Wednesday, December 9, 2015

பத்துலட்சம் பத்தாதேடா!!!


Share/Bookmark
”சென்னை வெள்ளம் அனைவரின் கர்வத்தையும் அழித்து, மதங்களை ஒன்றாக்கி மனிதர்களை ஒன்றாக்கி, மனித நேயத்தை வளர்த்து” ன்னு நமது நண்பர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய பல பதிவுகள் உங்கள் டைம்லைன்லயும், வாட்ஸாப்யும் ஒரு வாரமா வந்து குவிஞ்சிருக்கும். அதனால திரும்ப அதயே எழுதி அருக்கவேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா அதே ரம்பத்த கொஞ்சம் வேற ஆங்கிள்ல போடுவோம். இந்த மழையில நம்மாளுங்க மத்தவங்க மேல எவ்வளவு அக்கரை காட்டுறாங்கன்னு மட்டும் இல்லாம குறிப்பிட்ட சில பேர் மேல எவ்வளவு வெறுப்ப காட்டுறங்கன்னும் துல்லியமா தெரிஞ்சிருக்கு.

நம்ம கொஞ்ச நாளுக்கு முன்னால ”தமிழ்நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைனா நானே ஓடுவேன்” ங்குற பதிவுல வாட்ஸ்ஆப் தகவல்கள் எப்படி எந்த வித யோசனையும் இல்லாம அப்படியே அப்பட்டமா மற்றவர்களோட ஷேர் பன்னப்படுதுங்குறதப் பத்தி எழுதிருந்தோம். இப்ப சென்னை வெள்ளத்தின் போது நடந்தது அந்த மாதிரி தகவல் பகிர்வோட உச்சக்கட்டம். சமூக வலைத்தளங்களும் வாட்ஸாப்பும் இல்லாம இருந்திருந்தா இவ்வளவு விரைவா பாதிக்கப்பட்ட எல்லாருக்க்கும் உதவி கிடைச்சிருகாதுங்குறதுல கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. ஆனா இதுங்க எந்த அளவு உதவியா இருந்துச்சோ அதே அளவு மக்கள் மத்தில பீதியக் கிளப்பவும் காரணமா இருந்துச்சி.

மக்களுக்கு உண்மைய சரியா சொல்லக்கூடிய செய்தி தளங்கள்கூட இந்த மாதிரி தகவல்கள கண்மூடித்தனமா பதிவு பன்றதுதான் ரொம்ப வேதனையான விஷயம். இப்ப இருக்க எந்த செய்தித் தளங்களும் செய்தி சேகரிக்க அவ்வளவா ஆட்கள் வச்சிக்கிறதில்லை போல. சும்மா ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்ட க்ரியேட் பன்னி வச்சிக்கிட்டு எவன் எவன் எது எதையெல்லாம் கெளப்பி விடுறானோ அத்தனையும் அதுல எவ்வளவு உண்மை இருக்குன்னு கூட தெரியாம பதிவு செய்றாங்க. நம்பகமான செய்தித்தளங்கள் கூட இதுக்கு கொஞ்சமும் விதிவிலக்கில்ல.

இப்ப ஆன்லைன் செய்தித்தளங்கள் அதிகமாகிட்டதால அவங்களுக்குள்ள யாரு மொதல்ல செய்திய வெளியிடுறதுங்குறதுல தான் போட்டியா இருக்கே தவற யார் உண்மைய வெளியிடுறதுங்குறதுல இல்லை. ஒரு ஊர்ல நாப்பது நல்லவனுங்க இருந்தா நாலு காவாலிப்பயலுக இருக்கத்தான் செய்றாய்ங்க. இல்லைன்னா அவன் அவன் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும்போது செங்கல்பட்டுல பாலம் உடைஞ்சிருச்சி, செம்பரம்பாக்கம் ஏரியே உடைஞ்சிருச்சின்னு வாய்க்கு வந்தத அடிச்சி விடுவாய்ங்களா? அதெல்லாம் பரவால்லை. இந்த கேப்புல ஒருத்தன் க்ரோக்கோடைல் பார்க்குலருந்து முதலைங்கல்லாம் ஊருக்குள்ள வந்துருச்சின்னு கிளப்பி விட்டான் பாருங்க. ஆனா அவனச் சொல்லி குத்தம் இல்லை. ஜூராசிக் பார்க்குலருந்து நாலு டைனோசர் தப்பிச்சி வந்துருச்சின்னு அவன் சொன்னா கூட நம்மாளுங்க கூச்சப்படாம அதயும் ரொம்ப சீரியஸா ஷேர் பன்னுவாய்ங்க.

