ஒருசிலர் நடிக்கிற ரெண்டு மூணு படங்கள் வரிசையா சூப்பர் ஹிட் ஆகும். திடீர்னு ரெண்டே வருஷத்துல ரொம்ப உயரத்துல போயிருவாங்க. ஆனா கொஞ்ச நாள் கழிச்சி அவங்க எங்க இருக்காங்கன்னே தேடிகண்டு பிடிக்க வேண்டியிருக்கும். அத எல்லாரும் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. இன்னும் சில பேருக்கு பத்துபடம் வரிசையா அடிவாங்கும். ஆனா அசராம பதினொராவது படத்த ஹிட்டாக்கி காட்டுவாங்க. அத எல்லாரும் hard work ன்னு சொல்லுவாங்க. ஆனா எத்தனை வருஷமானாலும், எப்ப வந்தாலும், எப்படி வந்தாலும் ஒவ்வொரு தடவையும் அதிரடியாக அதகளப்படுத்த ஒருத்தரால மட்டும் முடியும் . ஒரு அடி சறுக்கினாலும் அடுத்தது நூறு அடி முன்னோக்கிப் போக அவரால மட்டுமே முடியும். அவரத்தான் எல்லாரும் ரஜினின்னு சொல்லுவாங்க.
அவர் ஒரு குறும்புக்கார ஆளுப்பா. எப்பல்லாம் மத்தவங்களுக்கு அவரோட படங்களை முந்திப்போகனும்னு ஆசை வருதோ அப்போ அவர் திரும்ப வந்து Target ah reset பண்ணி விட்டு, அவங்க ஆசையில லைட்டா மண்ணென்னைய ஊத்தி பத்தவச்சிட்டு இமயமலைக்கு போயி ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுவாரு. அதுக்கப்புறம் அந்த டார்கெட்ட அவங்க நெருங்கவே சில வருஷங்கள் ஆகும்.
ஒவ்வொரு துறையிலயும் போட்டிகள் இருக்கும். சக போட்டியாளர்களும் இருப்பாங்க. அவங்க கூட போட்டி போடுறதுல தப்பே இல்லை. ஆனா அதே துறையில legend ன்னு ஒரு ஆள் இருப்பாங்க. அவங்ககிட்ட மட்டும் வச்சிக்கக் கூடாது. க்ரிக்கெட்டுல ஆயிரம் பேர் வந்து போறாங்க. ஒவ்வொருத்தரையும் ஒவ்வொருத்தர வச்சி replace பண்ணிக்கலாம். ஆனா சச்சின்ங்குற இடத்துல வேற ஒரு ஆள நினைச்சிப் பாக்க முடியாது. எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து வந்தவர். கடைசி வரைக்கும் அவருக்கு இருந்த grace ah யாராலயும் புடிக்கவோ ஒழிக்கவோ முடியல. எத்தனை பேர் வேணாலும் வரலாம். எத்தனை ரன் வேணாலும் அடிக்கலாம். ஆனா அதெல்லாம் அவர் அடிக்கிற ஒரு ரன்னுக்கு ஈடாகாது. இவ்வளவு ஏன் அவர் எடுத்த பூஜ்ஜியத்துக்கு கூட மதிப்பிருக்கு.
அப்படித்தான் தலைவரும். அவர ஒரு போட்டியாளரா நெனைச்சாலே அவ்வளவு தான். அப்புறம் போட்டியிலயே இருக்க முடியாது. அவர் ஒரு நடிகர்ங்குறதையும் தாண்டி மக்கள் கூட அவருக்கு இருக்க bonding eh வேற. நம்ம ரத்த சொந்தங்களுக்கு ஒண்ணுன்னா “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்”ன்னு சொல்லுவாங்க. ஆனா தமிழ்நாட்டுல பெரும்பாலவங்களுக்கு ரத்த சொந்தம் இல்லாத குடும்ப உறுப்பினர் தான் தலைவர். அவருக்கு எதாவது ஒண்ணுன்னாலும் நமக்கு உடம்பு உதறும். அது அனுபவிச்சி பாத்தவங்களுக்குத் தான் புரியும்.
இந்த மாதிரி உணர்ச்சிகள் புரியாத சில ஜடங்கள் நம்மள அப்பப்போ சீண்டிப் பாக்குறதும் உண்டு. சில விஷயங்கள நா முன்னாலயே எழுத நினைச்சிருக்கேன். ஆனா அதுக்கான நேரம் இப்பதான் வந்துருக்கு. ராணா ஆரம்பிச்ச அன்னிக்கே தலைவருக்கு உடம்பு சரியில்லாமா போய் ராமச்சந்திராவுல அடிமிட் ஆக, ஆளாளுக்கு வாயில வந்த புரளிய கிளப்பி விட்டதெல்லாம் யாரும மறந்திருக்க மாட்டாங்க.
அந்த நேரத்துல நா கொஞ்சம் வெளியூர்ல இருந்ததால எந்த அப்டேட்டுமே சரியா கிடைக்கல. தலைவர் எங்க இருக்காரு.. எப்டி இருக்காரு.. கிட்டத்தட்ட பைத்தியம் புடிக்கிற மாதிரி இருந்துச்சி. அப்போ ரிலீஸ் ஆச்சி அந்த ஆடியோ. ”ஹலோ… நா ரஜினிகாந்த் பேசுறேன்.. ஹேப்பியா பொய்ட்டு வந்துட்டு இருக்கேன் நானு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா… பணம் வாங்குறேன். ஆக்ட் பண்றேன். அதுக்கே நீங்க இவ்ளோ அன்ப குடுக்குறீங்கன்னா உங்களுக்கு நா என்ன திருப்பிக் கொடுக்குறது.. நிச்சயமா நீங்க தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி நா வந்து நிப்பேன் கன்னா.. நா சீக்கிரம் வந்துருவேன்” ன்னு ஒரு தளுதளுத்த குரல்ல பேசி அவருக்கு உடம்பு சரியில்லாதத மறைக்க முயற்சி செஞ்சி தோற்றுப்போயிருப்பாரு.
