Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- அதாரு உதாரு!!!


Share/Bookmark
மொத நாள் மொத ஷோ படம் பாக்குற ரசிகர்கள்கிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டா, அவிங்க சொல்ற பதில வச்சே அந்தப் படம் எவ்வளவு மொக்கைன்னு கண்டுபுடிச்சிடலாம். உதாரணமா படம் எப்டிப்பா இருக்குன்னு கேட்டா, நல்லாருக்கு நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தையில சொல்லாம ”கேமரா நல்லாருக்கு, BGM சூப்பரா இருக்கு, ஸ்டண்ட் பட்டைய கிளப்புது, பயங்கர ஸ்டைலிஷா இருக்கு” ன்னு பிரிச்சி பிரிச்சி சொன்னான்னா தியேட்டருக்குள்ள அவன் விட்டு பிரி பிரின்னு பிரிச்சிருக்காய்ங்கன்னு அர்த்தம்.

அப்டித்தான் இன்னிக்கு காலையில என்னை அறிந்தால் முதல் ஷோ போன தம்பி ஒருத்தன்கிட்ட “படம் எப்டிடா இருக்கு”ன்னு கேட்டேன். அவன் வழக்கம்போல “BGM சூப்பர்…” ன்னு ஆரம்பிச்சான். ஆஹா செத்தாண்டா சேகரு. இந்த தடவையும் வெடி வச்சிட்டாய்ங்களோன்னு நினைச்சேன். ஆனா அந்த மாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாம மயிரிழையில இந்தப் படம் உயிர் பிழைச்சிருச்சின்னு சொல்லலாம்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடுன்னு ரெண்டு தோசைங்கள சுட்ட அதே மாவுல சுடப்பட்ட அடுத்த தோசைதான் இந்த என்னை அறிந்தால். எழுபது சதவீத காட்சிகள் ஏற்கனவே மேல சொன்ன ரெண்டு படங்கள்லயும் பார்த்தது. காட்சிகள் மட்டும் இல்லை. கதாப்பாத்திரங்கள் உட்பட அனைத்தும்.

முதல் பாதிய கடந்து வர்றதே படம் பாக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப பெரிய சவால். அறு அறுன்னு அருக்குறாய்ங்க. அதுலயும் கவுதம் மேனன் டயலாக்கு… பிரமாதம். நல்லா இருக்கவேண்டிய சில சீன்கள வசனங்கள வச்சி தரை மொக்கையாக்குறதுக்கு சிறந்த உதாரணம் இந்தப் படம் தான். சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசுறாய்ங்க.

ஒரு சீன்ல த்ரிஷாவோட டான்ஸ பாத்துட்டு அஜித், திரிஷாகிட்ட போய் “உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லலாமா?” ங்குறாரு. அதாவது ”உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” ன்னு நேரடியா வசனம் வச்சா டைரக்டர் டச்சு போயிருமாம்.  வீட்டுல பொண்டாட்டிகிட்ட “இன்னிக்கு நம்ம வீட்டு சாம்பார் நல்லாருக்குன்னு நா உன்கிட்ட சொல்லலாமா?” ன்னு தான் கவுதம் கேப்பாரு போல. முதல் பாதில அஜித்தும் அனுஷ்காவும் பேசுற ஒவ்வொரு வசனமும் ரொம்ப ரொம்ப அருவையாவும், ஆர்டிஃபீஷியலாவும் இருக்கு.

சினிமோட்டோ கிராஃபிக்கு அயல்நாட்டுலருந்து ஒருத்தனை புடிச்சிட்டு வந்துருக்காய்ங்க. முதல் முக்கால் மணி நேரம் ஒன்லி க்ளோஸ் அப் ஷாட் தான். அதுவும் அஜித்துக்கும், அனுஷ்காவுக்கு ஸ்பெஷலா ஜும் போயிருக்காங்க ஜூம். அனுஷ்காவ கூட அசிங்கமா காமிக்க முடியும்னு இந்தப் படத்த பாத்தா தெரியும். சீக்கிரமா நீயும் ஒரு தொழிலதிபர பாரு ஆத்தா. நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது. 

