Tuesday, July 5, 2016

கவுண்டரின் GAME OF THRONES!!!


Share/Bookmark


இடம்: எமலோகம்

எமலோகம் முழுவதும் கூட்டம் ரொம்பி வழியிது

செந்தில் :ஏய் அடிச்சிக்காம வரிசையில நில்லுங்க….. ஒவ்வொருத்தராத்தான் உள்ள விட முடியிங்.. பொறுமையா இருங்க… பொறுமையா இருங்க” ன்னு கூட்டத்தக் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கார்.
திடீர்னு  
          ”அண்ட சராசரங்கள் நடுங்கும் பயங்கரண்டா
          அகில லோகத்தையும் காக்கும் எமண்டா…“
ங்குற சத்தம் கேக்க, கவுண்டர் கையில ”கதை” யுடன் வந்து நிக்கிறாரு.

செந்தில்: ”ஏய்.. ப்ரபு வந்துட்டாரு… எல்லாரும் அமைதியா இருங்க…”
இதைக் கேட்ட உடன் கூட்டத்தில் இருந்த அனைவரும் பதறி அடிச்சி  ஒடுறாங்க

செந்தில் : டேய்… பயப்படாதீங்கப்பா.. அவர் ஒண்ணும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ப்ரபு இல்லை.. எங்க எம தர்மப் ப்ரபு… 
என்று சொல்லிக் சமாதானப்படுத்த,  கவுண்டர் பக்கத்தில் வருகிறார்.

கவுண்டர் : சீனா கூனா… என்ன இன்று எமலோகத்தில் கூட்டம் அலைமோதுகிறது? ஊருக்குள்ள பூகம்பம் எதுவும் வந்துருச்சா?

செந்தில் : ப்ரபு… இதெல்லாம் பூகம்பத்தால் இறந்த கூட்டம் இல்லை. இவங்கல்லாம் Game of Thrones சீரியல்ல செத்துப் போனவங்க.

கவுண்டர் : சீனா கூனா… என்ன பிதற்றுகிறாய்… ஒரு ஊரையே அழைத்து வந்து ஒரு சீரியலில் இறந்தவர்கள் என்கிறாய்…

செந்தில் : ப்ரபோ… நீங்க ரம்பையுடன் உலாவச் சென்றிருந்த இந்த ஆறு வருஷத்தில் நடந்த விபரீதம் இது.

கவுண்டர் : (கோவமாக) நான் இல்லாத சமயத்தில் இப்படி ஆளாளுக்கு சட்டத்தை கையில் எடுத்தால் என்ன செய்வது? அந்த இயக்குனரை இப்போதே என் கதையால் நசுக்கி விடுகிறேன்…

செந்தில் : (மெதுவாக கவுண்டர் காதுக்குள்) ப்ரபு கோபப்படாதீர்கள்… இப்படி எதாவது நடந்தால் நமக்கும்  கொஞ்சம் வேலை கம்மிதானே.. கண்டுக்காதீங்க..

கவுண்டர்: அப்டீங்குறியா.. சரி உடு…

செந்தில் : ப்ரபு.. நீங்கள் போய் உங்கள் இருக்கையில் அமருங்கள் .. நான் ஒவ்வொருவராக அனுப்புகிறேன்.


கவுண்டர் அவரது சிம்மாசனத்தில் சென்று அமர்கிறார்.



முதல்ல வயிறு வழியா கிழிஞ்சி, தொங்குற குடல கையில புடிச்சிக்கிட்டே ரத்தம் சொட்ட சொட்ட ஒருத்தர் வர்றாரு…

கவுண்டர் : சீனா கூனா.. யார் இவன்? கர்பமான காண்டாமிருகத்துக்கு வயித்துல ஆப்ரேசன் பன்ன மாதிரி வந்து நிக்கிறான்.

செந்தில் : அவருதான் ராபர்ட் பெராத்தியன் ப்ரபு

கவுண்டர் : (பெராத்தியன பாத்து ) ஏண்டா வயித்த புடிச்சிக்கிட்டு நிக்கிற?

