Thursday, January 3, 2013

கவுண்டர் வழங்கும் சிறந்த பத்து படங்கள் -2012


Share/Bookmark
காலை 6 மணி....கவுண்டர் அப்பதான் தூங்கி எழுந்துரிக்கிறாரு....

"செகப்பி..... மாமனுக்கு ஒரு சொம்பு பால சுண்ட காச்சி நல்ல காப்பியா போடு... நா அப்புடி ஒதுக்குபுறமா  பொய்ட்டு வந்துடுறேன்" ன்னு சொல்லிட்டு கதவ தொறக்க...

ஒட்டுத்திண்ணையில யாரோ படுத்துருக்காங்க...

"இய்ய்ய்ய்ய்ய்ய்... என்னது....நம்ம வீட்டுக்கு முன்னால ஒரு எருமை கண்ணுகுட்டி செத்துக் கெடக்கு... பாத்தா முழுசா எருமை மாதிரியும் தெரியலையே.. பன்னியும் எருமையும் கலந்தாமாறி ஒரு புது மிருகமா
இருக்கு... சரி கிட்டக்க போயி பாப்போம்....." ன்னு கிட்டக்க போக

செந்தில் ஒட்டு திண்ணையில் கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு...

கவுண்டர் ஒரு ஜெர்க் அடிச்சிட்டு "இங்ங்ங்ங்... இது எறுமையும் இல்லை பன்னியும் இல்லை... ஆப்பிரிக்கா கொரங்கு... டேய்... டேய்... காட்டேரி வாயா... எழுந்திரிடா"

செந்தில் மெல்லமா கண்ண தொறந்து பாத்து "அட என்னண்ணே நீங்க தூங்குறவன எழுப்பிக்கிட்டு"

"டேய் கருப்பு நாயே... முழிச்சிட்டு இருக்கவன எப்புடிடா எழுப்ப முடியிங்... சொல்லாம கொல்லாம  வந்து படுத்துட்டு எகத்தாளத்த பாரு...எழுந்திரிடா" ன்னு டிக்கில மிதிச்சோன செந்தில் எழுந்து

"என்னண்ணே மறந்துட்டீங்களா... நீங்கதானே இன்னிக்கு உங்க வீட்டுக்கு சாப்புட வரச்சொன்னீங்க..."

கவுண்டர்: டேய் மெட்ரோ ரயில் மண்டையா... நா உன்ன மத்தியான சாப்பாட்டுக்கு தானடா வரச்சொன்ன்னேன்.. அதுக்குன்னு நீ மொதநாள் நைட்டே வந்து படுத்துருவியா... நல்ல வேளை லேசா விடிஞ்சிருந்ததால குத்து மதிப்பா உன்ன அடையாளம் கண்டுகிட்டேன்... இதே நைட்டுல எவனாவது உன்ன பாத்துருந்தா எதோ தார் டின்னு தனியா கெடக்குன்னு எடுத்துட்டு போயி வித்துருக்கமாட்டானுக..."

செந்தில் : சரி சரி விடுங்க... வாங்க போயி சாப்புடுவோம்...

கவுண்டர் : இங்ங்ங்... என்னது சாப்புடலாமா...மணி இப்ப தான் 6.30 ஆகுது... செகப்பி இப்பதான் அடுப்பே மொழுவிகிட்டு இருக்கா.. இப்பவே நீ திங்கனும்னா அந்தா வேளில காயிது பாரு வரட்டி அதுல ரெண்டு எடுத்து கடிச்சி திண்ணு... சரி நவரு எனக்கு அர்ஜெண்ட்டா வருது.. நா அப்புடி கம்மா கரையோறமா பொய்ட்டு வர்றேன்...

செந்தில் : சரி வாங்க போவோம்..

கவுண்டர்  : என்னது வாங்க போவோமா? நா என்ன கட்சி ஊர்வலமாடா போயிட்டு இருக்கேன்... அடிவயித்த கலக்குனதால போயிட்டு இருக்கேன்... காலையிலயே என்கிட்ட மிதிவாங்கி சாவாத ... போயிரு...

செந்தில் :
கோச்சிக்கிறாதீங்கண்ணே... நீங்க அங்க உக்காந்தா நா இங்க உக்காந்துக்குறேன்...

