Wednesday, September 3, 2014

RABHASA - எத்தனை தடவ!!!


Share/Bookmark
நம்ம பார்த்திபன் “கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன்” ன்னு ஒரே ஒரு படத்த எடுத்துட்டு  கதையில்லாம படம் எடுத்துட்டேன் கதையில்லாம படம் எடுத்துட்டேன்னு பீத்திக்கிட்டு இருக்காரு.. போயா யோவ் போயா.. இவரு தெலுகு படம்லாம் பாத்ததில்ல போலருக்கு.. கடந்த  10 வருஷமா அங்க எல்லாருமே கதையில்லாமத்தான்  படம் எடுத்துகிட்டு  இருக்காய்ங்க. சும்மா ஒரு படத்த எடுத்துட்டு பெருசா பேச வந்துட்டாரு. தெலுகு ஆக்‌ஷன் படம் எடுக்க தேவையான விஷயங்கள் இதுதான். மூணு வில்லன் குரூப்பு  இருக்கனும். மூணு குருப்பும் தனித்தனியா ஹீரோவ தேடனும். ஹீரோவுக்கு இண்ட்ரோவுக்காக காமெடி  வில்லன் குரூப் கூட ஒரு ஃபைட்டு. மூணு குரூப்பு கூடவும் ஹீரோவுக்கு தனித்தனியா ஒரு ஃபைட்டு  அப்புறம் க்ளைமாக்ஸ்ல மூணு வில்லன்களையும் சேத்து வச்சி ஒரு பெரிய ஃபைட்டு.ஒரு இண்ட்ட்ரோ சாங்கு. இரண்டு  ஹீரோயின்கள் வேணும்.  ரெண்டு ஹீரோயினோடவும் தனித்தனியா ஒரு டூயட்டு.   கடைசில ரெண்டுபேருகூடவும் சேர்ந்தா மாதிரி ஒரு குத்துப்பாட்டு. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம்  அவுட்டு.

இப்போ மூணு வில்லனும் சேந்துட்டானுங்க. டக்குன்னு க்ளைமாக்ஸ் ஃபைட்ட போட்டு படத்த  முடிக்கலாம்னு தோணும். ஆனா முடிக்க கூடாது. அப்ப கொண்டு வர்றோம் ப்ரம்மானந்தத்த.  அதுக்கப்புறம் சம்பந்தம் இருக்கோ இல்லையோ அவர வச்சி ஒரு அரைமணி நேரம் சிரிப்பு காட்டுறோம்.  இப்போ எல்லாரும் கல கலன்னு சிரிச்சிட்டு இருக்கும்போது டக்குன்னு ஃபைட்ட போட்டு சுபம்  போடுறோம். அம்புட்டுதேன். மாஸ் மசாலா ஆக்சன் ரெடி.

நா மேல சொன்ன ஜென்ரல் ஃபார்முலா கதைக்கும், ரபசாவுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபுடிக்க சொன்னா  சத்தியமா கண்டுபுடிக்க முடியாது. அதே தான். இவனுங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கம் என்னன்னா,  படத்துக்கு படம் பேர மட்டும் தான் மாத்துவானுஙக்ளே தவற நடிக்கிர கேரக்டர்கள கூட மாத்த  மாட்டாய்ங்க. ஒருத்தன் ஒரு படத்துல வில்லனா நடிச்ச அடுத்த 50 படத்துலயும் அவனுக்கு அதே ரோல்  தான்.


ஃபர்ஸ்ட் ஹாஃப்ல சமந்தா ப்ரனிதான்னு ரெண்டு ஹீரோயின்கள். பாத்த சீன்களேன்னாலும் கலர்ஃபுல்லா  இருக்கும்போது கொஞ்சம் குஜாலாத்தான் போகுது பிரநிதாவுக்கு பக்கத்துல பாக்கும் சமந்தா செம கப்பியா  இருக்கு. பிரநிதாவயே மெயினா போட்டுருக்கலாம் போல. சிவாஜில ரஜினிக்கு விவேக் ஃபேர் & லவ்லில ப்ளீச்சிங் பவுடர் கலக்குற மாதிரி இதுல  சமந்தாவுக்கு மேக்கப் பவுடர் கூட கொஞ்சம் சுண்ணாம்பையும்  கலந்துவிட்டு அடிச்சிருப்பாய்ங்க போல.  பொங்கலுக்கு மொத நாள் வெள்ளையடிச்ச வீடு மாதிரி  வெள்ளை வெளேர்னு இருக்கு மூஞ்சி. நம்ம  சரோஜாதேவியோட மேக்கப் தேவலாம் போல.