சென்ற புதன் வியாழக்கிழமைகள்ல சமூகவலைத்தளங்கள்ல இயங்கிய அனைவருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது பன்னனும்ங்குற ஒரே எண்ணத்துல உதவிக்கான எண்களையும், எங்கெங்க மக்கள் மாட்டிகிட்டு இருக்காங்க யாரை தொடர்பு கொள்ளனும்ங்குற தகவல்களத்தான் பெரிதும் ஷேர் பன்னிட்டு இருந்தாங்க. அந்த கேப்புல நமக்கு செம்ம கடுப்பாகுற மாதிரி நடந்தது ரெண்டு விஷயம். ஒண்ணு இவய்ங்க எழுதுன கவிதை. அவன் அவன் அப்பா அம்மாவோட பேச முடியலைன்னு வெளிநாட்டுலருந்து தவிச்சிட்டு இருக்கும்போது இவய்ங்கள பாருங்க “வந்தது மழை… ஒழிந்தது ஆணவம்.. இணைந்தது மதம்… வக்காளி நல்லா என் வாயில வரும்… அது என்னவோ கவிதைய கண்டாலே எனக்கு ஒரு அலர்ஜி.. இதுக்கிடையில “சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா” ன்னு ஒரு ஆயா பாடுன பாட்ட வேற அனுப்பிருந்தாய்ங்க. ஃபோன தூக்கி போட்டு உடைச்சிடலாம்போல இருந்துச்சி. 

அந்த சமயத்துல நடந்த இன்னொரு அருவருப்பான விஷயம் யார் யார் எவ்வளவு காசு குடுத்தாங்கங்குற ரசிகர்கள் சண்டை. எங்காளு அதிகம் குடுத்தாரா இல்லை உங்காளு அதிகம் குடுத்தாரான்னு. முக்கியமாக ரஜினிக்கு எதிராக கருத்துக்களை பகிர்வதை அதிமேதாவித்தனமாக கருதும் சில மடையர்கள். எதோ தீவாளிக்கு ஷாப்பிங்க் போறப்ப காசு பத்தலைன்னு கேக்குற மாதிரி “பத்து லட்சம் பத்தாதேப்பா” ன்னு.

அரசாங்கம் எதோ மக்களை காப்பாத்த நிதி இல்லாம திண்டாடும்போது, அரசாங்கமே நடிகர்கள்கிட்ட நிதிநிலைமைய பலப்படுத்திக்க நன்கொடை கேக்கும்போது ரஜினி பத்து லட்சம் குடுத்துருந்தா இந்த கேள்விகள் ”ஓரளவு” தகுதியானவையா இருக்கலாம். அப்படி இல்லாம இருக்க பட்சத்துல நடிகர்கள் கொடுக்குற பணம் உண்மையிலயே நிவாரணத்துக்கு ஒழுங்கா பயன்படுத்தப்படுதான்னு தெளிவா தெரியாத நிலையில பத்து லட்சம் குடுத்தா என்ன பத்து கோடி குடுத்தா என்ன? இப்போ நடிகர்கள் குடுக்குற பணம் ஒரு courtesy க்காக நாங்களும் இருக்கோம்ன்னு ஒரு அட்டெண்டன்ஸ் போடுறதுக்காகத்தானே தவற இதை வச்சித்தான் அரசு மக்களை மீட்டெடுக்க போகுதுன்னு இல்லை. அள்ளக்கையா இருந்தாலும் “அரசாங்கம் யார்கிட்டயும் யாசகம் கேட்கவில்லை” ன்னு போட்டாருல்ல ஒரு போடு.

