Thursday, April 19, 2018

பாரதிராசாவா இல்ல பைத்தியராசாவா?!!


Share/Bookmark

நிறைய நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சிருக்காங்க. நிறைய நடிகர்கள் கட்சிகள்ல சேர்ந்திருக்காங்க. ஆனா அப்பல்லாம் எதிர்கட்சிகளுக்கு வராத ஒரு பயமும், பதற்றமும் இப்ப ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போறேன்னு சொன்ன உடனே வந்துருச்சி. இவரெல்லாம் கட்சியே ஆரம்பிக்க மாட்டாருன்னு வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு இருந்தவன்லாம் இன்னிக்கு என்ன பேசுறதுன்னு தெரியாம வெறிநாய் கடிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கான். 

பொது இடத்துல ஒரு காவல்துறை அதிகாரிய ஒருத்தன் கொடூரமா தாக்குன வீடியோவ எல்லாருமே பாத்துருப்பீங்க. அந்த வன்முறைக்கு எந்த கட்சித் தலைவரும் எந்த எதிர்ப்புமே தெரிவிக்காம இருந்த நிலையில திரு. இதுபோன்ற வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்னு ஒரு ட்வீட்ல அவரோட கண்டன்ங்களத் தெரிவிச்சிருந்தாரு. இப்ப அந்த ரெண்டு வரி ட்வீட்டுக்கு ஒரு ரெண்டு பக்கத்துக்கு பாரதிராசா அவரோட கண்டனங்கள தெரிவிச்சிருக்காரு. என்னன்னா தமிழர்கள் ஒற்றுமையா இருக்கதப் பாத்துட்டு ரஜினி காழ்ப்புணர்ச்சில போட்டுருக்காராம். இவங்க அறவழிப்போராட்ட்த்த ரஜினி அசிங்கப்படுத்திட்டாராம்.  தமிழர்களின் ஒற்றுமை உணர்வை கண்டு வன்முறை கலாச்சாரம் என்கிறாராம்..

ஒரு போலீஸ்காரர  நடுரோட்டுல போஒட்டு ஒருத்தன் காட்டுமிராண்டித் தனமா அடிக்கிறான்.. தனக்கு புடிச்ச டீமோட ஜெர்சியப் போட்டுக்கிட்டு க்ரிக்கெட் பாக்கப் போன ஒருத்தன பைப்பாலயே அடிச்ச டீ ஷர்ட்ட கழட்ட வச்சி ஓடவிடுறாங்க. பசங்கன்னா கூட பரவால்ல பொண்ணுங்ககிட்ட கூட இதே மாதிரி டீஷர்ட்ட கழட்ட சொல்லி மெரட்டிருக்காங்க. இதுதான் உங்க அறப்போராட்டமா? இப்டித்தான் உங்க அறப்போராட்டம் இருக்கும்னா, இது மாதிரி போராட்டங்களுக்குத்தான் நீங்க சப்போர்ட் பன்னுவீங்கன்னா தமிழ்நாட்டிலிருந்து வேறருக்கப்பட வேண்டியவர் முதலில் நீங்கள்தான்..
உங்களுடைய வன்முறை ஒரு நாளும் ஒரு நல்ல தீர்வை கொண்டு வராது. இன்னிக்கு ஐபிஎல்ல சென்னைய விட்டு இடமாற்றம் செஞ்சிட்டத ரொம்ப பெருமைய பேசிக்கிட்டு இருக்கீங்க.. அவன் உங்கள மதிச்சி போயிருந்தா நீங்க பெருமைப் பட்டிருக்காலாம். ஆனா உங்களயும் உங்களைப் போன்ற காட்டுமிராண்டிகளையும் பாத்து பயந்து போய்தான் மாத்திருக்கான். இதுக்கு நீங்க வெக்கப்படனும்.. பெருமைப் படக்கூடாது. பாக்கிஸ்தான்ல கிரிக்கெட் போட்டிகள் நடக்காத்து பெருமை இல்ல.. அசிங்கம். அந்த மாதிரி தான் மாத்தி வச்சிருக்கீங்க நம்ம ஊர.

