குறிப்பு: இது
சமூகவலைத்தளங்களில் உலவும் பல்வேறு மனிதர்களைப் பற்றிய ஒரு பொதுவான பதிவு. எந்த ஒரு
தனிநபரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல (அப்டின்னு தான் சொல்லுவேன். நீங்களா தான்
புரிஞ்சிக்கனும்) தமிழ்நாட்டுல முன்னால
சினிமா துறையோட பிஸினஸ விரிவாக்கவும், பல மடங்கு பெருக்கவும் ரஜினிங்குற ஒருத்தர் தேவைப்பட்டாரு.
ஆனா இப்போ சினிமா மட்டும் இல்லாம சினிமா சார்ந்த அத்தனை துறையோட பிஸினஸ பெருக்கவும்,
அத மக்கள்கிட்ட கொண்டு போகவும் ரஜினி மட்டுமே தேவைப்படுறாரு. சின்ன உதாரணம் கடந்த ரெண்டு
வாரத்துல தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆன அத்தனை வாரஇதழ்களோட அட்டைப்படங்களையும் டைட்டிலையும்
பாத்தாலே போதும். எல்லாத்துலயும் ரஜினி, ரஜினி ரஜினி மட்டும் தான். அடுத்த சூப்பர்ஸ்டார
தேடுன குரூப்பு கூட இதுல விதிவிலக்கு இல்லை.
அதுமட்டும் இல்லை.
ஒருத்தனுக்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டாலோ இல்லை நாலு பேரு அவன உத்து கவனிக்கனும்னு ஆசைப்பட்டாலோ
அதுக்கும் ரஜினி ஒருத்தர்தான் தேவைப்படுறாரு. அரசியல்வாதிகள்தான் இந்த அல்ப ட்ரிக்க
யூஸ் பண்றாய்ங்கன்னா, சமூக வலைத்தளங்கள்ல சில அல்பங்களும் இதே ட்ரிக்கதான் யூஸ் பண்ணிட்டு இருக்குங்க. அதாவது அவிங்கதான்
பகுத்தறிவு பகலவன்கள் மாதிரியும் மத்த அனைவருக்கும் அடிப்படை அறிவுங்குற ஒண்ணே இல்லாத
மாதிரியும் அதுங்களே நினைச்சிக்கிறது தான் இதுல ஹைலைட்.
முதல்ல லொல்லு
சபா மனோகர் மாதிரி ஒருத்தரு. ஆனா லொல்லு சபா மனோகர விட அதிகம் காமெடி பண்ணக்கூடியவரு.
இப்ப இவரு என்ன சொல்றாருன்னா ”ரஜினி தவிர்க்கப்படவேண்டியவர்”ன்னு
ஒரு ரெண்டு பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதிருக்காப்டி. அதுமட்டும் இல்லாம கடந்த ரெண்டு
நாள்ல அவரு போட்ட போஸ்ட் எல்லாம் பாத்தா எல்லாமே ரஜினியை வசை பாடி போட்டது தான்.
ஏண்டா பாடிசோடா..
மண்டைய மறைச்சாலும் மண்டை மேல இருக்க கொண்டைய உன்னால மறைக்க முடியுதா? ரஜினி தவிர்க்கப்பட
வேண்டியவர்னு சொல்லிட்டு, ரஜினியப் பத்தி ரெண்டு பக்கத்துக்கு உக்காந்து போஸ்ட் எழுதிருக்கியே,
இதான் நீ ரஜினிய தவிர்க்குற லட்சனம். ரஜினிய புடிக்காத மாதிரி காட்டிக்கிற உன்னாலயே
அவர தவிர்க்கமுடியலையே.. அவரப்புடிச்ச மத்தவங்க எப்புடிடா தவிர்ப்பாங்க.
அதுமட்டும் இல்லை.
மோடி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிச்சா இவனுங்க
பதட்டமாயிடுறாய்ங்க. அதப் பாத்த அடுத்த செகண்டு “ரஜினி அரசியலுக்கு வந்தால் ஒண்ணும்
பன்னமுடியாது.. ரஜினிக்கு அரசியல் வாய்ஸ் இல்லவே இல்லை” ன்னு பதட்டத்துல ஸ்டேட்டஸ அள்ளித் தெளிக்கிறாய்ங்க.
சரி ரஜினி அரசியலுக்கு வந்தாதான் ஒண்ணும் நடக்காதே.. அப்புறம் ஏன் உங்களுக்கு கால்
உதறுது? ரஜினிக்கு மோடி வாழ்த்து சொன்னா என்ன ஒபாமா வாழ்த்து சொன்னா என்ன? செல்வாக்கு
இல்லாத ஆளப்பத்து உங்களுக்கு ஏன்யா வாய் கொழருது?