கவுண்டர் : ஹைய்யோ... என் அவசரம் புரியாம லொள்ளு பண்ணிகிட்டு இருக்கானே... சரி வந்துத் தொலைடா...

கம்மாக்கரை ஓரமா கவுண்டரும் செந்திலும் ஒவ்வொரு பக்கமா உக்கந்துருக்க..

செந்தில் : என்னன்ணே பேசாமயே உக்காந்துருக்கீங்க... போர் அடிக்குது எதாவது பேசுங்கண்ணே...

கவுண்டர் : வேணும்னா உனக்கு போர் அடிக்காம இருக்க ஒரு இளையராஜா கான்செர்ட் வச்சிருவோமா.(கடுப்பா ஹைபிட்ச்ல) கம்மாய் ஓரமா கக்கூஸ் போயிட்டுருக்க நாய்க்கு எண்டர்டெய்ண்மெண்ட் கேக்குது...

செந்தில் : இங்கிலீஸ்காரன் ஸ்டைல்ல கக்கா போலாம்னு பாத்தா எவனுக்கு புடிக்கிது... சரி விடுங்க நேத்து காலைல வா நல்ல படத்த பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே.. அதயாச்சும் சொல்லுங்க...

கவுண்டர் : மக்களே... நல்ல படங்கள பத்தி பேச எப்புடி ஒரு லொக்கேசன் செலக்ட் பண்ணிருக்கான்  பாத்தீங்களா... இந்த நாயே நீங்களே வந்து ரெண்டு அப்பு அப்பிட்டு போங்க... ஆனா இது என்ன  விடாது.. அதுனால இங்கயே ஆரம்பிச்சிருவோம்...

10. கழுகு: 



கவுண்டர் : ஊர்ல எது எதுக்கோ பஞ்சம் வருதுன்னா இவனுகளுக்கு படத்துக்கு பேரு வைக்கிறதுக்கு பஞ்சம் வந்துருது. சொந்தமா ஒரு பேர வைக்க மாட்டேங்குறானுக.. ஏற்கனவே வச்ச பேருகளையே நோண்டி எடுத்து
திரும்ப வச்சிட்டு இருக்கானுக.. ஆனா... கதைக்கு ஏத்த பேரா இருக்கதால ஐ ஆம் இவனுங்கள மன்னிச்சி விடுறேன்... மலையிலருந்து உருண்ட லவ்வேர்ஸ்ஸ தூக்குற இந்த ஹீரோவா வர்ற அவனும் சரி அந்த  பாப்பாவும் சரி குட் ஆக்டிங்... தும்பி ராமைய்யா... ச்ச்சி தம்பி ராமையாவும் கருணாசும் கூட நல்லா பர்பார்மண்ஸ் பண்ணிருக்காங்க...

செந்தில் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்ம்ம்ம்ம்.... அத காதலுன்னு சொல்லுவாய்ங்க  அனைவரும்

கவுண்டர்: டேய் ப்ளாக் பெர்ரி மண்டையா... அவரசரமா வந்தா அது காதல் இல்லைடா.... கக்கா.. வக்காளி ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த லவ்வர்ஸ் விழுந்து சாகுற மலைக்கு உன்ன கூட்டி போயி தனியா மேலேருந்து உருட்டி விடுறனா இல்லையாண்ணு பாரு.

9. தடையற தாக்க:



கவுண்டர் : பல தடைகளுக்கு அப்புறம் இவனுக்கு இப்பதான் வாழ்க்கைல ஒரு ரெண்டு மூணு படம் ஓட ஆரம்பிச்சிருக்கு...

செந்தில் : ஆமா இவரு ஏண்ணே ரெண்டு மூணு தடவ பேர மாத்திட்டாரு...

கவுண்டர் : பேர மாத்துனா படம் ஓடிரும்னு எந்த நாயாவது இவனுக்கு ஐடியா குடுத்துருக்கும்... அதுனால இவனுக மாத்திகிட்டு திரியிறாருனுக... டேய்... என்னதான் பேர மாத்துனாலும் வேலை செஞ்சாதாண்டா
சோறு...

செந்தில் : அய்ய்ய்யய்யயயைய்யயய்யோ...

கவுண்டர்: என்னடா பொதருக்குள்ளருந்து பாம்பு எதுவும் கடிச்சிருச்சா...

