Saturday, December 12, 2015

பீப் பீப் பிக்காலிகள்!!! (18+)


Share/Bookmark
பொதுவா எல்லா வேலைகளும் எல்லாராலயும் செய்ய முடியும்னாலும் ஒரு குறிப்பிட்ட வேலைய அதை தொழிலா செய்யிறவங்க, அந்த வேலையில நல்ல அனுபவம் மிகுந்தவங்க  செஞ்சாத்தான் நல்லாருக்கும். சினிமாவுலயும் அப்டித்தான். சில சமயம் ஒரே ஆள் பல வேலைகள செய்ய முயற்சி செய்றதுண்டு. டிஆர் பாக்யராஜ், பேரரசு,  மாதிரி சில இயக்குனர்கள் படத்தை இயக்குறது மட்டுமில்லாம பாடல்கள், இசைன்னு பல வேலைகளை செஞ்சி வெற்றியும் பெற்றிருக்காங்க. அது திறமை. நிச்சயம் பாராட்டனும். ஆனா இன்னிக்கு இருக்க சூழல்ல சினிமாவ பொறுத்த அளவு திறமைங்குற விஷயத்த பணத்தையும், familiarity யும் வச்சிக்கிட்டு replace பன்னிடுறாங்க.

எவ்வளவோ இயக்குனர்கள் நல்ல கதை வச்சிருந்தாலும் அத படமாக்கி திரைக்கு கொண்டு வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா ஒரு நடிகரோ, நடிகரின் மகனோ இல்லை ஒரு தயாரிப்பாளரோட மகனோ நினைச்சா ஒரு குப்பை கதையாக இருந்தாலும் திரைக்கு கொண்டு வர முடியும். அதனால தான் கண்ட குப்பைகள பாக்க வேண்டிய கட்டாயமும், கண்ட கருமாந்திரங்கள கேக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டாகுது. ரெண்டு நாளுக்கு முன்னால அனிரூத் இசையில சிம்பு எழுதி பீப் சாங்குன்னு ஒண்ணு ரிலீஸ் பன்னிருக்கானுங்க. இதுவரை அந்த பாட்ட நீங்க கேக்கலன்னா ரொம்ப சந்தோஷம். இதுக்கப்புறமும் கேக்காதீங்க.

ஒரு அஞ்சி வருசத்துக்கு முன்னால வரைக்கும் பாட்டுன்னா ஒரு மரியாதை இருந்துச்சி. ”பாடகர்கள்” மட்டும் தான் பாடுவாங்க. “பாடலாசிரியர்கள்” மட்டும்தான் எழுதுவாங்க. திடீர்னு வந்துச்சி “Y This கொலைவெறி”.. உலகமெங்கும் தாறுமாறான ஹிட்டு. அதோட தமிழ்சினிமா பாட்டுங்களுக்கும் வச்சாய்ங்க வேட்டு. வாயில வர்றதெல்லாம் எழுதி பாட்டுங்குறாய்ங்க. இப்பல்லாம் எவனும் பாடகர்கள பாடவிடுறதே இல்லை. நான் மீசிக்.. என் நண்பன் எழுதுவான். ரெண்டு பேரும் சேந்து பாடுவோம். அவ்வளவுதான் இன்னிக்கு டீலிங்கு.  “poetu” ஆவது பரவால்ல கொஞ்சம் டீசண்ட்டா எதுகை மோனையாவது மேட்ச் ஆகுற மாதிரி எழுதுறான். சிம்பு பாட்டெழுதுறேன்னுபோட்டு கொல்றான் பாருங்க. “என் ட்விட்டர் ட்வீட்டிங்கும் நீ தான்” “ என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் நீதான்” “என் பேஸ்டு நீ தான்” “என் ப்ரஷ்ஷூ நீதான்” இதெல்லாம் பாட்டு வரி. இதுல எதாவது அர்த்தம் இருக்கா?

