இதன் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும். நீலகண்டன் திரும்பவும் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது மணி 10.30... ஸ்டேஷனில் நீலகண்டனை எதிர்பார்த்து காத்திருந்த கமலவேணி, அவரை பார்த்ததும் லேசான புண்ணகையுடன் எழுந்து நின்றாள்.. கமலா ஏரியாவில் பெண்களை வைத்து தொழில் செய்பவள். ஸ்டேஷனுக்கு கரெக்டான பங்குகளை அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருப்பதால் போலீஸால் எந்த தொந்தரவுல் இல்லாமல் தொழில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
"என்ன கமலா... இந்த பக்கம்... இன்னிக்கு தேதிக்கு நீ இந்த பக்கம் வரமாட்டியே..."
"உங்கள பாக்க தான் சார்"
"என்ன பாக்கவா... எதாவது புது பார்ட்டி வந்துருக்கா"
"அதெல்லாம் இல்லை சார்...ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கனும்"
"கம்ப்ளைண்டா... சரி சரி.. சீட்டுக்கு வா... " என்று தன்னுடைய இருக்கையை நோக்கி நடந்தான்.. கமலா நீலகண்டனுக்கு எதிரே அமர்ந்து ஆரம்பித்தாள்..
"சார் ரெண்டு நாளா இந்த சரளாவ காணும்.. செல் போன் சுவிட்ச் ஆஃப் ல இருக்கு... வீட்டுக்கும் வரலையாம்"
"யாரு இந்த கோயம்புத்தூர்லந்து வந்தவன்னு ஒரு நாள் அனுப்சி வச்சியே அவளா...கஸ்டமர யாராயாச்சும் கரெக்ட் பண்ணிட்டு ஊரவிட்டு எஸ்கேப் ஆயிருக்கப்போறா..." என்றான் சிரித்துக்கொண்டே..
"இல்லை சார் அவ அப்புடியெல்லாம் பண்ண மாட்டா... இன்னிக்கு அவள ஒரு ஆந்த்ரா காரனுக்கு புக் பண்ணி வச்சிருந்தேன்.. அவன் போஃன் பண்ணி உயிர எடுக்குறான்.. இவ எங்க போனான்னே தெரில.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு"
"சரி கவலப்படாத கண்டுபுடிச்சிருவோம்... ஆமா அவள கடைசியா எங்க பாத்த.. யார் கூட போனா..."
கடைசியா முந்தா நேத்து காலைல பாத்தேன்... அன்னிக்கு அவளுக்கு கஸ்டமர் யாரும் இல்லை.. ஆனா அவ பர்ஸ்னலா ஒருத்தர பாக்க போறேன்னு சொல்லிட்டு போனா...
"யார பாக்க போனா?"
"முன்னாள் M.L.A ராஜமாணிக்கம்" என கமலா கூற நீலகண்டன் முகத்தில் சிறு புண்ணகையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"அப்புடியா சங்கதி... மாப்ள..இந்த மேட்டர வச்சே உன்கண்ணுல வெரல விட்டு ஆட்டல.. என் பேரு நீலகண்டன் இல்லைடா" என நினைத்துக்கொண்டு "சரி நீ ஒரு கம்ப்ளைண்ட் எழுதி குடு... மறக்காம இந்த M.L.A மேட்டரையும் மென்ஷன் பண்ணி குடு.. மத்தத நா பாத்துக்குறேன்.
------------------------------------------------------------
மாலை நான்கு மணி...
ராஜமாணிக்கத்தின் வீட்டில் மறுபடியும் காலையில் வந்து சென்ற மூன்று போலீசாரும் வந்திறங்கினர். போர்டிகோவில் காரை துடைத்துக்கொண்டிருந்த குருமூர்த்தி "என்ன சார்... கண்டுபுடிச்சிட்டீங்களா.. " என கேட்டவுடன்
"டேய் உங்க அய்யாவ கூப்புடுடா" என்றான் நீலகண்டன் சற்று விரைப்பான் தோணியில்.
"அய்யா... அய்யா... " என கூவிக்கொண்டே உள்ளே சென்ற குருமூர்த்தி ராஜமாணிக்கத்துடன் வெளியே வந்தான்.
"என்ன இன்ஸ்பெக்டர்.... சொல்லுங்க..." என்றார் ராஜமாணிக்கம்..
"உங்ககிட்ட நாங்க கொஞ்சம் விசாரிக்கனும்.. கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரமுடியுமா?"
"விசாரிக்கனுமா.. அதான் நடந்தது எல்லாத்தையும் ஒண்ணுவிடாம காலைலயே சொல்லிட்டேனே.. இன்னும் என்ன விசாரணை..அதுவும் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போயி பண்ற அளவுக்கு... வெங்கயாம்" என
பொறுமிய ராஜமாணிக்கத்திடம்
"அய்யா... இது நீங்க கம்ப்ளைண்ட் குடுத்த திருட்டு கேச பத்தி இல்லை... காணாம போன ஒரு பொண்ணை பத்தி..."
