Monday, August 8, 2016

ஸ்பூன்லிங்!!


Share/Bookmark
அண்டா கா கசம்அபூகா குஹூம் திறந்திடு சீசேன்னு புரட்சித் தலைவர் மந்திரத்த சொன்னதுமே குகைக் கதவு படார்னு தொறக்குமே ஞாபகம் இருக்கா? அந்த  மாதிரி ஒரு பொருளைத் தொடாமயே அந்தப் பொருள் மேல நாம இயக்கத்த உண்டு பன்னா அதுக்குப் பேர்தான் Psychokinesis ன்னு சொல்றான் வெள்ளைக்காரன். தொடாம எப்டிப்பா ஒரு பொருளை நகர்த்த முடியும்? உண்மையிலயே அப்படி செய்ய வாய்ப்பு இருக்கா? அறிவியல் பூர்வமா இது உண்மையா?  இப்படி பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். ”நாங்க ஏண்டா நடுராத்திரிக்கு சுடுகாட்டுக்குப் போறோம். இந்த சைட்டுக்கு வந்தது ஒரு குத்தமாடான்னு தானே நினைக்கிறீங்க. எல்லாம் ஒரு காரணமாத்தான்.

தமிழ்ப்படங்களை எடுத்துக்கிட்டு இந்த எஃபெக்ட்டுக்கு உதாரணமா காமிச்சா கொஞ்சம் காமெடியா இருக்கும். அதனால நாம X-MEN படத்த எடுத்துக்குவோம். அதுல வர்ற ஹெல்மெட் தாத்தா மெக்னீடோ இருக்காரே. அவருதான் இந்த Psychokinesis க்கு சிறந்த உதாரணம். இரும்பை எந்த மாதிரியாவும் வளைக்ககவும் கண்ட்ரோல் பன்னவும் கூடியவரு. அந்த பவர் இருந்தா ஒருத்தன் என்னென்னா அட்ராசிட்டீஸ்லாம் பன்னுவாங்குறதுக்கு மெக்னீடோ ஒரு உதாரணம்.

ஃபுல் ஸ்பீடுல வந்துகிட்டு இருக்க ஒரு கார, தூரத்துலருந்து ட்ராஃபிக் கான்ஸ்டபிள் மாதிரி சைகை காமிச்சே அப்பளம் மாதிரி நொறுக்கி தூக்கி வீசுவாரு. ஒரு காட்சில மெக்னீடோவ சுத்தி போலீஸ் Gun ன்னோட நின்னுக்கிட்டு hands up ன்னுவாய்ங்க. மெக்னீடோ கைய தூக்குவாப்ள. அவர் கைதூக்குற எஃபெக்ட்ல கூடவே நாலஞ்சி போலீஸ் car உம் மேல போயி தொங்கிட்டு இருக்கும். இதெல்லாம் பரவால்ல. மெக்னீடோவ புடிச்சி ஜெயில்ல போட்டுருப்பாய்ங்க. கம்பி போட்ட ஜெயில்ல போட்டா வளைச்சிக்கிட்டு வெளில வந்துருவாப்ளன்னு இரும்பு கொஞ்சம் கூட இல்லாத முழுசும் ப்ளாஸ்டிக் மற்றும் கண்ணாடியால செய்யப்பட்ட ரூம்ல அடைச்சி வச்சிருப்பாய்ங்க.

அந்த சமயம்னு ஒருத்தன் மெக்னீடோவுக்கு சாப்பாடு கொண்டு போவான். சாப்பாட்ட வாங்குனவரு, மூக்கால என்னத்தையோ உறுஞ்சுவாரு. நம்ம கூட சாப்பாடத்தான் மோப்பம் புடிக்கிறார்னு நினைப்போம். ஆனா ரெண்டு உறுஞ்சி உறுஞ்சிட்டு சிரிச்சிக்கிட்டே  ”உன்னோட ரத்தத்துல இரும்பு சத்து அதிகமா இருக்கு ந்ன்னு சொல்லுவாப்ள. அடுத்து நடக்குறது தான் கொடூரத்தின் உச்சம். அவரோட பவர வச்சி, அவனோட ரத்தத்துல கலந்துருக்க இரும்பு சத்தை மட்டும் உடம்பு வழியா ஓட்டை போட்டு  வெளில எடுத்து அத ஒரு சின்ன பால்ரஸ் மாதிரி உருட்டி அந்த சின்ன உருண்டைய வச்சே ஜெயில உடைச்சி, அதே சின்ன உருண்டைய தட்டையான ப்ளேட்டா மாத்தி அதுலயே ஏறி பறந்து வேற போயிருவாரு.

