Saturday, December 13, 2014

லிங்கா - இதற்குத்தானே ஆசைப்பட்டோம் லிங்கேஸ்வரா!!!


Share/Bookmark
லிங்கா ஆரம்பித்த அடுத்த வாரத்துலயே விகடன் ”லிங்காவின் கதை இதுதான்”னு ஒரு ஆர்டிகிள் போட்டுருந்தாங்க. முதல் முதலா படம் வர்றதுக்கு முன்னால ஊடங்கள் கதைன்னு போடுற ஒரு விஷயம் சரியா இருந்தது இந்தப் படத்துலதான். அச்சு பிசிறாமா அதே கதை தான். மக்களுக்காக அணை கட்டுறதும் அதுக்கு வர்ற ப்ரச்சனைகளும் தான் படம்.

படத்தில் இரண்டு லிங்கேஸ்வரன்கள். கடைசியா சிவாஜியில பாத்த அதே துறுதுறு தலைவர திரும்பவமும் கொண்டுவந்து நிறுத்திருக்காரு KSR. முதல் முக்கால் மணி நேரம் சந்தானம் குரூப்போட லூட்டி செம. அனுஷ்கா மொத ரெண்டு மூணு காட்சிகள்ல பாட்டி மாதிரி தெரிஞ்சாலும் போகப்போக பியூட்டி. யப்பா.. தலைவர் பக்கத்துல அனுஷ்கா வயசான மாதிரி தெரியிது ஹீரோயின மாத்துங்கன்னா கேக்குறீங்களா.

ராஜா லிங்கேஷ்வரன் ப்ரிட்டீஷ் காலத்து கலெக்டர். இரண்டாவது பாதிய முழுவதுமே அவரே ஆக்ரமிக்கிறாரு. என் மக்களுக்கு என் சொந்த செலவுலயே அணை கட்டிக்கிறேன்னு வெள்ளைக்காரனுங்க கிட்ட சவால் விடும்போதும் சரி, ஜாதிப்பிரச்சனையில பிரிஞ்சிருக்க மக்களை ஒண்ணு சேர்க்க கோவமா வசனம் பேசும்போதும் சரி, குடிசையில சிரிச்சிட்டே எல்லாருக்கும் சாப்பாடு போடும் போதும் சரி. பட்டைய கெளப்புறாரு.

உயிர் இருக்கும் வரைக்கும் தான் அதுக்கு பேர் உடம்பு. இல்லைன்னா அதுக்கு பேர் சவம். கோயில்ல இருக்கும் வரை தான் சாமி. யாராவது தூக்கிட்டு ஓடுனா அதுக்குப்பேரு சிலை. அதே மாதிரி தான் சில விஷயங்களுக்கு மதிப்பே, அது சில பேர்கிட்ட இருக்கும்போது தான்.  இந்த பஞ்ச் டயலாக்குகள் அப்படித்தான். ரஜினி பேசுறதாலதான் பஞ்ச் டயலாக் ஃபேமஸ் ஆச்சே தவிற பஞ்ச் டயலாக் பேசுறதால ரஜினி ஃபேமஸ் ஆகல.

நாய் முதல் பேய் வரை விரலை சொடுக்கி பஞ்ச் டயலாக்க பேச ஆரம்பிச்சதன் விளைவு தான் அவரு இப்ப பஞ்ச் டயலாக்குகளே பேசுறதில்லைன்னு முடிவு பண்ணிருக்காரு. நல்லா ஞாபகம் வச்சிக்குங்க கண்ணுங்களா. ரஜினி பேசுற வரைக்கும் தான் பஞ்ச் டயலாக்குகளுக்கு மரியாதை.

ஒரு சிரிப்பாலயே வசனம் பேசுற ஒரே ஆள் தலைவர்தான். ஒரு சீன்ல ப்ரிட்டீஷ்காரன் “லிங்கேஸ்வரன் நீ சொன்னத செய்யனும்” அப்டிம்பான். அதுக்கு தலைவரு அவன கேவலாமா ஒரு பார்வை பாத்துட்டு “ஹா ஹா… யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கன்னு தெரியல போலருக்கு” ம்பாரு. ப்ப்பா.. தாறுமாறு..

ராண்டி பட்டைய கெளப்பிருக்காரு. செம ரிச்சான visuals. ட்ரெயின் ஃபைட்டு சூப்பரா எடுத்துருக்காங்க. க்ளைமாக்ஸ்ல வெய்ட்டான தெறி ஃபைட்டு ஒண்ண போட்டுருக்கலாம். தலைவரோட உடல்நிலைய மனசுல வச்சி KSR முடிஞ்ச அளவு ஸ்டண்ட் காட்சிகளை தவிர்த்திருக்காரு.
படத்தில் தலைவரைத் தவிற வேற யாருக்கும் பெருசா முக்கியத்துவம் தரப்பட்டதா தெரியல. குறிப்பா வில்லன்கள். வில்லன்கள இன்னும் பவர் ஃபுல்லா காமிச்சிருக்கலாம். ஜகபதி பாபுவ மெயின் வில்லனா ஆக்கிருக்கலாம்.