நேரடியா சென்று உதவிகள் செஞ்ச நடிகர்கள் செலவு செஞ்ச தொகையைத் தவிற, நிவாரணத்திற்காக அரசுகிட்ட நடிகர்கள் கொடுத்த நிதியால எதாவது மாற்றங்கள் ஏற்பட்டுச்சின்னு யாராவது சொல்ல முடியுமா? நிச்சயமா இல்லை. ரஜினி பத்துலட்சம் குடுத்தால பத்து குடும்பத்த மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சிது பத்து கோடி குடுத்திருந்தா இன்னும் ஒரு நூறு குடும்பத்த காப்பாத்திருக்கலாமேங்குற ரேஞ்சுல அடிச்சி விட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

தப்பே செய்யாம எந்த ப்ரச்சனைக்கும் போகாம எவ்வளவு நல்லவனா இருக்க பாத்தாலும், ஒருத்தனோட வளர்ச்சி அவனோட எதிரிகளுக்கு எவ்வளவு காழ்ப்புணர்ச்சிய ஏற்படுத்தும்ங்குறதுக்கு வெள்ளத்தின் போது விமர்சிக்கப்பட்ட ரஜினியே சாட்சி. அது மட்டும் இல்லை அஜித் 65 லட்சம், விஜய் அஞ்சு கோடின்னு அவன் அவன் கிளப்பி விட்டதுக்கு காரணமும் ரஜினி என்கிற மனிதரை தரம் தாழ்த்தி பேசனும்ங்குற ஒரே எண்ணத்துல தான்.

நவம்பர் 1ம் தேதியே அதாவது ரெண்டாவது முறை சென்னை மூழ்குறதுக்கு முன்னாலயே ரஜினி பத்துலட்சம் தருவதாக வெளியிட்டுருந்தாரு. “பத்து லட்சம் பத்தாதேடா” குரூப்பு உடனே இவரை மட்டம் செய்ய வேறு யாரையாவது தூக்கி பேசனும்னு யோசிக்கும்போது மறுநாள் சென்னையோட வெள்ளச் செய்தி பரவ நம்ம அல்லு அர்ஜூன் பதினெட்டு லட்சம் தர்றதா ட்விட்டர்ல போடுறாரு. பத்தாதா நம்மாளுக்கு. என்ட ஸ்டேட் ஆந்த்ரா.. எண்ட மதர் டங்க் தெலுங்கு… எண்ட சட்னி கோங்குறா சட்னின்னு ஆரம்பிச்சிட்டானுங்க…

பாத்தா இனிமே தெலுங்கு படம் தான் பாக்கனும்னு ஒருத்தன் போடுறான். பக்கத்து ஸ்டேட் காரனுக்கு இருக்க இரக்கம் கூட இவருக்கு இல்லையே… இவர்லாம் ஒரு மனிதனா.. தமிழ் ரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்தவன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க… ஆனா அவய்ங்க ஊரு வெள்ளத்துல இருக்கும்போது நம்மாளு பஸ் அனுப்புனப்போ “ஏன் பஸ் அனுப்புனாரு” ன்னு பொங்குன பிச்சக்காரனுங்க தான் இவனுங்க.  

சரி ரஜினிய ஆந்த்ராக்காரனோட கம்பேர் பன்ன வேணாம். நம்ம ஊர்லயே எவனோடவாச்சும் கம்பேர் பன்னிதான் மட்டம் தட்டனும். யார போடுறது? போடுறா அஜித்துக்கு ஒரு அறுபத்தஞ்சி லட்சம். அதப்பாத்தோன்ன எங்க அனில் அண்ணேன் சும்மாருப்பாரா… போடுறா அவருக்கு ஒரு அஞ்சி கோடி.. யாருகிட்ட.. நீங்க லட்சத்துல ரீலு விட்டா நாங்க கோடில விடுவோம்லன்னு அணில் அண்ணா ஆளுங்க அடிச்சி விட்டாய்ங்க. இது எல்லாத்தையும் பாத்து வெறியான யாரோ ஒரு ரஜினி ரசிகன் போட்டான் எல்லாத்துக்கும் மேல ஒரு பத்து கோடி. போட்டாச்சா.. இப்ப எல்லாரும் ஷேர் பன்னுங்க..

எல்லாரை விட அதிகமா ரஜினிக்கு அமோண்டு போயிருச்சே.. இப்ப என்ன பன்றது…. இறக்குடா ஷாருக்கான… எத்தனை கோடி போடலாம்.. பத்து? பதினைஞ்சி? அட ஒரு அம்பது கோடியப் போடுப்பா.. குடுக்கவா போறாய்ங்க. சும்மா ரஜினிய மட்டம் தட்டுறதுக்கு தானே… ஆக ரஜினிக்கு எதிரா நம்ம ஆளுங்க குடுக்குறதா சொன்ன பணம் மட்டும் இருநூறு முன்னூறு கோடியத் தாண்டும். இது எல்லாம் இவர் ஒருத்தர காலி பண்றதுக்காக. கடைசில பாத்தா அவரத்தவற லிஸ்டுல உள்ள எல்லாரும் “ கூல் குடிக்க வேணா வர்றேன்.. குடுக்குறதுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை” ன்னு டஸ் ஆக்கி விட்டாய்ங்க.

