ஒருவழியா
ஐபில் ah தடை பன்னா மட்டும்தான் காவிரிலருந்து தண்ணி வரும் அப்டிங்குற முடிவுக்கு தமிழ்நாடே
வந்துருக்கு. நம்ம ஒண்ணும் சொல்றதுக்கில்ல. இந்த ஐபிஎல் தடை போராட்டத்தை ஆரம்பிச்ச கட்சிகளோட ப்ளான் ரொம்ப சிம்பிள்.. கேட்டா ஸாக் ஆயிருவீங்க.. ஐபிஎல் தடைபண்ணி கார்ப்ரேட்ட அடிச்சி, அவங்களுக்கு
வலிச்சி, அது அப்புறம் மோடிக்கு வலிச்சி வலி தாங்காம மோடிஜி கடைசில வாரியம் அமைச்சி அதுக்கப்புறம் நம்ம காவிரிலருந்து தண்ணி வாங்குறதுதான் ப்ளான்.. ஒரு நாலஞ்சி வருஷத்துல வாங்கிடலாம்னு வைங்க.. நேத்து
திரு.ரஜினிகாந்த் பேசும்போது கொண்டாட்ட மன நிலையில இப்ப போட்டி வச்சிருக்க வேணாம்.
நம்ம வீர்ர்கள கருப்பு பேட்ஜ் அணிஞ்சி விளையாடச் சொன்னா இந்த issue என்னன்னு நிறைய
பேருக்கு தெரியவரும்னு சொன்னாரு. உடனே என்னை சூப்பர் கிங்ஸ் CEO அத பரிசிலிக்கிறதாகவும்
சொல்லிருந்தாரு. அடுத்து வேணும்னா பார்வையாளர்கள் கிரவுண்ட்ல கருப்பு கொடி காமிச்சி
தங்களோட எதிர்ப்ப காமிக்கலாம்னும் சொல்லிருந்தாரு. அதயும் இப்ப பல பேர் அப்டியே புடிச்சிக்கிட்டு
கிரவுண்ட்ல கருப்பு கொடி காமிக்கப் போறோம்னு அளப்பறையக் கூட்ட ஆரம்பிச்சிருக்காங்க.
வீடியோ பதிவு
அது
சாத்தியமா அப்டின்னா 90 சதவீதம் சாத்தியம் இல்லை. ஒரு சின்ன உதாரணம்.. ஒரு 2010 ந்னு
நினைக்கிறேன். சென்னியில சென்னை மும்பை மேட்ச்
நடக்க இருந்துச்சி. அப்போ எதோ இலங்கை வீர்ர் ஜெயசூர்யா மும்பை அணில இடம்பெற்றிருண்டு.
அந்த சமயத்துல அவர் தமிழர்களுக்கு எதிரா எதோ சொல்லிட்டாருன்னு அவருக்கு எதிரா கிரவுண்ட்ல
கருப்புக் கொடி காமிக்கப்போறாங்கன்னு ஒரு வதந்தி பரவுச்சி.
அதுக்கு
என்ன பன்னாங்க தெரியுமா?
அன்னிக்கு கிரவுண்ட்டுக்கு கருப்பு கலர் ட்ரஸ் போட்டு வந்தவங்க அத்தனை பேரயும் திருப்பி அனுப்பிட்டாங்க. ஒண்ணு அவங்க வேற கலர் டீ ஷர்ட் வாங்கி போட்டுட்டு
உள்ள வரனும். இல்ல வெளில போகனும். வெளில வந்து திரும்ப ட்ரெஸ் மாத்திட்டு போறது சாத்தியம் இல்ல. ஏன்ன ஏற்கனவே மைல் நீள க்யூல நின்னுட்டுதான் செக்கிங் போயிருப்போம். வெளில வந்து மாத்திட்டு போறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிரும். இல்ல உள்ளயே வாங்க ஒரே வழிதான். அங்க CSK ஸ்டால்ன்னு போட்டு
அதுல CSK டிஷர்ட்டல்லாம் 500 ரூபாய்க்கு வித்துட்டு இருப்பாங்க. 50 ரூவா கூட ஒர்த்
இல்லாத டிஷர்ட்ட வேற வழியில்லாம வாங்கியே ஆகனும். ஏன்ன அன்னிக்கு ஒருநாள்தான் போடப்போறோம்.
