Friday, December 30, 2016

குடிமகன்களின் புத்தாண்டு!!!


Share/Bookmark
சிறு வயதில் தீபாவளியை எதிர் நோக்கும்போது இருக்கும் அதே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இப்பொழுது புத்தாண்டு கொண்டாட காத்திருக்கும் பலரிடமும் பார்க்க முடிகிறது.. புத்தாண்டிற்கு அவர்கள் அருந்தப்போகும் unlimited மதுவும் பப்புகளில் இவர்கள் போடக்காத்திருக்கும் ஆட்டங்களுமே இந்த உற்சாகத்திற்குக் காரணமாக இருக்கிறது. கடந்த நாலஞ்சி நாளாவே ரெண்டு பயலுக சேந்தா கேக்குற கேள்வி நியூ இயர் ப்ளான் என்ன பாஸ்ன்னு தான். அதாவது நியூ இயருக்கு எங்க போய் குடிக்கப்போறன்னு? நியூ இயர்ங்குறது அங்கீகரிக்கப்பட்ட குடிகாரர்கள் தினம்ங்குற நினைப்பு எல்லார்க்குள்ளயும் ஊரிப்போய் கெடக்கு.

ஊருக்கு போறதுக்கு ட்ரெய்ன் டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்றது மாதிரி நியூ இயர் அன்னிக்கு  ஹோட்டல்ல மூவாயிரம் நாலாயிரத்துக்கு எண்ட்ரி டிக்கெட் கிடைக்கலன்னு ஃபீல் பன்ற சில நண்பர்களையும் பாக்க முடியிது.  ஆமா அந்த 3000 ரூவாய்க்கு என்ன தருவாய்ங்கன்னு கேட்டா “டான்ஸ் ஃப்ளோர், அண்லிமிட்டட் சோறு.. அண்லிமிட்டட் சரக்காம்”

நியூ இயருக்கு சரக்கடிக்க அலையிற பாதி பேரு மாரி படத்துல வர்ற சனிக்கிழமை ரோபோ சங்கர் மாதிரிதான். நியூ அன்னிக்கு கம்பல்சரியா சரக்கு அடிப்போம். அப்ப மத்த நாள்ல? மத்த நாள்ல கண்டிப்பா சரக்கு அடிப்போம்.

நியூ இயர்க்கு மட்டும் இல்லை. இந்த கம்பெனிலயெல்லாம் டூர் ப்ளான் பண்ணுவானுங்க. அதுல மெயின் அஜண்டாவே குடிதான். அந்த டூர் ப்ளான அவிங்க போடும்போது பாத்தா செம காமெடியா இருக்கும். எந்தெந்த இடத்துக்கு போறதுங்குறதட விட எங்கெங்க சரக்கு வாங்குறோம் அத எங்கெங்க வச்சி குடிக்கிறோம்ங்குற டீட்டெய்லதான் மொதல்ல டிஸ்கஸ் பன்னுவானுங்க.

கிராமங்கள்ல இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. ஊர்ல இருக்க வரைக்கும் புள்ள நல்லா இருப்பான். டவுனுக்கு போன உடனே அங்கருக்க பசங்க அவனுக்கு குடிக்க வச்சி பழக்கி விட்டுருவாய்ங்கன்னு. எந்த நண்பனுமே சரி.. எவ்வளவு உயிர் நண்பனா இருந்தாலும் சரி யாரும் சரக்க வாயத்தொறந்தெல்லாம் ஊத்தி விட மாட்டானுங்க. எதாவது ஒரு பொருள சாப்டா பக்கத்துல இருக்கவனுக்கும் குடுக்குறது நம்ம பண்பாடு.. அந்த courtesy க்கு மச்சி நீயும் சாப்புடு மச்சின்னு சொல்லுவான். “இல்ல மச்சி நா சாப்பிட மாட்டேன்”ன்னு சொன்னா “சூப்பர் மச்சி.. அப்டியே இரு” ன்னு சொல்றவங்கதான் அதிகமே தவற இல்ல இல்ல நீ குடிச்சே ஆகனும்னு யாரும் அடம் புடிக்கிறதில்லை. எல்லாமே நம்ம சொல்ற பதில்ல தான் இருக்கு.

பண்டிகைகள், கொண்டாட்டங்கள் கட்டாயமா வேணும். ஆனா இப்ப கொண்டாட்டம்னாவே அது சரக்க போட்டு மட்டையாகுறதுன்னு மட்டும்தான்னு அர்த்தமாக்கிக்கிட்டு இருக்காங்க.. கொண்டாட்டாம்னா நம்ம மகிழ்ச்சியா இருக்கது. நம்மளையே மறந்து மட்டையாகி கிடக்குறது இல்லை.