இதுக்கு இடையில வீராதி வீரர் சூராதி சூரர் நாயகர் “நா குடுத்த வரிப்பணம் எங்க?” ன்னு கேட்டதா ஒரு செய்தி. உடனே ஆரம்பிச்சிட்டாய்ங்க.. இந்த தைரியம் யாருக்காவது வருமா? அரசை எதிர்த்து கேள்வி கேட்ட அறத் தமிழன் மறத்தமிழன்னு போஸ்டு போட்டாய்ங்க. கடைசில ஆடு திருடுபோகல… திருடு போன மாதிரி கனவு கண்டேன்னுட்டாரு அவுரு. அதுலயும் இவய்ங்களுக்கு காத்து போயிருச்சி.

இந்த கேப்புல வாட்ஸ் ஆப் குரூப்புல ஒருத்தன் “தமிழ்நாட்டின் பொருளாதாரச் சுரண்டல் கபாலியை தடை செய்வோம்” ன்னு ஒரு போஸ்டர் அனுப்புறான். ஏண்டா காவாலி… சொகப்பிரசவம் கொறைப் பிரசவம்னாடா பேசிக்கிட்டு இருக்கோம். கபாலி எப்படா உன்கிட்ட சொரண்டுனாரு. இத்தனைக்கும் இத ஷேர் பன்றவனுங்க யாருன்னு பாத்த திருட்டு விசிடிய வாங்கி ப்ரிண்டு சரியில்லைன்னு குறை சொல்லிகிட்டே பாக்குறவய்ங்களா இருப்பாய்ங்க. இவன்கிட்டருந்து பொருளாதாரத்த சொரண்டிட்டாய்ங்களாம்.

வானத்த போல படத்துல செந்தில்கிட்ட ஒரு பிச்சக்காரன் “தர்மப்பிரபுவே” ம்பான். உடனே அவரு “டேய் இவருக்கு ரெண்டு இட்லி கட்டு”ம்பாறு. அடுத்து “நீதிமானே” ம்பான் பிச்சக்காரன். “ரெண்டு வடையையும் சேத்துக்கட்டு” ம்பாறு. ஆனா கடைசில எதுவுமே குடுக்காம “நா சந்தோஷப்படுற மாதிரி நீ பேசுன.. நீ சந்தோஷப்படுற மாதிரி நா பேசுனேன்.. ஒண்ணும் தரமுடியாது போ” ன்னு அனுப்பி வச்சிருவாரு. அந்த மாதிரி தான் இவய்ங்க. இவங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு புரளிய கிளப்பி விட்டா போதும். உண்மையிலயே அதனால எதாவது புண்ணியம் இருக்கான்னு எந்த சிந்தனையும் இல்லை.

இவர்களோட முக்கிய குறிக்கோள் ரஜினி எந்த விதத்துலயும் புகழப்பட்டுவிடக் கூடாதுங்குறது தான். ரஜினி தமிழர்களை ஏமாத்துனார்ன்னு வர்ற போஸ்ட மாஞ்சி மாஞ்சி ஷேர் பன்றாய்ங்க. ஆனா அதே “பத்து கோடி குடுத்தார்” ன்னு ஒருத்தன் போட்டா “அய்யயோ… don’t spread… இது fake” ன்னு பதறுறாய்ங்க.. ஏண்டா முதலை வந்துருச்சிங்குறத யோசிக்காம ஷேர் பன்னவய்ங்கதானடா நீங்க..

எவ்வளவு நஷ்டமடைந்தாலும் தயாரிப்பாளரையோ டிஸ்டிபியூட்டர்களையோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ரெகுலராக போய்க் கொண்டிருக்கும் உத்தம சுப்பையா பாண்டிக்களுக்கு நடுவுல தன்னால் யாரும் நஷ்டமடையக் கூடாதுன்னு வாங்கிய சம்பளத்தை திரும்பித் தர்றவரு அவரு. ”நா எதாவது செய்வேன். ஆனா பணமா நேரடியா தரமாட்டேன். ஏன்னா பணம் இருந்தா அந்த இடத்துல அரசியல் வரும். அரசியல் வந்தா ப்ரச்சனை வரும்.. அது நமக்கு தேவையில்லை” ன்னு நேரடியாக ரசிகர்கள்கிட்ட சொன்னவரு அவரு. எப்போ எது செய்யனும்னு அவருக்குத் தெரியும். ரஜினிக்கு முன்னால நீங்க கேள்வி கேட்க வேண்டியவர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. அதயும் மீறி நீங்க அவரத்தான் கேள்வி கேக்கனும்னு நினைச்சா அந்த “மக்கள் முதல்வர்” ஸ்தானத்துக்கு உகந்தவர் வேற யாரும் இல்லை. அவர்தான். 