அதுக்கப்புறம் அதப் போட்டுட்டு வெளில போனா நாய் தொரத்தும். என் கூட கருப்பு டீ ஷர்ட் போட்டு வந்த ஃப்ரண்டு
வேற வழியில்லாம அந்த டீ ஷர்ட்ட்தான் வாங்கி போட்டப்புறம்தான் உள்ள விட்டானுங்க.
ஒண்ணுமில்லாத
ஜெயசூர்யாவுக்கே அவ்ளோ கெடுபிடின்னா இன்னிக்கு ப்ரச்சனை இவ்ளொதூரத்துல இருக்கும்போது
எவ்ளோ கெடுபிடி இருக்கும்னு பாத்துக்குங்க. கருப்பு ஜட்டி போட்டுட்டு போறது கூட டேஞ்சர்தான். உருவி பாத்தாலும் பாத்துருவானுங்க.
ஏண்ணா
எல்லாம் சந்தோஷமா க்ரிக்கெட் பாக்கலாம்னு டிக்கெட் வாங்கிருப்பீங்க. கூடவே அப்டியே
கொஞ்சம் போராடுவோம்னு ஏடாகூடமா எதாவது முயற்சி பண்ணி , மேட்சே பாக்க விடாம செஞ்சிட்டாங்கன்னா
உங்க பணம்தான் வேஸ்ட்டு. அப்டி கருப்புக்கொடி போராட்டம் நட்த்தியே ஆகனும்ங்குற கண்டிஷன்ல
துணிய எப்டி எப்டி மறைச்சி கொண்டுபோகனுமோ அப்டி அப்டி கொண்டு போய் உள்ள கொடியா தச்சிக்குங்க..
இதுவரைக்கும்
நீங்க யாரும் டிக்கெட் வாங்கல.. இனிமேதான் வாங்குற ஐடியால இருக்கீங்க அப்டீன்னா அந்த
ஐடியாவ ட்ராப் பன்றது நல்லது. ஐபிஎல் ah புறக்கணிக்கிறதுக்காக இல்ல… நம்மள சுத்தி இருக்கவனுங்கல்லாம்
கிருக்கணுங்களா இருக்கானுங்க. அவனுங்க பாட்டுக்கு எதாவது ஒரு ப்ரச்சனைய இழுத்துவிட்டுட்டு
நைஸா எஸ் ஆயிருவானுங்க. கடைசில நீங்கதான் அடி வாங்கனும்.. நம்ம சேஃப்டிய நம்மதான் பாத்துக்கனும். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவங்க சேஃப்பா போய் பாத்துட்டு வாங்க.
3 comments:
இவங்க நோக்கம் கார்பரேட் களை அடிச்சு தண்ணீர் வர வைக்கிறது இல்லை.இன்னிக்கு சினிமாவுக்கு மேல பணம் புழங்கும் இடம் கிரிக்கெட். எப்பவும் நம்ம தமிழ் உணர்வு சிங்கங்கள் எதிர்ப்பை காட்ட நடிகன் தான் கிடைப்பான்.. இப்ப சினிமாவே ஸ்டல்றைக்கால் நஞ்சு போய் கிடக்கு.. அதால சத்யராஜ், பாரதிராஜா, அமீர் மாதிரி மார்கெட் போன ஏ சி ரூம் போராளிகளுக்கும் விளம்பரம் தேட வள்ளி சா கிடைச் சான்ஸ் தான் இந்த கிரிக்கெட் எதிர்ப்பு.
இதுல அந்த மேனேஜ் மெண்ட்டை மிரட்டி பணம் கறக்கும் திட்டமும் சில அமைப்புக்கு கண்டிப்பா இருக்கும்.
அது சரி..இங்கு நடக்கும் ஒரு நாள் கூத்துக்கே இவ்வளவு சவுண்டு விடுறவங்க மாறன் குரூப் ஒரு டீமையே வச்சு கார்பரேட் ட்டா இருப்பதை ஏன் கண்டுக்க வில்லை?
எங்க அடிச்சா தெரியுமோ, எங்க அடிச்சா திருப்பி அடி விழாதோ அங்க பார்த்து வீரத்தை காட்டும் கும்பல்
சிந்திக்க வேண்டிய விடயம்தான்..
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
poda poramboku!!
Post a Comment