இந்த அரண்மனை படத்துல சாமிநாதன் சமயல்கட்டுலருந்து “பாஸ்.. சிக்கன் குருமா ரெடி.. ரசம் வச்சா லஞ்ச் ஓவர் “ அப்டின்னுட்டே ஓடி வருவார்.. எதுக்கு வந்துருக்கோம்னே தெரியாம சமையல்காரனாவே மாறிட்டானேன்னு சந்தானம் தலையில அடிச்சிக்குவாரு.. காவிரிய கொண்டு வர்றதுக்காக போராட்டம் ஆரம்பிச்சதயே பலபேர் மறந்துட்டு ஐபில் நிறுத்துனதையும், கடையடைப்பு பன்னதயும் வெற்றின்னு சொல்லிட்டு திரியிறானுங்க.

எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன்..எங்கள் கூட்டத்தை கரை படுத்தவந்த ஒருவந்தான் இந்த கலவரத்த பண்ணிட்டானாம். அடிச்சவன் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு பக்கத்துல நின்னுதான் அடிச்சான். அந்தாளும் கூட சேர்ந்து அதுக்கு எங்கரேஜ்தான் பன்னாரு. இதுல கூட்டத்தில் எங்கோ அடையாளம் இல்லாத ஒருவானாம்.. இந்தாளு இன்னும் முதல்மரியாதை காலத்துலயே இருப்பாரு போல.. அவன் அவன் சுத்தி சுத்தி கேமராவ வச்சி லைவ் டெலெகாஸ்ட் பன்னிட்டு இருக்கான்.

உங்களச் சொல்லி குத்தமில்ல.. நீங்க ஏத்தி விட்டோன்ன நரம்பு முறுக்கேறி உங்க பின்னால லூசு மாதிரி வர்றான்ல சில பேரு அவனுங்களச் சொல்லனும். பாஸ் முன்னால பர்ஃபார்மன்ஸ் பன்றதுக்காக திரு. சீமான் முன்னாலயே ஒரு போலீஸ போட்டு அடிச்சான் ஒருத்தன். இன்னிக்கு அவனோட நிலைமை என்ன? அவன் யாருன்னே தெரியாதுன்னுட்டாரு சீமான். இப்ப அவனப் பத்தி துப்பு குடுத்தா தக்க சன்மானம் வழங்கப்படும்னு போலீஸ் அறிவிச்சிருக்கு. வன்முறைய நம்புனா கடைசில சொந்தக் கட்சிக்காரன் கூட காப்பாத்த வரமாட்டாங்குறதுக்கு இதுதான் சிறந்த உதாரணம்.

காவிரிப் பர்ச்சனையில் பற்றி எரிந்த்து என் தமிழ் இனம்.. தமிழர் வாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.. ஓட்டுனர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டனர். சரி இப்ப தமிழ்நாட்டுல நீ என்ன பன்னிக்கிட்டு இருக்க? அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? அவனுங்களாவது பரவால்ல… பக்கத்து ஸ்டேட் காரங்களதான் அடிச்சான்.. நீங்க சொந்த ஊர் காரனுங்களையே அடிக்கிறீங்க. வன்முறையால் தண்ணீர் வர வைக்க முடியும்னு நீங்க நினைச்சா, அதே வன்முறையால உங்களுக்கு தண்ணீர் விடாமத் தடுக்க உஙக்ளைப் போன்ற வட்டாள் நாகராஜ்கள் நிறைய பேர் கர்நாடகாவுல இருக்காங்கங்குறத மறந்துடாதீங்க.

அப்போது ஏன் ரஜினி குரல் கொடுக்கல? என்ன குடுக்க சொல்றீங்க? ரஜினி கண்டனம் தெரிவிச்சார்னா என்ன நடக்கும்? அவர் மேல உள்ள கோவத்துல இன்னும் நாலு பேர சேர்த்து தான் அடிப்பானுங்க. ராணுவமே வந்தாலும் அசரமாட்டோம் அப்டின்னு இங்க ஒருத்தர் பேசுனா “இவன் யார்ரா கோமாளி”ன்னுட்டு போயிருவாங்க. பாரதிராசா பேசுனா பக்கத்துவீட்டு காரன் கூட கேக்கமாட்டான். ஆனா ரஜினிகாந்த பேசுனா பக்கத்து நாடு வரைக்கும் எஃபெக்ட் இருக்கும். உங்களோட மதிப்பு என்னன்னு தெரியாம நீங்க சலம்பிட்டு இருக்கீங்க.. அவரோட மதிப்பு என்ன்ன்னு தெரிஞ்சதால அவர் அமைதியா இருக்காரு.  

