Wednesday, February 8, 2012

கண்டுபிடி கண்டுபிடி - இறுதிப் பகுதி


Share/Bookmark
 முந்தைய பகுதிகளை படிக்க பகுதி 1  பகுதி 2 .  கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள்... 9 ப்ளாஸ்டிக் பைகள் தோண்டி எடுக்கப்பட்டன. எட்டாவதாக எடுக்கப்பட்ட பையில் எப்பவும் அழகாக காணப்படும் சரளாவின் முகம், ரத்தக்கரையோடு சற்று அகோரமாக காட்சி தந்தது. கிட்டத்தட்ட அனைத்து பாகங்களுமே கிடைத்துவிட, அனைத்தும்  ஃபாரன்ஸிக்கிற்று  அனுப்பப்பட்டு இருந்தது. முதல் இரண்டு பைகள் தோண்டி எடுக்கும் பொழுதே ராஜமாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட, அருகிலிருந்த மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அரசியல் சம்பந்தப்பட்ட கேஸாக இருப்பதால் முழு விபரங்களும் கிடைக்கும் வரையில் ப்ரஸ்ஸூக்கோ  மற்றவர்களுக்கோ விஷயத்தை தெரிவிக்க வேண்டாம் என அசிஸ்டண்ட் சூப்பர் இண்டெண்டன்ட் கூறியிருந்ததால் விபரம் வெளியில் எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

மறுநாள் காலை 9 மணி... நீலகண்டன் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு புறப்பட்டுக்கொண்டு இருக்கையில், கமிஷ்ணர் லைனில் வந்தார்..

"நீலகண்டன்"

"எஸ் சார்.. குட்மார்னிங் சார்"

"குட்மார்னிங்... Body ராஜமாணிக்கம் வீட்டுல கெடைச்சிதுங்கறதுக்கே அவருக்கு அரெஸ்ட் வாரண்ட் இஸ்யூ பண்ணலாம்.. ஆனா வேற யாரயாவது காரணம் காட்டி ஒரு வாரத்துல அப்புடி இப்புடின்னு வெளிய வந்து அப்புறம் நம்ம தலைய போட்டு உருட்டுவாங்க... அதுனால அந்த பொண்ணு வீட்டுக்கு போய் , ராஜமாணிக்கத்துக்கும் அவளுக்கும் ஏற்கனவே தொடர்பு இருக்கமாதிரி எதாவது எவிடென்ஸ் கிடைக்குதா பாருங்க... "

"எஸ் சார்.. நானும் அதான் சார் நெனைச்சேன்.... அவள பத்தி ஃபுல் டீடெய்ல்ஸ் விசாரிச்சிட்டேன்... அவளுக்கு வேற யாரும் இல்லை. ஒரே ஒரு தாத்தா மட்டும் தான்.. அவரும் 6 மாசத்துக்கு முன்னால இறந்துட்டாரு.. அவ அந்த வீட்டுல தான் தங்கியிருந்துருக்கா.. இன்னும் ஒன் அவர்ல நா அந்த வீட்டுல இருப்பேன் சார்"

"குட்... என்னவா இருந்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க"

"ஒகே சார் தேங்க் யூ சார்"

பேசிமுடிக்கவும் ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது..

சீட்டில் சென்று அமரும் போது சரியாக மணி 9.15.. சரளாவின் ஃபாரன்ஸிக் ரிப்போர்ட் டேபிளில் ரெடியாக  இருந்தது... அதை எடுத்து புரட்ட எதுவும் புதிதாக இல்லை...

"இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம்... தலையில் பலமாக தாக்கப்பட்டு இறந்திருக்கிறாள்... இறந்த பின்னரே உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டு இருக்கின்றன.."

அதனை அப்படியே டேபிள் ட்ராயரில் கிடத்தி விட்டு வெளியே வந்தான் "ரங்கசாமி, சேவியர்... ரெண்டு பேரும் என்னோட வாங்க.. அந்த சரளா வீட்டுக்கு போறோம்" என்று இரண்டு கான்ஸ்டபிள்களுடன்  கிளம்பினார்.

----------------------------------
இருபது நிமிட பயணத்தில் திரு.வி.க நகரில் உள்ள சரளாவின் வீடு வந்தது. நல்ல ஜனப்புழக்கம் உள்ள பகுதிதான்... அந்த காலத்தில் கட்டப்பட்ட ஆங்க்லோ இண்டியன் டைப் வீடு. பெரிதாக இல்லாவிட்டாலும் சுற்றிலும் பாதுக்காப்பு கேட்டுடன் போதுமான புழக்கத்துடன் காணப்பட்டது...