செந்தில் : தத்துவம் பிண்ணுரீங்கண்ணே...

கவுண்டர்: இது சுத்தமில்லை தம்பி...


8. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்: 




கவுண்டர் : 50 கோடி நூறு கோடி போட்டு படம் எடுக்குறானுக... ஆனா எவனும் தியேட்டர்க்க்கு போக மாட்டேங்குறானுக எப்புடி போவானுக.. படம் நல்லா இருந்தாதானே போவானுக.. ஆனா இங்க ஒரு நாலு ஸ்மால் பாய்ஸ் செலவெல்லாம் அதிகம் எடுக்காம ஒரு குட் படத்தை எடுத்துருக்கானுக... இந்த படத்துக்கு எல்லாரும் குடு குடுன்னு ஓட காரணமே அந்த தலைப்பு தான்... நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்... படத்த பாத்துட்டு வந்து பாத்தா என் கடையில ரெண்டு மோட்டர காணூம்... எங்கண்ணு பாத்தா...இந்தா பக்கத்துல உக்காந்து முக்கிட்டு இருக்கே பண்ணி அது திருடிட்டு போயி வித்து பேரிச்சம்பளம் வாங்கி திண்ணுருச்சி... அப்புடி இருந்தும் நா ஏன் அவன ஒண்ணும் பண்ணலன்னா... பன்னிய அடிச்சா குடும்பதுக்கு ஆகாதுன்னு என் செகப்பி சொன்ன ஒரே காரணத்துக்காக தான்...

7. கும்கி 




முன்னாடியெல்லாம் க்ளைமாக்ஸ்னா காதலனும் காதலியும் ஒண்ணூ சேர்ர மாதிரி காமிப்பாங்க... பிரிஞ்சி  போன குடும்பம் ஒண்ணா சேர்ர மாதிரி காமிப்பானுக,... ஆனா இப்பல்லாம் க்ளைமாக்ஸ்னாலே எவனாவது ஒருத்தன சாகடிச்சே ஆகனும்னு அடம் புடிக்கிறானுக... எவனுமே கெடைக்கலன்னா புரடியூசர  சாகடிச்சிடுறானுக... ஏண்டா எதையாச்சிம் சாகடிக்காம உங்களால படமே எடுக்க முடியாதா? அந்த கல்யான் ஜூவல்லர்ஸ் பூதத்தோட பையன் தான் ஹீரோ... மூக்கு மட்டும் முட்டி வரைக்கும் வளந்துருக்கு,. இந்த தும்பி ராமைய்யா பேசி பேசியே காது ஜவ்வ கிளிச்சிட்டான்... கடைசில மாணிக்கம் செத்து என் நெஞ்ச கசக்கிட்டான். அப்புடியிருந்தும் இந்த படத்த ஏன் லிஸ்ட்டுல போடுறேன்னா எல்லாம் என் டார்லிங்  லட்சுமி மோடம் காக காரணம்.....

செந்தில்: அண்ணே அது லட்சுமி மோடம் இல்லை லட்சுமி மேனன்...

கவுண்டர்: அட  ரெண்டும் ஒண்ணு தானப்பா... கொளப்புறானுகளே... படத்துல யானை கும்கியோ இல்லையோ லட்சுமி மோடம் "கும்ம்ம்ம்"கி... ஐ லைக் இட் ஆல் யங் கேர்ள்ஸ்...

6. தோணி : 




செந்தில் : எங்க தல தோணிக்கு பெரிய விசில அடிங்க...

கவுண்டர்: கொஞ்சம் அந்த செருப்ப எடுங்க...

செந்தில் : உங்களுக்கு தோணிய புகழ்ந்தா புடிக்காதே... அவரு ஒரு பினிஷர்

கவுண்டர் : என்னது பினிஷரா... அப்புன்னா என்ன வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறவரா?

செந்தில் : அதாவது 50 வது ஓவர் வரைக்கும் அவுட் ஆகாம நின்னு

கவுண்டர் : நின்னு அடுத்தவன் உயிரை எடுக்குறதா... போதுமுடா ஓட்டுனது ரீலு அந்து போச்சு...அடடடா... கண்டத பேசி என் மூட அவுட் பண்ணிட்டானே... என்னால இதுக்கு மேல இந்த படத்த பத்தி பேச முடியாது... தி நெக்ஸ்ட்...


