Friday, February 20, 2015

முருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு நிறைய சந்தோஷத்தையும் நிறைய கவலையும் ஒரே நேரத்துல குடுக்குறது காலேஜ் ஃபைனல் இயரோட கடைசி ரெண்டு மாதங்கள் தான். காலேஜ விட்டு வரும்போது நமக்கு கண்ணுல ஒரு சொட்டு கண்ணீராவது வரும். அடுத்தவங்க பாத்தா அண்ணனோட கெத்து போயிரும்டா” ன்னு பேக்சாட்ல திரும்பி நின்னு “உனக்கு எதோ ட்ரான்ஸராம்லம்மா..” ங்குற மாதிரியாவது கண்டிப்பா எல்லாரும் அழுதுருப்பாய்ங்க. அப்டி இல்லைன்னா  நிச்சயம் நாம எதையோ மிஸ் பண்ணிட்டோம்னு தான் அர்த்தம். அப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையோட கடைசி சில பக்கங்கள்ள எழுதப்பட்ட வரலாறத்தான் இன்னிக்கு கொஞ்சம் திருப்பி பாக்கப்போறோம்.

”மச்சி, காலேஜ் முடிய இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு செம்மையா எஞ்ஜாய் பண்றோம்.. எஞ்ஜாய் பண்றோம்.. வாங்கஜி.. வாங்கஜீ” ன்னு ஒருபக்கம் ஒருத்தன் சொல்லிட்டு இருக்கும் போதே இன்னொருத்தன் சைடுல “மச்சி இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கா?” ம்பான். மொத்த கூட்டமும் சைலண்ட் ஆயிரும். திடீர்ன்னு இன்னொருத்தன் சொல்லுவான். “மச்சி.. காலேஜ் முடிஞ்சா என்ன மச்சி. நாம சென்னையில வார வாரம் மீட் பண்றோம். ஊர் சுத்துரோம்… படத்துக்கு போறோம்.. ஜாலி பண்றோம்” ம்பான். அதாவது அவரு நம்மள சோகத்துலருந்து மீட்டு சமாதானப்படுத்தி ஜாலியாக்குறாராம்.

அப்புடி வார வாரம் மீட் பண்றோம்னு சொன்ன பல பேர நாம கடைசியா காலேஜ் முடியிற அன்னிக்கு தான் பாக்கமுடியும். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் அவன் ஆள் அட்ரஸே இருக்காது. அப்பப்போ ஃபேஸ்புக்குல மட்டும் அமெரிக்காவுல ஸ்நோவ கையில அள்ளிக்கிட்டு நிக்கிற மாதிரி சிலப்பல ஃபோட்டோக்களை பாக்கலாம்.  

சில வருஷங்களுக்கு அப்புறம் திடீர்னு அவன்கிட்டருந்து நமக்கு ஒரு ஃபோன் வரும். உடனே “அடேய் நண்பா.. எங்கேயடா இருந்தாய் என் செல்வமே.. பாசத்துல என்னை மிஞ்சினவனா இருக்கியே” அப்டின்னு நாம பாசத்துல பொங்கிரக்கூடாது. ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம கல்லூரி நண்பன் ஃபோன் பன்னான்னா, அவனுக்கு வீட்டுல ஒரு நல்ல பொண்ணா பாத்துருக்காய்ங்க. அதுக்கு கல்யாணத்துக்கு நம்மள கூப்டத்தான் ஃபோன் பண்ணிருப்பான்னு நாமளா மேட்டர கவ்விக்கனும். அப்டி நடந்தா டக்குன்னு ஃபோன எடுத்து “எப்ப மச்சி கல்யாணம்?”ன்னு தைரியமா கேக்கலாம்.

