Friday, September 2, 2016

JANATHA GARAGE!!!


Share/Bookmark
ரெண்டு வெவ்வேற மொழி ஹீரோக்கள போட்டு படம் எடுத்து ரெண்டு மொழியிலயுமே நேரடிப்படமா ரிலீஸ் பன்னுற வழக்கம் தொண்றுதொட்டு இருந்து வர்றதுதான். அதுவும் தெலுங்குல சமீபகாலமா இந்த மாதிரி வேற்றுமொழி ஹீரோவ வச்சி பன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்டுங்க கொஞ்சம் அதிகமாயிருச்சின்னு தான் சொல்லனும். அல்லு அர்ஜூன் –உபேந்திரா காம்பினேஷன்ல S/o சத்யமூர்த்தி, கார்த்தி- நாகர்ஜூன காம்பினேஷன்ல ஊப்பிரி இப்ப மோகன்லால்-ஜூனியர் NTR காம்பினேஷன்ல இந்த ஜனதா கேரேஜ்.

மோகன்லால் தலைமையில ஒரு ஏழு பேர் கொண்ட குழு ஜனதா கேரேஜ்ங்குற மெக்கானிக் ஷாப்ப நடத்திகிட்டு வர்றாங்க. கேரேஜ்ஜ நடத்துறது மட்டும் இல்லாம நாயகன் வேலு நாயக்கர், தளபதி சூர்யா-தேவா மாதிரி சட்டத்தால் கைவிடப்பட்ட மக்களுக்கு அடிதடி மூலம் நீதி வாங்கித் தரும் வேலையைப் பார்க்குறாங்க.. மோகன்லால் தம்பி ரஹ்மானுக்கு கல்யாணம் ஆகி ஒரு சின்ன குழந்தை இருக்கு. மோகன்லால் ஊரு ஃபுல்லா இழுத்த உரண்டையால அவரோட தம்பியும், தம்பியோட மனைவியும் எதிரிகளால கொல்லப்படுறாங்க. அதற்கு எல்லாரும் மோகன்லாலை காரணம் காட்ட, தம்பி குழந்தையை, அந்த குழந்தையோட அம்மா வழி மாமன் சுரேஷ்கிட்ட குடுத்து இனிமே என்னோட நிழல் கூட இந்த குழந்தை மேல படாது. நீங்களே இத வளர்த்துங்குங்கன்னு கொடுத்து அனுப்பிட்டு வழக்கம்போல தப்பை தட்டி கேக்குற வேலைய பாத்துக்கிட்டு இருக்காரு.

அந்தக் குழந்தைதான் நம்ம ஜூனியர் NTR. எப்படி மோகன்லாலுக்கு மக்களை காப்பாத்துறது புடிக்குமோ அதே மாதிரி NTR க்கு இயற்கையை காப்பாத்துறது புடிக்கும். Pollution பன்னக்கூடாது, மரத்த வெட்டக்கூடாது, மலைய நோண்டக்கூடாதுன்னு கிட்டத்தட்ட அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரூல்ஸ் பேசிக்கிட்டு திரியிறவரு. மாமன் பொண்ணு சமந்தாவையே லவ்வுறாரு.

பொதுவா தெலுங்கு படங்கள்ல சமந்தாவ ஹீரோயினா போட்டாலே, கண்டிப்பா அதவிட அழகான ஒரு பொண்ண அதுக்கு அள்ளக்கையா போடுவாய்ங்க.  என்ன கேட்டீங்க? இந்தப் படத்துல ஒரே ஒரு ஹீரோயின் தானான்னு தானே? தெலுங்குல ஒரு ஹீரோயின்லாம் வச்சி எடுத்தா அவய்ங்க லட்சியத்துக்கு இழுக்கு வந்துடாதுங்களா… யூரியா மூட்டைக்கு லேடீஸ் ட்ரஸ் போட்டு விட்ட மாதிரி எதோ ஒண்ணு அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு இருந்துச்சி. யாருன்னு பாத்தா.. அட நம்ம நித்யா மேனன். அதுவும் ஜுனியர் NTR உம் நித்யா மேனனும் ஒண்ணா ஸ்க்ரீன்ல நிக்கும்போது யாரு ஜுனியர் NTR  யாரு நித்யா மேனன்னு கண்டுபுடிக்கிறதே பெரும்பாடா இருக்கு. என்னம்மா இது சரியா வேகாத டைனோசர் முட்டை மாதிரி.