பெராத்தியன்: வயித்துல பன்னி கடிச்சிருச்சிங்க

கவுண்டர் : (கோவமாக) சீனா கூனா.. என்னிடம் சொல்லாமல் எப்போது நீ பூலோகம் சென்றாய்?!!

செந்தில்: ப்ரபு… அயல்நாட்டு ஆட்கள் முன்னால் என்னை அசிங்கப்படுத்தாதீர்கள்… அவர் சொல்வது உண்மையான பன்றியை

கவுண்டர் : தோம் தாத்தா… பன்னி கடிக்கிற வரைக்கும் என்னடா  பன்னிக்கிட்டு இருந்த?

ரா.பெராத்தியன் : நா ஒரு பெரிய ராஜா ப்ரபு. காட்டுக்கு வேட்டைக்கு போயிருந்தேன். போன இடத்துலதான் பன்னி கடிச்சிருச்சி.

கவுண்டர் : ஏண்டா… ஒரு பன்னி வந்து உன் வயித்துல கொத்து பரோட்டா போட்டு போயிருக்கு.. நீ இன்னும் வெக்கப்படாம உன்னை ராஜான்னு வேற சொல்லிக்கிட்டு திரியிற… சீனா கூனா… இவனை நரகத்திற்கு அனுப்பி விடு. இன்னொரு முறை இவன் வாயால் இவனை ராஜா எனக் கூறிக்கொண்டால் கொதிக்கும் எண்ணையை ஒரு கரண்டி மொண்டு வாய்க்குள் ஊற்றச்சொல்

செந்தில் : அப்படியே ஆகட்டும் ப்ரபு



அடுத்து தலையில்லாத ஒரு முண்டம் ஒண்ணு கவுண்டர் கிட்ட போகுது:

கவுண்டர் : இய்ய்ய்… சீனா கூனா… என்ன இவன் மண்டை இல்லாமல் என் முன் வந்து நிற்கிறான்… யார் இவன்?

செந்தில் : அவர்தான் Ned stark.

கவுண்டர் : நெட் ஸ்டார்க்கா இருந்தா என்ன டோனி ஸ்டார்க்கா இருந்தா என்ன… அதுக்குண்ணு மண்டை இல்லாம வருவானா? போய் மண்டையோட வரச் சொல்லு.. இல்லையென்றால் இவனுக்கு எமலோகத்தில் இடம் இல்லை.

செந்தில்: ப்ரபு… அவரோட எதிரிங்க அவர் தலைய தனியா வெட்டி கம்பில மாட்டிட்டாங்க. இனிமே அதை எடுத்துட்டு வர்றது சாத்தியமில்லாத விஷயம்.

கவுண்டர் : அதுக்குன்னு எமலோகத்துல இப்புடி முண்டமா திரிஞ்சா பாக்குறவங்க நம்மள என்ன நினைப்பாங்க…

செந்தில் : பாவம் ப்ரபு... மிகவும் நல்லவர்.. எதிரிகளின் சூழ்ச்சியால் இப்படி ஆகிவிட்டார். கொஞ்சம் கருணை காட்டுங்கள்

கவுண்டர்: சரி… நீ இவ்வளவு சொல்வதால் விடுகிறேன். இவனை சொர்க்கத்துக்கு அனுப்பி விடு.

என்றதும் நெட் ஸ்டார்க் கையெடுத்து கும்பிட்டு நடந்து போறார். கொஞ்ச தூரம் போனதும், போறவன திரும்ப கூப்பிட்ட்டு

கவுண்டர் : டேய் தம்பி நெட் ஸ்டார்க்கு… எமலோகத்துல டீயெல்லாம் குடுப்பாங்களே.. எப்புடி வாங்கி குடிப்ப?

நெட் ஸ்டார்க் இரண்டு கைகளால் எதோ சைகை காமிக்கிறார்.

கவுண்டர் : அக்காங்…. அதெல்லாம் சரியா வராது. ஒரு பெரிய புனல் ah எடுத்து கழுத்து ஓட்டையில சொருகிக்க.. டீ வந்தா அதுல ஊத்திர சொல்றேன்… சரியா… போம்மா…

என்றதும் நெட் ஸ்டார்க் இன்னொரு வணக்கத்தை வச்சிட்டு கிளம்புறார். 