அப்புறம் இன்னொரு
யக்கா இருக்காங்க. நிறைய படிச்சவங்க. பகுத்தறிவுல இவங்கள அடிச்சிக்க ஆள் கிடையாது.
அதாவது இவங்களோட பகுத்தறிவுல இவங்க கண்டுபுடிச்ச விஷயம் என்னன்னா ‘சின்னக் குழந்தையா
இருக்கும் போது ரஜினிய புடிச்சா தப்பு இல்லையாம். ஆனா படிச்சப்புறம் ரஜினிய புடிக்கக்
கூடாதாம். கமலத்தான் புடிக்கனுமாம். அதுதான் யக்காவோட பகுத்தறிவுக் கொள்கை.
அதாவது இது எப்டிக்கீதுன்னா
நா சின்ன வயசுல எங்க அப்பாவ அப்பான்னு கூப்புடுவேன். ஆனா படிச்சப்புறம் இவரு எங்க அப்பா
மாதிரி தெரியலையே.. பக்கத்து வீட்டுக்காரர பாத்தாதான் எங்க அப்பா மாதிரி தெரியிறாரு.
எத்தனை வருசத்துக்கு தான் ஒருத்தரையே அப்பான்னு கூப்டுறது. இனிமே பக்கத்து வீட்டுல
இருக்கவரையே அப்பான்னு கூப்புடுவோம்னு முடிவு
பண்ற மாதிரி இருக்கும்.
அதுமட்டும் இல்லை.
யக்காவுக்கு வடிவேலு ஃபோட்டோவ விட ரஜினி ஃபோட்டோவ பாத்த ரொம்ப ரொம்ப சிரிப்பு வருதாம்.
யக்காவ பாருங்கைய்யா.. என்னா அழகு.. இந்தப்பக்கம் பாத்தா ஐஸ்வர்யா ராய மடிச்சி வச்சா
மாதிரி இருக்காங்க. அந்தப் பக்கம் பாத்தா காத்ரீனா கைஃப வடிச்சி வச்சா மாதிரி இருக்காங்க.
கவுண்டர் சொல்றா மாதிரி.. “என்னா மூஞ்சி… உலகத்து அழகுகளையெல்லாம் ஒட்டுமொத்தமா சேத்து
வச்சா மாதிரி இருக்கு இந்த மூஞ்சி.. காலங்காத்தால வேலைக்கு போறவன் இந்த மூஞ்ச பாத்துட்டு
போனா போதும்… ஸ்பாட் அவுட்” . அப்படிப்பட்ட யக்காவுக்கும் ரஜினியை பாத்த சிரிப்பு வராம
என்ன செய்யும். யக்காவுக்கு திடீர்னு பப்ளிசிட்டி வேணும்னா உடனே ஒரு ஜாதிப்போஸ்ட போட்டு தேடிப்பாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு.
இதுல அல்டிமேட்
காமெடி என்னன்னா இவய்ங்களுக்கு ரஜினியை புடிக்காததுக்கு ஒரு காரணம் சொல்லுவாய்ங்க பாருங்க.
பகுத்தறிவு வாதிகள்னா இவய்ங்கதான். அதாவது ரஜினி இந்த ஊர்ல சம்பாதிச்சி வெளியூர்ல சொத்து
வாங்குறாராம். ரஜினி இந்த ஊருக்கு எதுமே செய்யலையாம்.
இல்லை நா தெரியாமத்தான்
கேக்குறேன். ரஜினி நம்மூர்ல சொத்து வாங்குறதால வர்ற வரிப்பணம் கிடைக்காததுனால தான்
தமிழ்நாடு இன்னும் பின் தங்கியிருக்கு. இல்லைன்னா அகில உலக லெவல்ல நம்பர் ஆயிருக்கும்
அப்டித்தானே ராஜாக்களா? ஏண்டா நொன்னைகளா Swizz Bank ல பத்தாயிரம் கோடி இருபதாயிரம்
கோடின்னு கருப்பு பணம் வச்சிருக்கவன்கிட்டல்லாம் இத கேக்க துப்பில்லை. வந்துட்டாய்ங்க
ரஜினி கால்ல விழுகுறதுக்கு.