அதுக்கு குரல் கொடுக்கல.. இதுக்கு குரல் கொடுக்கலன்னு கொதிக்கிறீங்களே.. சாரு மானாவாரியா எல்லாத்டுக்கும் குரல் கொடுத்துருக்கீஙக்ளே எத்தனை ப்ரச்சனையை இதுவரைக்கும் தீத்து வச்சிருக்கீங்க.  2002ல மின்சாரத்த தடுத்து நிறுத்தி கர்நாடகாவ ஸ்தம்பிக்க வைக்கப் போறோம்னு ஒரு படைய கிளப்பிட்டு நெய்வேலிக்குப் போனீங்க.. என்னாச்சி.. உங்கள கேட்டு பக்கமே கூட விடல.. அங்க போயும் என்ன பன்னீங்க.. கூட்டமா சேர்ந்து ரஜினிய தான் திட்டுனீங்க.  அதனால அம்ஞ்சல்லி பிரயோஜனம் உண்டா? உங்களுக்கும் உங்களை ஒத்த அலைவரிசையுடைய உங்களது  தோழமைகளுக்கும் காவிரிப் பிரச்சனையும், ஸ்டெர்லைட் ப்ரச்சனையும், நியூட்ரினோ ப்ரச்சனையும் உங்களோட இருப்ப மத்தவங்கிட்ட காட்டிக்கொள்ள உதவுற ஒரு கருவிதானே தவிற அதுக்கு தீர்வு காணனும்னு நீங்க என்னிக்குமே விரும்புறதில்ல. தீர்வு காண விரும்புறன் உண்மையிலேயே மக்களுக்கு நல்லது நடக்கனும்னு நினைக்கிறவன் ஏன் ரஜினிய குறை சொல்லுறான். ரஜினியா காவிரிய அடைச்சி வச்சிக்கிட்டு விட மாட்டேங்குறாரு? ரஜினியா நியூட்ரினோ திட்டத்த தொடங்குனாரு? இல்ல ஸ்டெர்லைட் டாக்குமெண்ட்ல கையெழுத்து போட்டாரா? கமுக்கமா கையெத்த போட்டவன்லாம் கூட்ட்த்தோட கூட்டமா ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி நின்னு போராடிட்டு இருக்கான்.

ரஜினியோட ரெண்டு வரி ட்வீட்டுக்கு ரெண்டு பக்கத்துக்கு நேரடியாக தாக்கி அறிக்கை விடும் பாரதிராஜாவுக்கு, தமிழக முதலமைச்சருக்கோ அல்லது அந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர்களுக்கோ நேரடியாக இப்படி ஒரு அறிக்கையை விட தைரியம் இருக்கிறதா? விட்டீங்கன்னா ஆம்பள..  

கடைசிய பாரதிராஜா அவர்களே… பேசும்போது எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்க.. ஏற்கனவே மக்களால ஓரங்கட்டப்பட்ட நீங்க அடுத்தவங்க ஓரம்க்கட்டப்படுவதப் பத்தி பேசுவதற்க்கு தகுதியற்றவர். ஏன்னா இப்ப மீடியா வெளிச்சம் உங்கமேல படுறதுக்கும் ரஜினியப் பத்தி நீங்க பேசுறதுதான் காரணம்.. இல்லன்னா நாய் கூட மதிக்காது. அப்டி இல்லன்னா ரங்கராஜ் பாண்டேவுக்கு நீங்க குடுத்த இண்டர்வியூவ ஒருக்கா போட்டு பாருங்க.

இது எல்லாத்து அப்புறமும் ரஜினி அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போதும் அதே புன்னகையுடன் எதிர்கொள்வார்.. ஆனா நீங்க தான் கூனிக் குருகி நிக்கப் போறீங்க… அதயும் நாங்க பாக்கத்தான் போறோம்.