"பொண்ணா... எந்த பொண்ணு..என்னையா ஒளருர... யாருட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியும்ல...டேய் குருமூர்த்தி நம்ம வக்கீலுக்கு போன் போட்டு உடனே இங்க வரச்சொல்லு "
"எல்லாம் தெரிஞ்சிதான் வந்துருக்கேன். நீங்க யார வேணாலும் வரச்சொல்லுங்க... இந்த பாருங்க அரஸ்ட் வாரண்டு கூடவே உங்க வீட்ட சோதனை போட search வாரண்டு.. மரியாதையா விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுத்தீங்கன்னா நல்லது.. இப்புடி உக்காருங்க உங்கள சில கேள்விகள் கேக்கனும்" என நீலகண்டன் கூற வேறு வழியின்றி தலையில் கைவைத்துக் கொண்டு ராஜமாணிக்கம் உட்கார்ந்தார்.
நீல கண்டன் ஆரம்பித்தான்...
"ஆமா.. சரளாவுக்கு நீங்க ரெகுலர் கஸ்டமரா இல்லை எப்பவாவதா?"
ராஜமாணிக்கம் கோவத்துடன் "யோவ் யாருய்யா அது சரளா எனக்கு யாரையும் தெரியாது.. "
"சும்ம நடிக்காதீங்க சார்.. முந்தாநேத்து காலையிலதான் பாத்துருக்கீங்க... அதுவும் பொண்டாட்டி புள்ளை எல்லாம் ஊருக்கு போன அப்புறம் பாத்துருக்கீங்க... அப்புடின்னா என்ன அர்த்தம்.." என்று சரளாவின் புகைப்படத்தை அவருக்கு முன்னாள் நீட்டினான்..
"ஓ இந்த பொண்ணா இது வேறய்யா.. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடாத... "
"வேறண்ணா?"
"அந்த பொண்ணு இந்த இலவச வீட்டு மனைத்திட்டத்துல அதுக்கு ஒரு வீடு வேணும்னு என்கிட்ட ஒருதடவ சொல்லிருந்துச்சி.. அதுவிஷயமா பாக்க வந்துச்சி"
"நீங்கதான் இப்ப ஆட்சிலயே இல்லையே உங்கள பாத்து என்ன ப்ரயோஜனம்?"
"யாரு ஆட்சில இருந்தாலும் பணம் குடுத்தா எத வேணாலும் யாரு வேணாலும் வாங்கலாம்... உணமையிலேயே அது விஷயமாத்தான் பாக்க வந்துச்சி அந்த பொண்ணு. மொத்தமே ஒரு ரெண்டு தடவ தான் அந்த பொண்ணை பாத்துருக்கேன்..அதுக்கு மேல எந்த பழக்கமும் இல்லை."
"ஆமா உங்க கூட எவளவு நேரம் பேசிகிட்டு இருந்துச்சி"
" ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. உடனே கெளம்பி வெளிய போயிருச்சி..."
"இதுவரைக்கும் நா விசாரிச்சதுல உங்கள பாத்துட்டு போன அப்புறம் சரளாவ யாருமே பாக்கல... எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு.. உங்க வீட்ட கொஞ்சம் சோதனை போடனும்.. "என வாரண்டை முகத்துக்கு நேராக காட்டிவிட்டு வீட்டிற்குள்ளே காண்ஸ்டபிள்களுடன் சென்றான் நீலகண்டன்.
இருபது நிமிடம் மூவரும் ராஜமாணிக்கத்தின் வீட்டை அலசிவிட்டு பின்னர் பின் வாசலுக்கு சென்றனர். காலையில் பார்த்தது போல மேலோட்டமாக பார்க்கமல் சற்று உன்னிப்பாகவே நோட்டம் விட்டான் நீலகண்டன். மறுபடி அந்த காம்பவுண்ட் சுவரில் க்ளாஸ் அகற்றப்பட்ட இடத்தை அலசினான். உருப்படியக எதுவும் சிக்கிய பாடில்லை. திரும்பி செல்ல மனம்வந்து நடக்க முயன்ற போது ஒருநிமிடம் ஜெர்க்கடித்து நின்று தரையை கவனித்தான். எதையோ ஈக்கள் மும்மராமா மொய்த்துக்கொண்டிருந்தன.