மோகன்லாலுக்கு ஒரு ஆர்வக்கோளாரு பையன். மோகன்லால் ஒரு ஆக்ஸிடெண்ட்ல சிக்கி உயிர் பிழைக்க, டாக்டர் ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்து எதும் பன்னக்கூடாதுன்னு சொல்றாரு. மோகன்லால் தனக்கு அப்புறம் அவர் செஞ்சிக்கிட்டு இருந்த வேலையை அவர் பையன செய்ய சொல்லி கேக்குறாரு. ஆனா அவன் “போயா யோவ் போயா.. பெரிய அம்பானி இவரு.. இவரு ரிட்டையர்ட் ஆன உடனே அவர் பதவிய என்கிட்ட் குடுக்குறாரு. என்னால இந்த கேரேஜ்ல நட்டு போல்ட்டையெல்லாம் திருவிக்கிட்டு இருக்க முடியாது” ன்னு சொல்லி மறுத்துடுறான்.

அந்த சமயத்துல இயற்கைய காப்பாத்த போராடுற NTR ஹைதராபாத்துக்கு ஒரு ப்ராஜெக்ட்காக வந்து, குவாரில மலைய குடைஞ்சி கல்லு எடுக்குறவய்ங்கள பின்னி பெடல் எடுக்குறாரு. இதக் கேட்டு இம்ப்ரஸ் ஆன மோகன்லால் “தம்பி  மரங்கள காப்பாத்துறதோட கொஞ்ச மனுஷங்களையும் காப்பாத்தனும்ப்பா.. எங்க கேங்ல சேந்துக்குறியா”ன்னு கேக்க அவரு சேர்ந்துடுறாரு. மோகன்லால்தான் அவர் பெரியப்பான்னு தெரியாமையே.


சூர்யாவும் தேவாவும் ஒண்ணு சேர்ந்தாச்சு. அப்புறம் என்ன.. ஜனதா கேரேஜ் NTR தலைமையில பழைய மாதிரி வேலைகள ஆரம்பிக்க, மோகன்லால் மகனே வில்லன்களோட சேர்ந்துகிட்டு ஜனதா கேரேஜ கலைக்க முயல, நம்ம கேங் என்ன பன்னாங்கங்குறதான் க்ளைமாக்ஸ்.

படத்தோட மிகப்பெரிய ப்ளஸ்ஸும் சரி மைனஸூம் சரி. வசனங்கள் தான். நாட்டமை படத்துல சரத் குமார் கூட இவ்வளவு வசனம் பேசலப்பா. ஆனா NTR பேசிக்கிட்டே இருக்காப்ள. வசங்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா ஒரு அளவு வேணாமாய்யா.

இயக்குனர் கொரட்டலா சிவாவோட முந்தைய படம் ஸ்ரீமந்துடுவோட அதே ஃபார்முலாதான் இந்தப் படத்துக்கும். ரொம்ப கூலா ஆரம்பிச்சி சமூக அக்கரையோட ஆக்‌ஷனை கலந்து கொடுக்கப்பட்ட எண்டர்டைனர். ஆனா அந்தப் படத்துல இருந்த ஒரு முழுமையோ அல்லது காட்சிகளோட் அழுத்தமோ இதுல அவ்வளவா இல்லை.