ஆனா நிதர்சனம் என்னான்னா நீங்களே தீர்வு காணனும்னு நினைச்சாலும் தீர்க்க முடியாது. ஏன்னா இது ஒரு பாரதிராஜாவோ, இல்ல சீமானோ இல்ல ஒரு ரஜினிகாந்தோ தீர்த்து வைக்கிற விஷயம் இல்ல. ஆட்சியில்  இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் முழு முயற்சி எடுத்தா மட்டுமே தீர்வு காணப்படும் விஷயம். இதுவரை நடந்த அனைத்து ஆட்சிகளும் மக்களுடைய கஷ்டங்கள எப்படி அரசியலாக்கலாம்னு பாத்தாங்களே தவிற மக்களோட கஷ்ட்த்த நிவர்த்தி செய்யனும்னு விரும்பல. மக்களோட நலனில் அக்கரை கொண்ட உண்மையான ஒரு ஆட்சி அமையும்போது தான் இந்த ப்ரச்சனைகளுக்கு முடிவு வரும். அந்தக் காலமும் விரைவில் வரும்.பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 comments:

Anonymous said...

Neeyenda eppa paathalum rajiniku vilakku pudikira.

Anonymous said...

poda echakala!!

Anonymous said...

nee enna antha sotta nayiku sombu adikariya!! mana rosham ulla thamilan evanum antha naiku support panna matan!!

Paranitharan.k said...

சூப்பர்...!

Unknown said...

நல்ல சப்பைக்கட்டு.
கர்நாடகாவில் கன்னடர்கள் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போல் இங்கு தமிழர்கள் கன்னடர்களை தாக்கவில்லை. அறவழியில் போராடினார்கள் போலீஸ் தாக்குதல் போராட்டக்காரர்கள் மீது எல்லை மீறி போனபோது ஒரு இடதாதில் மட்டும் திருப்பி தாக்கிய சம்பவம் இடம்பெற்றது அது மட்டும் அவசரக்குடுக்கை ரஜினியின் காமாலை கண்ணுக்கு தெரிந்து விட்டது.
கர்நாடகாவில் கன்னடர்கள் தமிழர்களை தாக்கியபோதும் தமிழ் நாட்டில் தமிழர்கள் கன்னடர்கள் ஒருவர் மேல் கூட கை வைக்காது போராடிய போராட்டத்தையும் ஒப்பிடும் உமது மூளையை எந்த அருங்காட்சியகத்தில் வைப்பது.

ரஜினி குரல் கொடுத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்து ,இங்கு தமிழர்கள் அற வழியில் போராடினால் அங்குள்ள தமிழர்கள் ஆபத்து , அப்போ கன்னட ரஜினியின் படங்களை பார்த்து விசிலடித்துக்கொண்டு இருக்க சொல்கிறீர்களா ?
அங்கு தமிழர்கள் இருப்பதுபோல் தமிழ் நாட்டிலும்தான் கன்னடர்கள் இருக்கிறார்கள்.

ஜீவி said...

ரஜினியோட ரெண்டு வரி ட்வீட்டுக்கு ரெண்டு பக்கத்துக்கு நேரடியாக தாக்கி அறிக்கை விடும் பாரதிராஜாவுக்கு, தமிழக முதலமைச்சருக்கோ அல்லது அந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர்களுக்கோ நேரடியாக இப்படி ஒரு அறிக்கையை விட தைரியம் இருக்கிறதா? விட்டீங்கன்னா ஆம்பள..

அருமை அருமை

வயதாகி புகழ் வெளிச்சம் மங்கி கண்டுக்க ஆளில்லாமல் போகும்போது பைத்தியம் பலருக்கு பிடிப்பது இயற்கை..
அதுதான் இப்ப பாரதி ராஜாவுக்கும்..

இவர் மகன் மனோஜ் பேட்டி விகடன்.காம் இல் வந்துள்ளது. அதில் கேள்வி இப்படி ...

