ஒவ்வொரு
ஹீரோக்களுக்கும் ஒரு வட்டம் இருக்கு. அதுவும் அவங்களா போட்டுக்குறது. அவரோட படம்னா
இப்டித்தான் இருக்கும்னு மக்கள் மனசுல பதிய வைக்கிற மாதிரியான வட்டத்த ஹீரோக்களோட ஆரம்ப
கால படங்கள் போட்டு விட்டுருது. அதுக்கப்புறம் மக்களோட எதிர்பார்ப்பும் அதே வட்டத்துக்குள்ளயே
இருக்க, பின்னால அந்த ஹீரோவே வட்டத்த விட்டு வெளில வரனும்னாலும் முடியாது. விக்ரம பொறுத்த
வரையில் அந்த வட்டம் கொஞ்சம் பெருசு. அவரோட ரீ எண்ட்ரீக்கு பிறகு அவர் கொடுத்த படங்கள்
மூலமா அவர கம்ளீட் ஆக்ஷன் மசாலா ஹீரோவாகவும் நம்மால ஏத்துக்க முடியும். கதையோட ஒன்றி
நடிக்கிற சாமான்ய நடிகனாகவும் ஏத்துக்க முடியும்.
தமிழ்
சினிமாவப் பொறுத்த அளவு பாவப்பட்ட ஒரு ஹீரோன்னா அது விக்ரம்தான். போக்கிரி படத்துல
வடிவேலுவ பாத்து “இவன நீங்க கொண்டு போய் ஒரு ரெண்டாயிரம் லிட்டர் எடுத்துக்குங்க. அப்புறம்
நாங்க கொண்டு போய் ஒரு ரெண்டாயிரம் லிட்டர் எடுத்துக்குறோம்”ன்னு சொல்ற மாதிரி, இவன
நீங்க ரெண்டு வருஷம் யூஸ் பன்னிக்குங்க. நான் ரெண்டு வருஷம் யூஸ் பன்னிக்கிறேன்னு தமிழ்
சினிமா இயக்குனர்கள் அவங்களோட வித்தையை இறக்குறதுக்கு இவரத்தான் கருவியா பயன்படுத்திக்கிட்டாங்க.
விக்ரம் செஞ்ச தப்பெல்லாம் கதைக்காக தன்னை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள தயாராக
இருந்தது மட்டும் தான்.
என்னதான் மாத்தி மாத்தி கஷ்டப்பட்டாலும் கடைசில “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” ன்னு அதையும் அவரோட
ஃப்ளாப் லிஸ்டுல சேத்துருவாய்ங்க. கடைசியா இவரு ஒரு க்ளீன் ஹிட் அடிச்சி பல வருஷம்
ஆச்சு. எனக்குத் தெரிஞ்சி சாமி தான் கடைசின்னு நினைக்கிறேன். அந்நியன் கூட நிறைய பேருக்கு
திருப்தியைத் தரலைன்னு தான் சொல்லனும். இவரு கஷ்டப்பட்டு கெட்டப்பெல்லாம் மாத்தி நடிச்சி
ஒரு ஃப்ளாப் குடுத்துட்டு அடுத்து கொஞ்சம் relaxed ah ஒரு நார்மல் படம் நடிப்பாரு.
ஆனா அதுவும் டஸ் ஆயிரும். அந்நியனுக்கு அப்புறம் மஜா, ஐ க்கு அப்புறம் பத்து என்றதுக்குள்ளன்னு
காணாமப் போன படங்கள் எத்தனையோ.
அப்படி
இருக்க இப்ப வந்திருக்க இந்த இருமுகன் எந்த category? கமர்ஷியல் Aspects உம் இருக்கனும்
அதே மாதிரி விக்ரம்ங்குற ட்ரேட் மார்க்கும் படத்துல இருக்கனும்ங்குறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட
கதை தான் இருமுகன்னு சொல்லலாம். படத்தின் சுவாரஸ்யங்கள் எதையும் இங்க போட்டு உடைக்கப்போவதில்லை
என்பதால் பயப்படாம தொடர்ந்து படிக்கலாம்.
என்னை
பொறுத்த வரை கடந்த சில ஆண்டுகள்ல வெளிவந்த விக்ரம் படங்கள்ல பெஸ்டு இருமுகன் தான்.