அடங்கப்பா.. ஓட்டுனது போதும் ரீலு அந்துபோச்சுடான்னு தோணுதுல்ல. ஆனா எப்டியெல்லாம் யோசிக்கிறாய்ங்கன்னு நினைக்கும்போது கண்ண கட்டத்தான் செய்யிது. சரி இப்ப இந்த Psychokinesis ங்குற talent உண்மையிலயே மனிதர்கள்கிட்ட இருக்கா?

கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது வருஷங்களுக்கு முன்னால இருந்தே இந்த டேடல்ண்ட் தங்களுக்கு இருந்ததாக ஒருசிலர் சொல்லிக்கிட்டு இருந்துருக்காங்க. அதுல Angelique Cottin ன்னு ஒரு புள்ள. பொருட்களை தொடாமயே சில எலெக்ட்ரிக் வேவ்ஸ உண்டாக்கி chair , கத்திரிக்கோல்னு ஒரு சில பொருட்கள நகர்த்துமாம். ஆனா அந்த பொண்ணு செஞ்ச வித்தையெல்லாம் நேர்ல பாத்த ஒரு எழுத்தாளர்அந்தப் புள்ளை செம ஃப்ராடுப்பான்னு சொல்லிட்டாரு.

அந்தப் புள்ளைக்கு அப்புறம் ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஒவ்வொருத்தர் தனக்கு இந்த மாதிரியான ஒரு திறமை இருப்பதா வெளிக்காட்டிக்கிட்டு இருந்துருக்காங்க. பெரும்பாலும் இந்த மாதிரி வித்தைகள மேஜிக் ஷோக்கள்ல தான் இறக்குவானுங்க. மக்கள் மத்தியிலும் கணிசமான அளவுல இந்தத் திறமை மனிதர்களுக்கு இருக்க வாய்ப்பு இருப்பதாகவே நம்புனாங்க.

அந்த மாதிரி இருக்க,  1970 கள்ல ஸ்டேஜ்ல ஸ்பூன வளைக்கிறது ஒரு ஃபேமஸான ஒரு நிகழ்ச்சியா பார்க்கப்பட்டது. அதாவது கையில ஒரு ஸ்பூன புடிச்சிக்கிட்டு, அந்த ஸ்பூனையே குறு குறுன்னு உத்துப் பாத்து நேரா இருக்க ஸ்பூன வளைக்கிறது.  அதத்தான் நம்ம செந்தில் பாஷையில ஸ்பூன்லிங்னு சொல்றோம்அதுல யூரி கெல்லர்ங்குறவன் ஸ்பூன் வளைக்கிறதுலயும், சாவிய வளைக்கிறதுலயும்ம் கில்லாடி. ஸ்பூன் வளைச்சே ஃபேமஸ் ஆனவன் கூட.

இந்த மாதிரி அவன் கண்ணாலயே அத வளைக்கிறான், இவன் பாக்காமலேயே இத வளைக்கிறாங்குற நியூஸூ அமெரிக்க ராணுவம் வரைக்கும் போயிருச்சி. அவய்ங்களுக்கு ஒரு மாஸ்டர் ப்ளான் தோணிருக்கு. அதாவது உண்மையிலேயே அப்படி ஒரு டேலண்ட் மனிதர்களுக்குள்ள இருக்குன்னா அவனுங்கள புடிச்சிக்கிட்டு வந்து மிலிட்டரி ஆப்ரேஷன்களுக்கு யூஸ் பன்னிக்கலாம்னு. அதாவது அவனுங்கள வச்சி எதிரி நாட்டு போர்க்கருவிகல மெக்கானிக்கலா ஜாம் பன்னிரலாம்ங்குறதுதான் அவனுங்க ப்ளான். அதாவது நோகாம நோம்பு கும்புட பாத்துருக்கானுங்க.

அதுக்காக 1984  United States National Academy of Sciences கிட்ட அமெரிக்க ராணுவம் சார்பா இந்த Psychokinesis  பற்றிய உண்மைத் தன்மைய ஆராய்ஞ்சி ஒரு ரிப்போர்ட் கொடுக்க சொல்லி கேட்டுருக்கானுங்க. உடனே அவனுங்களும் இதப்பற்றி தீவிரமா விசாரிச்சி, இந்த டேலண்ட் உண்மையிலேயே இருக்கான்னு கண்டு புடிக்க ஒரு தனி team ah ரெடி பண்ணிருக்காய்ங்க. ஒரு வருஷம் அந்த டீம் ராப்பகலா உழைச்சி அமெரிக்க ராணுவத்துக்கு ஒரு ரிப்போர்ட் submit பன்னிருக்கானுங்க.

