தெலுங்குப்
படங்கள ரசித்துப் பார்த்த காலங்கள் போயி இப்பல்லாம் பொறாமைப் பட்டு பாக்குற காலம் வந்துருச்சி.
இப்பல்லாம் தெலுங்கு படங்களம்ப் பாக்கும்போது தமிழ்ல இப்டியெல்லாம் எப்ப வரப்போவுதுங்குற
கேள்விதான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டுருக்கு. தமிழ்லயும் நல்ல ஸ்க்ரிப்டோட படங்கள் வருது.
ஒண்ணு ரொம்ப லோ பட்ஜெட்ல வந்து காணாமப் போயிருது.
இல்ல தனி ஒருவன், விக்ரம் வேதான்னு ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் வருது. ஆனா அங்க மூணு
மாசத்துக்கு ஒரு சூப்பர் படம் ரிலீஸாகுது.
சுகுமார்,
கொரட்டலா சிவா, திரிவிக்ரம், போயப்பட்டி சீனுன்னு ஒரு மூணு நாலு இயக்குனர்கள் இருக்காங்க.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில தெலுங்கு சினிமாவ அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயிட்டு
இருக்காங்க. (ராஜமெளலிய அப்டியே நம்மளுக்கும் சேத்துக்குவோம்) வித்யாசமான
கதைகளையும் கதைக்களங்கள்லயும் படம் எடுக்கக்கூடியவர் சுகுமார் (ரங்கஸ்தலம், ஆர்யா, நான்னக்கு ப்ரேமதோ). கொரட்டலா சிவா நச்சின்னு ஷார்ப்பான
வசனங்களோட நேர்த்தியான கமர்ஷியல் சினிமா எடுக்கக்கூடியவர் (ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ்,
பரத் அனி நேனு) . திரிவிக்ரம் கொஞ்சம் ஸ்டைலிஷான, மாஸ் மசாலா (அத்தாரிண்டிகி தாரெதி,
S/o சத்யமூர்த்தி). போயப்பட்டி சீனுன்னா ஆக்ஷன் அன்லிமிட்டட். வெறித்தனமான புதுப்
புதுப் புது சண்டைகளோட ரத்தக் களரியா எடுக்கக்கூடியவர். (சிம்ஹா, லெஜண்ட், சர்ராய்னோடு,
ஜெய ஜானகி நாயகா).
பெரும்பாலும்
இவங்க முன்னணி நாயகர்கள வச்சிதான் இயக்குறாங்க. எந்த வகைப் படங்கள் எடுத்தாலும் ஸ்க்ரிப்டையும்,
டெக்னிக்கலாவும் படத்த இம்ப்ரூவ் பன்றாங்களே தவிற தெலுங்குப் படங்களோட ஒரிஜினாலிட்டிய
என்னிக்குமே விட்டுக்குடுக்குறதில்ல. எல்லா படங்கள்லயும் தெலுங்கு ஆடியன்ஸ் எதிர்பார்க்குற
அத்தனை விஷயங்களும் இருக்கும். நம்மூர்ல மிஸ்ஸாகுறது அதுதான். மேற்கத்திய படங்கள்ல
ஈர்க்கப்பட்டு படம் எடுக்க வரும் இளம் தலைமுறை இயக்குனர்கள் அத அப்டியே நமக்கு காமிக்கனும்னு எதிர்பார்க்குறாங்களே தவிற நம்முடைய
ஒரிஜினாலிட்டிய எப்டி இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பன்றதுன்னு பாக்க மாட்டேங்குறாங்க.
நம்மூர்ல
நூறு கோடி நூற்றம்பது கோடின்னு படம் எடுத்து நடிகர்கள் சம்பளத்துல முக்கால்வாசி போயிட்டு
மீதம் இருக்க பணத்துல ஏனோதானோன்னு எடுக்குறாங்க. தெலுங்குல வெறும் முப்பது கோடி நாப்பது
கோடிம்பானுங்க. படத்துல ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அப்டி இருக்கும்.
சரி விடுங்க. புலம்பத்தான் முடியும். ப்ரின்ஸ் மகேஷ்பாபு , ப்ரகாஷ்ராஜ், சுப்ரீம் ஸ்டார்
சரத்குமார் எல்லாம் நடிச்சி கொரட்டலா சிவா இயக்கத்துல வந்த பரத் அனி நேனு எப்டி இருக்குன்னு
பாக்கலாம்.
திண்ணையில
இருந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம் அப்டிங்குற மாதிரி வெளிநாட்டுல படிச்சிட்டு
இருக்க மகேஷ்பாவுக்கு ஓவர் நைட்டுல ஆந்திரா முதல்வர் ஆகுற வாய்ப்பு கிடைக்கிது. அந்தப்
பதவிய எப்டி உபயோகிச்சி மக்களுக்கு நல்லது பன்றாருங்குறதுதான் கதை.