நீங்க குடிக்கிற காச சேத்து வச்சிருந்தா இந்நேரம் ஒரு வீடு வாங்கிருக்கலாம். அந்தக் காச ஒரு ஆதரவற்ற குழந்தைகளோட ஒரு நாள் சாப்பாட்டுக்கு குடுக்கலாம்னுல்லாம் நா கருத்து சொல்லல. கொண்டாடுறது சரி. ஆனா இதுதான் கொண்டாட்டமாங்குறது தான் கேள்வி.

எதோ ஒரு புராணக் கதையைச் சொல்லியும் கடவுள் பேரச் சொல்லியும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாடுபவர்களை ஏளணம் செய்யும் அறிவு ஜீவிகள்தான் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் முதல் ஆளாக நிற்கிறார்கள். 


Saturday, December 24, 2016

கத்தி சண்டை - எம்ஜிஆர் காலத்து சண்டை!!!


Share/Bookmark
படத்துக்கு போற அன்னிக்கு மட்டும் பெரும்பாலும் கம்பெனிக்கு டூவிலர்ல போறது வழக்கம். நேத்து என்னோட வேலை செய்யிற பக்கத்து வீட்டு நண்பர் கார்ல கம்பெனிக்கு அழைச்சிட்டு பொய்ட்டாரு. கம்பெனி முடிஞ்சி சாய்ங்காலம் அவருக்காக வெய்ட் பன்னிக்கிட்டு இருந்தேன். தீடீர்னு கால் பன்னி “டேய்.. கொஞ்சம் வேலை இருக்கு.  இன்னிக்கு லேட் ஆகும்போல தெரியிதுடா… நீ வேணா கம்பெனி பஸ்ல போயிடு”ன்னாரு. யோவ் கம்பெனி பஸ்ஸெல்லாம் போயி பத்து நிமிஷம் ஆச்சுன்னு நினைச்சிக்கிட்டு கடுப்புல நின்னேன். 7 மணி படத்துக்கு இப்பவே கிளம்புனாதான் கரெக்டா போக முடியும். நமக்கு வேற டைட்டில்லருந்து பாக்கலன்னா மூட் அவுட் ஆயிடும் ஒரே படப்பிடிப்புல நிக்கும்போது, அந்த நேரம் பாத்து ஆண்டவன் ஒரு கார அனுப்சான். கையப் போட்டு “திருவொற்றியூர் வரைக்கும் ட்ராப் பன்ன முடியுமா?”ன்னு கேட்க, அவன் “ஹ்ம்ம்” சொல்ல, ஏறி 6:30 க்கு வீட்டுக்கு வந்து ஏழு மணிக்கெல்லாம் படத்துக்கு பொய்ட்டேன்.

படம் பாத்துட்டு பைக்குல திரும்ப வரும்போது யோசிச்சு பாத்தப்பதான் வாழ்க்கையோட ஒரு தத்துவம் புரிஞ்சிது. ஆண்டவன் எல்லா ப்ரச்சனையிலருந்தும் எஸ்கேப் ஆகுறதுக்கு ஒரு வழியக் காட்டுவான். அத கப்புன்னு புடிச்சி எஸ்கேப் ஆயிட்டோம்னா பொழைச்சோம். இல்லைன்னா அவ்ளோதான்னு. படத்துக்கு போக கார் அனுப்பி விட்டது ஆண்டவன் இல்லை நண்பருக்கு வேலையக் குடுத்து லேட் ஆக்குனதுதான் ஆண்டவருன்னு எனக்கு லேட்டாதான் புரிஞ்சிது.

தமிழ் சினிமா காமெடிப் பட ரசிகர்களுக்கு இது ரொம்ப மோசமான காலம். காமெடிக்கு ரொம்ப வறண்டு போன காலமும் கூட. ஃபுல் ஃபார்ம்ல இருந்த வைகைப் புயல, அஞ்சு வருசம் ஊர விட்டு தள்ளி வச்சிட்டாங்க. அத ஓரளவு மேட்ச் பன்னிக்கிட்டு இருந்த சந்தானமும் நடிச்சா ஹீரோசார் நா வெய்ட் பன்றேன்சார்ன்னு பொய்ட்டாரு. விவேக்கோ தமிழ்நாட்ட அமேசான் காடா மாத்தாம விடமாட்டேன்னு ஒரு வெறியோட மரம் நட்டுக்கிட்டு இருக்காரு.

இப்பதைக்கு தமிழக மக்களுக்கு இருக்க ரெண்டே ரெண்டு ஆப்ஷன் சூரியும், சதீசும் தான். இவங்கள காமெடியன்னு படத்துல வச்சிக்கலாம். எப்பாச்சும் தப்பித் தவறி காமெடி கூட பன்னலாம். ஆனா எப்பவுமே அவங்கன்ன என்ன பன்றது? இயக்குனர் சுராஜோட வண்டி ஓடிக்கிட்டு இருந்ததே வடிவேலுவாலயும், விவேக்காலயும்தான். ரெண்டுபேரும் இப்ப இல்லை. அதுக்கப்புறம் அவர் எடுத்த படங்களோட நிலமை என்னன்னு எல்லாருக்குமே தெரியும்.

