Monday, March 13, 2017

KONG SKULL ISLAND - A ராஜ்கிரண் MOVIE!!!


Share/Bookmark
தியேட்டர்ல படம் பாக்குறப்ப இருக்க Disturbance ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம். பேய் படம் பாக்கப் போனாதான் பேய் வரும்போதெல்லாம் கத்திக் கத்தி, கமெண்ட் அடிச்சி பேய் படத்துக்கு உண்டான மரியாதையவே போக்கிருறாய்ங்கன்னுட்டு இப்பல்லாம் ஆங்கில பேய் படங்களுக்கு தியேட்டருக்கே போறதில்லை. மத்த படங்களுக்கு இந்த செல்ஃபி பைத்தியங்களோட தொல்லை. படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே செல்ஃபி எடுக்குறேங்குற பேர்ல ஃப்ளாஷ் லைட்ட ஆன் பன்னி வச்சிக்கிட்டு அடுத்தவன படம் பாக்க விடாம தொல்லை பன்றது. இதெல்லாம் பழகுனது. 

ஆனா நேத்து ஒரு புதுவிதமான ஒரு டிஸ்டர்பன்ஸ். பக்கத்துல உக்காந்துருக்கவன் பாப்கார்ன் தின்னுருக்கான் பாருங்க.. ச்சை.. மாவு மில்லுல மொளகா மல்லி அரைக்கும்போது ஒரு சவுண்டு வருமே... அதே சவுண்டு. நானும் இப்ப நிறுத்துவான் அப்ப நிறுத்துவான்னு பாக்குறேன்...ம்ஹூம்... மாடு வைக்கோல திங்கிற மாதிரி திண்ணுகிட்டே இருக்கான். எக்ஸ்ட்ரா லார்ஜ் பாப்கார்ன் வாங்கிட்டு வந்து உக்காந்துருச்சி போல. கருமம் படமே முடிஞ்சிருச்சி.. அந்த பாப்கார்ன் முடியல... படம் முடிஞ்சும் அந்தக் ”கர கர” சவுண்டு அரை மணி நேரம் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சின்னா பாருங்க.  அந்த மாவுமில் சத்தத்துக்கு இடையில பாத்த படம் எப்டி இருக்குன்னு பாப்போம். 

இதுவரைக்கும் ஹாலிவுட்ல வந்த mysterious creatures ah தேடிப்போற படங்கள்ல அரைச்ச மாவுலயெல்லாம் ஒரு ஒரு கரண்டி எடுத்து நல்லா கலந்து ஒரே தோசையா ஊத்துனா எப்புடி இருக்குமோ அதான் இந்த காங் -ஸ்கல் ஐலாண்ட்.  இந்தமாதிரி படங்களோட திரைக்கதை ஒரேஃபார்முலாதான். முதல் காட்சில யாரோ ஒருத்தன் அப்டி ஒரு விலங்கு இருக்கத அரசல் புரசலா பாப்பான். ஆனா அப்ப அந்த விலங்கோட மூஞ்ச காமிக்க மாட்டானுங்க. அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி ஒரு டீம்  அந்த விலங்க புடிக்கிறதுக்கு காட்டுக்குள்ள போகும். 

அந்த டீம்ல ஒரு டாக்டர், ஒரு நீக்ரோ, ஒரு டவுசர் போட்ட பொண்ணு அப்புறம் இந்த டீமையெல்லாம் காட்டுக்குள்ள என்ன இருக்குன்னே சொல்லாம அழைச்சிட்டு போற ஒரு பிஸினஸ் மேன் இத்தனை பேரும் தவறாம இருப்பானுங்க. கடைசில எல்லாரும் செத்து ஒரு மூணூ நாலு பேர் மட்டும் ரிட்டர்ன் வருவானுங்க. ஜுராசிக் பார்க்ல ஆரம்ப்பிச்சி அனகோண்டா வழியா வந்த அத்தனை படங்களும் இதே திரைக்கதை தான். இப்ப காங்கும் அதுக்கு கொஞ்சம் கூட விதிவிலக்கு இல்லை. அதே டெய்லர் அதே வாடகை. 