இன்னிக்கு
இருக்க அரசியல் சூழல்ல கவனிச்சிட்டு இருக்க ஒருத்தனுக்கு, நம்ம நாட்டோட அவலங்கல பாத்து
எதயாவது மாத்தனும்னு நினைக்கிற ஒரு இளைஞனுக்கு பதவி கிடைச்சா அவன் எதயெல்லாம் மாத்தனும்னு ஆசைப்படுவானோ
அதைத் தான் மகேஷ் பாபு செய்றாரு. சமுதாயத்துல இருக்க மக்கள் அனைவருக்கும் பயமும் பொறுப்புணர்ச்சியும்
கட்டாயம் இருக்கனும் அப்டிங்குறதுதான் அவரோட தாரக மந்திரம்.
கொஞ்சம்
ஸ்லோவா தொடங்குற படம் , மகேஷ் முதல்வரானவுனே டக்குன்னு பிக்கப்பாகுது. முதல் பாதி முழுக்க
ஒரு சண்டைக்காட்சி கூட இல்ல. ஆனாலும் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட குறையல. ஒவ்வொரு
சீனயும் அவ்ளோ பவர்ஃபுல்லாவும் , இண்ட்ரஸ்டிங்காவும் எடுத்துருக்காங்க.
சில
வருஷங்கள் முன்னால ராணா டகுபதி நடிச்ச “லீடர்” ன்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட
அதோட அடுத்த வெர்ஷன் மாதிரிதான் இந்தப் படம. லீடர், சிவாஜி, முதல்வன்னு எல்லா படங்களையும்
கலந்து பார்த்த ஒரு ஃபீல்
இன்னிக்கு
சூழல்ல இருக்க அரசியல், மீடியான்னு அனைவருக்கும் இடி குடுக்குற மாதிரி காட்சிகளும்
வசனங்களும். மகேஷ் மக்கள் ப்ரச்சனைகள சீக்கிரம் தீர்க்கனும்னு சொல்லும்போது ஒரு மூத்த அரசியல்வாதி சொல்வாறு “தம்பி
நா 50 வருஷமா விவசாயிகளுக்காக போராடிக்கிட்டு இருக்கேன். அதனால தான் இன்னும் என்னால
அரசியல்ல நல்லா வாழ முடியிது. நீ சொல்ற மாதிரி மக்களோட ப்ரச்சனைகளெல்லாம் ஒரே ராத்திர
தீர்ந்துருச்சின்னா நாமல்லாம் எப்டி பொழப்பு நடத்துறது” ம்பாறு.
மகேஷயும்
அவரோட லவ்வரயும் பத்தி தப்பா எழுதுனதுக்கு ப்ரஸ் மொத்தத்தயும் கூப்டு வச்சி ஒரு கிழி
கிழிப்பாரு பாருங்க. தரமான சம்பவம் அதெல்லாம். நம்ம விஜய்ணா இந்தப் படத்த ரீமேக் பன்றேன்னு ஃபர்னிச்சர உடைச்சிறாம இருக்கனும்னு மட்டும் வேண்டிக்குங்க.
மொத்த ஸ்கிரிப்டையும் தூக்கி நிறுத்துறாரு
மகேஷ். அந்த கலருக்கும், கெட்டப்புக்கும், அந்த ஸ்லாங்குக்கும், இங்கிலீஷ் பேசுற ஸ்டைலுக்கும்
(வடிவேலு ஸ்லாங்குல படிக்காதீங்க) அள்ளுது.
மகேஷ்
பாபு படத்துல மிகப்பெரிய ப்ரச்சனை என்ன்ன்னா அவருக்கு ஹீரோயின் செலெக்ட் பன்றது. எந்தப்
புள்ளைய அவருக்கு ஜோடியா போட்டாலும் அவர விட
ஒரு இஞ்ச் கலரு கம்மியாவும், எவ்வளவு அழகா இருந்தாலும அவருக்கு பக்கத்துல சற்று டொம்மையாவும்தான்
தெரியும். இதுலயும் புதுசா ஒரு பொண்ண போட்டுருக்காங்க. அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது.
பரவால்ல. மூணு மணி நேரப் பட்த்துல ரொம்ப ரொம்ப சின்ன லவ் போர்ஷன் தான். அதயும் ரொம்ப
சூப்பாரா எடுத்துருக்காங்க.
படத்தோட
ரெண்டாவது பாதில முதல்பாதில இருந்த அந்த நேர்த்தி இல்லை. மாஸ் எலெமெண்ட்ஸ் சேர்க்கனும்னு
கொஞ்சம் அப்டி இப்டி ஆயிருச்சி. அதுக்கும் மேல ஆரம்பிச்ச படத்த எப்டி முடிக்கிறதுன்னு
தெரியாம சுத்தி சுத்தி எடுத்து. க்ளைமாக்ஸ் ஒரு கால் மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓடுது.