பூட்டுகள் உடைக்கப்பட்டு மூவரும் உள்ளே சென்றனர்.. ஒருவர் தங்குவதற்கு தேவையான அத்தனை  வசதிகளும் நிறைந்து காணப்பட்டது.. அருகிலிருந்த ஷெல்ஃப் முழுவதும் மேக்கப் சாதனங்கள்.

சுவற்றில் ஆங்காங்கு சரளாவின் பெரிய சைஸ் ஃபோட்டோக்களும், சரளா தாத்தாவுடன் இருப்பது போலான ஃபோட்டோக்களும் தொங்கவிடப்பட்டு இருந்தான்

"ஒண்ணு விடாம தேடுங்க... எந்த எவிடெண்ஸூம் மிஸ் ஆயிட கூடாது" என கூறிவிட்டு அங்கிருந்த மேசை ட்ராயர்களை குடைய ஆரம்பித்தார் நீலகண்டன்.. வெறும் ஃபோன் பில்களும், சூப்பர் மார்கெட் பில்களும் மட்டுமே கிடைத்தன. டெலிஃபோன் பில்லில் ராஜமாணிக்கம் நம்பர் எதுவும் இருக்கிறதா என நோட்டம் விட, எதுவும் உள்ளது போல தெரியவில்லை.

மேசை ட்ராயரை மூடிவிட்டு அருகிலிருந்த மரபீரோவை பார்த்தான்.. பூட்டி இருந்தது... பீரோவிற்கு மேலே கைவைத்து இரண்டு மூன்று இடத்தில் தடவ அந்த ஒற்றைச்சாவி கையில் சிக்கிக் கொண்டது. கட கட வென பீரோவை திறக்க உள்ளே மேல் அடுக்கில் சுடிதார்களும் நடு அடுக்கில் புடவைகளும் கீழே சில நோட்டு புத்தகங்கள், மற்றும் சில வார இதழ்கள் என காணப்பட்டது...

ஓவ்வொன்றாக கலைத்து தேட , நடுவில் அடுக்கி வைகக்ப்பட்டு இருந்த சேலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட அந்த போட்டோ ஆல்பம் கிடைத்தது. அதனை நீல கண்டன் புரட்டிப்பார்க்க, அது சரளா வெவேறு ஆண்களுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களின் தொகுப்பு. அவற்றில் சில படங்கள் அவள் அருகில் இருப்பவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டதாக் இருந்தது. "கண்டிப்பாக இதில் ராஜமாணிக்கத்தின் ஃபோட்டோவும் இருக்கும்... ஃபோட்டோ மட்டும் கெடைச்சிருச்சின்னா இன்னிக்கு மதியமே அந்த ஆள தூக்கி உள்ள போட்டுடலாம்" என நினைத்துக் கொண்டே வேகமாக ஆல்பத்தை புரட்ட "டக்" கென்று கண்ணில் பட்டது அந்த போட்டோ... நீலகண்டன் முகத்தில் புண்ணகை.

"கான்ஸ்டபிள்ஸ்... தேடுனது கெடைச்சிருச்சி.. வாங்க கெளம்பலாம்" என உற்சாகமாக கூறிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

வரும் வழியிலேயே ராஜமாணிக்கத்துக்கு ஃபோன் செய்தான் நீலகண்டன். இரண்டு ரிங் போனபிறகு அட்டெண்ட் செய்து "ஹலோ யாருங்க பேசுறது?" என்ற குரலை கேட்ட பொழுது தெரிந்தது அது குருமூர்த்தி என்று..

"டேய் உங்க அய்யா இருக்காரா... "

"இருக்காரு.. இப்பதான் டாக்டர் injection போட்டுருக்காரு.. அதான் நல்லா தூங்கிகிட்டு இருக்காரு."

"ஆமா இப்ப எங்க இருக்கீங்க"

"இன்னும் பணிமலர் ஹாஸ்பிட்டல்ல தான் சார் இருக்கோம்"

"சரி உங்க அய்யா முழிச்சாருன்னா நா வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லு" என சிரித்துக்கொண்டே  ஃபோனை வத்தான்.

-----------------------------------
அடுத்த முப்பது நிமிடத்தில் நீல கண்டனின் கார் பணிமலர் ஹாஸ்பிட்டலின் வாசலில் வந்து நின்றது. உள்ளே சென்று ரிசெப்ஷனில் "மிஸ்டர் ராஜ மாணிக்கம் எந்த வார்டு ல இருக்காரு" என கேட்க அங்கிருந்த பணிப்பெண் "ரூம் நம்பர் 308 சார்... தேர்டு ஃப்ளோர்ல லெஃப்ட் சைடு " என்றாள்.