சரி ரஜினி ஏன்யா
தமிழ்நாட்டுல சொத்து வாங்கனும்? அவரு சம்பாதிச்ச காசுல எங்க வேணா சொத்து வாங்குவாறு
அதுல உனக்கென்ன எரியிது? நா தெரியாமத்தான கேக்குறேன் இப்போ துபாய்ல சம்பாதிக்கிற காசுல
துபாயில மட்டும் தான் செலவு பண்ணனும், இந்தியாவுக்கு யாரும் எடுத்துட்டு போகக்கூடாதுன்னு
ஒரு சட்டம் போட்டாய்ங்கன்னா இன்னிக்கு தமிழ்நாட்டுல கால்வாசி பேருவீட்டுல அடுப்பெரியாது.
இவனுங்க மட்டும் துபாய், சிங்கப்பூர்ன்னு போய் சம்பாதிச்சி இங்க அள்ளிட்டு வருவாய்ங்களாம்
யாரும் கேக்கக்கூடாதாம். ஆனா ஒருத்தர் கர்நாடகாவுல சொத்து வாங்குனா எதோ பெரிய குத்தமாம்.
ஒரு குடும்பம்
தமிழ்ல 8 சேனல், தமிழ் இல்லாம ஆந்த்ரா கன்னடா கேரளாவுல ஒரு 22 சேனல்னு மொத்தம் 30 சேனல்
வச்சி எவ்வளவோ சம்பாதிக்கிறாங்க. அவருக்கு எங்கெங்க சொத்து இருக்குன்னு எவனாவது கேட்டீங்களா?
இல்லை அவரு தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சிருக்காருன்னு கேட்டீங்களா? ரஜினி நாலு வருஷத்துக்கு
ஒரு தடவ படம் நடிக்கிறாரு. அத ஒரே ஒரு தடவ நீ 100 ரூவா குடுத்து தியேட்டர்ல பாக்குற.
இந்த மாதிரி வக்கனையா பேசுற நாயிங்க டிவிடி வாங்கி திருட்டுத் தனமாதான் பாக்குதுங்க.
அதுக்கே அவர என்ன செஞ்ச என்ன செஞ்சன்னு இத்தனை கேள்வி கேக்குறியே, ஒவ்வொரு மாசமும்
200 ரூவா குடுத்து, அவன் சேனல பாத்து, அவன் போடுற add எல்லாம் பாத்து அவனுக்கு எவ்வளவோ
லாபத்த குடுத்துருக்கீங்களே அவர்கிட்ட எவனாவது கேட்டுருக்கீங்களாய்யா?
ரஜினி தமிழ்நாட்டுக்கு
எதுவும் செய்யலையாம். ங்கொய்யால எதுக்குடா செய்யனும். நீ என்ன செஞ்சிட்ட அவருக்கு இல்லை
நீ என்ன செஞ்சிட்ட இந்த ஊருக்கு? ஒரு சின்ன உதாரணம். நாலு வருஷம் முன்னால ஒரு வெள்ள
நிவாரண நிதி எல்லார்கிட்டயும் திரட்டுனாங்க. அப்போ தமிழ்நாட்டுல நாலைஞ்சி தடவ முதல்வரா
இருந்த ஒருத்தர், அதுக்கு ஒரு அமவுண்டு குடுக்குறாரு. எப்புடின்னு கேளுங்க. அதாவது
அவரு ஒளியின் ஓசை என்கிற ஒலகப்படத்துக்கு கதை வசனம் எழுதியதால கிடைச்ச 5 லட்ச ரூபா
சம்பளத்த நிவாரணத்துக்காக குடுக்குறாரு. அவரோட சொத்துக்கணக்குக்கு எத்தனை சைஃபர் போடுறதுன்னே
இன்னும் தெரியாம முழிச்சிட்டு இருக்காய்ங்க. அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச அந்த ஒலகப்பட
சம்பளத்த மட்டும் நிவாரணத்துக்கு குடுக்குறாரு. ஏன் அங்க போய் நாலு கேள்விய கேக்க வேண்டியது?
அப்புறம் இன்னொரு
கிருக்கன். 64 வயதில் 20 வயது பெண்களுடன் டூயட் பாடுறாருன்னு ஒரு குறை சொல்றான். சரிங்க
மிஸ்டர் மெண்டல், நீங்க சொல்ற மாதிரியே 20 வயசு பொண்ணுங்க வேணாம். அந்த காலத்துல அவரோட
நடிச்ச ஸ்ரீபிரியா, அம்பிகாவையே இப்பவும் ஹீரோயினா போட்டு எடுப்போம். நீ பாக்குறியா
படத்த?
