Tuesday, March 21, 2017

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்!!!


Share/Bookmark
குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே தவிற எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோசம்பவங்களையோ குறித்து எழுதப்பட்டது அல்ல

(கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க)

கவுண்டர் மெக்கானிக் ஷாப்ல உக்கார்ந்து மோட்டரை ரிப்பேர் செஞ்சிட்டு இருக்காருஅப்ப அந்த வழியா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை 

வெள்ளை துண்டு போட்ட ஒருத்தர் நடந்து போறார்

கவுண்டர் : ஏனுங் சின்னக் கவுண்டரே வணக்கமுங்க.....

(அவர் திரும்பாமல்)

ஆங்... வணக்கம் வணக்கம்... என்றபடி போய்க் கொண்டே இருக்கிறார்...

கவுண்டர் : இந்தக் கொரலை நா எங்கயோ கேட்டுருக்குறேனே.... கவுண்டரே கொஞ்சம் நில்லுங்க... அப்டியே மூஞ்சியக் கொஞ்சம் திருப்புங்க

(திரும்பினால் அது செந்தில்)

கவுண்டர்: இஹ்ஹ்ஹ்ஹ்... டேய் நீயா....  இந்த வாயால உன்ன சின்னக்கவுண்டர்னு சொல்லவச்சிட்டியேடா... சின்னக்கவுண்டருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிதுன்னா அவர் மனசு எவ்வளவு பாடுபடும்?  வீட்டுக்கு போன உடனே அரை லிட்டர் டெட்டால் ஊத்தி வாயக்  கழுவனும்.. ஆமா அது என்ன தார் டின்ன சுத்தி சுண்ணாம்பு அடிச்ச  மாதிரி ஒரேவெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்ட?

செந்தில் : அதுவாண்ணே.. எலெக்சன்ல நிக்கப்போறேன்... அதான் நாமினேஷன் தாக்கல் பன்னலாம்னு போய்கிட்டு இருக்கேன்...

கவுண்டர் : என்னது எலெக்சனாஇப்பதானடா நம்மூர்ல எலெக்ஷன் முடிஞ்சிது... இப்ப வேற எதுவும் எலெக்சன் இல்லையே?

செந்தில் : இங்க இல்லைண்ணே... RK நகர்ல நிக்கப்போறேன்.. 

கவுண்டர் : ... இந்த ஆறு மாசத்துக்கு ஒருக்கா எலெக்சன் வப்பானுங்களே அங்கயா... ஆமா ஆர்.கே நகர் எங்க இருக்குன்னு தெரியுமா நாயே?

செந்தில் : எதோ மெட்ராஸுக்கு பக்கம்னு சொன்னாங்க... அங்கப் போயி தேடிக் கண்டுபுடிச்சிக்க வேண்டியதுதான்...

கவுண்டர் : தொகுதி எங்க இருக்குன்னே தெரியாம நாமினேஷன் தாக்கல் பன்னக் கெளம்புன மொத ஆள் நீதாண்டா... ஆமா யாருமே தெரியாத ஊர்ல  யாரு உனக்கு ஓட்டுப் போடுவா?

செந்தில் : அது ரொம்ப ஈஸிண்ணே... ஒவ்வொரு வீடா போயி “உணமையான தமிழனா இருந்தா எனக்கு ஓட்டுப் போடுங்க” ன்னு சொல்லுவேன்அவங்க போட்டுருவாங்க

கவுண்டர் : டேய் வாடிவாசல் வாயா... அத ஒரு தமிழன் போய் கேட்டாலே இவனுங்க போட மாட்டானுக.. நீ வேறா ஆப்பிரிக்க நீர்யானை மாதிரி  இருக்க... நீயெல்லாம் அங்கபோனியன்னா புள்ளை புடிக்கிறவன்னு நினைச்சி போலீஸ்ல புடிச்சி குடுத்துருவாங்கஅப்புறம் பெங்களூர் ஜெயில் தான்... களி தான்.. அதுகூட பரவால்ல அங்க போயிங் உன்னோட கொரங்கு சேட்டைய காமிச்சியன்னா கரண்டு ஷாக் வச்சி உன்ன கொண்ணுபோட்டு நீயே தற்கொலை பன்னிக்கிட்டன்னு ஊரயே நம்ப வச்சிருவானுங்க… இதெல்லாம் உனக்குத் தேவையா?

செந்தில் : அய்யோ அண்ணேன்... 