இவய்ங்க கூட பராவால்ல. இன்னும் ஒரு கேட்டகிரி இருக்காய்ங்க. திடீர்னு ஒரு நாள் ஆஃபீஸ் வாழ்க்கையை வெறுத்து, மல்லாக்க படுத்துக்கிட்டு விட்டத்த பாத்து ”காலேஜ்ல நாம எப்டியெல்லாம் இருந்தோம். இங்க நம்மள இப்டி வேலை பாக்க சொல்றாய்ங்களே”ன்னு பழைய நினைவுகளை கரண்டிய வச்சி கிண்டும்போது, திடீர்ன்னு நம்ம பழைய நண்பனோட நினைப்பு வந்து கால் பண்ணுவோம்.

அப்போ அவன் கேப்பான் பாருங்க ஒரு கேள்வி. “என்ன மச்சி காலேஜ் முடிச்சப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குற. இப்பதான் எங்க நினைப்பெல்லாம் வருதா?” ம்பான். “இப்ப கூட அந்த நாயிக்கு நாம தான் கால் பண்ணிருப்போம். ஆனா அது நம்மள என்ன மச்சி காலே பண்ணலன்னு கேக்கும். அதாவது அவரு நம்ம நினைப்பாவே இருந்தா மாதிரியும் நம்ம கால் பண்ணாததால தான் அவரு இவ்வளவு நாளா பேசாத மாதிரியும் தான் ஒரு சீனப் போடுவய்ங்க. சரி.. நண்பர்கள் பலவிதம்.

கல்லூரியோட கடைசி நாட்களை எண்ணிக்கிட்டு இருக்கும்போது தான் வந்துச்சி அந்த கல்ச்சுரல்ஸ். வழக்கமா அடுத்தவய்ங்க நடத்துவாய்ங்க. நாம போய் உரண்டை இழுப்போம். இப்போ நாமதான் சீனியராமே.. நம்மதான் நடத்தனுமாமே. இதுல கொடுமை என்னன்னா காலேஜோட கல்சுரல் co-ordinator நம்ம அபிநய சரஸ்வதி சம்பந்தம். எங்க சீனியருங்களுக்கே பர்மிஷன் குடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சி, அதுக்கப்புறம் அவனுங்க ரெண்டரை நாள் கெஞ்சி வாங்கி கல்ச்சுரல்ஸ நடத்துனாய்ங்க.

அவங்களுக்கே இந்த கதின்னா, நம்ம பயலுக போன வாரம் நடந்த sports meet la தான் ”சூடான பருத்திப்பால்.. சூப்பரான ஆட்டுப்பால்”னு ரைமிங்கா அவர அசிங்க அசிங்கமா திட்டிக்கிட்டு வந்தாய்ங்க. அதுமட்டும் அந்தாளுக்கு கேட்டிருந்தா, பர்மிஷன் கேட்டு போறவிங்கள செருப்புலஅடிச்சி பத்தி விட்டுருவாரே. என்ன செய்யலாம்? ”saar… want money saar… saar help saar” ன்னு மரியான் தனுஷ் பாணியில “சார் last year saar.. கடைசி 20 days saar.. இதுக்கப்புறம் வாழ்க்கையில no fun saar… pls help saar” ன்னு ஏதேதோ சொல்லி பசங்க பர்மிஷன் வாங்கிட்டாய்ங்க.

பர்மிஷன் வாங்கியாச்சு. இனிமேதான் மெயின் ஆப்பே இருக்கு. நம்ம வேற ஃபைனல் இயரு. இதுக்கு முன்னால ஃபைனல் இயர் டீமோட கல்சுரல் பர்மார்மன்ஸ பாத்தவிய்ங்க, நம்மக்கிட்ட பெர்பார்மன்ஸ் வேற ஹெவியா எதிர்பார்ப்பாய்ங்க. நம்ம சோ தான் நல்லாருக்காதேடா.. அய்யயோ… அமைச்சரே நன்றாக மாட்டிக் கொண்டோமைய்யா… ஜூனியர் பசங்க ஆடுறதையும் பாடுறதையும் பாக்கும்போது அவய்ங்க எதோ நல்ல மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டு இருப்பாய்ங்க போலருக்கு.