கேள்வி : " இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?"
மனோஜ் :" பாரதிராஜா இண்டெர்நேஷனல் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு சொல்லி குடுக்கும் கிளாஸ் எடுத்திட்டு இருக்கேன் "

(நிருபர் எப்படி மயங்கி விழாமல் இருந்திருப்பார் என்று தெரியலை )

பாருங்க ... மனோஜ் நடிப்பு கிளாஸ் எடுத்தா அப்பாவோட அந்த நிறுவனம் எப்படி இருக்கும்னு ?

வேறு யாரும் வரலை போலிருக்கு. இதுதான் பா.ராஜாவின் இன்றைய நிலைமை !!

அந்த இன்ஸ்டிடியூட்டையும் ரஜினிதான் வந்து தொடங்கி வச்சார்...

அப்ப எல்லாம் விளம்பரம் தேவை பட்டதால் ரஜினி தமிழர் இல்லையான்னு பா.ரா. வுக்கு ஏனோ தோணலை ..

இப்ப அதே ரஜினியை பத்தி திட்டி பேசி விளம்பரம் தேடும் அவல நிலைஇப்படி தமிழ் உணர்வுன்னு கத்தி கத்தி கண்டுக்க ஆளில்லாமல் போவதுதான் அவரது கடைசி கால நிலைமை !!!

பரிதாப ராஜா ....

Venkatesh subramanian said...

https://www.savukkuonline.com/13500/

Unknown said...

ஒரு சைடு ல இருந்து பார்த்தா அப்டிதா தெரியும்

ரஜினி ரசிகனா இருந்து பேசுற நீ

வருங்காலத்துல வருத்த படுவ அது நிச்சயம்....

Paranitharan.k said...

ஆமா..அங்கே கன்னடன் தமிழனை அடிச்சான்.இங்கே தமிழனே தமிழைனை அடிக்கிறான்.விளங்கிரும்

Unknown said...

ரஜினியோட ரெண்டு வரி டிவீட் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் ஆளும் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாகவும் இருந்ததால் அதனை தோலுரித்து காட்டுவதற்கு பத்து வரி எழுதத்தான் வேண்டும்.
ஈழப்போராட்டம் நடந்து கொண்டு இருந்தபோது மாவீரர் நாளின் போது தலைவர் பிரபாகரன் ஊடகவியலாளரை சந்தித்தார் . உலக ஊடகங்கள் வன்னியில் குழுமி தலைவர் பிரபாகரனை பேட்டி கண்டது.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு இது பொறுக்கவில்லை பிரபாகரனை எதிர்த்து அறிக்கை விட்டார்.
வழக்கம்போல் எதிர்க்கட்சி திமுக தொடங்கி அத்தனை பேரும் வாய் பொத்திக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது தன்னந்தனியனாக ஜெயலலிதாவின் பிரபாகரன் எதிர்ப்பு அறிக்கையை பகிரங்கமாக கண்டித்தவர் பாரதிராஜா.
வரலாறு தெரியாமல் அப்ப சொன்னா ஆம்பளை இப்ப சொன்னா பொம்பளை என்று உதார் விடாதீர்கள்.
தன்னை வைத்து படம் எடுக்கும் மணிரத்னம் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு எறிந்து விட்டார்கள் என்பதால் ரஜினி ஜெயலலிதாவை விமர்சித்தார் .
ஆனால் பாரதிராஜாவைப்போல் தன்னந்தனியனாக விமர்சிக்கவில்லை.
அவர் கருணாநிதி , மூப்பனார் மற்றும் காங்கிரஸ் மத்திய அரசின் முதுகிற்கு பின்னால் பாதுகாப்பாக நின்று கொண்டு விமர்சித்தார்.rajaram said...

திருச்சில உஷா என்ற கர்பனிபென் போலிசாரால் கோல்லபட்டபோது ரஜினி எங்கே சென்றார். பென் பாதுகாப்பு பற்றி நிருபர் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினாறே. முதல்ல தலைவர வீட்ட விட்டு வெளியே வரச்சொல்லு.பொட்டமாரி மாதிரி வீட்டிலே அடங்கி இருக்காரு.

FRANCIS said...

முத்துசிவா அண்ணா ரஜினி பத்தி எழுதுனா படிக்க தேவை இல்லை அதுல எப்புடியும் ஓரவஞ்சனை இருக்கும்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...