பக்கத்திலிருந்த சிறு குச்சியை எடுத்து ஈக்களை விரட்டி விட்டு பார்த்த பொழுது முகம் சற்று வித்தியாசத்திற்குட்பட்டது. ஒரு சிறிய தசைத்துணுக்கு. "யோவ்... என்ன கண்றாவிய்யா இது.. இத ஒரு கவர்ல எடுத்து போடு.." கான்ஸ்டபிளை பார்த்து சொல்ல,
"சார்... இந்த காக்கா எல்லாம் கறிகடையிலருந்து எதயாவது தூக்கிட்டு வந்து எங்கயாவது இப்புடி போட்டுட்டு போயிரும் சார்.. இதெயெல்லாம் எடுக்கனுமா?" சலித்துக்கொண்டார் அந்த வயதான கான்ஸ்டபிள்.
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல சொன்னத செய்ங்க " என அவரை கடித்த நீலகண்டனின் கண்கள் சட்டென அந்த ரோஜாச்செடிகள் மேல் நிலை கொண்டது.
பூக்கும் தருவாயில் இருக்கும் செடிகளுக்கு இடையே ஆங்காங்கே புதிதாக நடப்பட்ட சில செடிகள் சற்று உருத்தலாக இருந்தது. வேகமாக சென்று ஒரு புதிய ரோஜா செடியை விலக்கிவிட்டு அதன் அடிபகுதியை பார்த்தான்.. நடப்பட்டு ஓரிரு நாட்களே ஆகியிருப்பதை உண்ர்ந்தான். சற்றும் தாமதிக்காமல் ஒரு செடியை கையோடு பிடித்து பிடுங்கினான்.
இதைப்பார்த்த ராஜமாணிக்கம் முகம் சிவக்க.. "யோவ் உனக்கென்ன பைத்தியம் எதுவும் புடிச்சிருக்கா...அது என் பொண்ணு ஆசையா நட்டு வச்ச செடிய்யா... அந்த சரளா என்ன அதுக்குள்ளயா ஒளிஞ்சிட்டு இருக்கா"
அவர் சொன்னதை கொஞ்சம் கூட காதில் வாங்காதவனாய் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து அந்த இடத்தில் லேசாக தோண்ட ஆரம்பித்தான். இரண்டடிதான் தோண்டியிருப்பான்.. மண்வெட்டி பள்ளத்திலிருந்து ஒரு பாலிதீன் பையை கோர்த்து இழுத்தது. சற்று அகலமாக தோண்டி அந்த பாலிதீன் கவரை முழுமையாக எடுத்து வெளியில் கிடத்தினான். ஒரு அடி நீளத்திற்கு எதையோ சுற்றி வைக்கப்பட்டிருந்தது. ராஜமாணிக்கத்திற்கு என்ன நடக்கின்றது என்று புரியவே சில நிமிடங்கள் ஆகியது.
நீலகண்டன் மெதுவாக அந்த பாலீதீன் பையை பிரித்து வெளியே எடுக்க,
உள்ளே............. "முட்டிக்கு கீழே வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் கால்"
குருமூர்த்தி கண்களில் பயம் கலந்த அதிர்ச்சி.. கால்கள் லேசாக நடுக்க ஆரம்பித்தது.... ராஜமாணிக்கம் மயக்கமே அடைந்து கீழே விழுந்தார்.
"அய்யா.. அய்யா... " என குருமூர்த்தி பதற...
"யோவ்,,, இருய்யா... அரசியல்வாதிங்கன்னாலே எதாவது ப்ரச்சனைல மாட்டுன உடனே மயக்கமும் நெஞ்சுவலியும் சேந்து வர்றது சகஜம் தான்" என்றான் அமைதியாக.
அடுத்த பதிவில் முற்றும்

7 comments:
செம த்ரில்லர் பாஸ்... 3 வது பகுதிக்கு வெய்டிங்
ஆகா ... அருமை. ஏதோ ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் படிக்கிற மாதிரி ஃபீலிங். சீக்கிரமே அடுத்த பாகத்தை போஸ்ட் பண்ணுங்க.
திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை சுவாரசியமா இருக்கு.
@Mohamed Faaique
Thanks Mohamed... 3 வது பகுதிய முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா போட முயற்சிக்கிறேன் :)
@ஹாலிவுட்ரசிகன்:
//ஆகா ... அருமை. ஏதோ ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் படிக்கிற மாதிரி ஃபீலிங்.//
ரொம்ப நன்றி பாஸ் :)
@lakshmi
ரொம்ம நன்றிம்மா :)
கண்டுபிடி கண்டுபிடி......!
ஒருத்தன் ஒரு குழி தோண்டிக்கிட்டு இருக்கான். அந்த நேரம் அந்த பக்கமா ரெண்டு பேர் வராங்க. அதுல ஒருத்தர் குழி தோண்டிக்கிட்டு இருக்குறவர பாத்து "என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க" என்று கேட்டார் மற்றொருவர் "மணி என்ன ஆகுதுப்பா" என்று கேட்டார்.
குழி வெட்டிக்கிட்டு இருந்தவர் அந்த ரெண்டு பேருக்குமே ஒரே பதில்தான் சொன்னார்.
அது என்ன பதில் ??
Post a Comment