ங்கொய்யல.. ஏன் எங்களுக்கும் தான் இது மாதிரி எழுதத்தெரியும் “என் பிஞ்ச செருப்பும் நீதான்” “எங்க வீட்டு தொடப்ப கட்டையும் நீதான்”.  அந்த கண்றாவியல்லாம் எப்டியோ போகட்டும். இப்ப இந்த பீப் சாங்க என்ன நினைச்சி இவய்ங்க ரிலீஸ் பண்ணாய்ங்கன்னு தான் நா யோசிட்டு இருக்கேன். இத ரிலீஸ் பன்னோன இளைஞர்கள்லாம் அப்டியே இந்த பாட்ட கொண்டாடுவாங்கன்னா, இல்லை ”சிம்பு செம கெத்துடோய் கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறாருடோய்”ன்னு எல்லாரும் நினைப்பாய்ங்கன்னா தெரியலை

தமிழ்சினிமாவுல அதிகபட்சமா யூஸ் பன்ற கெட்ட வார்த்தைன்னா  “தா’ தான். அதையும் கொஞ்சம் உச்சரிப்ப ஏத்த இறக்கமா வச்சி பட்டும் படாத மாதிரி யூஸ் பன்னிட்டு இருக்காங்க. ஆனா இந்த நாய் பன்னிருக்கது என்னன்னா அருவருப்போட உச்சம். இந்த தெய்வ மகனத்தாதான் அவங்க அப்ப ஒவ்வொரு மேடையிலயும் தூக்கி வச்சி பேசுறார்.

நம்ம பேச்சு வழக்குல பேசுறதுக்கும் அத அச்சுல ஏத்துறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நாம கோவத்துல பேசுறது, கூட இருக்கவங்ககிட்ட பேசுறது எல்லாத்தையும் அப்படியே எழுத முடியாது. நம்ம ஊர் வழக்கங்களுக்கு இதெல்லாம் ஒத்துவராதுற் யாரோ தெரியாத ஒரு ஆள் செய்யிற விஷயங்களை நாம தப்பா எடுத்துக்குறதில்லை. அதுக்கு சிறந்த உதாரணம் “ஹரஹர மஹாதேவகி” ஆடியோ. படங்கள்ல வர்ற அளவுக்கு ரீச் ஆன ஆடியோ. ஆனா யாரும் அத பேசுனவன திட்டுல. ஏன்னா அவன் யாருன்னே தெரியாது. தெரிஞ்சவனத்தான திட்டமுடியும்.

இதே அந்த ஆடியோவ பேசுன பையன் ஒரு நாள்  வந்து ”நாந்தான் அத பேசுனேன்”னு முகத்த காட்டுற அன்னிக்கு அதுவரைக்கும் ஆடியோவ ஷேர் பன்னிகிட்டு இருந்தவன்லாம் யோக்கியனா மாறி அவன கழுவி கழுவி ஊத்த ஆரம்பிச்சிருவாய்ங்க. அவ்வளவுதான் உலகம். அதேதான் இங்கயும். இந்த பாட்ட யாரோ முகம் தெரியாத ஒருத்தன் பாடி ரிலீஸ் பன்னிருந்தான்னா, இந்த பாட்ட கூட மாறி மாறி நம்மாளுக ஷேர் பன்னி ஹிட் பன்ன வாய்ப்பு இருக்கு.

ஒரு தடவ வெளியூர் போயிருந்தப்போ, அந்த நாட்டுக்கார நண்பன் ஒருத்தன் அவங்க வீட்டுக்கு என்னை அழைச்சிட்டு போனான். எப்பவுமே மொழி தெரியாத நம்ம நண்பனுக்கு முதல்ல கத்து குடுக்குறது கெட்ட வார்த்தைகள்தான். அந்த மாதிரி அந்த மொழிலயும் சில கெட்ட வார்த்தைகள சொல்லிக் குடுத்துருந்தாய்ங்க. அவங்க வீட்டுக்கு போன உடனே அவன் ”எங்க அப்பாவ அந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டு”ன்னு சொன்னான். நா மெரண்டுட்டேன். “அடேய்.. அது உங்க அப்பாடா.. வேணாம்” ன்னு சொல்லியும் விடல. அப்புறம் அவன் சொல்லிக்குடுத்த அத்தனை வார்த்தைகளையும் அவங்க அப்பாவ பாத்து சொன்னப்புறம் தான் விட்டான். அவங்க அப்பாவும் அத சிரிச்சிக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாரு. அவங்க ரெண்டு பேரும் எதோ ஃப்ரண்ட்ஸ் மாதிரி பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா நம்ம ஊர்  நினைச்சி பாருங்க. அப்பா அம்மாவப் பத்தி ஒருத்தன் எதாவது ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டா ரத்தக் களரி ஆகுற அளவுக்கு சண்டை நடக்கும். நமக்கும் அயல்நாட்டு காரனுங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் சில விஷயங்கள்ல இடைவெளி இருக்கும். நிறைய விஷயங்கள் வெளிப்படையா பேசுறது இல்லை. அது நம்ம கலாச்சாரமும் கூட. ஆனா இப்ப வர்ற நிறைய பாட்டுகளும், படங்களும், ஏன் சில டிவி நிகழ்ச்சிகள் கூட நம்மள தாவணிக்கனவுகள் பாக்யராஜா மாத்துது.