அத்தாரிண்டிக்கு தாரெதிங்குற படத்துல பவன் கல்யான் சமந்தாவோட பாத்ரூமுக்குள்ள போயிடுவாரு.  சமந்தா துண்டோட குளிக்க ரெடியா இருக்கும். பவன் கல்யாண அங்க பாத்தவுடனே இது ஓவர் ரியாக்சன் விடவும் அதுக்கு பவன் “ஆம்பளைங்க குளிக்கிறதயெல்லாம் நா பாக்க மாட்டேன்”ன்னு அசிங்கப்படுத்திட்டு போயிடுவாரு  இங்கயும் சில காட்சிகள்ல எனக்கும் அதே ஃபீலிங்க் தான். முகத்துல இருந்த பழைய கலை அப்படியே  மாறிப்போய் சில சமயத்துல இது பொண்ணாங்குற டவுட் கூட வருது. எனக்கு மட்டும் தான் இப்புடியா  இல்லை எல்லாருக்கும் இப்படியான்னு தெரியல.

ஹீரோயின ஸ்கெட்ச் போட்டு கரெக்ட் பண்றது தான் கடந்த மூணு  NTR படங்களோட ஃப்ர்ஸ்ட் ஹாப் கதை. .  அந்தப் புள்ளைய ஏன் ஸ்கெட்ச் போட்டு கரெக்ட் பண்ணாருங்குறத விளக்குறதுதான் செகண்ட் ஃஹாப்.   இங்கயும் அதே தான். வழக்கம்போல எதிர்பார்த்த மாதிரியே போய்க்கிட்டு இருந்த கதையில ஒரு செம  ட்விஸ்டு. என்னன்னு கேக்குறீங்களா? வழக்கமா படத்தோட கடைசில வர வேண்டிய குத்துப் பாட்டு  ஃபர்ஸ்ட் ஹாஃப்லயே வந்துருச்சி. நா அப்டியே ஸாக் ஆயிட்டேன். அப்புறம் ரெண்டு ஹீரோயினோட ஆடுற பாட்டையும் ரொம்ப எதிர்பாத்தேன். கடைசி வரைக்கும் அதுவும் இல்லை.

படத்துல இன்னொரு புது ட்ரெண்ட பாஃலோ பண்ணிருப்பாய்ங்க . சன் மியூசிக்ல போடுற 30 நிமிட  இடைவிடாத பாடல்கள் மாதிரி இங்க முப்பது நிமிட இடைவிடாத ஃபைட்டு. இண்டர்வலுக்கு முன்னால  கால் மணி நேரமும் பின்னால கால்மணி நேரமும் வெறும் ஃபைட்டு மட்டுமே. படத்தோட முதல் பாதி ஒரு  மணி நேரம் 5 நிமிஷம் ரெண்டாவது பாதி ஒரு மணி நேரம் 40 நிமிஷம். செகண்ட் ஹாஃப் மட்டும் ஒரு  தனி முழு படம் பாத்த எஃபெக்ட்டு.

ரேஸ் குர்ரத்துக்கு அப்புறம் தலைவர் ப்ரம்மானந்தாம் இந்தப்படத்துலயும் பட்டைய கெளப்பிருக்காரு.  செகண்ட் ஹாஃப் போர் அடிக்காம போறதே அவராலதான். “நேனு சிம்ஹாத்ரிக்கு சீக்குவல் ரா” ன்னு  செம பஞ்ச் பேசிட்டு சைடுல வந்து “நா அடிச்சா கொழந்தைங்க ஸ்கூலுக்கு கூட போகாது இவன் எப்புடி  கோமாவுக்கு போவான்”ன்னு சொல்றது செம. தலைவரோட கேரக்டரும் சரி, காமெடி ட்ராக்கும் சரி  ஏற்கனவே பாத்தது தான். ரெடி படத்துல வர்ற கேரக்டரையும், பிருந்தாவனம்ல வர்ற கேரக்டரையும் மிக்ஸில போட்டு அரைச்சி ஒரு புது கேரக்டர். செகண்ட் ஹாஃப்ல நிறைய சீன்ஸ் சுந்தர்.C படம் பாக்குற  மாதிரியே இருந்துச்சி.