ஆனா நம்ம இயர்ல எப்புடித்தேடுனாலும் கடைசில நம்ம லியோபால் மாஸ்டரோ இல்லை ACP பரத் குமார் மாஸ்டரோதான்  நம்ம பசங்களுக்கு கொரியோகிராஃப் பன்னுவாய்ங்க. இவய்ங்கள நம்பி காம்பெடிஷன்ல இறங்குனா அடி பின்னிருவாய்ங்களே. இந்த மாதிரி ஃபைனல் இயரோட கெளரவத்தை பாதிக்கிற சில காரணிகளை ஆரய்ஞ்சி  பாத்தப்புறம் சங்கம் ஒரு முடிவெடுத்துச்சி. அந்த முடிவுப்படி “ஃபைனல் இயர் பசங்க எல்லா பர்மார்மென்ஸூம் குடுப்பாங்க. ஆனா எங்களுக்கு பரிசுகள் மேல் ஆசை இல்லை.  அந்தப் பரிசுகளையெல்லாம் எங்களோட தம்பிகளான எங்கள் ஜுனியர் பசங்களுக்கே பிரிச்சி குடுத்துருங்க. நாங்க குடுக்குறது எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டும்தான்” அப்டின்னு ஒரு அறிக்கைய விட்டோம்.

எதாவது ஒண்ணு ரெண்டு கெஸ்ட் அப்பியரன்ஸ்னா பசங்க நம்புவாய்ங்க. ஆனா பண்ற எல்லாமே கெஸ்ட் அப்பியரன்ஸ்னா எவனாச்சும் நம்புவானா.. சரி சமாளிப்போம். கல்சுரல்ஸூம் ஆரம்பிச்சிச்சி. சம்பந்தம் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை விட்டுருந்தாரு. (பின்வரும் வாக்கியத்தை காட்ஃபாதர் அஜித் ஸ்டைலில் படிக்க) ”இதோ பாருங்கையா… கல்சுரல்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம நடக்கனும். எதாவது ப்ரச்சனை நடந்தா உடனே நிறுத்திருவோம்” ன்னு. கல்ச்சுரல்ஸ நிறுத்துறது இருக்கட்டும் முதல்ல நீ இந்த அபிநயம் புடிக்கிறத நிறுத்துய்யா.

வழக்கமா கல்ச்சுரல் நடக்கும்போது கலவரம் பன்றது, பாதியில எதாவது ப்ரச்சனைய கெளப்பி மொத்தமா எந்திரிச்சி போறதுன்னு நம்மதான இந்த மாதிரி காவாளித்தனத்த இதுவரைக்கும் பன்னிட்டு இருந்தோம். இப்போ நம்மளே ஃபங்ஷன நடத்தும்போது யார் ப்ரச்சனை பன்னப்போறதுன்னு எல்லாரும் அத ஒரு பொருட்டாவே மதிக்கல. ஆனா ஆண்டவன் எங்கெங்க ஆப்பு வப்பான்னு நமக்குத் தெரியாது.நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சி ஒண்ணரை நாள். நம்ம பயலுக ஜட்ஜ்மெண்டுக்கு அப்பாற்பட்ட பல கெஸ்ட் அப்பியரன்ஸ்கள குடுத்து கொன்னுக்கிட்டு இருந்தாய்ங்க. ரெண்டாவது நாள் மதியானம். ஒரு மூணுமணி இருக்கும். முருகப்பா ஹால் நிரம்பி வழியிது. நிறைய பேருக்கு உக்காரவே இடம் இல்லை. நம்ம வேற ஃபைனல் இயரு. நம்ம நடத்துற ஃபங்ஷன்ல நம்மளே உக்காரலாமான்னு மத்தவங்களை சீட்டுல உக்கார வச்சிட்டு ஃபைனல் இயர்ல பாதி பசங்க ஹாலுக்கு நடுவுல இருக்க  walk way ல ஒருத்தன் மடியில ஒருத்தன் சாஞ்சா மாதிரி படுத்துக்கிட்டு,  நிகழ்ச்சிகள ரசிச்சிட்டு இருந்தோம்னு நினைக்காதீங்க. எந்த இயர் புள்ளைங்க நல்லா இருக்குன்னு பாத்துக்கிட்டு இருந்தோம். அதுவும் ஒருவித ரசனை தானே… அவ்வ்..