இன்னிக்கு டிவி ஷோக்கள் அத்தனையிலயும் ஆபாசமான பேச்சுதான். மக்கள் அந்த மாதிரி பேசுனாதான் ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருக்காங்களான்னு தெரியல. குறிப்பா விஜய் டிவில வர்ற சில நிகழ்ச்சிகள். கனெக்‌ஷன், கலக்கப்போவது யாருன்னு நிறைய ஷோக்கள் ரொம்ப ஆபாசமாத்தான் போயிட்டுருக்கு. அதிலும் ”அந்த மாதிரி” கமெண்ட் அடிக்கும்போது நிகழ்ச்சில வர்ற பசங்களவிட பொண்ணுங்கதான் அதிகமா சிரிக்கிதுங்க. டிவி ஷோக்கள்ல கலக்கப்போவது யாரும் , சிரிச்சா போச்சும் தான் நான் தொடர்ந்து பாக்குறது.

ஒரு நாள் வீட்டுல கலக்கப்போவது யாரு பாத்துக்கிட்டு இருந்தோம். அப்போ ரெண்டு பேரு ஹர ஹர மஹா தேவகி ஸ்லாங்குல எதோ காமெடி பன்னிட்டு இருந்தாய்ங்க. அவய்ங்க பேசுன ஸ்கிரிப்டுல ஒரு காமெடியும் இல்லை. ஆனா ஜட்ஜா உக்காந்திருக்க மைனாவும், ப்ரியங்காவும் விழுந்து விழுந்து சிரிக்கிதுங்க. வீட்டுல உள்ளவங்க யாருக்கும் சிரிப்பு வரல. ஏன் அதுங்க அப்டி சிரிக்கிதுங்கன்னு கேக்குறாங்க. என்ன சொல்ல முடியும். தெரியலயேன்னு சங்கோஜப்பட்டுக்கிட்டே சொல்ல வேண்டியிருக்கு. நம்ம சமுதாயத்துல பொண்ணுங்களுக்குன்னு ஒரு தனி மதிப்பு இருக்கு. ஆண் பெண் ரெண்டு பேரும் சமம்னு பசங்க பேசுற எல்லாத்தையும் அவங்க பேசுனா அது நல்லாருக்காது. சில விஷயங்கள் தெரிஞ்சும் தெரியாத மாதிரி காமிச்சிக்கிறதுலதான் அவங்களோட மரியாதையே அடங்கியிருக்கு.

அவய்ங்க டிவில பர்ஃபார்ம் பன்னுறத நம்மளாலயே வீட்டுல ஒழுங்கா பாக்க முடியல. அவனுங்க அவிய்ங்க வீட்டுல எப்டி சொல்லிருப்பாய்ங்க? அதுசரி நம்ம சிம்பும் அனிரூத்தும் அவிய்ங்க வீட்டுல போய் “ஒரு செம பாட்டு போட்டுருக்கேன் கேளுங்க” ன்னு இத போட்டு காமிப்பாய்ங்களோ?
நம்மாளுகளோட ரசனை மாற்றம்தான் இந்த நாயிங்கள இப்படியெல்லாம் பன்ன வைக்கிதுன்னா கண்டிப்பா இது நல்லதுக்கில்ல. சமீபத்துல “நானும் ரவுடிதான்” படத்து க்ளைமாக்ஸ் சீக்வன்ஸ்ல நயன்தாரா பார்த்திபனப் பாத்து ஒண்ணு சொல்ற மாதிரி வச்சிருப்பாய்ங்க.  தனியா பாக்கும்போதே அறுவருப்பா இருந்துச்சி. ஃபேமிலியோட கூப்டு போனவனுங்க நிலமை என்னவோ.


