கவுண்டர் வெளியூருக்கு
பொய்ட்டு சைக்கிள்ல ஊருக்கு திரும்ப வந்துகிட்டு இருக்காரு. தூரத்துலருந்து பாக்கும்
போது அவரோட அழகுராஜா சைக்கிள் கடையில ஒரே கூட்டமா இருக்கு. ஃபுல்லா கிழவிங்க கூட்டம்.
கவுண்டர் : அய்யோ.. தென்னதிது.. நம்ம கடையில இவ்வளவு கூட்டம்.
அதுவும் ஒரே பல்லு போன கிழவிங்க கூட்டமா இருக்கு. சாகப்போற வயசுல இவளுக சைக்கிள் ஓட்டி
என்ன பண்ண போறாளுக
கடைக்கு பக்கத்துல போகப் போக அந்த கிழவிங்க எதோ வித்யாசமா பண்ற
மாதிரி தெரியிது. என்னன்னு பக்கத்துல ஒளிஞ்சி நின்னு பாக்குறாரு.
எல்லாரும் ஒரு 30 செகண்டு சத்தம் போட்டு சிரிக்கிறாங்க. அப்புறம்
ஒரு 30 செக்ண்டு “ஹ்ம்ம்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்ம்ம்… ஹ்ம்ம்ம்” ன்னு அழுவுறாங்க.
கவுண்டர் : அய்யோ என்னாச்சி இவளுங்களுக்கு. ஏன் அழுவுறாளுங்க
அப்புறம் சிரிக்கிறாளுங்க. ஒரு வேளை நம்ம அழகேசன் மண்டைய எதுவும் போட்டுட்டானா…அவன்
மண்டைய போட்டா யாரும் அழ மாட்டாங்களே..
சரி கிட்டக்க போய் பாப்போம்” ன்னு பக்கத்துல
போறாரு.
பக்கத்துல போனதும் தான் தெரியிது “செந்தில் எல்லாருக்கும் நடுவுல
உக்காந்துகிட்டு .. “சிரிங்க.. சிரிங்க சிரிங்க” ந்க்குறாரு. அப்புறம் கொஞ்ச நேரம்
கழிச்சி “ஹாம் போதும் போதும்.. அழுங்க.. அழுங்க” ன்னு மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்காரு.
கிழவிங்களும் அதே மாதிரி பண்ணுது.
கவுண்டர் வேக வேகமா கூட்டத்துக்குள்ள பூந்து
கவுண்டர்: டேய் மண்டையா… இந்தப் பல்லு போன கிழவிங்களயெல்லாம்
கூப்டு வச்சி என்னடா பண்ணிட்டு இருக்க.
செந்தில் : அண்ணே இவங்களுக்கெல்லாம் நியூ இயர கொண்டாட புது மாதிரியா
சொல்லி குடுத்துகிட்டு இருக்கேண்ணே
கவுண்டர் : என்னது புது மாதிரியான கொண்டாட்டமா? எங்க இன்னொருக்கா
சொல்லு
செந்தில் : இப்போ 2014 முடிய போகுதா..
கவுண்டர்: ஆமா
செந்தில் : ”அதுக்காக எல்லாரும் கொஞ்ச நேரம் அழுவனும்ணே.. எல்லாம்
அழுங்க “ கிழவிங்க எல்லாரும் அழுறாங்க
செந்தில் : இப்போ 2015 ஆரம்பிக்க போகுதா… அதுக்காக கொஞ்ச நேரம்
சிரிக்கனும்னே.. எல்லா சிரிங்க சிரிங்க ந்ன்னு சொன்னதும் எல்லாரும் சிரிக்கிறாங்க
கவுண்டர்
: ஓ.. இத்தானா அந்த புதுவிதமான கொண்டாட்டம்… கொஞ்சம் இப்புடி பக்கத்துல வாம்மா.. ன்னு
செந்தில் கழுத்த புடிச்சி “ஏண்டா பொங்கப்பாணை மண்டையா.. அந்த மூஞ்சிகள பார்றா.. இதுங்கல்லாம்
இன்னும் எத்தனை நாள் தாக்கு புடிக்கும்னு தெரியல. அதுங்கள கூப்டு வந்து உனக்கு புதுவிதமான
கொண்டாட்டம் கேக்குது. இதுங்கல்லாம் இப்ப நியூ இயர் கொண்டாடலன்னு யார் அழுதது.