எந்தக் காட்சியுமே அருக்கல, கடுப்பேத்தல. ஒரு சில சுமார் மற்றும் predictable காட்சிகளைத்
தவிற மற்றபடி படத்துல குறைன்னு எதுவும் இல்ல.
கதையெல்லாம்
ஒண்ணும் புதுசு இல்லை. ஏற்கனவே பழக்கப்பட்ட நாடாவ கொஞ்சம் வித்யாசமா சொருகிருக்காங்க.
மலேசியாவுல இந்தியன் எம்பஸி விநோதமான முறையில தாக்கப்பட, நாலு வருஷத்துக்கு முன்னால
சஸ்பெண்ட் செய்யப்பட்ட RAW ஏஜெண்ட் விக்ரம்ம மறுபடியும் அந்த கேஸ விசாரிக்கிறதுக்காக
கூட்டிட்டு வர்றாங்க.
விக்ரம்
ட்யூட்டில இல்லாததால, ஆஃபீசர் நித்யாமேனனுக்கு அஸிஸ்டண்டுன்னு சொல்லி ரெண்டு பேரயும்
மலேசியாவுக்கு இன்வெஸ்டிகேஷனுக்காக அனுப்பி வைக்கிறாங்க. ஆஃபீசர் நித்யா மேனன்னு சொன்னதும் ”யா யா” படத்துல டொப்பி மூக்கிய பாத்து சந்தானம் “டைனிங் டேபிள் ஹைட்டுல இருக்க உன்னையெல்லாம்
எப்புடி போலீஸ் வேலைக்கு எடுத்தாங்க” ன்னு சொல்ற டயலாக் உங்க மனசுல வந்து போச்சுன்னா
அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல.
அப்புறம்
இன்வெஸ்டிகேஷங்குற பேர்ல நாலு பேர விசாரிச்சி வில்லன நெருங்குனா, அந்த வில்லன் யாருன்னு ட்ரெயிலர்
பாத்த எல்லாருக்குமே தெரியும். வில்லன பாத்தப்புறம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி வித்தைய இறக்க,
கடைசில எப்புடியும் தர்மம்தான் வெல்லும்னு வாழ்க்கையில ஒரே ஒரு தமிழ்ப்படம் பார்த்தவனுக்கு
கூடத் தெரியும்.
படத்துக்கு
மிகப்பெரிய ப்ளஸ் ரெண்டு விஷயம். ஒண்ணு R.D.ராஜ சேகரோட cinematography. சிறப்பா இருக்கு.
ஒவ்வொரு ஃப்ரேமும் பயங்கர ரிச்சா இருக்கு. மலேசியாவ செமையா காமிச்சிருக்காங்க. செம
கலர்ஃபுல்லா இருக்கு. ”ஹெலெனா” பாட்டெல்லாம் விஷூவலா ரொம்ப நல்லா இருக்கு. ஆனா
மீசையில்லாத விக்ரம்-நயந்தாரா ஜோடிதான் சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன் மாதிரி
இருந்துச்சி.
படத்துக்கு
இன்னொரு ப்ளஸ் இன்னும் சொல்லப்போனா இன்னொரு ஹீரோன்னு கூட ஹாரிஸ் ஜெயராஜ சொல்லலாம்.
என்னடா ஒருகாலத்துல கழுவி கழுவி ஊத்துனவன் இப்படி ஏத்தி விடுறானேன்னு நினைக்க வேணாம்.
உண்மையிலயே BGM நல்லா இருக்கு. பாட்டு ஆல்பத்துல ரிலீஸ் பன்ன அதே மியூசிக் தான். ஆன தியேட்டர் சவுண்ட் எஃபெக்ட்டுக்கு செம்மையா
இருந்துச்சி. அதுவும் ”இருமுகன் சேட்டை” பாட்டு ஆரம்பிக்கிறப்போ ஒரு செகண்ட் புல்லரிச்சிருச்சி.
BGM க்காகவே இன்னொருக்கா போகலாமான்னு வேற யோசிச்சிட்டு இருக்கேன்.