முதல் பாதில சில காட்சிகள் ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு. உதாரணத்துக்கு முதல் தடவ அஜித்த அனுஷ்கா ஃப்ளைட்டுல பாக்குறாங்க. அஜித் சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டா மாதிரி.. ஓ சாரி சாரி.. இந்த சால்ட் & பெப்பர் ஸ்டைல் மண்டையோட உக்கார்ந்துருக்காரு. அந்த கெட்டப்புல அஜித்த முதல் முதலா பாக்குற பொண்ணுங்க பெரிப்பான்னு கூப்டாம இருந்தாலே பெரிய விஷயம். ஆன அனுஷ்கா “நீ அழகண்டா.. என்ன கொல்லுறடா.. சுசுமார்ட்டு டா” ன்னு வழியிது. சரி அதுகூட பரவால்ல. ஆனா இன்னொரு ரியாக்சன் விடும் பாருங்க “உனக்கு கல்யாணம் ஆயிருச்சின்னு மட்டும் சொல்லிடாதடா”ன்னு மனசுக்குள்ள பேசிக்கும். ஏன் பாட்டிக்கா.. அந்த மண்டைய புதுசா யாராவது பாத்தா, உன் பையன் எந்த காலேஜ்ல படிக்கிறான்னு தான் கேள்வி கேப்பாங்க.. ஆனா இது கல்யாணம் ஆயிருக்க கூடாதுன்னு வேண்டிக்குது. அடுத்த படத்துலயாவது இந்த சால்ட் அன் பெப்பர கொஞ்சம் தார ஊத்தி கருப்பாக்குங்கப்பா.. 


தத்தி தள்ளாடுற படம், அஜித் போலீஸா மாறுற சீன்லருந்து ஓரளவு கம்பிகிம்பிய புடிச்சிக்கிட்டு தவழ ஆரம்பிக்கிது. பெரும்பாலான போலீஸ் கெட்டப்புல அஜித் அப்படியே ராகவனை ஞாபகப்படுத்துறாரு. யோவ் யாருப்பா அது கல்ல பொறுக்குறது? ஞாபகப்படுத்துறாருன்னு மட்டும் தானே சொன்னேன்.

இந்த ஆதவன் படத்துல ரமேஷ் கன்னா ,” இளையராஜாகிட்டருந்து இலைய பரிச்சி, A.R.ரஹ்மான்கிட்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து என் பேர இளையமான்ன்னு வச்சிக்கிட்டேன்னு சொல்லுவாரு. அதே மாதிரி தான் வேட்டையாடு விளையாடு கமலினி கேரக்டர கூப்டு வந்து, அதே வேட்டையாடு விளையாடு ஜோதிகாகிட்டருந்து குழந்தைய புடுங்கி அந்த புள்ளைகிட்ட குடுத்தா, அது தான் என்னை அறிந்தால் திரிசா கேரக்டர்.

கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் படம் எத நோக்கி பயணம் பண்ணுதுன்னே தெரியாம போயிட்டு இருக்க, கடைசி முக்கால் மணி நேரம் தான்  மொத்த படத்தையும் காப்பாத்துது. முதல் பாதில பாத்த மொக்கையெல்லாம் மறைச்சி, நம்மள கொஞ்சம் ஆறுதல் படுத்தி வீட்டுக்கு அனுப்பி விடுறது படத்தோட ரெண்டாவது பாதி தான்.

எப்பவுமே ஒரு ஹீரோ எவ்வளவு பவர்ஃபுல்லானவர்னு முடிவு பண்றது வில்லன் கேரக்டர் தான். வில்லன் கேரக்டர் எவ்வளவுக்கு எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கோ அதப் பொறுத்து தான் ஹீரோ கேரக்டர் இருக்கும். மார்க் ஆண்டனி இல்லைன்னா பாஷா பாய் ரொம்ப சாதாரணமானவராத் தான் இருந்துருப்பாரு. நீலாம்பரி இல்லாம படையப்பா கேரக்டர் இவ்வளவு கெத்தா இருந்துருக்காது. மதுரை முத்துப்பாண்டி இல்லைன்னா கில்லி வேலு சாதா தங்கவேலாத்தான் இருந்துருப்பாரு. அதே மாதிரிதான் இங்க அஜித்த பவர்ஃபுல்லா மாத்துறவரு வில்லன் அருண் விஜய். ரொம்ப நல்ல சாய்ஸ். செம்மைய பண்ணிருக்காரு. பாடி லாங்வேஜூம் சரி, டயலாக் டெலிவரியும் சரி, சூப்பர். முதல் பாதில இன்னும் கொஞ்சம் இவர யூஸ் பண்ணிருந்தா முதல் பாதி கூட நல்லா இருந்துருக்குமோ என்னவோ.

அஜித் மறுபடியும் தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி “மிக ப்ரம்மாண்டமாய்” மாறிட்டாரு. XXL டீ ஷர்ட் கூட அவருக்கு ரொம்ப டைட்டா இருக்கும் போல. நிறைய காட்சிகள்ல அவரோட உடம்பு கேரக்டருக்கு ஒட்டாம தனியாத் தெரியிது. ஆனா முன்னால இருந்தத விட, இந்த படத்துல அஜித் நிறைய காட்சிகள்ல நல்லாவே நடிச்சிருக்காரு. அதாரு உதாரு பாட்ட ரொம்ப என்ஜாய் பண்ணி ஆடிருக்காரு. அந்த பாட்டுல அவர் face reaction பாத்தாலே நல்லா தெரியும்.