மத்த நேரங்கள்லயெல்லாம் ரஜினியை கன்னடராக பாக்குற நம்மாளுங்க, அவர தாக்கனும்னா மட்டும் தமிழ்நாட்டின் முதல் தமிழனா அவரத்தான் வச்சி பாக்குறாங்க. அவரை விட தமிழுனர்வு பர்சண்டேஜ்ல அதிகம்னு சொன்ன நாசர், ச்சீமான்லாம் இவய்ங்க லிஸ்டுலயே இல்லை போலருக்கு. 

நாலு கெட்டவனுங்க சேந்து ஒரு நல்லவன சாச்சிடலாம்னா இந்த உலகத்துல நல்லவங்க யாருமே இருக்கமாட்டங்கடா.. முடிஞ்ச வரைக்கும் நடத்துங்க.. பாக்குறோம்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

31 comments:

ramachandran.blogspot.com said...

அட்டகாசம் சகோ.தலைவர் ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவில் கொண்டு வந்துள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்

Blogger1968 said...

Well said sir.....

Anonymous said...

well said and wonderfully written my friend. good one, keep it up.
the last line was fentastic, really enjoyed!
-balaji

mahalingam said...

Arumai arumai nanderey hatts off

r.v.saravanan said...

குட் வெரி குட் சிவா

Anonymous said...

முத்துசிவா அண்ணா.,.சொல்ல வார்த்தைகளே இல்ல அண்ணா..மீண்டும் மீண்டும் படிச்சுகிட்டே இருக்கேன்...இம்மி அளவும் அறம் என்ற வார்த்தையே அறியாத வாட்ஸ் அப் சமூகத்துக்கு செருப்படி அண்ணா👍🏻👍🏻

Anonymous said...

JAALRA SOUND KAATHAI KILIKKUTHU.

Kumar said...

இன்று இணையத்தில் புழங்குபவர்களில் முக்கால்வாசி பேர், ரஜினியை திட்டினால்தான் நம்மை மதிப்பார்கள்... அதே நேரம் கமலை புகழ்ந்தால்தான் நம்முடைய இமேஜ் உயரும் என்னும் கொள்கை உடையவர்கள்! லிங்கா படத்தை கழுவி ஊற்றியவர்கள், உத்தம வில்லனை குறையே சொல்லாத உத்தமர்கள் தான்! முகநூலில் ரஜினி அளவுக்கு வேறு யாரும் இத்தனை மோசமாக விமர்சிக்கப்பட்டதில்லை. சிறப்பான பதிவு!

Govardhanan said...

Super bro..

Unknown said...

Mayavalai next adhyayam eppo?

Anonymous said...

I am a regular reader of your blog. Enjoyed your posts in-spite of differences in views. Not even once i have commented, but this time ...

Since you are so very fixated on Mr.Rajini Kanth and tries to look every thing he does in a positive way, I was expecting a post on this from you. Bingo, it is here.

This is not only for Mr.Rajini Kanth but for all the actors who are identified as MASS stars. As a neutral observer (not a Fan of any actor but audience for all actors), i tried to understand why every one is targeting Mr.Rajini Kanth in every such event especially with the amount of Money he donates.

Mr.Rajni Kanth is one of the very few actors who always lost all his fortunes for people in reel. He is the one who is successful is making people believe that when he does that in reel , even though many tried he is one of the very few who succeeded in it after Mr. MGR. He is the one who uses this image in his movies. What can you say for him for having such lines in his movie:

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்தது தமிழகம்

These kind of things coupled with his spiritual overtures leads to these kind of expectation. On his part Mr.Rajini kanth is equally guilty for fueling these kind of image build up till date.

I agree to the fact, Cine stars are soft targets these days but in Mr. Rajini's case that is only partially true. He himself is also responsible for that.

- Vijay

Anonymous said...

