரிய
பேய் என்னப் போக விட மாட்டேங்குதும்மா.. வயசான காலத்துல என்னால முடியலம்மா” ன்னு கதறுது.
நானே கண்ணுல ஜலம் வச்சுண்டேன்.
அப்புறம்
பெரிய கிழவி பேய் ஒண்ணு சார்ஜ் எடுத்து எல்லாரையும் வாட்டி வதைக்கிது. ஒண்ணுமே பன்ன
முடியல. அப்ப ஹீரொயின் ஒண்ணு சொல்லுவா பாருங்க. “பேயோட பேர கண்டுபுடிச்சா அத நம்ம கண்ட்ரோல்
பன்னிடலாம்” ன்னு. ”ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்புடிம்மா ஆட்டோ ஓடும்? ஏம்மா இதெல்லாம்
ஒரு பேயோட்டுற டெக்கினிக்காம்மா… என்னம்மா நீங்க இப்புடி இருக்கீங்களேம்மா” ன்னு நமக்குத்
தோணும்.
படம்
Conjuring 1 க்கு கொஞ்சம் கூட சளைச்சது இல்லை. அதே அளவு நம்மள பயமுறுத்திருக்காங்க.
James Wan கிட்ட உள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா நான் ஸ்டாப்பா பயமுறுத்திட்டே இருப்பாரு.
இடையில கதைய சொல்றேங்குற பேர்ல கொஞ்ச நேரம் மொக்கை போடுற வேலையே இருக்காது.
அந்த
பேயால அஃபெக்ட் ஆகுற ஹீரோயின் பாப்பா முகத்த எங்கயோ பாத்த மாதிரி எனக்கு ஒரு ஃபீல்.
ஒரு சாயல்ல ஹாரி பாட்டர் “ஹெர்மாய்னி” மாதிரி தெரிஞ்சிது. ஆனாலும் இதவிட பழக்கப்பட்ட
இன்னொரு நாடா இருக்கேன்னு யோசிட்டே இருந்தேன். கண்டுபுடிச்சிட்டேன். அந்த ஹேர் ஸ்டைலும்,
ஃபேஸ்கட்டும் பாக்குறப்போ அப்டியே ரோஹித் ஷர்மா வொய்ஃப் மாதிரியே இருக்கு அந்தப் புள்ள.
படத்துல பேயக்காட்டி பயமுறுத்துனப்பல்லாம் கல்லு மாதிரி இருந்த நான், கடைசில படத்தோட கேரக்டர்களையும், அந்த கதை உண்மையா நடந்தப்ப இருந்த கேரக்டர்களையும், உண்மையான பேய் பிடிச்ச குழந்தை பேசுன டேப்பையும் போட்டப்போ டர்ர்ராயிட்டேன்.
மொத்தத்துல
Conjuring 2 ஏமாத்தல. நல்லா பயமுறுத்திருக்காங்க. ஆனா இந்த காவாலிப்பயலுக தொல்லை இல்லாத
தியேட்டர்ல பாருங்க. அப்டி இல்லைன்னா ரெண்டு மாசம் கழிச்சி டவுன்லோட் பன்னியே பாருங்க.
13 comments:
//ஆனா அந்த ஏரியா நம்ம கண்ட்ரோல்ல இல்லாததால முறுக்கிட்டு இருந்த என்னோட நரம்ப, கூல்டவுன் பன்னி படம் பாத்துட்டு வந்தேன்.// :))))))
As usual ROFL review!:D
Nice review. I had the "same blood" feeling about telling name of the ghost in the end :D :D :D
Pei interview sema ;-) ROFL :-)
பேய் பேர் தெரிஞ்சா அதை விரட்டி விடலாம், எவ்வளவு மொக்கையான படம், இதுக்கு இவ்ல பில்டப்!! அது சரி, பேய் கடிக்குமா??
Pei unmaiya?
இங்க தென்காசி PSS தியேட்டர்லயேயும் ஒரு 10 நாதாரி பசங்க பேய் படம் பார்கிற TEMPO-ஐ குறைச்சு மூடையும் கெடுத்து நிம்மதியா படம் பார்க்க விடவில்லை
Pei unmaiya?
இந்தப் படத்தின் இறுதியில் இது உண்மை சம்பவம் என்றே போடுகின்றனர். Conjuring 1 ம் அப்படித்தான்.
மதன் எழுதிய ”மனிதனும் மர்மங்களும்” புத்தகத்தில் இதுபோன்ற பல சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார். பேய் இருக்கிறது என்று அடித்துக் கூற முடியாவிட்டாலும் அறிவியலால் விளக்க முடியாத பல சம்பவங்கள் உலகில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
இதே மாதிரிதான் தலை, நம்ம ஃபீலிங் பன்னி படம் பார்த்துட்டு இருக்குரப்ப
ஆய் ,ஊய்னு ஊளையிட்டு கெடுத்துடுவாங்கே . . .
இது மாதிரி படம் பார்க்குரதுன ஏதாவது மல்டிபெக்ஸ் சினிமாவா பார்த்து போயிடுனும். அப்பதான் இது மாதிரி பிளடி பெக்கர்ஸ் வர மாட்டாங்கே. . . .
ஆனா அப்படியும் சில தருதலைகள் கேள்ஃப் பிரண்ட்டு கூடவத்துட்ட்டு பில்டப் பண்ணுமேனு செய்யுங்கள். . . .
மொத்தத்துல விமர்சனம் சூப்பர். . . .
Congratulations Muthusiva! Your Movie review is Published in Tamil Oneindia.Com. Hats off Buddy. Neenga KAVIPERARASU A.R. RAHMAN'ye Minjitinga
http://tamil.filmibeat.com/hollywood/conjuring-2-an-audience-review-040536.html
muthusiva aanjaneyar madhiri, avaroda balam avarukke theriyadhu.
Ha ha ha. Semma review.
நானே கண்ணுள ஜலம் வச்சுண்டேன் . சிரிப்ப அடக்கமுடியள.
Post a Comment