கவுண்டர் : பயமா இருக்குதல்லோ... மொதல்ல போய் இந்த கருமாந்திரத்தையெல்லாம் கழட்டி போட்டுட்டுஎலி செத்த நாத்தம் அடிக்கிற ஒரு டவுசர்  வச்சிருக்கியல்லோ... அதபோட்டுக்கிட்டு அந்தா பார்..புள்ளையார் கோயில்ல பொங்க சோறு குடுக்குறாங்களாம்... போய் வாங்கித்திண்ணு... 

செந்தில் (சோகமாகஎன்னைத்தான் நிக்க விட மாட்டேங்குறீங்க.. அப்ப நீங்களாவது நில்லுங்க... 

கவுண்டர் : நானா... ச்ச.. ச்ச... இந்த அரசியல் கருமாந்திரம்னாலே எனக்கு அலர்ஜிடா.. அதுக்குன்னு ஒருத்தன் இருக்கான்

செந்தில் : யாரு?

கவுண்டர் : எம் மாப்ள பழ்னிச்சாமி

*******

பழனிச்சாமியாக சத்யராஜ்... பழனிச்சாமி அம்மாவாக வடிவுக்கரசி  (சத்யராஜ் வீடு

கவுண்டர் வீட்டுக்குள் வேகமாக நுழைகிறார்

கவுண்டர் : பழ்னிச்சாமி.. மாப்ள பழ்னிச்சாமி.... எங்க பொய்ட்டான் இவன்?

(சத்யராஜ் பூஜை அரையில் கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் போட்டு உக்கார்ந்திருக்கார்)

கவுண்டர் : யோவ் மாப்ள உன்ன எங்கல்லாம் தேடுறேன்.. நீ என்னன்னா பள்ளிக்கூடத்து பையன் கணக்கு பீரியட்ல உக்காந்துருக்க மாதிரி  உக்காந்துருக்க

சத்யராஜ்: (மெல்ல கண்ணைத் திறந்து)  நா தியானம் பன்னிட்டு இருக்கேன் மாம்ஸ்.

கவுண்டர் : மாப்ள என்னாச்சி உனக்கு.. வழக்கமா நாலு ரவுண்ட் போட்டப்புறம் தானே இந்தமாதிரி தியானம்லாம் பன்னுவ.. இன்னிக்கு என்ன  காலையிலயே கட்டிங்க போட்டுட்டியா?

சத்யராஜ் : கிண்டல் பன்னாதீங்க மாம்ஸ்... இப்பல்லாம் நாட்டுல தியானம் பன்றதுதான் ஃபேஷன்...

கவுண்டர் : மாப்ள.. அவனுங்களுக்கு என்ன பன்றதுன்னு தெரியாம தியானம் பன்னிட்டு இருக்கானுங்க.. ஆனா நம்ம அப்டியா.. நமக்கு ஆயிரத்தெட்டு  வேலை கிடக்கு... பழ்னிச்சாமி...மொதல்ல எழுந்திரி...

சத்யராஜ் : என்னை பழனிச்சாமி என்று அழைக்காதீர்கள்.. பழனியோகி என்று அழையுங்கள்...

கவுண்டர் : யக்கா அந்த செருப்ப எடு.... 

வடிவுக்கரசி : ஏண்டா எப்பப் பாத்தாலும் என் புள்ளைய திட்டிக்கிட்டே இருக்க... 

கவுண்டர் : பின்ன என்னக்கா... நா எவ்வளவு முக்கியமான விஷயம் பேச வந்துருக்கேன்.. இவன் என்னனா டிவில கண்ட கண்டதெல்லாம் பாத்துட்டு  வந்து உளரிக்கிட்டு இருக்கான்.

வடிவுக்கரசி : அப்புடி என்னடா முக்கியான விஷயம் சொல்லு... நாங்களும் கேக்குறோம்

கவுண்டர்  : மாப்ள... எழுந்திரி

(சத்யராஜ் எழுகிறார்

கவுண்டர் : கை ரெண்டயும் கும்புட்ட மாதிரி வச்சிக்க

(சத்யராஜ் கும்பிடுகிறார்)

கவுண்டர் : அப்டியே கும்பிட்ட மாதிரியே குனி

(சத்யராஜ் குனிகிறார்)

கவுண்டர் : இன்னும் நல்லா குனி

(சத்யராஜ் இன்னும் குனிகிறார்)

கவுண்டர் : உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குணி

(சத்யராஜ் குனிந்த படியே தரையைத் தொடுகிறார்..)

