தெலுங்குல
ஹீரோக்கள்லாம் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்க மாட்டாங்க.. பெரிய ஹீரோக்கள்னா ஆக்சன் காமெடி..
சுமாரான ஹீரோக்கள்னா ரொமாண்டிக் காமெடி. அதத்தாண்டி ஒரு வித்யாசமான கதைக்களத்துலயோ,
வித்யாசமான கதையிலயோ நடிக்கிறதில்லை. இயக்குனர் சுகுமார். வழக்கமான
தெலுங்கு படங்கள்லருந்து கொஞ்சம் மாறுபட்ட கதைக்களங்கள்ல வித்யாசமான மேக்கிங்ல படங்கள
கொடுத்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்காரு. மெகா பவர் ஸ்டார் ராம்சரண வச்சி அவரு எடுத்துருக்க
படம்தான் ரங்கஸ்தலம்.
அது
என்ன மெகா பவர் ஸ்டார்... இளைய ராஜாகிட்டருந்து
இலைய பறிச்சி… ரகுமாண்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து இளையமான்னு பேர் வச்சிக்கிட்டேன்னு சொல்வாரே ரமேஷ்கன்னா…
அந்த மாதிரிதான். அப்ப மெகா ஸ்டார்கிட்டருந்து மெகாவ உருவி.. சித்தப்பா பவர் ஸ்டார்கிட்டருந்து பவர புடுங்கி.. மெகா பவர் ஸ்டாருன்னு வச்சிக்கிட்டு சுத்துராப்ள. சரி படம் எப்டி இருக்குன்னு
பாக்கலாம்.
வீடியோ விமர்சனம் கீழே
சின்ன
வாத்தியார் படத்துல நம்ம இடிச்ச புளி செல்வராஜ் இருப்பாருல்ல.. ”என் பொன்னோட கெட்டிமேள
சத்தத்த இந்தக் காதால கேக்கனும்” சொல்லுவாரே.. அவர் சின்ன வயசுல ஒரு ஆக்ஷன் ஹீரோவா
இருந்தா எப்டி இருந்துருக்கும்? அதுதான் இந்த
ரங்கஸ்தலம். 1980 ல ரங்கஸ்தலம்னு ஒரு கிராமத்துல
குமார பாபு (மிருகம் ஆதி) , சிட்டி பாபுன்னு (ராம்சரண்) ஒரு அண்ணன் தம்பி இருக்காங்க.
தம்பிக்கு கெட்டிகா மாட்லாடுனாதான் கேக்கும்.
அந்த
ஊருக்கு 30 வருஷமா ஒரே ப்ரசிடெண்டூ ஜகபதிபாபு. ஊரையே அடிமைப் படுத்தி வைச்சிருக்காரு.
முப்பது வருசமா அந்த ஊர்ல ஒரே கொடி ஒரே ப்ரசிடெண்ட்.. வேற யாரும் போட்டியே போடமாட்டாங்க..
அப்டியாரும் போட்டிபோடாலும் நம்மாளு அவங்களப் போட்டுருவாரு. சொசைட்டிங்குற பேர்ல மக்களுக்கு லோன் குடுத்து அவங்க
நிலத்தையெல்லாம் ரவுடிங்கள் வச்சி ஏமாத்தி புடுங்கிக்கிறாரு. ஜகபதிபாபு கட்சியோட கொடில
மலைகளுக்கு நடுவுலருந்து சூரியன் உதிக்கிர மாதிரி இருக்கு. இருங்க.. இருங்க.. உதயசூரியன்
கொடி.. ரவுடிங்கள வச்சி நிலத்த புடுஞ்குறது… இது நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடாவாச்சே..
யோவ் சுகுமார்.. எங்க ஊரப்பத்தி யார்கிட்டயாவது விசாரிச்சியா? விசாரிச்சிட்ட அதான்
இந்த எகத்தாளம்.