சில மாதங்களுக்கு முன்னால பணத்தோட மூணு கண்டெய்னர் மாட்டுனது எல்லாருக்கும் தெரியும். நமக்கு தெரிஞ்ச இந்த மேட்டர் சுராஜுக்கு தெரியாம இருக்குமா? அவ்வளவுதான். இதையும் அவர் சமீபத்துல பாத்த ஒரு சில தெலுங்குப் படங்களையும் மிக்ஸ் பன்னி பட்டுன்னு ஒரு படத்த எடுத்து விட்டுட்டாப்ள.. எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா?

                SPOILER ALERT (இது ஓரு கேடு)

இந்த தெலுங்கு படத்துலயெல்லாம் பாத்தோம்னா ஹீரோ வில்லன நேரடியா நெருங்க மாட்டாப்ள. வில்லன்கிட்ட போகனும்னா மொதல்ல வில்லனோட தங்கச்சிய கரெக்ட் பன்னனும்னு ஒரு லாஜிக் வச்சிருப்பாய்ங்க. 1st half முழுசும் அந்தப் புள்ளைய இவரு எப்டி கரெக்ட் பன்றாருங்குறதத் தான் காட்டுவாய்ங்க. என்னக் கதையா இருந்தாலும் இதான் 1st half. அதத்தான் இங்கயும் போட்டு அறுக்குறாய்ங்க. அதுவும் பூர்வ ஜென்மம், அது இதுன்னு தலை துண்டாவுற வரைக்கும் அறுக்குறாங்க.

சூரி அதுக்கும் மேல. “வந்துட்டியான்” “நின்னுட்டியான்” “செஞ்சிட்டியான்” ன்னு அந்த ஸ்லாங்க எப்ப மாத்தித் தொலைவார்னு தெரில. அருக்குது. இதுல லேடீஸ் கெட்டப் வேற. சில இடங்கள்ல அருவருப்பா வருது. ஒரு சில இடங்கள்ல ஓரளவு சிரிக்க வைக்கிறாரு. மகாபலிபுரத்துல நடக்குற காமெடி சீக்குவன்ஸ் மட்டும் நல்லாருந்துச்சி. இதே கேரக்டர்ல வடிவேலுவோ விவேக்கோ நடிச்சிருந்தா எல்லா சீனுக்குமே சிரிக்க வச்சிருக்கலாம்.  படிக்காதவன் விவேக் கேரக்டரத்தான் லைட்டா டிங்கரிங் பன்னி இதுல சூரிய நடிக்க வச்சிருக்காங்க.

படம் ஒடிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு மெட்டி ஒலி திருமுருகன் ஸ்கிரீனுக்குள்ள வந்தாரு. தியேட்டர்ல ஒரே விசில் சவுண்டு. என்னய்யா மெட்டிஒலி திருமுருகனுக்கு இவ்வளவு ஃபேனா? ஆமா அந்தாளு ஏன் இங்க வந்தாருன்னு நல்லா உத்து பாத்தா… அட நம்ம வைகை புயலு. என்னன்ணே இப்புடி ஆயிட்டீங்க. மூஞ்சி அவரு மாதிரி ஆயிருச்சி. ஃபீல்ட் அவுட் ஆனதுலருந்து பாடிய மெய்ண்டன் பன்றதயும் விட்டுட்டீங்க.

”வடிவேலு திரும்ப வருவார்… நம்மை மீண்டும் சிரிக்க வைப்பார்” ன்னு ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் மாதிரி நம்பிக்கிட்டு இருந்தோம். ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபனுக்கு நடந்த அதே க்ளைமாக்ஸ்தான் நமக்கும்..  அவ்வளவு சிறப்பா இல்லை. அதிகபட்சம் ரெண்டு மூணு இடங்கள்ல லைட்டா சிரிப்பு வந்துச்சி. அவ்வளவுதான்.

காமெடி சீன்லயும் காப்பி. வெங்கடேஷ் நடிச்ச் shadow ன்னு ஒரு படத்துல வெங்கடேஷ் தண்ணி அடிச்சிட்டு ப்ரம்மானந்தத்த அடிக்கிற மாதிரி ஒரு பெரிய காமெடி சீக்குவன்ஸ் இருக்கும். (ஆனா காமெடியா இருக்காது) அத அப்டியே இங்க இறக்கி விட்டுருக்காங்க.

வில்லன்கள்கிட்ட கோடி கோடியா கொள்ளையடிச்சி ஊருக்கு நல்லது பன்ற கதைய இன்னும் எத்தனை படத்துல பாக்கப்போறோம்னு தெரியல. விஷால் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி பெர்ஃபார்மன்ஸ் இல்லை. ஃபைட்டுல பறந்து பறந்து பின்றாப்ள. செகண்ட் ஹாஃப் ல விஷால் படத்துல இருக்காரான்னு தேட வேண்டியிருக்கு.