அடுத்து ஒருத்தர் கொடூரமான முகத்தோட வர்றாரு.

கவுண்டர் : இஹ்ஹ்ஹ்ஹ்… என்ன பாதி வெந்து பாதி வேகாத மூஞ்சோட வந்து நிக்கிறான்… எரிக்கும்போது பாதில எந்திரிச்சி இங்க ஓடி வந்துட்டானா…

செந்தில் : ப்ரபு அவர் தான் க்ளகேன்… சுருக்கமா ஹவுண்டுன்னு கூப்டுவாங்க.

கவுண்டர் : இவன ஹவுண்டுன்னு வேணா கூப்டுக்கட்டும் இல்ல UK பவுண்டுன்னு வேணா கூப்டுக்கட்டும்… இது என்னா மூஞ்சி… இந்த மூஞ்ச வச்சிக்கிட்டு என்ன தைரியத்துல இவன் என்னப் பாக்க வந்தான்.

செந்தில் : அவருக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு தீ விபத்துல மூஞ்சி இப்டி ஆயிருச்சி ப்ரபு

கவுண்டர் : ஓ.. சின்ன வயசுலருந்தே இவன் இப்புடித்தான் திரியிறானா? இப்ப தெரியிது ஏன் இவ்வளவு பேர் செத்துருக்கானுங்கன்னு…

செந்தில் : இவர சொர்க்கத்துக்கு அனுப்பவா நரகத்துக்கு அனுப்பவா?

கவுண்டர் : எங்கும் அனுப்ப வேண்டாம்.. அவன திரும்ப Game of Thrones சீரியலுக்கே அனுப்பி விடு

செந்தில் : (ஒரு ஜெர்க் அடிச்சி) ப்ரபு.. என்ன சொல்றீங்க… திருப்பி அனுப்புறதா? 

கவுண்டர்: ஆமாடா சீனா கூனா… இவன் மூஞ்ச நல்லா ஒருதடவப் பாருடா… காலங்காத்தால எழுந்து இவன் மூஞ்ச பாத்துட்டு நா தொழிலுக்கு கிளம்புனா அந்த நாள் விளங்குமா.? அதுக்கு தான் சொல்றேன்.. அனுப்பிரு

செந்தில் : இவன் ஆயுள் முடிந்து விட்டதே ப்ரபு…

கவுண்டர் : டேய்… ஆயில் முடிஞ்சா இன்னும் ரெண்டு லிட்டர் வாங்கி ஊத்தி அனுப்புடா… சீனாக்கூனா… வரவர நீ என் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசிக்கொண்டிருக்கிறாய். சொல்வதைச் செய்

செந்தில் : அப்படியே ஆகட்டும் ப்ரபு… (ஹவுண்டைப் பார்த்து) நீ திரும்ப Game of Thrones serial க்கே போகலாம்
ஹவுண்ட் நக்கலா சிரிச்சிக்கிட்டே அங்கருந்து அங்கருந்து நகர

கவுண்டர் : டேய் வெந்த மூஞ்சா…. என்னடா சிரிப்பு

ஹவுண்ட் : இல்லை பாதி மூஞ்சோட வந்த என்னையே பாக்க முடியலன்னு திருப்பி அனுப்புறீங்களே… அடுத்து ஒருத்தன் மூஞ்சே இல்லாம வந்துகிட்டு இருக்கான்.. அவன என்ன பன்னப்போறீங்களோன்னு நினைச்சி சிரிச்சேன்ன்னு சொல்லிட்டு ஹவுண்ட் அந்த இடத்த விட்டு நகர

ப்ரின்ஸ் ஓப்ரைன் அடுத்ததாக கவுண்டரை நோக்கிச் சென்றார்….

(அடுத்த பதிவில் தொடரும்)




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Anonymous said...

Hound is back from dead!!

Anonymous said...

sema post!! post next one soon

Unknown said...

Sema Boss...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...