நேத்து முதல் ஷோ பாத்துட்டு ஒருத்தர் விமர்சனம் எழுதிருந்தாரு. அதுல கடைசில ”படம் பாக்கலாமா?- பாக்கலாம்” ன்னு எழுதிருந்தாரு. ஏன் சார் எதோ விஷால் படத்துக்கு விமர்சனம் எழுதுற மாதிரி எழுதிருக்கீங்க. இது ரஜினி படம் சார். தமிழ்நாட்டுல முக்கால்வாசி பேரு குடும்பத்தோட தியேட்டருக்கு போறதே தலைவர் படம் வரும் போது தான். Facebook ல நண்பர் ஒருத்தர் சொன்னது மாதிரி “ரஜினி படத்த விமர்சிக்கிறது பொங்கல், தீவாளி, New year ah விமர்சிக்கிற மாதிரி. ரஜினி படம் வர்றதுங்கறது ஒரு festival அத கொண்டாடனும். கொண்டாடலாமா வேணாமான்னு யோசிக்கக் கூடாது”.

”சிரித்து வரும் சிங்கமுண்டு, புன்னகைக்கும் புலிகள் உண்டு, உறையாமல் உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு”ங்குற மாதிரி நிறைய நரிகள் நாரதர்கள் உலவிக்கிட்டு இருக்காய்ங்க. நம்பாதீங்க.  நிச்சயம் ஏமாற்றமளிக்காத ஒரு தலைவர் படம். 


இணையத்தில் உலவுற திடீர் போராளிகளுக்காகவும், பகுத்தறிவு பகலவன்களுக்காகவும் ஒரு பதிவு on the way. 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Unknown said...

Ungaluku unga talaivar padam festival tan otukuren adu pol tan matra nadigar padamum avanga fans ku so ini review eludum podu idu madiriye eluduga vera padatukum

ராஜா said...

சூப்பர்.. என் விமர்சனம் படிக்க..

http://alonealike.blogspot.in/2014/12/blog-post.html

Anonymous said...

Well said Pravin. Ithey movie vera hero nadithu irunthal intha muthu siva kaluvi kaluvi oothi irupaaru. I too saw the movie and I always love Thalaivar. This movie is not even 10% of Sivaji. First half worst specially stealing gold necklace from the hotel is a comedy.

Anonymous said...

Read ur previous rajni movie reviews, 1st time u mentioned few -ves. u changed or movie is tat wose?

Anonymous said...

// நிச்சயம் ஏமாற்றமளிக்காத ஒரு தலைவர் படம்.// DAI ADMIN NATHARI PAYALA... THERE IS NO NEED TO COMMENT ABOUT THE WHOLE MOVIE.. CLIMAX FIGHT IS ENOUGH... WHOLE THEATER IS LAUGHING... IF YOU ARE A RAJINI FAN.. YOU ARE NOT AT ALL ELIGIBLE TO COMMENT VIJAY OR AJITH MOVIES HERE AFTER...

முத்துசிவா said...

//IF YOU ARE A RAJINI FAN.. YOU ARE NOT AT ALL ELIGIBLE TO COMMENT VIJAY OR AJITH MOVIES HERE AFTER...//

டேய் மெண்டல்.. படம் நல்லா இல்லைன்னா ஃபேன்ஸ் பேசக்கூடாதுன்னா, அஜித் விஜய் ஃபேன்ஸெல்லாம் இந்நேரம் ஊர காலிபன்னிட்டு வெளில போயிருக்கனும்டா.. எதோ நா படம் எடுத்த மாதிரி என்ன பேசக்கூடாதுன்னு சொல்ற.. லாஜிக் பேசுறாய்ங்க பாருய்யா...

ரஜினி இதுக்கு மேல ஹிட் குடுத்து தான் யாருக்கும் proof பன்னனும்னு அவசியம் இல்ல... போய் அரையாண்டு பரிட்சைக்கு படி போ

முத்துசிவா said...

@Anonymous

//1st time u mentioned few -ves. u changed or movie is tat wose?//

Movie is watchable only not that much bad as some persons trying to create.Since its a rajni movie, few areas could have been given more attention.

Anonymous said...

உங்களுக்கு ஏதாவது மெண்டல் problem இருக்கா ?
தப்பா நினைக்காம ஒரு doctor ஐ பார்.
லிங்கா படம் மொக்கைகிறது ரஜினியே ஒப்புக்கொண்டது .நீங்க ஏன் தூக்கி பிடிக்கிறீங்க .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...