”என்னய்யா
இவன் ஒரிஜினல் படத்துல தெரியாம கேமரால ஒரு ஈ க்ராஸ் ஆகி போனாக் கூட ரீமேக் பன்னும்போது
அதயும் எடுத்து வைச்சிருவான் போல” ன்னு ஒரு சில வருஷங்களுக்கு முன்னால ஜெயம் ராஜாவ
கிண்டல் அடிக்கிறதுண்டு. அவர் எடுத்த ரீமேக் படங்களுக்கும், அதோட ஒரிஜினல் வெர்ஷனுக்கும்
ஆறு நடிகர்களத் தவற, ஆறு வித்யாசம் கண்டுபுடிக்கிறதே மிகப்பெரிய கஷ்டம். அந்த அளவுக்கு
ஜெராக்ஸ் எடுத்த மாதிரி எடுத்து வைப்பாரு. நேத்து தானா சேர்ந்த கூட்டம் பாத்தப்போதான்
ஜெயம் ராஜாவ நா ரொம்ப மிஸ் பண்ணேன்.அடுத்தவன்
எழுதுன திரைக்கதைய அப்டியே ஏத்துக்கிட்டு தன்னுடைய தனித்தன்மைய காட்டனும்னு எதுவும்
ஜில்ஃபான்ஸ் வேலைகள் பண்ணி வைக்காம படம் எடுக்கவும் ஒரு பெரிய மனசு வேணும்.
பயங்கரமான
Spoiler Alert:
1987
ல மோன் சிங் அப்டிங்குறவன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைல “துடிப்பான, திறமையான,
புத்திசாலியான ஆட்கள் உளவுத்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் தேவை. விருப்பமுள்ளவர்கள்
நாளை காலை தாஜ் ஹோட்டலூக்கு இண்டர்வியூக்கு வாங்க” அப்டின்னு ஒரு விளம்பரம் குடுக்க,
மறுநாள் ஹோட்டல்ல கூட்டம் அள்ளிருக்கு. அதுலருந்து ஒரு 26 பேர தேர்வு செஞ்சி ”நாளைக்கு
காலையில ஒரு Mock raid இருக்கு… எல்லாரும் பல்ல வெளக்கிட்டு பக்காவா வந்துருங்க”ன்னு
சொல்லி அனுப்பிருக்கான்.
அதே
மாதிரி மறுநாள் எல்லாரும் வர, Tribovandas Beemji & Sons ங்குற நகைக்கடைக்கு ரெய்டுக்கு
அழைச்சிட்டு போயிருக்கான். நகைக்கடை ஓனர்கிட்ட “நா CBI லருந்து வந்துருக்கேன்.. இதப்
பாருங்க search வாரண்ட்” அப்டின்னு ஒரு வாரண்ட் பேப்பர காமிக்க அவய்ங்களும் கடைய சோதனை போட ஒத்துக்கிட்டுருக்கானுங்க.
இவன் செலெக்ட் பன்ன 26 பேரும் கடைக்கு உள்ளயும் வெளியயும் யாரையும் விடாமயும், எந்த
ஃபோன் காலும் வெளில போகாமயும் கடமைய செவ்வனே செஞ்ருக்கானுங்க.
நம்ம
மோன் சிங் வடிவேலு அரிசி சாம்பிள் எடுக்குற மாதிரி எல்லா நகையிலயும் கொஞ்சம் சாம்பில்
எடுத்து ப்ளாஸ்டிக் பைக்குள்ள எதோ எவிடென்ஸ் மாதிரி போட்டு சீல் பண்ணி எல்லாத்தையும்
ஒரு பொட்டிக்குள்ள வச்சி ரெண்டு பேர மட்டும் கொண்டு போய் வண்டிய வச்சிட்டு வர சொல்லிருக்கான்.
மத்த எல்லார்கிட்டயும் ”கடைய பத்தரமா பாத்துக்குங்க.. கடையிலருந்து ஒரு துரும்பு கூட
அசையக் கூடாது… நா இப்ப வந்துடுறேன்”ன்னு சொல்லிட்டு வெளில போனவன் இப்ப வரைக்கும் வரல.