எப்பவுமே காலேஜ்ல immediate சீனியருங்க மட்டும் பசங்களுக்கு ஆகாது. ஏன்னா அவிங்க தான் வாங்குன மொத்த அடிய திருப்பி குடுக்கனும்னு புதுசா வர்றவிங்கள ragging அது இதுன்னு கொடுமைப் படுத்துவாய்ங்க. ஆனா double seniors கூட எப்பவுமே பசங்களுக்கு ஒரு நல்ல rapport இருக்கும். அதே மாதிரி தான் நாங்க ஃபைனல் இயர் படிக்கும்போது இருந்த 2nd year பசங்க கூட ஒரு understanding இருந்துச்சி. எங்க இயர் பேரு VVS 007 (வருத்தப்படாத வாலிபர் சங்கம் 007) அவிங்க, அவனுங்க ”நாங்க VVS juniors” ன்னு சொல்லுவாய்ங்க

அன்னிக்கு பசங்க வரிசையில முதல் ரெண்டு மூணு வரிசையில professorங்க உட்காந்திருந்தாங்க. அப்புறம் First year பசங்க, அதுக்கு பின்னால செகண்ட் இயர் பசங்க அதுக்கு பின்னால 3rd year பசங்க. கடைசில ஃபைனல் இயர் பசங்க. திடீர்னு அந்த 3rd year பசங்களும் 2nd year பசங்களும் உக்கார்ந்துருக்க இடத்துல, நல்லா இருந்த தேன்கூட கலைச்சி விட்டா மாதிரி எதோ கலைய ஆரம்பிச்சாய்ங்க.

எண்டான்னு பாத்தா 3rd year குரூப்புலருந்து ஒருத்தன் ஒரு ப்ளாஸ்டிக் chair ah எடுத்து, 2nd year பசங்க மேல வீசுனான். கொஞ்சம் கூட தாமதிக்காம அதுக்கு பதிலுக்கு 2nd year சைடுலருந்து ரெண்டு இரும்பு சேர இவிங்க மேல தூக்கி வீசுனாய்ங்க. அடாப் பாவிகளா.. ஆரம்பிச்சிட்டீங்களாடா.. அய்யய்யோ.. இத்தாண்டா அந்தாளு அன்னிக்கே சொன்னாரு. Walk way la உக்காந்துருந்த மொத்த ஃபைனல் இயர் பசங்களும் அவிங்கள நோக்கி போய் கையில கிடைக்கிறவன சமாதானப்படுத்தி உக்கார வைக்க முயற்சி பன்னோம்.

நா என்கிட்ட சிக்குன ஒரு 3rd இயர் பையன புடிச்சி “டேய் தம்பி.. கொஞ்ச நேரம் உக்காருங்கடா.. வெளில போய் விளையாடலாம்.. சும்மாவே அந்தாளுக்கு எங்களக்கண்டா ஆவாது. இதுல நீங்க வேறயாடா?” ன்னதுக்கு, உடனே அவன் கைய மடக்கி நடுவிரலை எங்கிட்ட காட்டி “அண்ணேன் எங்களப் பாத்து அவன் இப்புடி கைகாமிக்கிறான்னே” ன்னு வெறித்தனமா கத்துனான். “அதுக்கு ஏண்டா நீ என்கிட்ட அந்த மாதிரி காமிக்கிற… இதெல்லாம் ஒரு மேட்டராடா.. இங்கிலீஷ் படத்த பாருங்கடா.. எல்லாரும் எல்லாரையும் பாத்து இப்டித்தாண்டா ஜாலியா கை காமிப்பாங்க… அவன் சும்மா ஒண்ணுக்கு போறதுக்கு தெரியாம விரல மாத்தி காமிச்சிருப்பாய்ங்கடா” ன்னு தம்கட்டி சொல்லியும் அவன் “விடுங்கன்னே.. நாங்க கிளம்புறோம்” ன்னு கிளம்பி வெளிய பொய்ட்டான். 