ஹிப்ஹாப் தமிழாவோட பாட்டெல்லாம் காதுல பொக்லைன் வச்சி நோண்டி விடுற மாதிரி இருக்கு. அதுலயும் எல்லா பாட்டையும் அவரே பாடுவேன்னு அடம் புடிக்கிறாரு. அந்தத் தம்பிக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்கய்யா… ஒரு பாட்டு பாட்டு பாடுறதோட நிறுத்திக்கச் சொல்லி. நான் கொஞ்சம் கறுப்புத்தான் பாட்டத்தவற மத்த எல்லாம் ரொம்ப சுமார் ரகம். தம் அடிக்கிற பழக்கமே இல்லாதவன் கூட வெளிய போய் தம் அடிப்பான் போல.

போன வருஷம் ரிலீஸான ஸ்ரீமந்துடு படத்துல ராஜேந்திர ப்ரசாத்துக்கு வர்ற சில காட்சிகள அப்படியே சுட்டு இந்தப் படத்துக்கு ஃப்ளாஷ்பேக்கா போட்டு விட்டாய்ங்க. அதும் படம் முடியப்போகும் போது. இந்த ஆக்‌ஷன் படத்துக்கு கிளைமாக்ஸ்ல அட்லீஸ்ட் ஒரு அம்பது பேரயாவது அடிக்கிற ஒரு ஃபைட்டு வப்பாங்கன்னு பாத்தா, நெஞ்சினிலே விஜய் மாதிரி பேசியே வில்லன்கள திருத்துராப்டி.

புரட்சித்தளபதி ஸ்க்ரீன்ல சீரியஸா நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பன்னிக்கிட்டு இருக்காரு. நம்ம பயலுக என்னன்னா அத கொஞ்சம் கூட மதிக்காம தியேட்டர விட்டு எந்திரிச்சி போயிட்டு இருக்காய்ங்க.. ஏன்யா பெரிய மனுசனுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாமா?

தமன்னா அழகு. தமன்னா சம்பந்தப்பட்ட சீன்ஸெல்லாம் பாக்குறப்போ அப்டியே படிக்காதவன்ன் படத்த பாத்த ஃபீல். ரிப்பீட்டு. இந்த ஹீரோயின்கள்ட்ட உள்ள கெட்டப் பழக்கம் என்னன்னா “அப்பா அப்பா”ன்னு பாசத்த பொழியும்ங்க. ஹீரோ ஒரு ஃப்ளாஷ்பேக் சொன்ன உடனே சனியனுங்க ரெண்டு நிமிஷத்துல அப்டியே மாறி ஹீரோ பக்கம் நின்னுக்கிட்டு “எங்கப்பாவ விட்டுடாத.. தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே கூடாது”ன்னும்ங்கஜகபதிபாபு ஆளு சூப்பரா இருக்காரு. ஹீரோ லெவல் பில்ட் அப் குடுத்து இண்ட்ரோவெல்லாம் வச்சி செகண்ட் ஹாஃப்ல அள்ளக்கை மாதிரி வந்து போறாரு.


நம்ம Facebook ல அடிக்கடி சொல்லுவோம்ல “That வாய்க்கு வந்தத அடிச்சி விடு moment’ன்னு அந்த மாதிரி தான் இந்தப் படமும். மொத்தத்துல இந்த வருஷம் நம்மள வச்சி செஞ்சதுலயே சிறப்பான சம்பவம் கத்தி சண்டைதான். 

Wednesday, December 21, 2016

நம்ம TOP 14 தமிழ் சினிமா -2016!!!


Share/Bookmark
கடந்த சில வருடங்கள ஒப்பிட்டு பாக்கும் பொழுது இந்த வருஷம் strike rate ரொம்பவே அதிகம். நிறைய படங்கள் எனக்கு புடிச்ச மாதிரி வந்துருக்கு. புடிச்ச மாதிரின்னு சொல்றத விட கடுப்பேத்தாத மாதிரி வந்துருக்கு. எல்லா வருஷத்தயும் போல இந்த வருஷம் 10 படங்களுக்குள்ள புடிச்ச படங்கள அடக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அதனால ஒரு நாலு எக்ஸ்ட்ரா.

ந்த முறையும், ஒரு படம் எனக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதன்படி வரிசைப் படுத்தியிருக்கிறேன். வழக்கம்போல பலருக்கும் உடன்பாடு இருக்காது என ஆணித்தனமாக நம்புகிறேன்


14. ரெமோ



இதப்பாத்தோன நிறைய பேருக்கு வெறி வரும். ஆனா என்னைப்பொறுத்த வரை ஒருசில லாஜிக் ஓட்டைகளைத் தவிர்த்து, மற்றபடி படம் முழுவதும் சிரிக்க வைத்த சினா கானாவின் one man show. 


