கடந்த
சில வருடங்கள ஒப்பிட்டு பாக்கும் பொழுது இந்த வருஷம் strike rate ரொம்பவே அதிகம். நிறைய
படங்கள் எனக்கு புடிச்ச மாதிரி வந்துருக்கு. புடிச்ச மாதிரின்னு சொல்றத விட கடுப்பேத்தாத
மாதிரி வந்துருக்கு. எல்லா வருஷத்தயும் போல இந்த வருஷம் 10 படங்களுக்குள்ள புடிச்ச
படங்கள அடக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அதனால ஒரு நாலு எக்ஸ்ட்ரா.
இந்த முறையும், ஒரு படம் எனக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதன்படி வரிசைப் படுத்தியிருக்கிறேன். வழக்கம்போல பலருக்கும் உடன்பாடு இருக்காது என ஆணித்தனமாக நம்புகிறேன்
இந்த முறையும், ஒரு படம் எனக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதன்படி வரிசைப் படுத்தியிருக்கிறேன். வழக்கம்போல பலருக்கும் உடன்பாடு இருக்காது என ஆணித்தனமாக நம்புகிறேன்
14. ரெமோ
இதப்பாத்தோன
நிறைய பேருக்கு வெறி வரும். ஆனா என்னைப்பொறுத்த வரை ஒருசில லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்து,
மற்றபடி படம் முழுவதும் சிரிக்க வைத்த சினா கானாவின் one man show.
13. ரஜினி
முருகன்
சிவா-பொன்ராம்
கூட்டணியில் கிட்டத்தட்ட வருத்தப்படாத வாலிபர்
சங்கத்தோட பார்ட் டூ மாதிரி, இன்னும் சொல்லப்போனா அதவிட improved எண்டர்டெய்னர். ராஜ்கிரன் தாத்தா கூடுதல் பலம்
12. ஆண்டவன்
கட்டளை
அயல்நாட்டு மோகம் கிராமத்து இளைஞர்களை படுத்தும்
நிஜத்தை, நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட படம். இரண்டாவது பாதில வர்ற கோர்ட்
sequence மட்டும் ரொம்ம்ம்ம்ம்ப நீளமா பொய்ட்ட ஒரு ஃபீல்.
11. தில்லுக்கு
துட்டு
இந்த
வருஷம் தியேட்டர்ல நா பயங்கரமா சிரிச்சி ரசிச்ச ஒரு படம். கொஞ்சம் கூட போர் அடிக்காம
கிட்டத்தட்ட எல்லா சீனுமே வயிறு குலுங்க சிரிக்க வச்ச படம்.
10. இறுதிச் சுற்று
ரித்திகாவுக்கு மட்டும் இல்லை. மாதவனுக்கும் இது இறுதி சுற்று. இன்னொரு சுத்து பெருத்தார்னா வெடிச்சிருவாப்ள. கதைக்களத்துலயும், உருவாக்கத்துலயும் ஹி்ந்திப் பட வாடை கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி.
09. தோழா
இரண்டு பெரிய ஹீரோக்களை முறையா பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ஒரு முழுமையான படம். அதிலும் நாகர்ஜூன் கேரக்டரும் ஆக்டிங்கும் செம.
08. பிச்சைக்காரன்
சசி ரொம்ப சின்சியரா சீரியஸா படம் எடுக்கக்கூடியவரு…
ஆனா நம்மாளுங்க அத அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டாய்ங்க. இந்த தடவ அப்படி இல்லாம
மிகப்பெரிய ஹிட்ட குடுத்துருக்காங்க. “அடக்க நாயகன்” விஜய் ஆண்டனிக்கு இந்தப் படத்தால
மிகப்பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்துருக்கு. இதே கதை திரைக்கதைய வேறு ஒரு மாஸ் ஹீரோ செஞ்சிருந்தா
படத்தோட ரேஞ்சே வேற.
07. கொடி
அரசியல்
களத்தில் தனுஷ் முதன் முறையாக வேடங்களில் நடிச்ச படம். வேலையில்லா பட்டதாரிக்கப்புறம் மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த தனுஷூக்கு கைகொடுத்த படம்.