அமெரிக்க ராணுவம் சார்பா அந்த ரிப்போர்ட்ட ரொம்ப ஆர்வமா ஓப்பன் பன்னி பாத்துருக்கானுங்க. ஓப்பன் பன்னதும் முதல் பக்கத்துல

வக்காளி உங்க பேச்ச கேட்டுக்கிட்டு மூணு வருசமா இதப்பத்தி ஆராய்ச்சி பன்ன எங்க புத்தியல்லாம் செருப்பாலயே அடிச்சிக்கனும்டா ன்னு எழுதிருந்துருக்கு.

அவ்வளவுதான். அதுக்கு மேல அந்த ரிப்போர்ட்ட படிக்காம அப்டியே மூடி வச்சிட்டு இந்த Psychokinesis  பற்றிய நினைப்பையும் மூட்டை கட்டி வச்சிட்டு ராணுவம் ரெகுலரா போக ஆரம்பிச்சிருச்சி. அதாவது இதுவரைக்குமே Psychokinesis  ங்குற special talent உண்மையா இருக்கு அப்டிங்குறதுக்கு எந்த scientific explanations உம் இல்லை. உலகத்துல நடக்குற நிறைய மர்மமான விஷயங்களுக்கு இன்னும் scientific explanations இல்லைங்குறது வாஸ்தவம்தான். அதேபோல இதுவும் இன்னும் கண்டறிப்படாத ஒரு science ah இருக்கலாம்னு உங்க மனசுல தோணலாம்.

ஆனா அது தான் இல்லை. வாங்க இந்த ஸ்பூன வளைக்கிறவன் கதையப் பாப்போம். ஏற்கனவே சொன்ன மாதிரி 1970 கள்ல யூரி கெல்லங்குறவன் நிறைய stage show க்கள்ல இந்த மாதிரி ஸ்பூன வளைச்சி ஃபேமஸ் ஆனவன். ஆரம்ப காலத்துலஎனக்கு இது கடவுள் கொடுத்த சக்தி, உங்களுக்கெல்லாம் இல்லை புத்தின்னு அடுக்கு மொழியில எக்கச்சக்க பில்டப்ப குடுத்துக்கிட்டு திரிஞ்சிருக்கான்.  

சரி இவன செக் பன்னலாம்னு ஒரு சயிண்டிஸ்டு இவன கூப்டு

தம்பி எல்லா ஸ்பூனயும் வளைப்பியாப்பா?”

என்ன சார் இப்புடி கேட்டுட்டீங்க இங்க பாருங்க இதெல்லாம் நா வளைச்ச ஸ்பூன் தான் ன்னு ஒரு அம்பது ஸ்பூன எடுத்து காமிச்சிருக்கான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த ஸ்பூன வளைச்சிக்காட்டு ன்னு அவர் ஒரு ரெண்டு ஸ்பூன அவன்கிட்ட குடுத்துருக்காரு. யூரி கெல்லரும் ரொம்ப நேரமா அந்த ஸ்பூன உத்து உத்து பாத்து வளைக்க ட்ரை பன்னிருக்கான். ஆனா கடைசி வரைக்கும் எதுவுமே நடக்கல.

அப்பதான் அந்த சயிண்டிஸ்ட் யூரி கெல்லரப் மேலயும் கீழயும் ஏற இறங்க பாத்துட்டுமியூசிக்கோட வந்தாதான் நீ தமிழு….இல்லைன்னா நீ டுமீலுன்னு சொல்லி துப்பிட்டு பொய்ட்டாரு. ஆனா அதுக்கெல்லாம் எங்க சிங்கம் அஞ்சல. இதுவரைக்கும் ஸ்பூன வளைச்சிக்கிட்டு தான் இருக்காரு.