டக்குன்னு
பக்கத்துல இருக்க ஒரு கிழவிய இழுத்து “மத்ததுங்களாவது பரவால்ல.. நாள் கணக்கு.. இது
மூஞ்சப்பாரு. இதுக்கெல்லாம் மணிக்கணக்கு தான். இன்னும் எத்தனை மணி நேரம் இதெல்லாம்
தாக்கு புடிக்கும்னு தெரியல. நீ கொண்டாடுறதுல யாராவது பட்டுன்னு மண்டைய போட்டுட்டா
நாயே நா யாருக்கு பதில் சொல்றது?
செந்தில்
: ஐ ஆம் வெரி சொரிண்ணே..
கவுண்டர்
: ஏன் குப்பாயிக்கா… இவந்தான் கொழந்தைப் பையன் கூப்டான்னா நீங்களும் கிளம்பி வந்துடுறதா..
குப்பாயிக்கா
: பப்ளூ எதோ பார்ட்டின்னு சொல்லி எங்கள கூப்டான்… அதான் வந்தோம்..
கவுண்டர்
: ஆமா.. இது தாஜ் ஹோட்டால்.. இவரு பாலிவுட் நடிகரு…இவரு பார்டி குடுக்குறாருன்னு ஹீரோயின்
நீங்கல்லாம் கிளம்பி வந்துட்டீங்க… போங்கடீ…புருசனுக்கு வீட்டுல பழைய கஞ்சிய ஊத்தமாட்டாளுக..
இதுங்களுக்கு பார்ட்டி ஒரு கேடு..
செந்தில் : அண்ணேன்.. அதெல்லாம் விடுங்கன்னே.. நீங்க
வழக்கமா சொல்லுவீங்களே.. இந்த மைண்ட் புளோயிங் படங்களப்பத்தி.. கொஞ்சம் சொல்ல முடியுமா?
கவுண்டர்:
டேய்.. டிசம்பர் மாசம் வந்தா போதும் அவன் அவன் லிஸ்டு போடுறேன்னு கெளம்பி வந்துடுறானுக.
எனக்கு பிடித்த படங்கள் எங்க ஆயாவுக்கு பிடித்த படங்கள்னு அவனுங்க தொல்லை தாங்கல. இதுல
நம்ம வேற இதெல்லாம் பண்ணனுமா.
செந்தில்
: அண்ணேன் அடுத்தவங்க சாப்புடுறாங்கன்னு நாம சாப்பிடாம இருக்கோமா. அடுத்தவங்க தூங்குறாங்கன்னு
நாம தூங்காம இருக்கோமா.. அது மாதிரிதாண்ணே இதுவும்.
கவுண்டர்
: என்ன கருத்தா? மூஞ்ச இப்டி பக்கத்துல கொண்டுவா.. துப்பூபூ.. சரி .டேய் பினாயில் டப்பா
மண்டய… வருசா வருசம் நா பாக்குற படத்துல முக்காவாசி படம் மொண்ணையாவும் ஒரு கால்வாசி
படம் மட்டும் தான் நல்லாவும் இருக்கும். ஆனா இந்த வருசம் வெளியூர்களுக்கு போய் தங்கி
பஞ்சர் ஒட்டுணதால நிறைய மொன்னை படங்கள பாக்க முடியல.
செந்தில்
: அய்யோ.. அப்ப எனக்கு டைம் பாஸூ?
கவுண்டர்
: அடிங்க செத்த எலி மண்டையா.. ஒரு நல்ல விஷயம் சொன்னா உனக்கு டைம் பாஸ் போச்சின்னு
வருத்தமா படுற.. சரி எதோ ஆசைப்பட்டுட்ட.. வழக்கமா சொல்லிவேற வச்சாச்சி.. வா அப்புடி
நடந்துகிட்டே பேசுவோம்.
கவுண்டர்
: இந்த வருசத்த மொத மொத இந்த ராசியான தம்பி தான் ஆரம்பிச்சி வச்சாரு. பாரு இந்த வருசம்
அவருக்கு நல்லா இல்லைன்னாலும் மத்த படங்களுக்கு நல்லா இருந்துருக்கு.