ப்ரகாஷ்ராஜ் எப்பவும் போல அசால்ட்டான நடிப்பு. சுப்ரீம் ஸ்டார் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்காரு.
ரவி கே சந்த்ரனோட ஒளிப்பதிவு செம.
முக்கியமான
ஒரு ஆள மறந்துட்டோமே.. கபக் கபக் கப ஜல்ஸே… மகேஷ் பாபு ஒரு ஹீரோன்னா இன்னொரு ஹீரோ
DSP… பாட்டும் சரி BGM உம் சரி பட்டையக் கிளப்பிருக்காரு. எனக்குத் தெரிஞ்சி DSP யோட
Best BGM இந்தப் படத்துக்குதான். தெலுங்குல
கிங்கா இருந்தா DSP ய ஒரு ரெண்டு வருசம் முன்னால தமன் ஓரம்கட்டுனாரு. எங்க பாத்தாலும்
தமன். அனைத்து புது ஹீரோக்களும் தமனத்தான் prefer பன்னாங்க. DSP க்கு படம் கொஞ்சம் கம்மியாச்சு. ஆனா இப்ப திரும்ப அத்தனை முன்னணி
ஹீரோக்களையும் தன் பக்கமே இழுத்துருக்காரு. முன்னடி மாதிரி ஒரே ட்யூன ஒரே படத்துல அஞ்சு
மாதிரி போட்டுக்குடுக்காம இப்ப டியூன்ஸல்யும் நிறைய வேரியேஷன் காமிக்கிறாரு. பரத் அனி
நேனுல வர்ற “ஒச்சாடைய்யோ சாமி” பாட்ட கடந்த பத்து நாள்ல எத்தனை தடவ திரும்பத் திரும்பக்
கேட்டேன்னு எனக்கே தெரியல. கணக்கில்லாம ஓடிக்கிட்டுருக்கு.
மொத்தத்துல
மகேஷ்பாவுக்கு ஒரு சின்ன சறுக்கலுக்கப்புறம் இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட். கொரட்டலா
சிவாவுக்கு தொடர்ச்சியான நாலாவது சூப்பர் ஹிட். மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்.
2 comments:
பாஸு . நீங்கள் என்ன தெலுங்கை தாய் மொழியாக கொண்டவரா? தெலுங்கை தாய் மொழியாக கொண்ட அண்ணன் கேபிள் சங்கரும் நீங்களும் மட்டும்தான் தெலுங்கு படங்களை பார்த்துவிட்டு நல்லாய் இருப்பதாய் பதிவுகிறீர்கள். உண்மையிலேயே அவ்வளவு நல்லாவா இருக்கிறது. சில் வருடங்களுக்கு முன் நான் சில தெலுங்குபடங்களை பார்த்தேன். ஒரே படத்தை வெவ்வேறு நடிகர்களை வத்து எடுத்திருந்தார்கள். அப்புறம் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.
இதே போல அரசியல் முதல்வர் ஆவது போன்ற விஷயங்களை வைத்து சமீபத்தில் வந்துள்ள மலையாள கம்மார சம்பவம் படத்தின் ஆழமும், அழுத்தமும், நேர்த்தியும் இந்த பரத் அனே நேனுவில் லேது.. லேது.. லேது
என்ன செய்ய? தெலுகு படமாச்சே..
மகேஷ் பாபுவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ஒன்றை மட்டும் வைத்து கொரட்டலா ஒப்பேற்ற பார்த்திருக்கிறார்.
எம்எல்ஏக்கள் ஆதரவை பற்றி துளியும் கவலை இல்லாமல் தன் போக்கில் லாஜிக் இல்லாமல் ஃபேஷன் மாடல் போல சுற்றி
திரியும் முதல்வர்.. மொக்கை வில்லன்கள்.. ஹீரோவுக்கு என்ன ஆகுமோ என்ற பரபரப்பை துளியும் ஏற்படுத்தாத திரைக்கதை என படம் ஏதோ மூணு மணி நேரம் ஓடி ஒரு வழியாக முடிகிறது.
ஒரு காலத்தில் அங்குசம்(தமிழில் இதுதாண்டா போலீஸ்), பிரதிகடனா,சிவா போன்ற விறுவிறுப்பான பொலிடிக்கல் திரில்லர்களை தந்த தெலுகு சினிமா உலகம் இப்ப மாறி விட்டது..
கைதி 150, இப்ப பரத் அனே நேனு என்று சவசவ படங்கள்...
Post a Comment