கவுண்டர் : யப்பா சாமி... இதுவரைக்கும் இந்த அம்சம் யாருக்குமே இருந்ததில்லையே..  நீ அதுக்குண்ணே அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்கியே...  மாப்ள பேசாம நீ எலெக்சன்ல நின்னுஜெயிச்சிரு..

வடிவுக்கரசி : என்னடா சொல்ற... குனிஞ்சா ஜெயிச்சிடலாமா?

கவுண்டர் : யக்கா முன்னாடியெல்லாம் ஒரு கட்சில எத்தனை பேரு ஜெயிச்சி போறாங்களோ அதான் கட்சிக்கு பலம்.. இப்பல்லாம் கட்சில இருக்கவங்க எவ்வளவு குனியிறானோ.... அதான்கட்சிக்கு பலம்.. இந்த மாதிரி குனியிற ஆளுங்களையெல்லாம் ஆளுங்கட்சி அவங்களே சப்போர்ட் பன்னி சுயேட்சைல ஜெயிக்க வச்சி சட்ட சபையில அவங்க ஆளுங்களாவச்சிக்கிறாங்க... சரி மாப்ள உங்க அம்மா வடிவுக்கரசி பேர ஒருக்கா  சொல்லு

சத்யராஜ் :  மாண்புமிகு மனிதகுலமாணிக்கம்  காவல் தெயவம் எங்கம்மா வடிவுக்கரசி

கவுண்டர் : அட சாமி... இப்பவே பாதி ஜெயிச்ச மாதிரிடா... 

வடிவுக்கரசி : ஏண்டா... எலெக்சன்ல நிக்கனும்னா இந்த ஆதார் கார்டெல்லாம் கேப்பாங்களேடா

கவுண்டர் : யக்கா எலெக்ஷன்ல நிக்க அந்தக் கருமாந்திரமெல்லாம் தேவையே இல்லக்கா... ரேசன் கடையில அரிசி பருப்பு வாங்குறது... பள்ளிக்கூடத்துல சத்துணவு சாப்புடுறது... பப்ளிக்டாய்லெட்டுல ஒண்ணுக்கு போறது.. இதுக்கு மட்டும்தாங்க்கா நம்மூர்ல ஆதார் கார்டு தேவை..  

சத்யராஜ் : மாம்ஸ்.. மாம்ஸ்... அப்ப நம்ம ஒரு கட்சி ஆரம்பிச்சி அந்தக் கட்சிலயே எலெக்சன்ல நிப்போம்....

கவுண்டர் : அதுவும் நல்ல ஐடியாதான்.. நம்ம ஊரு மக்கள் தொகைய விட கட்சிகளோட எண்ணிக்கை அதிகமாயிப் போச்சி... சரி உடு... ஆரம்பிச்சிருவோம்

சத்யராஜ் : கட்சிக்கு ஒரு நல்ல பேரா சொல்லுங்க மாம்ஸ்

கவுண்டர் : பேரா... சரி உங்க தாத்தா பேரு என்ன?

சத்யராஜ் : புலிக்குட்டி

கவுண்டர் : உங்க ஆத்தா பேரு?

சத்யராஜ் : நாச்சியம்மாகுப்பாயி

கவுண்டர் : என்ன ஆத்தா பேரக்கேட்டா ரெண்டு சொல்ற..

சத்யராஜ் : அவருக்கு டபுள்ஸ் மாம்ஸ்....

கவுண்டர்  இது வேறயா... சரி.. உங்க தாத்தா ஆத்தா பேரு எல்லாத்தையும் சேத்து ”புலிக்குட்டி நாச்சியம்மா குப்பாயிக்கா பேரவைன்னு வைச்சிக்க

சத்யராஜ் : என்ன மாம்ஸ் கட்சி பேரு இவ்வளவு கேவலாமா இருக்கு

கவுண்டர் : இதவிடக் கேவலமான கட்சி பேரல்லாம் நம்மூர்ல இருக்கு மாப்ள... நம்ம கட்சி பேருக்கு என்ன.... புலிக்குட்டி நாச்சியம்மா குப்பாயிக்கா  பேரவை.... சுருக்கமா பு .நா .குபேரவை... புண்ணாக்கு பேரவை.... அட்ரா அட்ரா.... ஆர்.கேநகருக்கு போறோம்....ஜெயிக்கிறோம்.  