Paesama disclaimar'la naan oru rajiniyin sombu'nu potidalaam.

குட்டிபிசாசு said...


திரு.விஜய்,

இவனுங்களா எதாவது கற்பனை பண்ணிகிட்டு, பத்துலட்சம் பத்துகோடி என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? சினிமாவையும் நிஜத்தையும் பிரித்தறிந்து கொள்ளமுடியாத மடையர்கள் தமிழர்கள். அதனால்தான் ரஜினியை நொள்ளை சொல்கிறார்கள். ரஜினி எம்ஜிஆர் போல தன் திரை செல்வாக்கை வாக்குவங்கியாக மாற்றவில்லை. ரசிகர்களிடம் மற்றவர்களை ஆதரிக்கவும் சொல்லவில்லை. ரஜினி என்பவர் ஒரு தனிமனிதர். அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறார். நாம் என்ன செய்துவிட்டோம், அவரை குறை சொல்ல.

கலைஞர், புரட்சி தலைவி எல்லாம் பிறக்கும்போதே கோட்டீஸ்வரர்களா? நியாயப்படி சென்னையின் இந்த நிலைமைக்குக் காரணம் அவர்கள் தான். இவர்கள் தான் தமிழகத்தை அதிகமாக ஆண்டவர்கள்.

குட்டிபிசாசு said...

//அதப்பாத்தோன்ன எங்க அனில் அண்ணேன் சும்மாருப்பாரா… போடுறா அவருக்கு ஒரு அஞ்சி கோடி.. யாருகிட்ட.. நீங்க லட்சத்துல ரீலு விட்டா நாங்க கோடில விடுவோம்லன்னு அணில் அண்ணா ஆளுங்க அடிச்சி விட்டாய்ங்க//

முத்து,

ரசிகர்கள் மட்டுமல்ல. தினமலரில் வந்த செய்தி. "விஜய் ஐந்துகோடி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். வாங்க ஆளில்லை."

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எரிச்சலை எப்படியாவது ஓட்டாக்கிவிட அனைத்து கட்சிகளும் முயற்சிக்க, சிலர் மட்டுமே உண்மையாக மக்களுக்கான உதவிகளை செய்துள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

முத்துசிவா said...

@Anonymous

//ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்தது தமிழகம்

These kind of things coupled with his spiritual overtures leads to these kind of expectation. On his part Mr.Rajini kanth is equally guilty for fueling these kind of image build up till date.//

நன்றி.. உங்களது கேள்விக்கான பதிலும் பதிவிலேயே உள்ளது. நிவாரணத்திற்காக அரசுக்கு கொடுக்கப்படும் பணம் உண்மையிலேயே அவர்களுக்கு பயன் தருகிறதா இல்லையா என்பதே யாருக்கும் தெளிவாக தெரியாத நிலையில் இங்கு யார் எவ்வளவு கொடுத்தால் என்ன? அதனால் என்ன பயன். நீங்கள் சொல்வது போல் ரஜினி ஒரு 10 கோடி கொடுத்திருந்தால் அதனால் மக்கள் உண்மையிலேயே பயனடைவார்கள் என்பதை தங்களால் உறுதியாக கூற முடியுமா?

முத்துசிவா said...

@Anonymous

//Paesama disclaimar'la naan oru rajiniyin sombu'nu potidalaam/

மிஸ்டர் சொம்பு நக்கி... நல்லா கண்ண தொறந்து பாருங்க. இந்த வலைத்தளத்தோட கவர் போட்டோவிலயே ரஜினி தான் இருக்காரு. அதுமட்டும் இல்லாம ஒரு நாலஞ்சி widget la கூட ரஜினி படத்த வச்சி நா ஒரு ரஜினி ரசிகன்ங்குறத எல்லா இடத்துலயும் சொல்லிருக்கேன். உங்களுக்கெல்லாம் ஒழுங்கா கமெண்ட் கூட போட தெரியல... போங்கப்பு

முத்துசிவா said...

@குட்டிப்பிசாசு

//
ரசிகர்கள் மட்டுமல்ல. தினமலரில் வந்த செய்தி. "விஜய் ஐந்துகோடி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். வாங்க ஆளில்லை.//

இப்ப இருக்க எந்த செய்தித் தளங்களும் செய்தி சேகரிக்க அவ்வளவா ஆட்கள் வச்சிக்கிறதில்லை போல. சும்மா ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்ட க்ரியேட் பன்னி வச்சிக்கிட்டு எவன் எவன் எது எதையெல்லாம் கெளப்பி விடுறானோ அத்தனையும் அதுல எவ்வளவு உண்மை இருக்குன்னு கூட தெரியாம பதிவு செய்றாங்க. இந்த பாராகிராஃப் அவங்களுக்கு தான்

முத்துசிவா said...