தவிர்க்க
முடியாத சூழல்ல சிட்டிபாபுவோட அண்ணன் குமாரபாபு ஜகபதிபாபுவுக்கு எதிரா எலெக்ஷன்ல நிக்க,
பின் விளைவுகள் என்ன அப்டிங்குறதுதான் மீதிக் கதை. பட்த்தோட ஓவரால் மேக்கிங் பாத்தா
அப்டியே நம்ம பருத்தி வீரனையும், ஆடுகளத்தையும் சேர்த்து பாக்குற மாதிரி இருக்கு. ராம்
சரணோட கேரக்டரும் கெட்டப்பும் கார்த்தியையும், தனுஷையும் மிக்ஸ் பன்னி மிக்ஸில அடிச்ச
மாதிரிதான் இருக்கு.
படத்தோட
ப்ளஸ்ன்னு பாத்தா முதல்ல கேமரா.... ராண்டி… 1980 s ah அப்டியே கண்ணு முன்னால நிறுத்திருக்காங்க.
அடுத்து ராம் சரண். எந்த ஒரு compromise உம் பன்னிக்காம ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும்
அதே அழுக்கு கைலி சட்டையோட நடிச்சிருக்காரு.. நம்ம ஊர்ல இதெல்லாம் பெருசில்ல… ஆனா ஒரு
தெலுங்கு ஹீரோ இப்டிலாம் நடிக்கிறது ரொம்ப புதுசு. அதே மாதிரி சரியா காது கேக்காதவரா
நடிப்புலயும் பட்டைய கெளப்பிருக்காரு. அவருக்கு ஜோடியா சமந்தா… எப்பவும்போல மூணு பாட்டுக்கு
மட்டும் வந்துட்டு போகாம நடிக்கவும் நல்ல ஸ்கோப் இந்த படத்துல.. அடுத்து தலைவன்
DSP… மூணு பாட்டு சூப்பர். BGM உம் நல்லா போட்டுருக்காரு. அடுத்து இயக்குனர் சுகுமார்... போரடிக்காத
திரைக்கதை.. அங்கங்க ஒருசில சூப்பர் சீன்ஸ்.. குறிப்பா interval காட்சி செம.
மைனஸ்னு
பாத்தா முதல்ல படத்தோட நீளம்.. படம் பாக்கப் போனா கட்டுசோறெல்லாம் கட்டிக்கிட்டு போகனும்
போல.. ஓடுது ஓடுது மூணேகால் மணி நேரத்துக்கிட்ட ஓடுது. கொஞ்சம் சுருக்கிருக்கலாம்.
அடுத்து கணிக்க முடியிற கதை. குறிப்பா க்ளைமாக்ஸ்
ட்விஸ்ட் அவங்க படத்துல சொல்றதுக்கு கால் மணி நேரத்துக்கு முன்னாலயே நமக்க கெஸ் பன்னிட
முடியிது. அதுக்கப்புறம் சரி சரி முடிச்சுவிடு முடிச்சிவிடுன்னு உக்காந்துருக்க வேண்டியிருக்கு.
நம்மூர்லயெல்லாம்
ஒரு மாதிரி ரத்தக்களறியா படம் எடுத்துட்டு கடைசில “A film by ச்சிகுமார்” ன்னு போட்டா
தியேட்டர்ல ஒரு நாலு பேராச்சும் கை தட்டுவானுங்க. இங்க படம் முடிஞ்ச் A film by
sukumar ன்னு டைட்டில் போட்டதும் தியேட்டர்ல ஒரே மயான அமைதி.. அப்பதான் தெரிஞ்சிது
ஏன் தெலுங்கு ஹீரோக்கள்லாம் ஓரே மாதிரி படங்கள் எடுத்து கொண்ணுட்டு இருக்காங்கன்னு.
ரெண்டு
ஹீரோயின், அஞ்சி பாட்டு, நாலு ஃபைட்டுன்னு ஒரே மாதிரியா வந்துகிட்டு இருக்க தெலுங்குப்
படங்களுக்கு மத்தியில இது ஒரு வித்யாசமான முயற்சி.. கண்டிப்பா ஒருதடவ பாக்கலாம்.
1 comment:
அருமை....என்ன இருந்தாலும் மெகா பவர் ஸ்டார்கிட்ட மெகா staaroda ஸ்டைலும் இல்ல .. பவர் ஸ்டார் ஓட grace கூட இல்ல. கொஞ்சம் உயரம் கூட இருந்திருந்தா ஓகே. சமந்தா தான் சரியான ஜோடி .. சூர்யா , ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் மாதிரி ஹீரோக்களுக்கு
Post a Comment