******
இடம் : ஆர்.கேநகர்.... கவுண்டர்சத்யராஜ்செந்தில் மூவரும் ப்ரச்சரம் செய்துகொண்டு செல்கின்றனர்....

கவுண்டர் : அம்மா பாருங்க... அய்யா பாருங்க... ஆறடி ஒசரத்துலே ஒரு ஆளூ... ஜெயிச்சிப் போனா நம்ம ஊருக்குப் பெருமே... நாட்டுக்குப் பெருமே...

இவர்களைப் பார்த்ததும் மீடியா சிலர் மைக்கை எடுத்துக்கொண்டு ஓடி வருகின்றர்

மீடியா : சார்.. நீங்க எந்தக் கட்சி சார்பா போட்டியிடுறீங்க?

கவுண்டர் : புண்ணாக்கு பேரவை.... 

மீடியா : அப்டி ஒரு கட்சியாநாங்க கேள்விப்பட்டதே இல்லையே...

கவுண்டர் :நாங்களே இப்ப தான் கேள்விப்படுறோம்... )....

மீடியாஎன்னது?

கவுண்டர் :  ... து... புண்ணாக்கு பேரவை தெரியாதுங்களாஇந்தியாவுலயே மிகப்பெரிய கட்சியாச்சே.. நாங்க முழுசும் நார்த் இண்டியாவுல  ஃபோகஸ் பன்னதால உங்களுக்கு நம்மகட்சியப் பத்தி அதிகம் தெரியல போல... இல்ல மாப்ள...

மீடியா : சரி அதெல்லாம் இருக்கட்டும்... இந்த ஆர்.கேநகர் தொகுதில உங்க வெற்றி வாய்ப்பு எப்டி இருக்கு

சத்யராஜ்: இந்த இடைத்தேர்தலில் நான் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெருவேன்

கவுண்டர்: இஹ்ஹ்ஹ்ஹ் (சத்யராஜ் காதிற்குள்)யோவ் மாப்ள.. மொத்த ஓட்டே  ஒண்ணே முக்கா லட்சம்தான்ய்யா... (மீடியா பக்கம் திரும்பி) .. து... மாப்ள நார்த்இந்தியா ஓட்டையும் சேத்து சொல்லிட்டான்... அதான் அஞ்சி லட்சமாகிப்போச்சு...

மீடியா : நீங்க ஜெயிச்சா முதல்வர் ஆவுவீங்களா?

சத்யாராஜ் : முதல்வராகும் எண்ணமெல்லாம் எனக்கு  இல்லை

கவுண்டர் : அக்காங்... உள்ளூர்ல நின்னா எவனும் ஓட்டுப் போட மாட்டானுங்கன்னுதான் நம்ம யாருன்னே தெரியாத இடத்துல வந்து எலெக்சன்ல நிக்கிறோம்… இதுல முதலமைச்சர் வேற.. ஆனா கட்சி ஆரம்பிச்சி  இன்னும் 24 மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள முதல்வர் ரேஞ்சிக்கு போனாம் பாருங்க... that is my மாப்ள பழ்னிச்சாமி

மீடியா : சார் அப்புறம் இன்னொரு கேள்வி

கவுண்டர் : எக்ஜூஸ் மீ... எங்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டிய வேலை நிறைய பாக்கி இருக்கு... ஜெயிச்சதுக்கப்புறம் சாவுகாசமா ஓரு நாள் பேட்டி  குடுக்குறோம் வரட்டுங்களா....  என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பும் போதுரெண்டடி முன்னே சென்று விட்டுத் திரும்பி

கவுண்டர் : அலோ மீடியா மேடம்.. மறக்காம Breaking news ன்னு போட்டு ”புண்ணாக்கு பேரவையைச் சேர்ந்த பழ்னிச்சாமி வாங்கு சேகரிக்க வந்தார்”னு டிவில  போட்டுருங்க... அந்தமீயூசிக்கயும் மறந்துடாதீங்க.... ஏன்னா அந்த மியூசிக்கப் போட்டு நியூஸ் வாசிச்சீங்கன்னா சாதா நியூஸ் கூட  ப்ரேக்கிங் நியூஸ் மாதிரி ஆயிருது... வரட்டுங்களா பாப் கட்டிங் மேடம்... 

*****

அடுத்த பதிவில் தொடரும்....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...