சரி கண்ணால் பார்த்தே ஒரு பொருளை நகர்த்தவோ வளைக்கவோ முடியும்னு சயிண்டிஃபிக்கா எந்த நிரூபனமும் இல்லை. அந்த திறமை எங்ககிட்ட இருக்குன்னு சொல்லிக்கிற எந்த நபரும் சயிண்டிஸ்டுங்க சொல்ற இடத்துல, அவங்க கொடுக்குற பொருளை வச்சி அவங்களோட திறமைய நிரூபிக்க தயாராவும் இல்லை. இதுவரைக்கும் உலக வரலாற்றுல 40க்கும் மேற்பட்ட பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருக்கு. அதாவது நாங்க சொல்ற இடத்துல உங்களோட Psychokinesis  திறமைய நிரூபிச்சா உங்களுக்கு இவ்வளவு பரிசுத்தொகை நாங்க தர்றோம்னு நிறைய தனி நபர்களும் நிறைய குழுமங்களும் அறிவிச்சிருக்காங்க. ஆனா இதுவரை அவர்கள் அறிவித்த எந்த பரிசுத் தொகையும் எந்த நபராலயும் வெல்லப்படவில்லை. பரிசுத்தொகை விபரங்களுக்கு இங்கே க்ளிக்கவும்

சயிண்டிஃபிக்காவும் முடியாது. கடவுள் கொடுத்த வரமும் இல்லை. அப்டின்னா எப்படி ஸ்பூனயெல்லாம் வளைக்கிறாய்ங்க? இதுக்கு நிறைய ட்ரிக்ஸ் இருக்கதா சொல்றாங்க. ஒண்ணு பார்ப்பவர்களுக்கு ஒரு optical illusion ah ஏற்படுத்தி, ஏற்கனவே நெளிந்து போயிருக்கும் ஸ்பூனை நல்ல ஸ்பூன் மாதிரி வித்யாசமான ஆங்கிள்ல காமிச்சி கொஞ்சம் கொஞ்சமா மக்கள் பார்வைக்கு அது வளையிற மாதிரி காமிக்கிறது. அப்புறம் கொஞ்சம் force லயே ஈஸியா வளையிற மெடல்ல ஸ்பெஷல் ஸ்பூன் செஞ்சி வச்சிக்கிறது. ஸ்பூன புடிச்சிருக்க ஒரு கையாலயே எக்ஸ்ட்ரா force குடுத்து வளைக்கிறதுன்னு நிறைய டெக்னிக் இருக்காம்.

பெரும்பாலும் இந்த மாதிரி இவனுங்க ஏமாத்துறது எவன் எவன் பொண்டாட்டியெல்லாம் பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும்தாண்டா கடவுள் தெரிவாறு டெக்னிக்க வச்சி தான். அதாவது நாம சொல்ல நினைக்கிறத மக்கள் மனசுல முதல்ல நினைச்சிக்க வச்சிக்கிட்டா அத வச்சே ஈஸியா illusion ah கொண்டு வந்துடலாம். அதுக்காக சில experiment lam பன்னாங்க.

அது என்ன experiment? சம்பந்தமே இல்லாம நாம ஏன் இந்த Psychokinesis பத்தி எழுதிக்கிட்டு இருக்கோம்னும் அடுத்த பதிவில் பார்ப்போம்.


அடுத்த பகுதியைப் படிக்க இங்கே க்ளிக்கவும்

பி.கு: இப்பல்லாம் அடிக்கடி அடுத்த பதிவுல பார்ப்போம்னு தொடரும்னு போடுறது உங்கள மாதிரியே எனக்கும் கடியாத்தான் இருக்கு. இருந்தாலும் சொல்ல வர்றத ஒரே பதிவுல சொல்லி முடிக்க முடியல. பதிவோட நீளம் காரணமா இந்த மாதிரி தொடரும்களை தவிர்க்க முடியல. மன்னிக்கவும் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Anonymous said...

சூப்பர்ணா புது முயற்சியா sciene பத்தில்லாம் எழுதுறீங்க

Anonymous said...

unka vazhakkamana style ah avolava kanom but nice

Madhu said...

super.. keep it up. Please write the next part ASAP

Alien said...

Interesting....
Write more like this.

Unknown said...

அமெரிக்க ராணுவம் சார்பா அந்த ரிப்போர்ட்ட ரொம்ப ஆர்வமா ஓப்பன் பன்னி பாத்துருக்கானுங்க. ஓப்பன் பன்னதும் முதல் பக்கத்துல

”வக்காளி உங்க பேச்ச கேட்டுக்கிட்டு மூணு வருசமா இதப்பத்தி ஆராய்ச்சி பன்ன எங்க புத்தியல்லாம் செருப்பாலயே அடிச்சிக்கனும்டா” ன்னு எழுதிருந்துருக்கு.

அப்பதான் அந்த சயிண்டிஸ்ட் யூரி கெல்லரப் மேலயும் கீழயும் ஏற இறங்க பாத்துட்டு ”மியூசிக்கோட வந்தாதான் நீ தமிழு….இல்லைன்னா நீ டுமீலு” ன்னு சொல்லி துப்பிட்டு பொய்ட்டாரு.

Chance ae illa...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...