செந்தில்
: ஆமா எதுக்குண்ணே இந்த படத்துக்கு ஜில்லான்னு பேருவச்சாங்க?
கவுண்டர்
: (ஹை பிட்ச்ல) ஏண்டா நாயே.. கருப்பு காண்டாமிருகம் மாதிரி இருக்க உனக்கெல்லாம் யாரு
அழகேசன்னு பேருவச்சா? இதெல்லாம் யாராவது கேட்டாங்களா? பொத்துனாப்ள பாத்துட்டு போ நாயே
கவுண்டர் : தமிழ்ல நம்ம ஜில்லா படத்துக்கு போட்டியா
ஹாலிவுட்ல எடுத்து ரிலீஸ் பண்ண படம் தாண்டா இந்த காட்ஸில்லா
செந்தில் : அதுசரிண்ணே நீங்க டைனோசர நேர்ல பாத்துருக்கீங்களா?
கவுண்டர்
: இல்லைடா தவக்களை வாயா. நீ பாத்துருக்கியா?
செந்தில்
: எண்ணன்னே இப்டி கேட்டுட்டீங்க.. நா சின்ன வயசா இருக்கும் போது எங்க தாத்தா வீட்டுல
டைனோசர் தான் வளத்தாரு.. நானும் டைனோசரும் ஒண்ணா தானே விளையாடுவோம்
கவுண்டர்
: (ஆச்சர்யமாக) அய்யோடா.. இப்ப அந்த டைனோசர் எங்கடா அழகேசா?
செந்தில் : (சோகமாக) திடீர்னு ஒரு நாள் அந்த டைனோசருக்கு
பன்றி காய்ச்சல் வந்து செத்து போச்சிண்ணே..
கவுண்டர் : தம்பி… ஒரு மனுசன் புளுகலாம்.. ஆனா டைனோசர்
சைஸுக்கெல்லாம் புழுகக்கூடாது.. மூடிக்கிட்டு வா..
(செந்தில்
திருதிருவென முழுக்கிறார்)
கவுண்டர் : வாழ்க்கையில ஒரே ஒரு விஷயம் தப்பா பண்ணிட்டு
ஏண்டா அத பண்ணோம்னு ஒருத்தன் நெனைச்சி நெனைச்சி அழுக வச்சது இந்தப்படம் தாண்டா..
செந்தில் : ஹிஹி.. கரெக்டா சொன்னீங்கண்ணே..
கவுண்டர் : ரொம்ப பல்ல காட்டாத.. நீ பொறந்தது கூட அந்த
மாதிரி தான். ஒரே ஒரு தடவ நீ பொறந்துட்ட… அதுக்கப்புறம் ஏண்டா நீ பொறந்தன்னு இந்த ஊர்காரனுகள்ளாம்
அழுதுகிட்டு இருக்காங்க. அடுத்தவன சொன்னா மட்டும் சந்தோசம் பொத்துகிட்டு வந்துருமே
செந்தில்
: அண்ணேன் நம்ம ஊருல மரப்பல்லி கேள்விபட்டுருக்கேன்..
அது என்னண்ணே அனாபெல்லி?
கவுண்டர்
: அது ஒண்ணும் இல்லைடா.. ஒரு பேய் இருக்கு. ஆனா அதப்பாத்து நமக்கு பயமே வரலன்னு வைய்யி….
அதுக்கு பேரு தான் அனாபெல்லி
செந்தில்
: அப்போ பயம் வந்துச்சின்னா?
கவுண்டர்
: உன் மூஞ்சிய கொஞ்ச நேரம் காட்டு. பேய் செத்துபோயிரும்
செந்தில்
: நூறு கோடி நூறு கோடி நூறு கோடி..
கவுண்டர்
: டேய் பாதளக்கஉரண்டி வாயா? என்னடா நூறு கோடி?