அதுல
அவன் ஆட்டையப் போட்ட நகைகளோட மதிப்பு சுமார் 30 லருந்து 35 லட்சமாம். அவனப் புடிக்க
கேரளாவுக்கு ஆள் அனுப்புறேன், துபாய்க்கு ஆள் அனுப்புறேன்னு போலீஸ் தரப்புலருந்து ஆள்
தான் அனுப்புனானுங்களே தவற இப்ப வரைக்கும் மோன் சிங்க புடிக்க முடியல. இந்த உண்மை சம்பவத்த
அடிப்படையா வச்சி, ரொம்ப சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையோட அக்ஷய் குமார் நடிச்சி வெளிவந்த
படம் தான் ஸ்பெஷல்26. பெருபாலானவங்க பாத்துருப்பீங்க. அதத் தழுவி எடுக்கப்பட்ட நம்ம
தானா சேர்ந்த கூட்டத்த தான் நம்ம எல்லாரும் இப்ப கழுவி ஊத்திக்கிட்டுருக்கோம்.
ஒரிஜினல்
வெர்ஷன்ல படத்தோட ஆரம்பம், கதையோட போக்கு, கதாப்பாத்திரங்கள் கதைக்குள்ள ஒவ்வொருத்தரா
ஒவ்வொரு இடத்துல சேருற விதம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ன்னு எல்லாமே ஒரு முறைபடுத்தப்பட்ட
வடிவத்துல இருக்கும்.
ஆனா
நம்ம விக்னேஷ் சிவன் , என் பங்குக்கு நானும் கொஞ்சம் கதைய சேர்க்குறேன்.. என்னோட திறமையும்
காட்டுறேன்னு முன்னாடி பின்னாடி சேர்த்து விட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளால தான் படம்
சற்று டொம்மையாயிருச்சி.
திரைக்கதையில
இருக்க சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்தான் ஒரு வெற்றிபடத்துக்கான வித்துகளா அமையும். உதாரணமா
ஸ்பெஷல் 26 ல ஆரம்பமே ரெய்டுலதான் ஆரம்பிக்கும். ரெய்டு நடந்து முடிஞ்சி எல்லாரும்
கிளம்புற வரைக்கும் அது ஒரு உண்மையான ரெய்டுன்னுதான் நமக்குத் தோணும். அந்த அளவுக்கு
சீரியஸாவும், நேர்த்தியாவும் அந்த காட்சிய அமைச்சிருப்பாங்க. தமிழ்ல அந்த காட்சி செந்தில்
கையில மாட்டுன மேண்டில் மாதிரி ஆகிப்போச்சு.
அதுமட்டும்
இல்லாம க்ளைமாக்ஸ்ல அந்த ட்விஸ்ட்ட அவிழ்த்து அந்தப் படத்த முடிக்கிற விதம் ரொம்ப அருமையா
இருக்கும். The illusionist ன்னு ஒரு படம் இருக்கு. ஹீரோ எல்லாரையும் ரொம்ப சூப்பாரா
ஏமாத்திட்டு தப்பிச்சி போயிருவாரு. அவன ஃபாலோ பன்ற போலீஸுக்கு ஹீரோ ஊர விட்டு போனப்புறம்தான்
அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே தெரியவரும். “அவன் எப்டியெல்லாம் நம்மள ஏமாத்திருக்கான்”ன்னு
ஏற்கனவே நடந்த சம்பவங்கள கோர்வையா ஒவ்வொன்னா நினைச்சி பாத்து, ஹீரோவோட புத்திசாலித்தனத்த
நினைச்சும், அவனோட வெற்றிய ஆமோதிக்கிற மாதிரியும் அந்த போலீஸ் ரயில்வே ஸ்டேஷன்லயே நின்னு
தனக்குத் தானே நினைச்சி சிரிச்சிட்டு இருப்பாரு. செம சூப்பாரா இருக்கும் அந்த சீன்.
கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு காட்சியமைப்புதான் ஸ்பெஷல் 26 லயும் வச்சிருப்பாங்க.
