Tuesday, July 25, 2017

மறைந்திருக்கும் தங்க நகரமும் தேடிச்சென்று தொலைந்த நபர்களும்!!


Share/Bookmark
மற்ற உலோகங்களை விட தங்கத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்தங்கம் அரிதாகக் கிடைக்கும் உலோகம் என்பதாலா இல்லை மற்ற உலோகங்களைப் போல எளிதில் வேதி வினைகளில் ஈடுபட்டு தன் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதாலா அல்லது பார்க்க வசீகரமாக இருப்பதாலா அல்லது மேற்கூறிய அனைத்து பண்புகளும் ஒரு சேர இருப்பதாலா? யாராலும் கூற முடியாது.தங்கம் என்கிற உலோகம் எப்பொழுது மனிதர்களிடம் ஒரு மிகப்பெரிய மதிப்பைப் பெற்றது என்பதையும் உத்தேசமாகக் கூற இயலாதுகி.மு., கி.பி என்று நமக்கு வரலாறு தெரிந்த காலத்துலருந்து தங்கம் என்றாலே மனிதர்களை வசியம் செய்யும் ஒரு பொருள் 

அதுவும் கணக்கற்ற தங்கம் புதையல் வடிவில் குறைந்த உடல் உழைப்பில் கிடைக்கிறது என்றால் விடுவார்களா?முதலில் புதையல் என்பது என்னஅரச குடும்பத்தினர் மரணத்தின் போது அவர்களுடன் சேர்த்து புதைக்கப்படும் ஆபரணங்கள் நாணயங்கள் ஒருவகைசெல்வச் செழிப்புடம் இருக்கும் அரசாட்சிகள்,நகரங்கள் அழியும்போது மண்ணுக்குள் புதையும் செல்வங்கள் மற்றொரு வகை.

தான் வைத்திருக்கும் அதிகப்படியான செல்வத்தை எவராவது அபகரிக்கக்கூடும் என அஞ்சி எங்காவது ஒளித்து வைத்துவிட்டு எங்கே வைத்தோம் என எவரிடமும் கூறும் முன் காலன் அவரகளைக் கூட்டிச் செல்லும்போது பதுங்கும் செல்வங்கள் மற்றொரு வகை.. இவைகளுக்கு புதையல் குறிப்புகள் என்றெல்லாம் எதுவும் இருக்காதுஇந்த வகைப் புதையல்களை எதேச்சையாகக் கண்டுபுடித்தால்தான் உண்டு அல்லது இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கே புதையல் இருக்கலாம் என எவராவது அனுமானத்தில் குறிப்பெழுதி வைத்திருந்தால்தான் உண்டு.

இப்படி எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்கள் ஏராளம். இங்கிலாந்தில் ஒரு விவசாயி (நமது சமுக வலைத்தளப் பதிவுகளில் வரும் அந்த ஏழை விவசாயி அல்ல) அவர் வேலை செய்ய உபயோகிக்கும் சுத்தியலை வயலில் தொலைத்துவிட்டார். வயலுக்குள் புதைந்த சுத்தியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே நண்பர் உதவியுடன் மெடல் டிடெக்டர்ரை வைத்து வயலில் தேடியபோது சிக்கியது ஒரு புதையல். அதில் இருந்தது 570 தங்கக் காசுகளும், 14191 வெள்ளிக் காசுகளும். உடனே அரசாங்கத்திற்கு இந்த செய்தியைத் அவர்கள் தெரிவித்ததும், அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரை பரிசாகக் கொடுக்கப்பட்டு அத்தனை நாணயங்களும் அரசாங்க அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

1974ல சீனாவின் ஸியான் மலைப்பகுதிகளில் ரெண்டு விவசாயிகள் கிணறு தோண்டிக் கொண்டிருக்க, உள்ளே எதோ தட்டுப்பட்டது. அதைத் தோண்டி எடுக்க, அது சுட்ட களிமண்ணாலான ஒரு போர் வீரனின் சிலை. அது போல் இரண்டு மூன்று கிடைக்க, அவர்கள் அதனைப் பெரும் பொருட்டாகக் கருதவில்லை. மாறாக கிடைத்த சிலைகளை வந்த விலைக்கு விற்றிருக்கின்றனர். இந்த செய்தி காற்று வாக்கில் தொல்பொருள் துறைக்குத் தெரியவர, அந்த இடத்தை வளைத்துப் போட்டு தோண்டியிருக்கின்றனர்.

கிடைத்தது ஒண்றல்ல இரண்டல்ல.. எட்டாயிரத்திற்கும் அதிகமான சுட்ட களிமண்ணாலான் போர் வீரர்களின் சிலைகள், 520 குதிரைகள் பூட்டப்பட்ட சுமார் 130 ரதங்கள் மற்றும் 150 போர் குதிரைகளின் சிலைகள். அனைத்து சிலைகளுமே கல்லரைகளில் வைக்கும் விதத்தில் வடிக்கப்பட்டிருந்தது.



பிறகுதான் அது சீனாவின் முதல் பேரரசன் க்வின் ஷி ஹூவாங்கின் கல்லறை என கண்டறிப்பட்டது. இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மன்னரின் இறப்பிற்குப் பிறகும் அவரைப் பாதுக்காக்க அவரது கல்லரையைச் சுற்றி 8000 க்கும் மேற்பட்ட போர் வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டதாம். இத்தனை சிலைகளையும் வடித்து அந்த இடத்தை உருவாக்க சுமார் ஒரு லட்சம் பணியாட்கள் வேலை செய்திருக்கக்கூடும் எனக் கணிக்கின்றனர் ஆய்வாளர்கள். இது போன்ற எதேச்சையாகக் கண்டறியப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஏராளம்.