@குட்டிப்பிசாசு

//
ரசிகர்கள் மட்டுமல்ல. தினமலரில் வந்த செய்தி. "விஜய் ஐந்துகோடி வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். வாங்க ஆளில்லை.//

இப்ப இருக்க எந்த செய்தித் தளங்களும் செய்தி சேகரிக்க அவ்வளவா ஆட்கள் வச்சிக்கிறதில்லை போல. சும்மா ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்ட க்ரியேட் பன்னி வச்சிக்கிட்டு எவன் எவன் எது எதையெல்லாம் கெளப்பி விடுறானோ அத்தனையும் அதுல எவ்வளவு உண்மை இருக்குன்னு கூட தெரியாம பதிவு செய்றாங்க. இந்த பாராகிராஃப் அவங்களுக்கு தான்

ஆமாம்... RJ பாலாஜி சித்தார்த் மற்றும் பல நூறு வாலண்டீர்ஸ்... அனைவருக்கும் சென்னையே கடமைப்பட்டுள்ளது

முத்துசிவா said...

@parahm eswaran

//Mayavalai next adhyayam eppo?//

மாயவலை தற்பொழுது www.justnowindia.com தளத்தில் ஆன்லைன் தொடராக வெளிவருகிறது.

Anonymous said...

Hi Siva,

I have commented couple of times for your post. However, this post looks like Panner selvam took 3 pages to reply Kamal hasaan instead of doing other things for people.

I know you are very ardent fan of Rajinikanth.. but you could have appreciated the folks like RJ Balaji , siddharth and many actors who really worked hard in this time.The whole point is just to prove about rajini's donation...

I dont want to compare anything - But really many telugu actors gave lot of money and even Raana started "Mana Madras kosam" and helped many people. Its not only about Money.
More than A center people, Rajini have lot of poor people as fans. He could have asked his other district Fans association to get help from other people and do some volunteering.. Really everyone is expecting that much only from him...

I agree the help whatever we give to government may not reach people 100%. But he has such a large fan base all over tamilnadu. Now, Rain is over - Cant he arrange some cleaning facilities and volunteer medical camps through his fans association...

You could say that then why we have government... Its not a time to argue for all this.
This Tamilnadu gave lots and lots of love to rajinikanth (i am not talking abt money here) and they expect some love in return in one of the toughest times... But i didn't see any reciprocation or gratitude from him. Thats all...






Anonymous said...

Super Bro.

Madhu said...

Were you and your family safe at the flood time ?

ஜீவி said...

I think mostly jalra comments will get published..... Sad

ஜீவி said...

I think mostly jalra comments will get published..... Sad

முத்துசிவா said...

@g venkatesan:



//I think mostly jalra comments will get published..... Sad//

பதிவுக்கு எதிரான கருத்துக்களை தாங்கள் தெரிவிப்பதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் உங்களுடைய பின்னூட்டம் வெளியிடப்படுவதற்கு ஒரு குறைந்தபட்ச நாகரீகத்தையாவது நீங்கள் அதில் கடைபிடிக்க வேண்டும். அது தங்கள் பின்னூட்டத்தில் இல்லை.

முத்துசிவா said...

@Madhu

Yes. Staying with friends. My area was safe and during that time i went to my native.

Madhu said...

Thats good to hear.

Sudarsan said...

Hi Shiva,

As usual very good article from u n I really enjoyed it well.

Even many of my friends were commenting wrong about Superstar. Now I can share your article as reply from a Rajni fan.

Thanks for this superb article.

- Sudarsan.

அமுதன் said...

thalaivar yaarukkum bathil sollaleye. avarukku theiryum yepadi seiyanum eyppo seiyanumnu...

GS_RAJNI said...

Miga arumaiyana pathivu...

Paranitharan.k said...

அருமை சார் ...தாமதமாக படித்தாலும் என் மனதில் தோன்றிய எண்ணங்களை அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள் ...இதை வாட்ஸ் அப்பில் ஷேர் பண்ண அனுமதி உண்டா சார் ..தேவைப்படும் பொழுது ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...