பாட்டுங்க எல்லாமே பக்கா. வழக்கம்போல செம கலர்ஃபுல் picturization. தமன் காட்டுல மழை கொட்டோ  கொட்டுன்னு கொட்டிக்கிட்டு இருக்கு. மூணு வருஷம் முன்னால எப்புடி DSP இருந்தாரோ அது மாதிரி  இப்போ தமன். அனைத்து படத்துக்கும் அவருதான். எல்லா பாட்டுமே நல்லாதான் இருக்கு, என்ன ஒரு  கடுப்புன்னா, ஒரே சமயத்துல ரெண்டு மூணு பட பாட்டு ரிலீஸ் ஆகுறப்போ எது எந்தப் படத்தோட  பாட்டுன்னு கண்டுபுடிக்கிறதே ரெம்ப கஷ்டமா இருக்கு. உதாரணமா போன ஒரு மாசத்துல மட்டும்  தமனுக்கு NTR ரோட ரபஸா, ரவி தேஜாவோட “பவர்” அப்புறம் மகேஷ் பாபுவோட “ஆகடு”ன்னு மூணு  பட பாட்டுங்க ரிலீஸ் ஆயிருக்கு. 

NTR வழக்கம் போல சூப்பர். பாட்டு ஃபைட்டுன்னு ஒரே அமர்க்களம் தான். என்ன திரும்ப பிருந்தாவனம்  படத்த பாத்துட்டு வந்த அதே ஃபீல். இவருக்கு இண்ட்ரோ சீன் வைக்கிறதுக்கு பஞ்சமாயிடுச்சி போல.  திரும்ப தம்மு படத்துல வச்ச அதே இண்ட்டோ சீன், மேலருந்து கார்ல குதிக்க, கார் டயரு  கண்ணாடின்னு எல்லாம் சில்லு சில்லா தெறிச்சி ஓடுது. அதே மாதிரி ஃபைட்டுகள்ல ரவுடிங்கள விதவிதமா  அடிச்சி பறக்க விடுவாரு. உதாரணமா தம்மு படத்துல ஓடிவர்ற ஒருத்தன ஒரு அடி அடிச்சதும் அவன்  கீழ கிரிக்கெட் பால் மாதிரி விழுந்து ஒரு பிட்ச் குத்தி ஸ்பின் ஆகி ஒரு ஜம்ப் பண்ணி விழுவான். இங்க  புதுசா ரித்திக் ரோஷன் Coke டான்ஸ் ஆடி தரையில ஜம்ப் பண்ணும் போது coke எம்பி அவர் கைக்கு  வருமே அதே மாதிரி இவரு தரையில கால வேகமா மிதிக்க பக்கத்துல இருக்க ரவுடி தரையிலருந்து ஜம்ப்  பண்ணி அவர் அடிக்கிறதுக்கு வாகா மேல போறான். இன்னொரு விஷயம் நா நோட் பண்ணது  என்னனனா, நா பாத்ததுலயே இதுவரைக்கு அழுகுற சீன்ல நல்லா நடிக்கிறதுன்னா NTR தான்.

எது எப்புடியோ எதிர்பார்த்த மாதிரியே கலர்ஃபுல்லான பாட்டு, தெறிக்கிற ஃபைட்டு அப்புறம் ஒரு அரை  மணி நேரம் குலுங்க குலுங்க சிரிப்புன்னு குடுத்த காசுக்கு ஒர்த் தான். NTR ன் ராமைய்ய்ய  வஸ்தாவாய்யாவை விட இந்த படம் நல்லா தான் இருக்கு. மிகப்பெரிய ஹிட் ஆகலன்னாலும் ஃப்ளாப் ஆயிடாது. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

மெக்னேஷ் திருமுருகன் said...

இன்னும் இங்க சேலத்துல ரிலிஸ்ஸ ஆகலைங்ணா !! நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் . எனக்குத்தெரிஞ்சு ,தெலுங்கு ஹீரோக்களின் ஆக்டிங் கம்பேர் பண்ணும்போது NTR பக்காவா பண்ணுவார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...