பெர்முடா Triangle மாதிரி உள்ள என்ன இருக்குன்னே தெரியாத இடத்துல ஒரு தீவு இருக்கு. (ஆனா நமக்குத்தான்  உள்ள என்ன இருக்குன்னு முன்னாலயே தெரியுமே). மேல சொன்ன மாதிரியே ஒரு குரூப் மிலிட்டரி  ஃபோர்ஸோட கெளம்பிப் போகுது. இவனுங்க தீவுக்குள்ள்ள எண்டர் ஆன உடனே எண்ட்ரியக் குடுக்குறாரு நம்ம  நம்ம கிங் கான்... ஓ சாரி அவரு ஹிந்தி நடிகருல்ல.... கிங் காங்ன்னு சொல்ல வந்தேன். இவனுங்க உள்ள போன உடனே சர்வே பன்றேங்குற பேர்ல அங்கங்க குண்டு போட நம்ம காங்குக்கு கோவம் வந்துருது. “இந்த மண்ணைத் தொடுறது இந்த மாணிக்கத்தோட உசுறத் தொடுறதுக்கு சமம்.. ஈரக்கொலைய அத்துபுடுவேண்டா...” ன்னு ராஜ் கிரன் ஆளுங்கள தோள்ல தூக்கி வச்சி ரெண்டா முறிக்கிற மாதிரி இது ஹெலிகாப்டரயெல்லாம் கையால புடிச்சி நச்சி நொறுக்கி போட்டுறுது.

தப்பிச்ச ஒரு பத்து பதினைச்சி பேரு உடனே “நாம இந்தத் தீவோட வடக்குப் பகுதிக்கு போகனும்..அங்க நமக்காக நம்ம ஹெலிகாப்டர் காத்துக்கிட்டு இருக்கு”ன்னு வடக்கு நோக்கி ஓட ஆரம்பிக்கிறானுங்க. அடேய்... இப்பதானடா தீவுக்குள்ளயே வந்தீங்க.. வந்து பத்து நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள என்னடா வெளில ஓடப் பாக்குறீங்க.... வந்ததுக்காகவாச்சும் ஒரு நாலஞ்சி நாள் இருந்து எதாவது பன்னிட்டு போங்கடா”ன்னு தோணும் நமக்கு. 

சுருக்கமா சொன்னா டிஸ்கவரி சேனல்ல பியர் கிரில்ஸ காட்டுக்குள்ள ஒரு இடத்துல இறக்கி விட்டுட்டு போயிருவாய்ங்க. அவன் வழி கண்டு புடிச்சி காட்டோட அடுத்த பகுதிக்கு போய் ஹெலிகாப்டரப் புடிப்பான்ல... அதே கதைதான். ஆனா அவன மாதிரி இவனுங்க உணவு தயாரிக்கிறேன்னு அங்கங்க டெண்ட்ட போடாம போய்ட்டே இருக்கானுங்க. 

பாதி வரைக்கும் படத்துக்கு வில்லன் நம்ம கான்னுதான் நினைச்சிட்டு இருப்போம். அப்புறம் ஒருத்தர் வந்து சொல்லுவாப்ள... “காங் நீங்க நினைக்கிற மாதிரி வில்லன் இல்லைய்யா... அவன் இந்தக் காட்டோட காவல் தெய்வம்.... “ அப்டின்னதும் காங் ஸ்லோமோஷன்ல நடந்து போறத பின்னாலருந்து காட்டுறாங்க.... அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பாட்ட மட்டும் BGM ல போட்டுருந்தா அள்ளிருக்கும். 

காங் நல்லவருன்னா அப்ப வில்லன் யாரு? வேணுமா இல்லையா? அப்பத்தானே சிலப்பல ஃபைட்டுல காமிக்க முடியும். அதுக்காக புதுசா ஒரு விலங்க இண்ட்ரொடியூஸ் பன்றானுங்க. அது டைனோசரா, உடும்பா, ஓணாணான்னு தெரியாத அளவுக்கு எல்லாத்துலயும் கொலாபுரேட் ஆனமாதிரி ஒரு விலங்கு. நாக்கு மாட்டும் நாலு இருக்கு அதுக்கு. இதுல 3D க்கும் அதுக்கும் அது வாயத்தொரக்கும் போது நாக்கு நம்ம மொகரைக்கிட்ட வந்துட்டுப் போகுது. 

காரித்துப்பி அடிச்சி பத்தி விட்டாலும் கடைசில ஹீரோயினுக்கு ஒரு ஆபத்துன்ன உடனே “லாலலலலாலா” மீயூசிக்க போட்டுக்கிட்டு ஓடிவர்ற விக்ரமன் படத்து ஹீரோ மாதிரி ஒரு குரூப்பு ”காங்”ah நெருப்பு வச்சி கொளுத்தி விட்டப்புறமும் அவங்களக் காப்பாத்த காங் சண்டை போடுது.. 

வழக்கம்போல காங் நல்லவருங்குறதால க்ளைமாக்ஸ்ல அந்த விலங்குக்கும் காங்குக்கும் ஒரு ஓண் டு ஓண் ஃபைட்டு. அப்புடியே நம்ம தமிழ் தெலுங்கு பட பைட்டு மாதிரி. அடிச்சி தெறிக்க விடுதுங்க. அதுவும் காங் ஒரு பெரிய மரத்த அப்புடியே புடுங்கி, அப்டி கைய வைச்சி அந்தக் கிளையெல்லாம் சரட்டுன்னு உருவி கீழ போட்டுட்டு அந்த மரத்தையே ஒரு உருட்டுக் கட்டை மாதிரி கையில வச்சிட்டு நிக்கும் பாருங்க.. மாஸ்ஸ்... 