13. ரஜினி முருகன்



சிவா-பொன்ராம் கூட்டணியில்  கிட்டத்தட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட பார்ட் டூ மாதிரி, இன்னும் சொல்லப்போனா அதவிட improved எண்டர்டெய்னர். ராஜ்கிரன் தாத்தா கூடுதல் பலம்

12. ஆண்டவன் கட்டளை



அயல்நாட்டு மோகம் கிராமத்து இளைஞர்களை படுத்தும் நிஜத்தை, நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட படம். இரண்டாவது பாதில வர்ற கோர்ட் sequence மட்டும் ரொம்ம்ம்ம்ம்ப நீளமா பொய்ட்ட ஒரு ஃபீல். 

11. தில்லுக்கு துட்டு


இந்த வருஷம் தியேட்டர்ல நா பயங்கரமா சிரிச்சி ரசிச்ச ஒரு படம். கொஞ்சம் கூட போர் அடிக்காம கிட்டத்தட்ட எல்லா சீனுமே வயிறு குலுங்க சிரிக்க வச்ச படம்.



10. இறுதிச் சுற்று


ரித்திகாவுக்கு மட்டும் இல்லை. மாதவனுக்கும் இது இறுதி சுற்று. இன்னொரு சுத்து பெருத்தார்னா வெடிச்சிருவாப்ள. கதைக்களத்துலயும், உருவாக்கத்துலயும் ஹி்ந்திப் பட வாடை கொஞ்சம் தூக்கலா இருந்துச்சி. 



09. தோழா



இரண்டு பெரிய ஹீரோக்களை முறையா பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ஒரு முழுமையான படம். அதிலும் நாகர்ஜூன் கேரக்டரும் ஆக்டிங்கும் செம. 

08. பிச்சைக்காரன்



  சசி ரொம்ப சின்சியரா சீரியஸா படம் எடுக்கக்கூடியவரு… ஆனா நம்மாளுங்க அத அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டாய்ங்க. இந்த தடவ அப்படி இல்லாம மிகப்பெரிய ஹிட்ட குடுத்துருக்காங்க. “அடக்க நாயகன்” விஜய் ஆண்டனிக்கு இந்தப் படத்தால மிகப்பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்துருக்கு.  இதே கதை திரைக்கதைய வேறு ஒரு மாஸ் ஹீரோ செஞ்சிருந்தா படத்தோட ரேஞ்சே வேற.

07. கொடி



அரசியல் களத்தில் தனுஷ் முதன் முறையாக வேடங்களில் நடிச்ச படம். வேலையில்லா பட்டதாரிக்கப்புறம் மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த தனுஷூக்கு கைகொடுத்த படம். 



06. தெறி


பழக்கப்பட்ட கதை, திரைக்கதை அமைப்பாக இருந்தாலும் ரசிக்க வைத்த கமர்ஷியல் எண்டர்டெய்னர். 





05. குற்றமே தண்டனை



எனக்கு என்னவோ ஆண்டவன் கட்டளையை விட மணிகண்டனின் குற்றமே தண்டனை ஒரு படி மேல இருந்தது மாதிரிதான் தோணுச்சி. சில நடிகர்கள் கதைக்கு ஏத்த மாதிரி நடிப்பாங்க. விமல் மாதிரி சில நடிகர்களுக்கு அவங்களுக்கு என்ன நடிப்பு வருதோ அதுக்கேத்த மாதிரி நாம கதையெழுதிக்கனும். விதார்த்தும் கிட்டத்தட்ட அந்த சங்கத்த சேர்ந்தவருதான். விதார்த்த அந்த ரோலுக்கு பொருத்தி, அவர அந்த கேரக்டரா மாத்துனதே பெரிய விஷயம்.


04. விசாரணை



இதுக்கு முன்னால ரத்த சரித்திரம்-2 பாக்கும்போதுதான் இந்த சீட்டு நுனியில உக்கார வைக்கிறதுன்னா என்னன்னு தெரிஞ்சிது. ஸ்லோமோஷன் காட்சிகளோட அந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் சீன் எடுத்த விதம் படு பயங்கரமா படம் பாக்குறவங்களுக்கு ”எவனுக்கு என்ன ஆகப்போகுதோ.. எவன் எப்ப சாகப்போறானோ”ங்குற ஒரு ஃபீல குடுக்கும். கிட்டத்தட்ட அதே மாதிரி feel ah குடுத்த படம்



03. ஜோக்கர்



கழிவரை வசதி எவ்வளவு முக்கியம், அடித்தட்டு மக்களுக்கு அது எப்படி ஒரு கனவாக இருக்கிறது. அதைக் கட்டிக்கொடுக்க அரசு கொடுக்கும் உதவித்தொகையையும் புடுங்கித் திங்கும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அதனால் சுயநினைவிழக்கும் மனைவி. மனமுடைந்து ஏதும் செய்ய முடியாமல் ஜனாதிபதியாகவே தன்னை நினைத்து வாழத் தொடங்கும் நாயகன். சமூக சீர்கேடுகளை எதிர்த்து குரல்கொடுக்கும் கதைக்குள்ளும் ஒரு அழகான காதல்.  ராஜூ முருகனின் தரமான படைப்பு. 