படிவழியாக மேலேறி ரூம் நம்பர் 308 இல் கதவைத் தட்ட , குருமூர்த்தி கதவை திறந்தான். ராஜமாணிக்கம் Bed இல் படுத்தவாறே நீலகண்டனை பயம் கலந்த பார்வையில் ஏறிட்டார். நீலகண்டன் ராஜமாணிக்கத்தை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு தன் முழுபலத்துடன் அருகில் இருந்த குருமூர்த்திக்கு "பொளேர்" என்று ஒரு அரை விட அவன் சுற்றிக்கொண்டு கீழே விழுந்தான். குருமூர்த்திக்கு காதில் "கொய்ய்ய்ய்ய்" என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, கண் அருகில் இருக்கும் பொருட்களை தெளிவாக காட்ட மறுத்தது. போலீஸ் அடியை கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் வாங்குவது இதுதான் முதல் முறை.

தட்டு தடுமாறி எழுந்த குருமூர்த்தியின் முகத்துக்கு நேரே அந்த ஃபோட்டோவை நீட்டினான் நீலகண்டன். ஃபோட்டோவில் குருமூர்த்தியும் மற்றொரு இளைஞனும் சரளாவுடன் அரைகுறை ஆடையுடன் இருப்பதை போல இருந்தது. குருமூர்த்தி திருதிருவென விழிக்க முன்பு விழுந்ததை விட அதிக பலத்துடன் மற்றொரு அரை வலது கண்ணத்தில் விழுந்தது.



பத்து நிமிடம்... ரூம் நம்பர் 308லேயே நீலகண்டன் நாற்காலி போட்டு அமர்ந்திருக்க கான்ஸ்டபிள்கள் பின்புறம் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன் முட்டி போட்டு அமர்ந்திருந்த குருமூர்த்தி தலையை குணிந்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான்.

"அந்த ஃபோட்டோவுல என் கூட இருக்கது என் ஃப்ரண்டு கதிரேசன். அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. எங்க ரெண்டு பேருக்குமே சரளா நல்ல பழக்கம். ஒரு தடவ கதிரேசன் சரளா கூட இருந்தத அவ திருட்டு தனமா வீடியோ எடுத்து வச்சிகிட்டு, கதிரேசன மெரட்டி அப்பப்ப ஐயாயிரம் பத்தாயிரம்னு பணம் வாங்கிட்டு இருந்தா. குடுக்கலன்னா வீடியோவ பொண்டாட்டிகிட்ட காமிச்சிருவேனு மெரட்டுனதால அவனும் குடுத்துகிட்டு இருந்தான். ஆனா அவ அன்னிக்கு M.L.A வ பாத்துட்டு போன அப்புறம் அவ கதிரேசன பாத்து,  M.L.A வுக்கு குடுக்க உடனடியா ஒரு லட்ச ரூவா வேணும்னு தொல்லை பண்ணிருக்கா. ஆனா கதிரேசன் பணம் இல்லைன்னு சொல்ல, அவ வீடியோவ wife  கிட்ட காமிக்கப் போறேன்னு கெளம்பிருக்கா. இவன் என்ன பண்றதுன்னு தெரியாம அங்கருந்த கம்பிய எடுத்து அடிச்சதுல அங்கயே கொஞ்ச நேரத்துல இறந்துட்டா. உடனே கதிரேசன் எனக்கு ஃபோன் பண்ணி நடந்தத சொல்லி அழுதான்.

நாந்தான அவள யாருக்கும் தெரியாம பொதைச்சிடலாம்னு சொன்னேன். அவ ஒரு Pros ங்கறதால அவ காணாம போனாலும் யாரும் கவலப்பட்டு தேட மாட்டாங்கன்னு நெனச்சோம். எங்க  பொதைக்கலாம்னு யோசிக்கும் போதுதான் எனக்கு எங்க அய்யா வீட்டு பின்னாலயே பொதைச்சிடலாம்னு யோசனை வந்துச்சி. யாரும் சந்தேகப்பட்டு அய்யா வீட்டுக்குள்ள அவ்வளவு சீக்கிரம் நுழைஞ்சிட முடியாது. அம்மாவும் , சின்னம்மாவும் வேற ஊருக்கு போயிருக்காங்க.. அய்யாவுக்கு வேற இன்னிக்கு கட்சி கூட்டம்  இருக்கு. 12 மணிக்கு மேலதான் வருவாரு.. அதனால நீ அவள துண்டு  துண்டா வெட்டி நா சொல்ற மாதிரி அங்க வந்து பொதைச்சிடுன்னு சொன்னேன்.. ஆனா அன்னிக்கு எங்க கெட்ட நேரம் கூட்டம்  முன்னடியே முடிஞ்சி அய்யா சீக்கிரம் வந்து கதிரேசன பின்பக்கம் பாத்துட்டாரு.