குறிப்பெழுதி வைக்கப்பட்டிருக்கும் புதையல்களும் உண்டு. நாம் திரைப்பட ஹீரோக்கள் கையில் ஒரு மேப்பை வைத்துக்கொண்டு புதையலைத் தேடி அலைவார்களே.. அதே வகைதான். கடற்கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் செல்வத்தினை ஏதாவது ஒரு இடத்தில் பதுக்கிவிட்டுபின்னர் அதனை வந்து எடுத்துக்கொள்வதற்காக அதற்கான குறிப்புகளையும் வரைபடமாகவோஅல்லது குறியீடுகளாகவோ ஒரு சிலருக்கு மட்டும் புரியும் வண்ணம் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்கள் .  அப்படி மறைத்து வைத்துவிட்டு வரைபடத்துடம்  செல்பவர்கள் மரணத்தைத் தழுவும்போது, அவர்கள் மறைத்து வைத்திருக்கும் பொருட்கள் புதையலாகிறது.

இன்னொரு விசித்திரமான வகையும் உண்டு.தன்னிடம் இருக்கும் செல்வம் தனக்குப் பிறகு மற்றவரிடம் போகட்டும் ஆனால் அதை அவன் தேடி கண்டுபுடித்துக் கொள்ளட்டும் என தன்னிடம் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு அதற்கான துப்புகளையும்,தடயங்களையும் எழுத்து வடிவிலோ குறியீடுகள் வடிவிலோ விட்டுச்செல்பவர்களும் இருக்கிறார்கள்.அக்காலத்தில் மட்டுமல்லநாம் வாழும் இந்த நூற்றாண்டில் கூட அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கின்றனர்.

உதாரணமாக   ஃபாரஸ்ட் ஃபென் (Forest Fenn)என்பவர் 1980 களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் தன்னிடம் இருக்கும் தங்க நாணயங்களையும், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால மரகத மோதிரங்களையும்ஒரு பெட்டியில் அடைத்து அதை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து அதற்கான குறிப்புகளை விட்டுச் செல்லவேண்டுமென ஆசைப்பட்டார்.தன்னுடைய மரணத்துக்குப் பின்னரும் தன்னுடைய நினைவுகள் புவியில் இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் இந்த முடிவை எடுத்திருந்தார். ஆனா பயபுள்ளசாகல.

கடந்த 2010 ஆண்டு ஃபாரஸ்ட் ஃபென்னிற்கு80 வயது நிறைவு பெற, 30 வருடத்திற்கு முன் எடுத்த அந்த முடிவை 2010 இல் நிறைவேற்றினார்ஆம்அந்த தங்க நாணயங்களும் மரகத மோதிரங்களும் அடங்கிய அந்தப் பெட்டியை நியூ மெக்ஸிகோவின் மலைப் பகுதிகளில் மறைத்து வைத்து அதற்கான துப்புகளை ஒரு பாடல் வடிவில் கொடுத்துள்ளார்.

அந்தப் பாடல் வடிவிலான துப்புகள் மட்டுமல்லாமல் பின்குறிப்பாக சில வாசங்களையும் சேர்த்துள்ளார்.. அவை என்னவென்றால் என் பாடலில் உள்ள தகவல்களைத் தவிற வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம்ஏனென்றால் வெளியில் நிறைய தவறான தகவல்கள் பரவுகின்றதுநான் எனது புதையலை புதைத்து வைத்திருக்கிறேன் என்று கூறவில்லைமறைத்து வைத்திருக்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறேன்மறைத்து வைத்திருக்கிறேன் என்று கூறுவதால் அதனை புதைத்து வைக்கவில்லை என்று பொருளாகாது போயா யோவ் நீயும் உன் புதையலும் இதுக்கு நீ புதையல் இல்லைன்னே சொல்லிருக்கலாம்னு தோண்றுகிறதல்லவா?  இன்று வரை இந்தப் புதையல் கண்டெடுக்கப்படவில்லை. நீங்கள் ஆசைப்பட்டால் கூட கட்டுச் சோற்றைக் கட்டிக்கொண்டு நியூ மெக்ஸிகோ வரை சென்று முயற்சித்துப் பார்க்கலாம்.

இதுபோன்ற குறிப்புகள் விட்டுச் செல்லப்பட்ட புதையல்களை எடுப்பது ஒரு சுவாரஸ்யமான செயல். இப்படிப்பட்ட புதையல்களைத் தேடி எடுப்பதையே தொழிலாகக் கொண்ட குழுக்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். புதையலைத் தேடி எடுப்பது ஒரு மிகப்பெரிய செல்வத்தை அடையும் ஒரு பயணம் என்பதை விட அந்தத் தேடுதலில் கிடைக்கும்சுவாரஸ்யத்தை அனுபவிப்பதற்காகபுதையல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் ஏராளம்.

பதினைந்தாம் நூற்றாண்டில் சில புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலமும், அரசல் புரசாலாக மக்களிடத்தில் பரவிக்கிடந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டும் மறைந்திருந்த ஒரு தங்க நகரத்தைத் தேடி அலைந்தவரகளைப் பற்றியும் அது தொடர்பான மர்மங்களைப் பற்றியும் தான் இனி வரும் பதிவில் காண இருக்கிறோம்.

-    தொடரும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Anonymous said...

Neengal solvathu "THE GOLD RUSH" Discovery Channel'a vara Episode mathiri iruku.

Anonymous said...

nalla irukku anna. next post um seekram podunka
krishna.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...