02. அப்பா



சமூக அக்கரையுள்ள படங்களை கடுப்பேத்தாம குடுக்குறதுங்குறது பெரிய விஷயம். சமுத்திரக்கனி அத இந்தப் படத்துல செஞ்சிருக்காரு. வெற்றிப்படம்தான். இருந்தாலும் கபாலி சீசனில் இல்லாமல் வேற ஒரு நேரத்துல வெளியிடப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருக்கும்

01. இறைவி


கார்த்திக் சுப்பராஜின் இன்னொரு தரமான படைப்பு. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதியின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ். பீடா வாயன்  பாபி சிம்ஹா கேரக்டரயும், அந்த குடும்பத்துக்குள் குழப்ப சீக்வன்ஸயும் கொஞ்சம் முகம் சுழிக்கிற மாதிரி இருந்துச்சி 



இந்த லிஸ்டு மட்டும் இல்லாம மருது, மாப்ள சிங்கம் , காதலும் கடந்து போகும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இருமுகன் ஆகிய படங்களும் எனக்கு ஒவ்வொரு வகையில் பிடித்த படங்கள்

Friday, December 2, 2016

சைத்தான் – மண்டைக்குள் மத்தாப்பு!!!


Share/Bookmark
இயக்குனரை சார்ந்து இல்லாம ஒரு நடிகர் தன்னுடைய படங்களுக்கு, தன்னுடைய பெயருக்காக மட்டும் கூட்டத்தை இழுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய வெற்றிகளைக் குடுக்கனும். நிறைய காலம் காத்திருக்கனும். ஆனா அத ரொம்ப குறுகிய காலத்துலயே சாதிச்சவர் விஜய் ஆண்டனி. இன்னிக்கு வார நாள்…. வெள்ளிக்கிழமை கூட இல்ல வியாழக் கிழமை.. அப்படியிருந்தும் இத்தனை திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லா இருக்குன்னா கண்டிப்பா அதுக்கு காரணம் விஜய் ஆண்டனியும், அவருடைய கதைத் தெரிவும், திரைப்படங்களில் அவருடைய அடக்கமான நடிப்புமே காரணம். நிறைய மக்களுக்கு பிடித்த நடிகராயிட்டாரு. தமிழ்நாட்டுல மட்டுமில்லாம ஆந்திராவிலும் கூட. இந்த வருஷம் ஆந்திராவுல அதிக நாட்கள் ஓடிய படங்கள் வரிசையில “பிச்சைக்காரனோட தெலுங்கு பதிப்பான “பிச்சகாடு”வும் ஒண்ணு. வித்யாசமான கதைக்களங்களைத் தெரிவு செய்யும் விஜய் ஆண்டனியின் மற்றுமொரு வித்யாசமான முயற்சி இந்த சைத்தான்.

The Prestige படத்தோட முதல் காட்சில மைக்கல் கெய்ன் சின்ன பையன் ஒருத்தனுக்கு புறாவ வச்சி மேஜிக் செஞ்சி காமிச்சி ஒரு வசனம் சொல்லுவாரு. 

Making something disappear is not enough. You have to bring it back. That's why every magic trick has a third act, the hardest part, the part we call "The Prestige". 

அது மாதிரி தான் ஒரு கதைய எத்தனை முடிச்சுகள் வேணும்னாலும் போட்டு சுவாரஸ்யமாக்கிக்கிட்டே போகலாம். ஆனா அந்த முடிச்சுகள எப்படி கடைசில அவிழ்க்குறோம்ங்குறதுலதான் அந்தக் கதையோட வெற்றி அடங்கி இருக்கு.

விஜய் ஆண்டனி படம் என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, இன்னொரு பக்கம் படத்தோட சூப்பரான ட்ரெயிலர் இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்துச்சி. அந்த எதிர்பார்ப்புக்கு படம் பூர்த்தி செஞ்சிதா இல்லையான்னு பாப்போம்.படம் பார்க்காத, பார்க்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அப்டியே ஸ்கிப் பன்னி கடைசி பாராவுக்கு போயிருங்க. படம் பார்த்தவர்கள் தொடரலாம். 
   

                              SPOILER ALERT

சென்னையில் ஒரு  பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில எந்த ப்ரச்சனை வந்தாலும் சால்வ் பன்னக்கூடிய ,  எந்நேரமும் வேலையப் பத்தியே நினைச்சிட்டு இருக்கக்கூடிய சின்சியரான வேலைக்காரர் விஜய் ஆண்டனி. மேட்ரிமோனில பாத்து ஒரு புள்ளையையும் கல்யாணம் பன்னிக்கிறாரு. கொஞ்ச நாள்ல “3” படத்துல தனுஷுக்கு வர்ற ப்ரச்சனை மாதிரி விஜய் ஆண்டனிக்கும் மண்டைக்குள்ள யாரோ பேசுற மாதிரி குரல் கேக்குது. அதுவும் பாருங்க காலகேயர்கள் பேசுற மாதிரி புரியாத பாஷையில கேக்குது.