5. சுந்தரபாண்டியன்:



கவுண்டர்: இவனுக அடுத்த ரகம்... க்ளைமாக்ஸ் எடுக்கனும்னாலே உடனே ஒரு கள்ளிக்காட்டுக்குள்ள கேமராவ தூக்கிட்ட் ஓடிருவானுக... இந்த படத்துல என்ன கொஞ்சம் முன்னேறியிருக்கானுகன்னா, எவனையும் கொல்லாம ரத்த
களரியோட முடிச்சிட்டானுக... என் டார்லிங் லட்சுமி மோடத்துக்கு பெரிப்பா மாதிரி இருக்க சசிகுமார் அந்த கரடிக்குட்டி மூஞ்ச பக்கத்துல காட்டி காட்டி 4 தடவ அவள படம் எடுக்கும் போது  மயங்கம் போட  வச்சிருக்காரு.,...

செந்தில் : அண்ணே நா வேணா போயி

கவுண்டர் : உன் மூஞ்ச காமிக்கிறேங்குறீயா...... அவ உயிரோட இருக்கது உனக்கு புடிக்கலையா...

4. பீட்சா :



கவுண்டர்: போன வருசத்துக்கு எப்புடி ஒரு காஞ்சனாவோ அதே மாதிரி இந்த வருசத்துக்கு ஒரு பீட்சா... கொள்ளிவாய் பிசாசுகிட்டயே கபடி வெளையாண்ட நானே ஒரு நிமிசம் பயந்துட்டேன்னா பாத்துகுங்க...

செந்தில்: இல்லையே... நீங்க ராத்திரி ஒண்ணுக்கு கூட தனியா போக மாட்டீங்களாமே... அண்ணிய  தொணைக்கு கூப்புட்டு தான் போவீங்கன்னு கேள்வி பட்டேன்...

கவுண்டர் : என்னது கேள்விப்பட்டியா... ஏண்டா நா ஒண்ணுக்கு போறது ஊருக்குள்ள சேதியா பரவ ஆரம்பிச்சிருச்சா... ஊரு வெளங்கும்...


3. துப்பாக்கி :




செந்தில் : ஐ... சொல்லுங்கண்ணே சொல்லுங்க...

கவுண்டர் : மனசுக்குள் (டேய் டகால்டி நீ என்ன எதிர் பாக்குறண்ணு தெரியும்டி... நா இவன பத்தி எதாவது தப்பா சொல்லுவேன்... அதுக்கு எவனாவது வந்து என்ன அசிங்க அசிங்கமா திட்டுவான்... அத நீ ஜாலியா வேடிக்கை பாக்கலாம்னு தான பாக்குற... அது நடக்காது மகனே) 

தம்பி விஜய் ரொம்ப நல்லா ஆக்ட் பண்ண்ருக்காரு... நா கூட மிலிட்டரி ஆபீசர்னவுடனே வில்லுல வந்து காமெடி பன்ண மாதிரி எதாவது பண்ணுவாருன்னு நெனைச்சி தான் போனேன்... ஆனா அப்புடி எதுவும்
நடக்கல... படத்துல கூகிள் கூகிள் னு அருமையான, கருத்துள்ள, சமுதாய சிந்தனையுள்ள ஒரு பாட்ட நம்ம நாறிய ஜெயராஜ்.. த... ச்சி ஆரிய ஜெயராஜ் போட்டுருக்காருங்க... எல்லாரும் கேட்டு நல்லா குஜாலா இருங்க...

செந்தில்: (செந்தில் மெதுமா) அண்ணே... அன்னிக்கு கூட படம் பாத்துட்டு வந்து பாட்டுல விஜய் மண்டை கீரிப்புள்ள மாதிரி  இருக்குன்னு சொன்னீங்களே அத சொல்லல...

கவுண்டர் : (ஒரு கல்ல எடுத்து அவர் மேல வேகமா வீசி ) என்ன... மாட்டி விடுற நீ... படுவா...