ஏற்கனவே நிறைய படஙக்ள்ல வந்துட்டதாலயா என்னனு தெரியல ட்விஸ்டெல்லாம் எதுவும் வைக்கல. அதுக்கும்மேல NTR தான் தன்னோட தம்பி பையன்னு மோகன்லாலுக்கு தெரியிற சீனையும் ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. அதே மாதிரி NTR , சமந்தா வெளில எப்பவும் சண்டை போடுற மாதிரி நடிச்சிட்டே, யாருக்கும் தெரியாம லவ் பன்னிட்டு இருப்பாங்க. அத ரிவீல் பன்ற சீனையும் இன்னும் நல்லா எடுத்துருக்கலாம். ஆனா அதுவும் ரொம்ப சாதாரணம இருக்கு.

அவசர அவசராமா பன்னதாலயே என்னனு தெரியல நிறைய இடங்கள்ல ஸ்கிர்ப்ட் கம்ப்ளீட் ஆகாம இருக்கு. சம்ந்தாவ பாதிலயே அத்து விட்டாய்ங்க. நித்யா  மேனன் ஏன் வருதுண்ணே தெரியல. வில்லன்களுக்கு என்ன பன்றதுன்னே தெரியாம சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னவோ பன்னிட்டு இருக்கானுங்க.

ஆனா படம் கொஞ்சம் கூட போர் அடிக்கலங்குறது உண்மை. NTR வர வர செம டீசண்ட் ஆயிட்டாப்ள. முன்னடில்லாம் கொடூரத்துக்குன்னு பஞ்ச் டயலாக் பேசி கொல்லுவாப்ள. இப்பல்லாம் ஆளும் சரி அவர் தேர்ந்தெடுக்குற கேரக்டரும் சரி. ரொம்பவே நல்லாருக்கு.

படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் மோகன்லால். ரொம்ப டீசண்ட்டான கேரக்டர். ஜில்லாவுல ஆக்கிவிட்டமாதிரி கூப்டு வந்து மொக்கையாக்கி விடாம நல்லாவவே பன்னிருக்காங்க. செகண்ட் ஹஃப்ல லாம் வசனமே இல்ல. ஒண்லி ரியாக்‌ஷன் தான். ஆளு பின்னிருக்காப்ள. 

DSP வழக்குத்துக்கு மாறா BGM நல்லா பன்னிருக்காரு. வழக்கம்போல ஒரு 3 பாட்டு சூப்பரா போட்டுருக்காரு. “Jai ho Janatha” வும், “Apple Beauty” யும் சிறப்பு. காஜல் அகர்வால் ஒரு ஐடம் சாங்குக்கு வந்து chikne chameli காத்ரினா கைஃபுக்கே சவால் விட்டு ரொம்ப ஓப்பனா ஆடிருக்காங்க. ஸ்டண்ட்ஸ் எல்லாம் சூப்பர். செகண்ட் ஹஃப்ல கசகசன்னு நிறைய ஃபைட்டு.

மொத்தத்துல படம் ஸ்ரீமந்துடு அளவுக்கு சிறப்பா இல்லாட்டியும் கண்டிப்பா ஒரு தடவ பாக்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னர் தான். 



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

ஜீவி said...

எப்படி இருந்தாலும் லாலேட்டன் என்டிஆர் காம்பினேஷனுக்காகவாவது பார்க்க வேண்டும். நல்ல விமர்சனம்

யோக்கியன் said...

நம்ம தமிழ் மொழி பட வசனமே ஞாபகம் வச்சிருக்குரது கஷ்டமா இருகுரப்ப ., எப்படியா உனக்கு அதர் ஸ்டேட்டு மொழிய புரிச்சுக்க முடியுது.என்ன நீங்க நல்லாருக்குனு சொல்லிர படத்த பார்க்க முடிரது இல்லை....அப்படியே டிவிடி கெடச்சாலும் தெலுஙுகுலேயே கொல்ராங்க
ஸப் டைட்டல் போட்டாலும் படிச்சு முடிகிரது குள்ள என்னா சீனுக்கு இந்த டயலாகுனு பார்க்குர குள்ளா நாலு வசனம் வந்துருது எப்பா செய்ய ?? ? ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...