இந்தாளு “உஸுமலரசே யஸூமலரசே” ”மக்கயால மக்கயாலா காய காவுவா” ந்னு புரியாத வார்த்தையெல்லாம் வச்சி ட்யூன்  போடும்போதே நினைச்சேன். பின்னால இப்புடியெல்லாம் மண்டைக்குள்ள நடக்கும்னு. இப்ப நடந்துருச்சி பாருங்க. கூடிய சீக்கிரம் ஹாரிஸ் ஜெயராஜூக்கும் இதே வியாதி வரும்னு எதிர்பார்க்கலாம்.

அப்ப விஜய் ஆண்டனிய ஒரு சைக்கார்டிஸ்டுக்கிட்ட அழைச்சிட்டு போறாங்க. சைக்கார்டிஸ்டுன்னாலேதான் உடனே படுக்க வச்சி மூஞ்சில மாவு பெனைஞ்சி ”இப்ப நா உங்க ஆழ் மனசுக்கு போகப்போறேன்…. இப்ப உங்களுக்கு வயசு 15” ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அதுவும் கொஞ்சம் கூட மாறாம அதே வசனம். இப்பல்லாம் இந்த மாதிரி ஹிப்னடைஸ் பன்ற காட்சிகள பாக்கும்போது தலைநகரம் படத்துல வடிவேலுவ மனோபாலா ஹிப்னாடைஸ் பன்றதுதான் பட்டுன்னு ஞாபகம் வருது. இப்ப உனக்கு பத்து வயசு. என்ன பன்னிக்கிட்டு இருந்த?  நானா… ஊர்ல மாடு மேச்சிக்கிட்டு இருந்தேன்”

ஒருத்தன கண்ண மூடச் சொல்லி “இப்ப இழுத்து மூச்சு விடுங்க… இப்ப அப்டியே உங்க கடந்த காலத்துக்கு போகப்போறீங்க… ஈஸி… ஈஸி” ன்னு சொல்றத மட்டும்தான் ஆதிகாலத்துலருந்து இப்ப வரைக்கும் தமிழ் படத்துல சைக்கார்டிஸ்ட் டாக்டருங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க. Insidious படத்துல ஒரு கிழவி ஹீரோவ ஹிப்னாடைஸ் பன்னும் பாருங்க. ”கண்ண மூடு…. இப்ப நீ ஒரு தியேட்டர்ல உக்கார்ந்துருக்க.. அந்தத் தியேட்டர்ல உன்னத்தவற யாருமே இல்ல. சுத்தி ஒரே இருட்டு… இப்ப அந்த வெள்ளை ஸ்க்ரீன் மட்டும் தான் உன்னோட கண்ணுக்கு தெரியிது. அந்த ஸ்கீரினயே உத்துப் பாரு….இன்னும் நல்லா பாரு” ன்னு சொல்லியே அவன் மைண்டுக்குள்ள போகும். அத imagine பன்னா நமக்கே மைண்டு எங்கயோ போவும்.

ஒரு பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் பத்து வருஷம் பின்னால போங்க.. இன்னும் ஒரு பத்து வருஷம் பின்னால போங்க... அடேய் எனக்கு மொத்தமே 27 வயசுதாண்டா ஆகுது.

சென்னை 28 ல சொல்ற மாதிரி இதுக்கு மேல பின்னால போகனும்னா வெளில நின்னு கை தான் தட்டனும். 

நுங்கம்பாக்கம் இண்டர்வியூக்கு போறதுக்கு டேக் டைவர்ஷன்ல ஆந்த்ராவுக்கு போற மாதிரி 27 வயசு விஜய் ஆண்டனி மைண்டுக்குள்ள, பத்து பத்து வருஷமா பின்னால போயி இதுக்கு முந்துன ஜென்மத்தோட நினைவு வர்ற அளவுக்கு மாவு பெனைஞ்சிடுறாங்க. அடப்பாவிகளா… கிணறு தோணுடுறேன் கிணறு தோண்டுறேன்னு பூமியோட அடுத்த பகுதிக்கே வந்துட்டீங்களேடா….

போன ஜென்மத்துல விஜய் ஆண்டனி ஒரு ஆக்‌ஷன் அன்லிமிட்டடா இருப்பாருன்னு தானே நினைக்கிறீங்க? நெவர். ரொம்ப சாஃப்ட்டான தமிழ் வாத்தியாரு… சிலப்பல ஜலபுல ஜங்க்ஸ்களால கொலை செய்யப்படுறாரு. அப்ப செத்ததுக்கு இப்ப பழி வாங்க சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் விஜய் ஆண்டனி உடம்புல வர்றாரு. அதுலருந்து அம்பி, அண்ணியன் மாதிரி அப்பப்ப போன ஜென்ம கேரக்டராவும், அப்பப்ப ரியல் கேரக்டராவும் இருக்காப்ள.