அப்புறம் சமீபத்துல
”ச்சீ மான்” ன்னு இன்னொரு கிருக்கன் ஒரு அல்டிமேட் காமெடி பண்ணாப்டி. அதாவது “ரஜினி அரசியலுக்கு
வந்தால் நாங்கள் மோதிப்பார்க்கத் தயார்”ன்னு ஒரு அறிக்கை. அதாவது சார் எப்டின்னா, காஷ்மீர்லருந்து
கன்யாகுமரிவரைக்கும் உள்ள அத்தனை அரசியல் வாதிகளையும் மோதி ஜெயிச்சிட்டு ஸபெசல் பர்மிசன்ல
ரஜினியோட மோத வந்துருக்காரு. ஏற்கனவே அரசியல்ல இருக்கவய்ங்க
கூட மொதல்ல மோது சனியனே. அரசியல்லயே இல்லாத ஒருத்தர அரசியலுக்கு வரவச்சி அதுக்கப்புறம்
மோதுறாராம். ஒருத்தனுக்கு எந்திரிச்சி நிக்கவே வக்கில்லையாம்.. ஆனா… சரி விடுங்க அத
ஏன் என் வாயால சொல்லிகிட்டு.
சவால் விடுறாராம்
சவால். சரி நீயும் ஒரு டைரக்டர் தானே.. ‘நா ஒரு படம் டைரக்ட் பண்ணி ரிலீஸ் பண்றேன்.
ரஜினி ஒரு படம் நடிச்சி ரிலீஸ் பண்ணட்டும் மோதிப்பாக்கலாம்”ன்னு நீ ஒரு சவால் விட்டியன்னா ஆம்பளடா.
ஒரு முதலை தரையில இருக்கும்போது அதுக்கு முன்னால போய் நின்னு டான்ஸ் ஆடிட்டு பெரிய
இவன் மாதிரி பீத்துறது பெரிய விஷயம் இல்லை. தில் இருந்தா அதே டான்ஸ அந்த முதலை தண்ணிக்குள்ள
இருக்கும்போது போய் பக்கத்துல ஆடிப்பாரு. டங்குவாரு அந்துரும்.
22 comments:
சூப்பர்ணா ! கலக்குங்க !! அதுக்குன்னு நான் ஒன்னும் வெறித்தனமான ரஜினி ரசிகன் கிடையாது ! ஆனா , ரஜினிமீது வைக்கப்பட்ட இம்மாதிரியான அறைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் எனக்கும் எரிச்சலைத்தான் கொடுத்தது !
அடேயப்பா!உண்மையில் அதிரடிதான்
Linga flop
சூப்பர் கலகிட்டீங்க. இணையத்துல பல வாயில புகை உடுற பண்டார அல்லக்கைக உலவிட்டிருக்கு, அதுங்கதான் ஃபலாப் ன்னு சுத்திட்டு திரியுதுங்க, அதே ஆளுங்க தலைவன்தான் ரஜினி பட்டத்துக்கு அலைந்துகொண்டு இருக்காரு.
தாறு மாறு பதிவு .... மொத்த ரசிகர்களின் குமுறலை அப்படியே கொட்டிவிட்டீர்கள் ....
super boss
super boss! nethiyadi
100 corer collection in just 3 days... r u mad???...
wow very nice!
what did Rajini do to tamil nadu? my take - he has taken tamil cinema to next level... global business... what else you need? finding places for so called tamilians to release their movies.
Japan guys talking tamil - how?
அட்டகாசம்.கலக்கல்
Super boss
Japanese are talking Tamil because of Thalaivar. So called Pure Tamilians have not achieved that
super thala adhu yaaru andha yakka plz tell me
Yaar antha yakka, body soda yellam.soanna poai thuppittu varalaam.waste fellows...
சும்மா கிழி கிழின்னு கிழிச்சீட்டீங்க! சூப்பர்!
Super.. Super..
Hi Siva,
Superb article. I really enjoy all ur articles. U have gud humour sense. Gud reply to all who comment on Superstar. Thanks fr gud such articles.
-Sudarsan.
செம.. சான்சே இல்லை..
Well done mate..good on ya
sema siva
vidunga sagothara ithu oru viyathi.itharkellam marunthe illai.avanavakku 35-40 vayathileye nadakka mudiyavillai. 65 vayathill oruvar kallakkinal avarkalal thangamudiyuma.ithaiyellam nangal kadantha 35 varudamaka parthu varukirom.avargalin intha vayitherichalthan nammukku vetri matrum anantham.o nanba o nanba vaa avargal vayutherichalil melum petrolai othuvoma
anbudan
Ungal sagotharan Ghouse
Super nanba pinneeteenga
Post a Comment