ஹீரோ கடைய காலிபன்னிட்டு போனப்புறம்தான் அவன புடிக்க வெய்ட் பண்ணிட்டுருக்கா போலீஸூக்கு
அவன் நம்மள ஏமாத்திட்டாங்குறதே புரியும். அந்த சீனோட சுவாரஸ்யத்தையும் விக்னேஷ் சிவன்
கெடுத்துட்டாரு.
ரொம்ப
நாளைக்கு அப்புறம் சுரேஷ் மேனன தமிழ் சினிமாவுல பாக்க நல்லாருந்துச்சி. ஆனா பாருங்க
அவருக்கு கவுதம் மேனன் குரல குடுத்து கடுப்ப்பேத்திடாங்க. ஒரு சீன்ல சுரேஷ் மேனன் சூர்யாவ
எழுந்து நில்லுன்னு சொல்லுவாரு. “அவர் நின்னுக்கிட்டுதான் சார் இருக்காரு..உங்க பக்கத்துல
பாக்கும்போது உக்கார்ந்திருக்க மாதிரி தெரியிது”ன்னு நினைச்சிக்கிட்டேன். இப்டியெல்லாம்
ஓட்டுவானுங்கன்னு தெரிஞ்சிதான் க்ளைமாக்ஸ்ல “எவ்வளவு உயரம்ங்குறது முக்கியம் இல்ல..
எவ்வளவு உயருரோம்ங்குறதுதான் முக்கியம்” ஒரு பஞ்ச் வேற பேசிருக்காரு சூர்யா.
படத்துக்கு
மிகப்பெரிய ப்ரோமோஷன் சொடக்கு மேல பாட்டு. ஆனா ஆடியோவுல இருக்க வேகம் வீடியோவுல இல்ல.
இன்னும் கொஞ்சம் ஸ்பீடா எடிட்டிங் பன்னிருக்கனும். ஹரி படத்து எடிட்டர்கிட்ட குடுத்துருந்தா
சிறப்பா செஞ்சு குடுத்துருப்பாரு. அந்த ஒரு பாட்டத் தவற மற்ற பாடல்கள்லாம் ஒரே இரைச்சல்.
ஸ்பெஷல்
26 ல ஒரிஜினல் CBI ஆஃபீசரா வர்ற மனோஜ் பஜ்பாயி பிரிச்சிருப்பாரு. ஆனா இங்க நம்ம நவரசம்
ஒரு தேவையில்லாத ஆணி மாதிரி தான் வந்துட்டுப் போகுது. சூர்யா வழக்கம்போல ஆளு செமையா
இருக்காரு. ரம்யாகிருஷ்ணன் சிபிஐயா வர்றப்ப
மட்டும் கெத்து. மத்த நேரத்துல “என்னப்பா.. என்னப்பா” ன்னு மொக்க போட்டுக்கிட்டுருக்கு.
தம்பி ராமைய்யா ஒரு சீன்ல கலக்கிருக்காரு.
மொத்தப்
படத்துலயும் நல்ல சீன்னு தேடி எடுத்தா ஒரு ரெண்டு மூணுதான் தேறும். க்ளைமாக்ஸ்ல சுரேஷ்
மேனன நிக்க வச்சி சுத்தி சுடுற சீன் நல்லாருந்துச்சி.
மத்தபடி
இன்னும் ரெண்டு படத்தையும் பாக்காதவங்க முதல்ல Special 26 ah பாத்துட்டு அப்புறம் தானா
சேர்ந்த கூட்டம் பாக்கலாம்.
2 comments:
Climax சுத்தமா புரியவே இல்லை.. கார்த்திக் என்ன திட்டம் போடறார்... அது எப்படி சூர்யா vukku தெரிஞ்சது... பணத்த வச்சு சூர்யா அண்ட் கோ என்னதான் செய்தது? ரம்யா கிருஷ்ணன் இடம் தெரிஞ்சும் பிடிக்க முடியாத போலீசா? கீர்த்தி சுரேஷ் வேலை என்ன? எதுக்கும் பதில் இல்லை. செந்தில் பெட்ரமெக்ஸ் காட்சிகள் அறுவை... மொத்தத்தில் கூட்டத்தை தியேட்டரில் சேர விடாத படம்
Same Blood..
Post a Comment