க்ளைமாக்ஸ்ல ஒரு சீன்ல விஜய் ஆண்டனிய சங்கிலியால கட்டி வச்சிருக்கப்ப படக்குன்னு போன ஜென்ம கேரக்டரு உள்ள வருது. “யானைப் பலமிது யாக்கையில் வர…” ந்ங்குற மாஸ் சாங்க போடுறாங்க. அடேய் இருங்கடா… நல்லா பாருங்கடா வந்துருக்கது தமிழ் வாத்தியாருடா… அவரு ஃப்ளாஷ்பேக்குலயே யாரயும் அடிக்கல… இப்ப எதுக்குடா அவருக்கு மாஸ் சாங்கு?

ஒரு படத்த பொறுத்த அளவு அதுல இருக்க ஹீரோ எப்படிப்பட்டவர் அவரால அடிக்க முடியுமா இல்ல அடிக்க முடியாதா? எத்தனை பேர அடிக்கிற கெப்பாசிட்டி இருக்கு போன்ற விஷயங்களையெல்லாம் முன்னாலயே காட்டிரனும். அட்லீஸ்ட் முதல் பாதிலயாவது காட்டனும். கடைசிவரைக்கும் எதுவுமே காட்டாம க்ளைமாக்ஸ்ல பல பேர அடிக்கிறதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியே இருக்காது. 

படத்தோட டைட்டில் கார்டுல, “இந்தப் படத்தின் ஒரு பாதி சுஜாதாவோட நாவல தழுவியது” ன்னு போடுறாங்க. தழுவுனதுதான் தழுவுனீங்க… முழுசா தழுவிருக்கலாம்ல. ஆரம்பத்துல போட்ட முடிச்சுகள அவுக்குறதுக்கு பின்னால ரொம்ப கஷ்டப்பட்டு, தெளிவில்லாம எங்கெங்கயோ போய் முடிச்சிருக்காங்க.

பூர்வ ஜென்ம கதைகள வச்சி மக்கள சுவாரஸ்யத்தோட உச்சத்துக்கே கொண்டு போக முடியும். ”நெஞ்சம் மறப்பதில்லை” படத்தையெல்லாம் இப்ப பாத்தாலும் கொடூரமா இருக்கும். மஹாதீரா, யாவரும் நலம் படங்களெல்லாம் இந்த பூர்வ ஜென்ம கதைக் களங்கள்லதான் மாபெரும் வெற்றியடைஞ்சிது. அனேகன் படத்தோட ஒரு பகுதி கூட அப்டித்தான்.

பூர்வ ஜென்ம ஞாபகம் அப்டிங்குறது ஒரு instinct ah காமிக்கப்படும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். ஆனா அதுக்கே அறிவியல் சாயம் பூசி, அத செயற்கையா தூண்டுவது மாதிரி காண்பித்திருப்பது கொஞ்சமும் ஒட்டவில்லை. சுஜாதாவின் ஒரிஜினல் கதை எப்படியோ தெரியல… ஆனால் இங்கு முடிவு மஹா சொதப்பல்.

படம் முதல்ல ரொம்ப ஸ்லோவாதான் பிக் அப் ஆகுது. கிட்டத்தட்ட இண்டர்வலுக்கு முந்தைய பிந்தைய கால் மணி நேரங்கள் நல்ல சுவாரஸ்யம். மற்றபடி ரொம்ப ஆவரேஜாதான் படம் நகருது. அநேகன் படத்துல க்ளைமாக்ஸ்ல அது உண்மையா இல்ல imagination ah ன்னு ஒரு முடிவுக்கே வர முடியாத மாதிரி ஒரு குழப்பு குழப்புவாய்ங்க. அதே குழப்பம் இங்கயும்.

விஜய் ஆண்டனி வழக்கம்போல் அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு. பாடல்கள் அவ்வளவு சிறப்பா இல்லை. “யானைப் பலமிது” மட்டும் நல்லாருக்கு. மத்ததெல்லாம் ரொம்பக் கஷ்டம். ஹீரோயினா வர்ற புள்ள செம அழகா இருக்கு. குறிப்பா அதோட லிப்ஸ்டிக் கலர் சூப்பர். அந்த புள்ளைக்கு டப்பிங் வாய்ஸூம் அருமை. அந்தக் குரல எங்கயோ கேட்ட ஞாபகம். அநேகமா சதுரங்க வேட்டைல ஹீரோயினுக்கு வர்ற குரலா இருக்கலாம். படம் பாத்தவங்க அந்தக் குரல வேற எந்தப் படத்துலயாவது கேட்டிருந்தா சொல்லுங்க.

மொத்தத்தில் முந்தைய விஜய் ஆண்டனி படங்கள் அளவுக்கு இது நம்மள impress பன்னல. அதே சமயம் ரொம்ப அருவைன்னும் சொல்ல முடியாது. வேற நல்ல படம் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால பாக்க முயற்சி பன்னலாம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...