வீரம் படத்துல இடைவேளைக்கு அப்புறம் ஒரு ட்ரெயின் ட்ராக்குல சண்டை நடக்குறப்போ அஜித் ஒரு சங்கிலிய உருவிக்கிட்டு அடிப்பாரே.. அதயும் அப்டியே காப்பி அடிச்சிருக்கானுங்க. என்ன அதுல அஜித் சங்கிலில ஒரு இரும்புக் கம்பிய கட்டி அடிப்பாரு. ஆனா காங் அதே சங்கிலில ஒரு கப்பலோட புரொப்பல்லரயே (propeller) கட்டி அடிக்கும். என்ன பாக்குறீங்க? அவன் அவன் சர்வீஸூக்கு ஏத்த மாதிரி தாங்க குச்சியோட சைஸும்.. 

இதுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது ஊடால நம்மாளுங்க வேற துப்பாக்கிய வச்சி சுட்டுக்கிட்டு இருப்பானுங்க. அதப்பாக்கும்போது “ஏன் திமிங்கலம்.. எனக்கு இவனுக்கும்தானே சண்டை... இந்த ஒரு ரூவா ஊதுவத்தி ஏன் நடுவுல பூந்து ஆட்டினுக்குறான்” ன்னு சந்தானம் கலகலப்புல மனோபாலாவப் பாத்து சொல்ற வசனம்தான் டக்குன்னு ஞாபகம் வந்துச்சி. 

படத்துக்கு பெரியண்ணான்னு பேரு வச்சிருப்பாங்க. ஆனா பெரியண்ணா படத்துல கால் மணி நேரம்தான் வருவாரு. சுக்ரன்னு படத்துக்கு பேரு வச்சிருப்பாங்க. ஆனா சுக்ரன் படத்துல அரை மணி நேரம்தான் வருவாரு. அந்த மாதிரி தான் இங்கயும்... காங்னு பேரு மட்டும் வச்சிருக்கானுங்க. ஆனா காங் வர்றது என்னவோ ஒரு 20 நிமிஷத்துக்குள்ளதான்.  காங் வெறும் கெஸ்ட் அப்பியரன்ஸ்தான். காங்குக்கு ஒரு லவ் ட்ராக் வச்சிருந்தா சிறப்பா இருந்துருக்கும்.. ஹிஹி..காங்க தவிற நிறைய விலங்குகள் படத்துல உலாத்துதுங்க.

படத்துல எல்லா சீனுமே ஏற்கனவே வெவ்வேறு படங்கள்ல பாத்ததுதாங்குறாதால சர்ப்ரைஸ் பன்ற மாதிரி விஷயங்கள் படத்துல எதுவுமே இல்லை. இவனுங்க ஹெலிகாப்டர்ல குண்டு போட்டுக்கிட்டே போகும்போது தூரத்துலருந்து ஒரு மரம் வேரோட பறந்து வந்து ஹெலிகாப்டர்ல நச்சுன்னு குத்தும். காங் எண்ட்ரி... அது செமையா இருந்துச்சி... க்ளைமாக்ஸ் ஃபைட்டு நல்லாருந்துச்சி. முதல் காட்சில 3D effect செமை. ஆனா போகப்போக அவ்வளவு சிறப்பா தெரியல. 

ரெண்டு வருஷம் முன்னால காட்ஸில்லான்னு ஒண்ணு வந்துச்சே.. அந்த அளவுக்கு இந்தப் படம் சூர மொக்கை இல்லை. பொழுதுபோகலன்னா, 3D படத்த பாக்கனும்னு குழந்தைங்கல்லாம் ஆசைப்பட்டுச்சின்னா தாராளமா அழைச்சிட்டு போகலாம். மத்தபடி சிறப்பால்லாம் ஒண்ணும் இல்லை.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

CSK said...

அவன் அவன் சர்விஸ்க்கு ஏத்தமாரிதான்டா குச்சியோட லென்த்தும்...... உச்சக்கட்டம்

புத்தகப்பிரியன் said...

Same blood sir....

ஜீவி said...

நல்ல வேளை.... போகலை

காரிகன் said...

பேருக்கேத்தாப்பல அதிரடியா இருக்கு.

இங்கிலிஷ் ல ட்ரான்ஸ்லேட் பண்ணி ஹாலிவுட் காரனுக்கு அனுப்பினா படிச்சு உங்களை தேடி வந்துருவான்னு தோணுது.

செம

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...