படத்தோட ரெண்டாவது பாதில நிறைய காட்சிகள் நல்லாவே இருந்துச்சி. குறிப்பா அருண் விஜய்யும், அஜித்தும் ஃபோன்ல பேசுற ஒரு சீன் செம சூப்பர். அப்புறம் அஜித்துக்கு மறுபடியும் காக்கி ஷூவ அவர் பொண்ணு எடுத்து குடுக்குறதும் அப்போ அந்த தீம் மியூசிக் வர்றதும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் ஆரிய ஜெயராஜ். டைட்டில் மியூசிக்கே தெறிக்குது. எல்லா பாட்டுமே நல்லா எடுத்துருக்காங்க.  BGM மும் நல்லாருக்கு. அங்கங்க கொஞ்ச கொஞ்சம் கைவுட்டு உருவி இங்க போட்டுருக்காரு. ஆனா நல்லா தான் இருக்கு.

கெளதம் வாசுதேவ உன்னி மேனன் கதை திரைக்கதையோட நிறுத்திக்கலாம். வசனம் எழுதி ஆளுங்கள கொல்ல வேண்டாம். அதுவும் ஆளாளுக்கு ஒரு செண்டிமெண்டு மாதிரி இந்தாளுக்கு கெட்ட வார்த்தை செண்டிமெண்டு போலருக்கு. தேவையில்லாத இடத்துலயெல்லாம் கெட்ட வார்த்தை. இதுல கேவலமான ஒரு விஷயம் என்னன்னா படத்துல அந்த கெட்ட வார்த்தைகள் வரும்போது தான் நம்மாளுங்க கைதட்டி ரசிக்கிறாய்ங்க. கண்றாவி. அப்புறம் இனிமே போலீஸ் கதை எடுக்குறதா இருந்தா கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க. அதே மாவு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு இன்னொரு தோசைய சுட்டுடாதீங்க.  We are பாவம்.

மொத்ததுல என்னை அறிந்தால் படம் முடிஞ்சி வரும் போது, ஒரு சூப்பர் படத்தை பாத்துட்டு வந்தோம்ங்குற ஃபீல கண்டிப்பா குடுக்கல. ஆனா அதே மாதிரி, ஒரு மொக்கை ரகமும் இல்லை. சூப்பர் படம், மொக்கை படத்துக்கும் இடையில உள்ள ஒரு மெல்லிசான கோட்டுல மாட்டிக்கிட்ட ஒரு சுமாரான படம் தான் என்னை அறிந்தால். அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்.பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Unknown said...

Unmayana vimarisanam. Param

Unknown said...

I don't want say anything on ur review becoz it's ur view on movie. but i dont agree with below .

அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்...........

Mangatha marthiri mass padam mattum than enjoy pananum nu illa bosss..

Even with repeated goutham scenes and slow first half as a Ajith fan i thoroughly enjoy de movie. personally i liked this movie as after quit a long time seen a movie without mass buildup intro, unnecessary punch dialogues, suit walk, coolers,flying sumo's n mokkai commercial formula kuppai. very happy to c Thala doing a submissive role like this. Ajith fans can accept even he do role like billa or kreedam. Let's don't put any formula brace....athuku neraiya peru irukanga.....

Again u can say movie is mokkai or gud its ur view. I don't have right to say anything on that.


But as a Ajith fan just i like to clarify ur advice for us.

முத்துசிவா said...

//just i like to clarify ur advice for us.//

அதப்பாத்தா அட்வைஸ் மாதிரியா தெரியிது.. அவ்வ்வ்வ்வ்

Unknown said...

அண்ணே ! நானுங்கூட அவ்வையார் ஆரம்பபாடசலை தாண்ணே !
ஆனா அப்பபோ dictionary படிக்கிரதுண்டுன்னே !

http://dictionary.reference.com/browse/advice?s=t

advice :

noun
1.
an opinion or recommendation offered as a guide to action, conduct, etc.:
I shall act on your advice.
2.
a communication, especially from a distance, containing information:
Advice from abroad informs us that the government has fallen. Recent diplomatic advices have been ominous.
3.
an official notification, especially one pertaining to a business agreement:
an overdue advice.

Synonyms
1. admonition, warning, caution; guidance; urging. Advice, counsel, recommendation, suggestion, persuasion, exhortation refer to opinions urged with more or less force as worthy bases for thought, opinion, conduct, or action. Advice is a practical recommendation as to action or conduct: advice about purchasing land. Counsel is weighty and serious

m.a.Kather said...

சிரிக்க சிரிக்க ஒரு விமர்சனம்.சம்பந்த பட்டவங்க சிந்திக்க மாட்டாங்க பாஸ்.படம் சக்ஸஸ் ஆயிடுச்சி பாக்ஸ் ஆபீஸ்ல.அவிங்களுக்கு அதுதான் முக்கியம்முக்கியம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...