ஆனந்த்
ஷங்கரோட திரைக்கதை இயக்கம் நல்லாவே இருக்கு. எங்கயுமே படம் ரொம்ப drag ஆகவும் இல்ல
ரொம்ப போர் அடிக்கவும் இல்லை. "LOVE" விக்ரமோட மூஞ்சிய க்ளோஸ் அப்ல காமிக்கும்போது
மட்டும் லைட்டா வாமிட் வர்ற ஃபீல் வந்துட்டு போச்சே தவிற மத்தபடி எதுவும் இல்லை.
காஸ்டிங்க்ல
இன்னும் கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம். குறிப்பா தம்பி ராமைய்யா கேரக்டருக்கும்,
கருணாகரன் கேரக்டருக்கும் வேற யாரையாவது போட்டுருக்கலாம். தம்பி ராமைய்யா காமெடி ரோல்ங்குறதுக்காக மலேசியா போலீஸ் ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டும் கும்கில பயந்து சாகுறது மாதிரியே இதுலயும் நடிக்க
வச்சிருக்கது சுத்தமா அந்த கேரக்டரோடவே ஒட்டல. ஆனாலும் ஒரு சில இடங்கள்ல லேசா சிரிப்ப
வரவழைக்கிறாரு. கருணாகரன் கேரக்டரும் அப்டித்தான். சீரியஸா யாரையோ எதிர்பாத்தா அங்க
கருணாகரன் நின்னுகிட்டு இருக்காப்ள.
ஒரு
சில சீரியஸ் காமெடிகளும் அங்கங்க இருக்கு. வாக்கி டாக்கிய வச்சி ரெண்டு மூணு கிலோமீட்டருக்கு மேல பேசமுடியாது. ஆனா விக்ரம்ன்ஹே கீழருந்து ஃப்ளைட்டுல பறக்குறவர்கிட்ட வாக்கில பேசுறாப்டி. இன்ஹேலர்ல டைமர் ஓடுறது சரி. அதுக்கேத்த
மாதிரி மனுஷ உடம்பும் கரெக்ட்டா 5 நிமிஷத்துல ப்ரோகிராம் பன்ன மாதிரி respond பன்றது
காமெடியா இருந்துச்சி. அதுவும் அந்த சமயத்துல இன்ஹேலர் யூஸ் பன்ன கேரக்டர்கள் திரும்பும்போது
கூட எதோ ரோபோ திரும்புற மாதிரியான மியூசிக் குடுக்குறாய்ங்க. லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.
ஆனா இது லாஜிக் பார்க்க வேண்டிய படம் இல்லை. அதனால அதப்பத்தி ரொம்ப விளாவாரியா இறங்கி
அலசத் தேவையில்லை.
விக்ரம்
வழக்கம்போல மேக்கப் போடுவதற்கு ஆறு மணி நேரம் செலவிட்டார். சாப்பிடாமால் மேக்கப் போட்டார்ன்னு
நிறைய பேர் விக்ரமோட உழைப்ப காரணமா காட்டி படத்த சப்போர்ட் பன்ன கிளம்புவாங்க. ஆனா
உண்மையிலயே படத்த காப்பாத்துறது கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு லேடி மாதிரி நடிச்ச விக்ரம்
இல்லை. சாதாரண மேக்கப்ல தாடியோட RAW ஏஜெண்ட்டா வர்ற விக்ரம் தான். ஆனா வில்லன் விக்ரம்
கேரக்டர்ல விக்ரம் நடிக்காம வேற யாராவது ஒரு பெரிய நடிகர் நடிச்சிருந்தா படம் வேற லெவல்ல
இருந்துருக்கும்.
விக்ரமைப்
பொறுத்த வரைக்கும் அவருக்கு காமெடி சுத்தமா வராது. ஆக்சன் நல்லா வரும். விக்ரம் படங்கள்ல
ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து மற்ற சமயங்கள்ல திரையில் காட்சிகளை நகர்த்துரது ரொம்ப
கஷ்டம். அதனாலதான் ஒரு நல்ல காமெடியனப் போட்டு, காமெடியும், விக்ரம வச்சி நல்ல ஆக்ஷன்
ப்ளாக்கும் கலந்து கொடுக்கும்போது படம் பிச்சிக்கிட்டு போகும். இதத்தான் ஒருகாலத்துல
ஹரியும், தரணியும் செஞ்சாங்க. அந்த காம்போசிஷன் மிஸ் ஆனபிறகுதான் விக்ரமுக்கு வெற்றியே
ரொம்ப தூரமா போயிருச்சி.