06. தெறி
பழக்கப்பட்ட கதை, திரைக்கதை அமைப்பாக இருந்தாலும் ரசிக்க வைத்த கமர்ஷியல் எண்டர்டெய்னர்.
05. குற்றமே
தண்டனை
எனக்கு
என்னவோ ஆண்டவன் கட்டளையை விட மணிகண்டனின் குற்றமே தண்டனை ஒரு படி மேல இருந்தது மாதிரிதான்
தோணுச்சி. சில நடிகர்கள் கதைக்கு ஏத்த மாதிரி நடிப்பாங்க. விமல் மாதிரி சில நடிகர்களுக்கு
அவங்களுக்கு என்ன நடிப்பு வருதோ அதுக்கேத்த மாதிரி நாம கதையெழுதிக்கனும். விதார்த்தும்
கிட்டத்தட்ட அந்த சங்கத்த சேர்ந்தவருதான். விதார்த்த அந்த ரோலுக்கு பொருத்தி, அவர அந்த
கேரக்டரா மாத்துனதே பெரிய விஷயம்.
04. விசாரணை
இதுக்கு
முன்னால ரத்த சரித்திரம்-2 பாக்கும்போதுதான் இந்த சீட்டு நுனியில உக்கார வைக்கிறதுன்னா
என்னன்னு தெரிஞ்சிது. ஸ்லோமோஷன் காட்சிகளோட அந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் சீன் எடுத்த
விதம் படு பயங்கரமா படம் பாக்குறவங்களுக்கு ”எவனுக்கு என்ன ஆகப்போகுதோ.. எவன் எப்ப
சாகப்போறானோ”ங்குற ஒரு ஃபீல குடுக்கும். கிட்டத்தட்ட
அதே மாதிரி feel ah குடுத்த படம்
03. ஜோக்கர்
கழிவரை
வசதி எவ்வளவு முக்கியம், அடித்தட்டு மக்களுக்கு அது எப்படி ஒரு கனவாக இருக்கிறது. அதைக்
கட்டிக்கொடுக்க அரசு கொடுக்கும் உதவித்தொகையையும் புடுங்கித் திங்கும் அரசியல் வாதிகள்
மற்றும் அரசு அதிகாரிகள் அதனால் சுயநினைவிழக்கும் மனைவி. மனமுடைந்து ஏதும் செய்ய முடியாமல்
ஜனாதிபதியாகவே தன்னை நினைத்து வாழத் தொடங்கும் நாயகன். சமூக சீர்கேடுகளை எதிர்த்து
குரல்கொடுக்கும் கதைக்குள்ளும் ஒரு அழகான காதல். ராஜூ முருகனின் தரமான படைப்பு.
02. அப்பா
சமூக
அக்கரையுள்ள படங்களை கடுப்பேத்தாம குடுக்குறதுங்குறது பெரிய விஷயம். சமுத்திரக்கனி
அத இந்தப் படத்துல செஞ்சிருக்காரு. வெற்றிப்படம்தான். இருந்தாலும் கபாலி சீசனில் இல்லாமல்
வேற ஒரு நேரத்துல வெளியிடப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருக்கும்
01. இறைவி
கார்த்திக்
சுப்பராஜின் இன்னொரு தரமான படைப்பு. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதியின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ்.
பீடா வாயன் பாபி சிம்ஹா கேரக்டரயும், அந்த
குடும்பத்துக்குள் குழப்ப சீக்வன்ஸயும் கொஞ்சம் முகம் சுழிக்கிற மாதிரி இருந்துச்சி
இந்த லிஸ்டு மட்டும் இல்லாம மருது, மாப்ள சிங்கம் , காதலும் கடந்து போகும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இருமுகன் ஆகிய படங்களும் எனக்கு ஒவ்வொரு வகையில் பிடித்த படங்கள்
6 comments:
Theri, iruthichutru thavara naan vera entha padamum paakala :(
Apo kabali?
ரஜினி முருகன் மற்றும் மருது படங்கள் உங்களை கவர்ந்ததும் உங்கள் தலைவர் ரஜினியின் கபாலி உங்களுக்கு பிடிக்காமல் போனாதில் எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை
Kabali missing??? What happened to you? Forgot??
Hmmm....
thalaivare kavuthuteengale. namma kabali enge?
Post a Comment