2. நான் ஈ:




கவுண்டர் : மனுசங்கள வச்சி எடுத்தாலே இப்பல்லாம் யாரும் படம் பாக்கதப்ப ஒரு ஈய ஹீரோவா போட்டு ஒரு படம் எடுத்து ஓடவச்சது பெரிய விஷயம் தானப்பா... அந்த படம் பாத்ததுலருந்து நா எந்த ஈயயுமே அடிக்கிறதில்லை... எதப்பாத்தாலும் அந்த நானிப்பயலே வந்து நிக்கிற மாதிரி ஒரு மன ப்ராந்தி...

செந்தில் : அண்ணே... ஒரு சந்தேகம்..

கவுண்டர்: கக்கூஸ் போற எடத்துல கூட சந்தேகமா? சொல்லித்தொலை

செந்தில் : ஆமா நான் ஈ படத்துல நடிச்சதால அவருக்கு பேரு நானியா இல்ல அவரோட பேரு நானிங்குறதால இந்த படத்துக்கு பேரு நான் ஈ யா?

கவுண்டர் :அப்புடியா ராஜா... எனக்கும் ஒரு சந்தேகம்..அதாவது இந்த செருப்பு பிஞ்சதுனால உன்ன அடிக்கப்போறனா இல்லை உன்னை அடிக்கப்போறதால
இந்த செருப்பு பிய்யப்போவுதாங்குறது தான் அது..

செந்தில் : அய்யோ.. சந்தேகம் போச்சு...

கவுண்டர் : ஹ்ம்ம்ம்ம்... செருப்பெடுத்தா தான் வழிக்கு வர்ற...


1. கலகலப்பு : 




கவுண்டர்: போன வருசம் ஒரு படம் பாக்கையில நா ரொம்ப சந்தோசமா இருந்தேன்னா அது இந்த படம்  தான்... சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்ததும் அன்னிக்குதான்.. இந்த வருசம் தியேட்டர்ல ரெண்டு தடவ பாத்த
படமும் இது தான். பல கடுப்புகளூக்கு நடுவுல படத்துக்கு போனா ஒண்ணூ ரம்பத்த போட்டு கர கரன்னு  கழுத்த அறுத்துடுறானுக இல்லை எவனையாச்சும் சாவடிச்சி நம்மளையும் சாவடிச்சிடுறானுக... இந்த கொடுமையெல்லாம் எதுவும் இல்லாம ரெண்டரை மணி நேரம் கலகலப்பா சிரிக்க வச்சி இந்த படம்தான் இந்த வருசத்துல நமக்கு ரொம்ப புடிச்ச படம்...


கவுண்டர் சொல்லிட்டே எழுந்த் ஆத்துக்கரைகிட்ட போக செந்திலும் அங்க வந்து

செந்தில் : சரி படம் சொன்னதெல்லாம் போதும்... வாங்க போயி சாப்புடுவோம்...

கவுண்டர் : சாப்புடலாம் அதுக்கு முன்னாடி அந்த தெரியுது பாரு ஒரு மீனு அத புடிச்சிட்டோம்னா இன்னும் சூப்பரா இருக்கும்...

செந்தில் : மீனா எங்கண்ணே...

கவுண்டர் : அதோ அந்த ஆத்துக்குள்ள பாரு ராஜா... (செந்தில் குமிஞ்ச ஆத்த பாக்க) டிக்கில ஒரே மிதி
         
செந்தில் : அய்யோ அண்ணே எனக்கு நீச்சல் தெரியாது...

கவுண்டர் : ஹைய்யோ... இத கேக்க எவ்வளவு சந்தோசமா இருக்கு... ரெண்டு நாள்ல கடலோரமா பாடி கரை ஒதுங்கும் அங்க வந்து உன்ன கலெக்ட் பண்ணிகிறேன்... பாய்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Anonymous said...

அருமையான நகைச்சுவை பதிவு.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முத்து சிவா .....

Tamil Comedy Videos said...

நல்ல காமெடி போங்க.... எல்லாமே சூப்பர் !!!

யூர்கன் க்ருகியர் said...

நல்ல டமாசு!

Peraveen said...

Super...

Anonymous said...

Hello! Quick question that's entirely off topic. Do you know how to make your site mobile friendly? My site looks weird when browsing from my apple iphone. I'm trying to find a template or plugin that
might be able to correct this issue. If you have any recommendations, please share.
Thanks!
Here is my web page ... skin whitening products

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...