இந்தபடத்துல
கிட்டத்தட்ட விக்ரமுக்கான ஆக்ஷன் ப்ளாக்க கரெக்ட்டா குடுத்துருக்காங்க. ஆனா சரியான
காமெடியனும் காமெடி ட்ராக்கும்தான் அமையல.
ஆனாலும்
பெருசா ஒண்ணும் மோசம் போயிடல. வழக்கம்போல இணைய மக்கள் அடித்து விடுறது மாதிரி படம்
மொக்கையெல்லாம் இல்லை. கண்டிப்பா சமீபத்துல
வந்த விகரம் படங்கள்ல விஷூவல், மியூசிக், ஆக்ஷன்னு எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட்.
கண்டிப்பா பாக்கலாம். நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டர்ல பாத்தீங்கன்னா இன்னும் சிறப்பு.
6 comments:
boss, walkie talkie range fixed ellam illa.. 7km communicate panra walkie talkie kooda iruku... next time correct pannikonga...
கரெக்ட். நம்ம ஹீரோ ஹீரோயின்களுக்கு உள்ள பேராசையே இதுதான். எல்லா கேரக்டரிலும் தானே வந்து ஸ்க்ரீனை அடைக்கணும். ஹீரோ வில்லன் ரெண்டு வேஷமும் ஒரே ஆள் நடிச்சா அவங்க மோதலில் பாக்குறவனுக்கு என்ன இண்ட்ரஸ்ட் இருக்கும்? இப்படித்தான் சரஸ்வதி சபதம் படத்தில் புலவர் நாரதர் ரெண்டு ரோலிலும் சிவாஜியே வந்து இம்சை கொடுத்ததும் இன்னும் பல படங்களில் அம்மன் பக்தை ரெண்டு ரோலிலும் பல ஹீரோயின்களே வந்து டார்ச்சர் கொடுத்ததும் ஞாபகத்துக்கு வருது. நீங்க சொன்ன மாதிரி ஒரு ரோல் மட்டும் விக்ரம் பண்ணியிருந்தா படம் ஓஹோ
கரெக்ட். நம்ம ஹீரோ ஹீரோயின்களுக்கு உள்ள பேராசையே இதுதான். எல்லா கேரக்டரிலும் தானே வந்து ஸ்க்ரீனை அடைக்கணும். ஹீரோ வில்லன் ரெண்டு வேஷமும் ஒரே ஆள் நடிச்சா அவங்க மோதலில் பாக்குறவனுக்கு என்ன இண்ட்ரஸ்ட் இருக்கும்? இப்படித்தான் சரஸ்வதி சபதம் படத்தில் புலவர் நாரதர் ரெண்டு ரோலிலும் சிவாஜியே வந்து இம்சை கொடுத்ததும் இன்னும் பல படங்களில் அம்மன் பக்தை ரெண்டு ரோலிலும் பல ஹீரோயின்களே வந்து டார்ச்சர் கொடுத்ததும் ஞாபகத்துக்கு வருது. நீங்க சொன்ன மாதிரி ஒரு ரோல் மட்டும் விக்ரம் பண்ணியிருந்தா படம் ஓஹோ
@arun bs
//walkie talkie range fixed ellam illa.. 7km communicate panra walkie talkie kooda iruku.//
சரி ஓக்கே,, பத்து கிலோ மீட்டர்னு கூட வச்சிக்குவோமே... ப்ளைட்டுல நடு வானத்துல பறந்துகிட்டு இருக்கவரோட நம்மாளு கீழருந்து பேசிக்கிட்டு இருப்பாப்ள... என்னவோ... ஒரு லக்கனத்தில் ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவனா கூட இருக்கலாம்
அடுத்து அவரு VHF ல பேசுனாருன்னு எதுவும் ஆரம்பிச்சிடாதீங்க :-)
பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping
சார்...
மாயவலை கதை முடிந்து விட்டதா? முடிவு தெரிய ஆவலாக உள்ளது. தயவு செய்து இறுதிப் பகுதிகளை தரவும்
Post a Comment