(நா கேட்ட அந்த 3rd year பையனோட FB profile name Kannan Maadhu. இந்த சம்பவம் அவனுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு)

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே. இன்னும் பயிற்சி வேண்டுமோ” ன்னு யோசிக்கும் போதுதான் நம்ம பசங்க பிரம்மாஸ்திரத்த உபயோகிச்சாய்ங்க. கால் மணி நேரம் கழிச்சி குடுக்க வேண்டிய ஸ்நாக்ஸ அப்பவே ஓப்பன் பண்ணி வச்சிட்டாய்ங்க. சண்டை போட்டு வெளில போன பசங்கல்லாம் சரி போறது போறோம் அப்டியே ஸ்நாக்ஸ போட்டுக்கிட்டே போவோம்னு ஸ்நாக்ஸ்ல கைவைக்க, “Five star சாப்டுங்க… டேஸ்ட்ல மறந்து போயிருங்க” ங்குற மாதிரி வெளில சண்டை போட்டுக்கிட்டு போன பாதி பேரு ஸ்நாக்ஸ் டைம் முடிஞ்சி வரும்போது “டேய் ரமேஷ்.. டேய் சுரேஷ்” ன்னு பேசிக்கிட்டே திரும்ப உள்ள வந்து உக்காந்துட்டாய்ங்க. 

ஆனா மெயின் கலவரத்துல ஈடுபட்ட சில பேரு மட்டும் வெளிநடப்பு செய்ய, கேப் விழுந்த இடத்த நம்ம பயலுகள வச்சி ஃபில் பண்ணியாச்சு. தலைக்கு வந்தது, தக்காளிச்சட்னியோட போச்சிங்குற மாதிரி அன்னிக்கு வச்ச கட்லட்டும் தக்காளி சாஸூம் நடக்க இருந்த பெரும் கலவரத்த தடுத்து நிறுத்துச்சி.

அந்த செகண்ட் இயர் பசங்கள பாக்கும்போது அப்டியே ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க பசங்கள பாக்குற மாதிரி இருந்துச்சி. காவாளிப்பயலுகளா.. நாங்க தான் இப்டி ஆயிட்டோம்னா நீங்களும் ஏண்டா. போய் படிங்கடா.. நாங்க நடத்துன அந்த  கல்ச்சுரல்லருந்து, ஒரே ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கிட்டோம். 

“கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு… ஆனா கட்லட் இருந்தா தப்பிச்சிடலாம்” ங்குறதான் அது. 

தொடர்புடைய இன்னும் சில வரலாற்றுப் பக்கங்கள்

என்னது செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா!!!

தம்பி ப்ரச்சனை பண்ணாதீங்கப்பா- காரைக்குடி கலவரம்!!!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Krishnaswamy S said...

Excellent write up siva. I mean all the articles. It is really taking us to the golden days. I am really looking forward to that day where we get together as Old Boys. Thanks da.

Indianretail said...

I am also from AC Tech.. I am following your blog from last 2 years. . Which year passout.which stream

Azar said...

hahahaha.. Mapla semma

முத்துசிவா said...

@indianretail

2003-07 , EEE

தக்குடு said...

சிவா, நானே உங்க கிட்ட சொல்லனும்னு தான் வந்தேன். கலக்கல்னு போட்டு உங்க போஸ்டை அப்படியே விகடன் ஸ்பெஷல் பகுதில போட்டு இருந்தாங்க. நானும் கமண்ட் பகுதில போய் இது ஒரு ப்ளாக்கரோட சொந்த போஸ்டுடா! இந்த பொழப்புக்கு கோவில் வாசல்ல பிச்சை எடுக்கலாம்!னு கமண்ட் போட்டு அனுப்பினேன். அதை பிரசுரம் பண்ணாம விட்டாலும் அவனுங்க வாசிப்பாங்க இல்ல!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...