“கன்னா பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்”ன்னு கம்பீரமா கர்ஜித்த ஒரு குரல், ஒரு நிமிஷம் கூட தொடர்ந்து பேச முடியாம தளர்ந்து போயிருக்கதக் பார்த்தா ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்? அதக் கேட்ட தலைவரோட ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு சொட்டு கண்ணீராவது வராம இருந்திருக்காது. சத்தியமா அன்னிக்கு நைட்டு ஒழுங்கா தூக்கமே வரல.
எனக்கு சில பேரோட கருத்து வேறுபாடு ஏற்பட்டதுண்டு. சிலரை உரண்டை இழுத்ததும் உண்டு. சில எதிரிங்களும் உண்டு. அவங்கல்லாம் அந்த நேரத்துல தான் அவங்களோட சுயரூபத்த காட்ட ஆரம்பிச்சாங்க. தலைவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும் அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சின்னு தெரியல. என்னுடைய தளத்துல வந்து அவங்க மனசுல நினைச்ச கமெண்ட்ட போட்டங்க.
தலைவர் சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு. அப்போ எனக்கு வந்த ஒரு கமெண்ட் “ரஜினி சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல்ல செத்துட்டான்” இது தான். இந்த கமெண்ட்ட அப்படியே போட எனக்கு மனசில்ல. இருந்தாலும் இதப்போட்டவங்க எப்படிப்பட்டவங்களா இருப்பாங்கன்னு நீங்களும் தெரிஞ்சிக்கனும்னு தான். அதப்பாத்ததும் எனக்கு உண்மையிலயே தலை கிருகிருன்னு சுத்திருச்சி. வெளியூர்ல இருந்ததால நண்பர்கள்கிட்டயும் உடனே கேட்க முடியல.
அப்ப எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது www.envazhi.com தான். உடனே அதுல போய் பாத்தேன். தலைவர் நலமோடு இருக்கார்ன்னு ரொம்ப சமீபத்தைய பதிவு இருந்துச்சி. அதப்பார்த்தப்புறம் தான் ஓரளவு நிம்மதியாச்சி. தலைவர் ஊருக்கு வர்ற வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பத்து தடவையாவது அந்த தளத்துக்கு போய் பாப்பேன்.
நா மேலே சொன்ன கமெண்ட் வெறும் சாம்பிள் தான். அதே மாதிரி ஒரு 50 கமெண்டு வந்துருக்கும். ஒவ்வொன்னயும் பாக்கும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சின்னு எனக்கு மட்டும் தான் தெரியும். எதிரியா இருந்தாலுமே அவன் தோக்கனும்னு தான் யாரும் ஆசைப்படுவாங்களே தவிற அவன் சாகனும்னு இல்லை. ஆனா இந்த ஜந்துக்கள எந்த லிஸ்டுல சேக்குறதுன்னு தெரியல.
ஆனா தலைவர் சொன்ன ஒண்ணே ஒண்ணு மட்டும் என் மனசுக்குள்ள இருந்துச்சி. “கடவுள் இருக்கான்.. நல்லவங்க வாழ்வாங்க… கொஞ்ச நேரம் ஆகும் அவ்ளோ தான்”. நாலு பேர் நாம நல்லா இருக்கனும்னு நெனைச்சாலே நாம நல்லா இருப்போம். ஒரு நாடே அவர் நல்லா இருக்கனும்னு நெனைக்கும் போதா எதாவது ஆகும்? சொன்ன மாதிரியே வந்தாரு. தப்பா சொன்னவங்க தலை குனியிற மாதிரியே வந்தாரு.
முழுவீச்சுல சினிமா நடிக்க முடிலன்னாலும் முடிஞ்ச வரை ரசிகர்களுக்காக கஷ்டப்பட்டாரு. கோச்சடையான். இந்தியாவே திரும்பிப் பாத்துச்சி. நேரம் வந்துச்சி. ஃபுல் ஆக்ஷன்ல இறங்குனாரு. ஆறே மாசம். லிங்கா ரெடி. இப்போ அந்த கமெண்ட் போட்டவங்க, போட நினைச்சவங்க எல்லாருக்கும் கீழ இருக்கிற போஸ்டர் சமர்ப்பணம்.
3 comments:
உண்மையான ரஜினி ரசிகனின் செமத்தியான பதிவு...சூப்பர் பாஸ்...
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ரஜினி ரசிகனின் மனதில் இருப்பதை அப்படியே எழுதிவிட்டீர்கள்! 12/12 அன்று வச்சுக்கலாம் கச்சேரிய!!
கோச்சடையான் படத்த இந்தியாவே திரும்பி பாத்துச்சு ஆனா ஏன் பாத்தோம்னு நெனைக்க வச்சிடுச்சு அந்த படம். சரி அத விடுங்க இன்னொரு படையப்பாவ ரவிக்குமார் கொடுப்பார் நு நம்புறேன். ரஜினி ஸ்டைல் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
i'm waiting thalaivaa....
Post a Comment