செந்தில்
: அது ஒண்ணும் இல்லைன்னே.. இந்த பேர எப்ப பாத்தாலும் நூறு கோடி நூறு கோடின்னு கத்தனும்னு
ஒருத்தர் என்கிட்ட சொல்லிட்டு நூறு ரூவா பணமும் குடுத்துட்டு போனாறு.. அதான் பேர பாத்தோன
ஆட்டோமேட்டிக்க வாயில வந்துருச்சி
கவுண்டர்
: எனக்கு ஆட்டோமேட்டிக்கா வாயில இன்னொன்னு வருது சொல்வா? படுவா… நூறு கோடின்னா எவ்வளவுன்னு
தெரியுமாடா?
செந்தில்
: என்னண்ணே இப்டி கேட்டுட்டீங்க.. நா சின்ன வயசுல ஸ்கூலுக்கு போகும் போது எங்க தாத்தா பாக்கெட்
மணியா நூறு கோடி தான் குடுப்பாரு
கவுண்டர்
முறைச்சிகிட்டே பக்கத்துல கிடக்குற கட்டைய பாக்க, செந்தில் நைஸாக எஸ்கேப் ஆயி ஓட ஆரம்பிக்கிறாரு.
இந்த
வருடத்தில் நிறைய படங்கள் வித்தையை இறக்கிருந்தாலும், இந்த வருடத்தில் பெரும்பாலான
நாள் ஊர்ல இல்லாததால பாக்க முடியல. அப்புறம் அந்த படங்கள பாத்துட்டேன்னாலும், தியேட்டர்ல
பாக்காத படங்களை பத்தி தப்பா எழுதக்கூடாதுங்குற காரணத்துனால (Professional Ethics)
இதோட முடிச்சிக்குறேன்.
8 comments:
Ayyo Thambi... Thayavu seinju un blog close pannu... Thaanga mudila...
சூப்பரப்பு !
Apo Linga Kochadayan lam nenga theater la poi pakalaya.. Ada lam enda list la sepiga...
@karthu:
//Thayavu seinju un blog close pannu... Thaanga mudila...//
அண்ணே... என் blog ah close பன்ன சொல்றதுக்கு பதிலா உங்க browser la open பன்னி வச்சிருக்க என் blog page ah நீங்க close பண்ணா யாருக்கும் ப்ரச்சனை இல்லைல்ல..
அதுக்கும் மேல எலிக்கெல்லாம் பயந்துகிட்டு வீட்ட கொளுத்த முடியாது..
எலின்னு உங்களைசொல்லலீங்கண்ணா.. பொதுவாச் சொன்னேன்...
//Apo Linga Kochadayan lam nenga theater la poi pakalaya.. Ada lam enda list la sepiga...//
அதெல்லாம் ஆண்டவன் கணக்கு...
tamilnews24x7 has left a new comment on your post "வித்தையை இறக்கிய படங்கள் -2014":
////தியேட்டர்ல பாக்காத படங்களை பத்தி தப்பா எழுதக்கூடாதுங்குற காரணத்துனால (Professional Ethics)///
But உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்...
அன்னபெல்லிக்கு விளக்கம் சூப்பர்...
--------------------
Ponniyinselvan/karthikeyan has left a new comment on your post "வித்தையை இறக்கிய படங்கள் -2014":
நல்ல நகைச்சுவை பதிவு.பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம். ஒருவர் ப்ளாக்கை மூட சொல்ல யாருக்கு அதிகாரம் உண்டு?.மூதாஸ் சொன்னவர் தன ப்ளாக்கை மூடட்டும்.
--------------------------
Anonymous has left a new comment on your post "வித்தையை இறக்கிய படங்கள் -2014":
Karthu motheviii Such a faggot...cunt why did u come here for...get the f**k out of from here cunt!!!!
enga kaththi nala padam elaya ?? Please konjam nadunilaya eludunga , if you are a ajith fan please write review for his movies only.
vijay padam athikamaaga vasool siethathu enru sonnal mattum athu kaasu koduthu solla vaiththau annal matravar padangal vasool seithathu enru sonnalathu unmai ithu enna niyaayam enru enakku puriyavillai... thuppaki,jilla, kathi ella vijay padathukkum ithe karuthu thaan naan theriyaamal ketkiren vijay mattum thaan kettavar matra ellarum nallavargala? illai mokka arammbam padathai hit akka ajith rasikargal irukkum bothu kaththi padathai hit aakka vijay ku rasikargale illai enru arthama?
Post a Comment