அய்யா என்ன கத்தி கூப்பிடும் போதே நா புரிஞ்சிகிட்டேன் அது கதிரேசன் தான்னு.. அதான் அவர  எதுவும் பண்ண விடாம நானே தோட்டத்துக்குள்ள தேடுறதுக்கு போனேன். நான் அந்த காம்பவுண்ட்  சுவத்துக்கிட்ட போய் பாக்கும் போது கதிரேசன் அங்கதான் ஒரு மரத்துக்கு பின்னாடி நின்னான். நாதான் அவன அங்கயே இருக்க சொல்லிட்டு அய்யாவ வந்து படுக்க போக சொன்னேன்.

அய்யாகிட்ட  சொன்ன மாதிரி பின்பக்கம் கட்டில் போட்டு படுத்துகிட்டேன். கொஞ்ச நேரம் ஆன அப்புறம் நானும் கதிரேசனும் சத்தமில்லாம ஒவ்வோரு பாலிதின் பையா பொதைச்சோம். நீங்க அய்யாவ சந்தேகப்பட்டு புடிச்ச அப்புறம் கூட நாம மாட்டிக்க மாட்டோம்னு தைரியமா இருந்தேன்.. ஆன ஒருநாள் வெளையாட்டு தனமா எடுத்த இந்த ஒரு ஃபோட்டோவால மாட்டிக்கிட்டேன்" என சொல்லி முடிக்க ராஜமாணிக்கம் என்ன சொல்வதென்று புரியாமல் குருமூர்த்தியை பார்த்துக்கொண்டிருந்தார்.

"இவன உடனே ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க... அந்த கதிரேசனோட அட்ரஸ் வாங்கி அவனையும்  ட்ரேஸ் அவுட் பண்ணுங்க " என நீல கண்டன் கான்ஸ்டபிள்களிடம் சொல்ல, குருமூர்த்தியை இழுத்துச் சென்றனர்.

நீலகண்டன் மெதுவாக ராஜமாணிக்கத்திடம் சென்று "சார் மன்னிச்சிருங்க... உண்மை என்னன்னு தெரியாம உங்களுக்கு செரமத்த குடுத்துட்டேன்.. நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க.. நா வர்ற வழிலேயே  கமிஷ்னருக்கு இன்பார்ம் பண்ணிட்டேன். பாடி உங்க வீட்டுல கெடைச்சிதுங்கற விஷயத்த மறைக்க சொல்லிட்டாரு.. இதுனால உங்க அரசியல் வாழ்க்கைக்கு எந்த ப்ரச்சனையும் வராது"

ராஜமாணிக்கத்திற்கு எதோ பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தது போல் இருந்தது.. "ரொம்ப நன்றி நீல கண்டன்.. நானும் உங்கள பத்தி சரியா புரிஞ்சிக்காம அன்னிக்கு ஏதேதோ பேசிட்டேன்.. என்னையும் மன்னிச்சிடுங்க... அப்புறம் DC நம்ம ஆளுதான்... அவர்ட்ட சொல்லி அடுத்த மாசமே உங்களுக்கு ப்ரமோஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.." என்றார்.

"ரொம்ப தேஞ்க்ஸ் சார்... சரி நா கெளம்புறேன்",, என்று சொல்லி திரும்பி நடக்க ஆரம்பிக்க ராஜமாணிக்கம் தனது மொபைலில் முல்லை வேந்தனுக்கு ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார்

"யோவ் முல்லை.. நாம அந்த் இன்ஸ்பெக்டர் நீல கண்டன பத்தி தப்பா நெனைச்சிட்டொம்யா.. அவன் நம்மாளுய்யா" என்ற ராஜமாணிக்கத்தின் வார்த்தைகள் காதில் விழ சிரித்துக்கொண்டே நடந்தான்  நீலகண்டன்.

-முற்றும்-


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

குறையொன்றுமில்லை. said...

நல்ல கொண்டுபோயி முடிச்சுரிக்கீங்க. சில சமயம் பெரியமனுஷங்க மேல தானே சந்தேகப்படுராங்க. கதை நால்லா இருந்துச்சு வாழ்த்துகள்.

முத்துசிவா said...

ரொம்ப நன்றிம்மா.... :)

ஹாலிவுட்ரசிகன் said...

ரொம்ப த்ரில்லிங்கா கொண்டு போய் டக்கென்னு ஒரு டர்ன் பண்ணி வேற ரூட்ல கொண்டுபோய் முடிச்சிருக்கீங்க. ஒரு ப்ரொஃபசனல் எழுத்தாளரின் நடை போல இருக்கிறது. வாழ்த்துக்கள்.

முத்துசிவா said...

THANKS BOSS :)

Anonymous said...

Very interesting...Seems you have an inborn talent.

ஜீவி said...

சூப்பர்

ஜீவி said...

சூப்பர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...