ஒரு சாதாரண மனிதன் எப்படி வேணாலும் இருக்கலாம். அவன் என்ன பண்ணாலும் பெரும்பான்மையை பாதிக்காது. ஆனா சமுதாயத்துல அனைவருக்கும் நல்லா பரிட்சையமான ஒருத்தர், நிச்சயம் அவங்களோட ஒவ்வொரு அடியையும் நிதானமா எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி காவாலித்தனம் பன்னிக்கிட்டு இருந்தா அதுங்களுக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் அசிங்கம். இதயெல்லாம் ஆரம்பத்துலயே அடிச்சி வளர்த்துருக்கனும். இனிமே யார தப்பு சொல்றது. 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 comments:

Anonymous said...

andha song ah ketapram dhan terinjudhu en andha naaiku inum adutha padam pathi endha newsum varalanu . hara hara mahadevaki ah nama pasanga rasikuradhukum share panradhukum reason adhu epovum marachu vechu dhan rasika padudhu andha audio va ellar munadiyum potu kaata nenaka maatan .
oru audio release aayiruchunu facebook la status podavo share panavo maatan just pasanga grpla share aagum. aana idhu apdi ila epdi irundhalum indha naai padirukunu kisu kisu eludhuravanla irundhu news vaasikiravan varaikum soluvan

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இது பற்றி நானும் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எதிர்ப்புகள் தந்து பாடலைத் தடைசெய்யும்வரை விடக்கூடாது. மானம்கெட்ட ஜென்மங்கள்

Unknown said...

Ena boss social responsibility Yoda post podureaga.. Well said..

ஜீவி said...

அருமை..
. சிம்பு ஒரு திருந்தாத கேடுகெட்ட ஜென்மம்

சீனு said...

Super...

Madhu said...

Responsible post. Good one.

vivek kayamozhi said...

அவன் ஒரு பு'பீப்'ட மகன்..
அதப்பத்தி எழுதி அவன எல்லாம் பெரிய ஆளா ஆக்காதீங்க..
ரோட்ல போற நாய் அது..

கருப்பன் (A) Sundar said...

இதுல கொஞ்சம் காமடி என்னனா, இதை கண்டுக்காம விட்டிருந்தாலே காணாம போயிருக்கும். வழக்கம் போல நம்ம நெட்டிசன்கள் Share பட்டனை அமுக்கியே தலைப்பு செய்தியாக்கிட்டாய்ங்க. விகடன் வலைதளத்துல தலைப்பு செய்தியா வரும் வரைக்கும் இதை பத்தி எனக்கு தெரியவே தெரியாது! என்னை பெறுத்தவரை சிம்புவை விட இதை வைரலாக்கிய நெட்டிசன்களும் மீடியாக்களும் தான் கண்டனத்திற்குரியவர்கள். இந்த ஆல மரத்தின் விதை சிம்பு போட்டதாக இருக்கலாம் ஆனால் உரம் போட்டு தண்ணீர் விட்டு இவ்வளவு பெருசா வளர்த்தது கண்டிப்பா சிம்பு இல்லை :-)

Paranitharan.k said...

சரியான கருத்து ...

Anonymous said...

Anirudhunnu Oru Kaavalipayalum Irukkaan............ Avanai neenga yaarum kandukkave illaiye.......

குரங்குபெடல் said...

" எவ்வளவோ இயக்குனர்கள் நல்ல கதை வச்சிருந்தாலும் அத படமாக்கி திரைக்கு கொண்டு வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா ஒரு நடிகரோ, நடிகரின் மகனோ இல்லை ஒரு தயாரிப்பாளரோட மகனோ நினைச்சா ஒரு குப்பை கதையாக இருந்தாலும் திரைக்கு கொண்டு வர முடியும். அதனால தான் கண்ட குப்பைகள பாக்க வேண்டிய கட்டாயமும், கண்ட கருமாந்திரங்கள கேக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டாகுது "


தம்பி . . . அருமையான கருத்து . . .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...