Saturday, March 25, 2017

KATTAMARAYUDU - A ரீமேக்கின் ரீமேக்!!!


Share/Bookmark
தமிழ்ப் படங்களும் தெலுங்குப் படங்களும் கிட்டத்தட்ட ஒரு தாய் மக்களைப் போலத்தான். கொஞ்சம் லோக்கலா சொல்லப்போனா ஒரே குட்டையில ஊறுற மட்டைங்க. பெரும்பாலும் தமிழ் தெலுங்கு திரைப்படங்களோட கதைக்களங்களும் உருவாக்கமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும். தமிழ்ப் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆவதும் தெலுங்குப் படங்கள் தமிழில் ரீமேக் ஆவதும் இன்னிக்கு நேத்து நடக்குற விஷயம் இல்லை. ரஜினியின் பல ஹிட் படங்கள் சிரஞ்சீவியாலயும், சிரஞ்சீவியோட சில ஹிட் படங்கள் ரஜினியாலயும் ரீமேக் செய்யப்பட்டிருக்கு. ஒரு கட்டத்துல ரஜினிக்கும் கமலுக்கும் இரண்டு மாநிலங்கள்லயுமே ரசிகர்கள் அதிகரிக்க, அவர்களோட படங்கள் தமிழ்ல ரிலீஸ் ஆகும்போதே நேரடியா தெலுங்குலயும் டப்பிங் பன்னப்பட்டு ரிலீஸ் ஆகிடுறதால அவங்க படங்கள இப்ப ரீமேக் செய்யிற வாய்ப்பு இல்லை.

அதுமட்டும் இல்லாம தெலுங்கில் டப்பிங் படங்களுக்கும் கிட்டத்தட்ட நேரடி தெலுங்குப் படங்களுக்கு இருக்க அளவு ஓப்பனிங் இருக்கும். ஆனா நம்மூர்ல டப்பிங் படங்கள அம்மஞ்சல்லிக்கு மதிக்க மாட்டோம். (அம்மன், அருந்ததி போன்ற ஒரு சில படங்களைத் தவிற) இப்ப ரஜினி கமல் மட்டுமில்லாம சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி போன்றவங்களோட டப்பிங் படங்களுக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு. இவங்களோட படங்களுக்கு இருக்க வரவேற்பு அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இன்னும் ஆந்திராவில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதுக்கு சிறந்த உதாரணம் தான் இந்த காட்டமராயுடு.

என்னய்யா இவன் சம்பந்தம் இல்லாம பேசுறானேன்னு பாக்குறீங்களா? இருக்கு. தல அஜித் நடிச்ச வீரம் படத்தோட ரீமேக் தான் இந்தப் படம்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா வீரம் படமே ”வீருடு ஒக்கடே” (Veerudokkade) ங்குற பேர்ல ஏற்கனவே ஆந்த்ராவுல ரிலீஸ் ஆன படம். ”கண்டிப்பா நம்மாளுக பாத்துருக்க மாட்டாய்ங்க”ன்னு ஆந்த்ரா மக்கள் மேல நம்பிக்க வச்சி பவன் கல்யான் திரும்ப அந்தப் படத்த ரீமேக் பன்றாருன்னா நிலமைய யோசிச்சுக்குங்க.  

என்னைப் பொறுத்தவரை இதுவரைக்கும் அஜித் குடுத்த ஒரு complete எண்டர்டெய்னர்ன்னா அது வீரம் தான். மங்காத்தாவுல கூட ப்ரேம்ஜி போர்ஷன்லாம் அறுக்கும். ஆனா வீரத்துல ஆக்‌ஷன் , காமெடி செண்டிமெண்டுன்னு எல்லாத்தயும் சரியான கலவையில, எந்த இடத்துலயுமே போர் அடிக்காத மாதிரி குடுத்துருந்தாங்க. வீரத்த நம்ம பாக்கும்போதே அது தெலுங்கு ஆடியன்ஸ்கான படம்னுதான் தோணும். ஏன்னா அது தெலுங்குக்கு ரொம்ப பழக்கப்பட்ட கதை. மொழாம்பழத்துக்கு மூக்கு வச்ச மாதிரி ஒவ்வொருத்தனும் ஆள் சைஸூக்கு கத்தியத் தூக்கிட்டு வந்தாய்ங்கன்னாலே அது தெலுங்குப் படம் தான். சரி இப்ப காட்டமராயுடு எப்டி இருக்குன்னு பாப்போம்.

ரிமேக்குங்குறதால அப்டியே ஜெயம் ராஜா மாதிரி படத்த எடுக்காம கொஞ்சம் கதைய மாத்தி எடுப்போமேன்னு டைரக்டர் முயற்சி பன்னிருக்காப்ள. அதுக்கு முக்கிய என்னன்னா வீரம் படத்துல வர்ற சில காட்சிகள் ஏற்கனவே சில வந்த சில தெலுங்குப் படங்கள்ல ஆட்டையப் போட்டது. அதனால அப்டியே எடுக்க முடியாம அப்டி இப்டி மாத்தி விட்டுருக்காய்ங்க.   ஒரு சில கேரக்டர்கள நீக்கிருக்காங்க. ஒரு சில புது கேரக்டர்கள கொண்டு வந்துருக்காங்க. அங்கதான் கொஞ்சம் ப்ரச்சனையே. வீரம்ல எல்லா கேரக்டர்களும் கரெக்ட்டா பயன்படுத்தப்பட்டு, படத்தோட ஃப்ளோ நல்லாருக்கும். இங்க கேரக்டர்களயும், அந்த கேரக்டர்களோட characteristics அயும் மாத்திட்டதால செகண்ட் ஹாஃப்ல படம் தத்தளிக்கிது.

இண்ட்ரோ சீன் தாறு மாறா எடுத்துருந்தானுங்க. ஸ்லோமேஷன்ல வச்சி அந்த “ராயுடூடூடூடூ”ங்குற BGM ல பவன் வந்து chair ல உக்காரும்போது பயங்கரமா இருந்துச்சி. வில்லன் ஒருத்தன் வந்து “டேய் நா இந்தியா ஃபுல்லா வியாபாரம் பன்றவன்… உன்ன மாதிரி ஊருக்கு ஒரு ராயுடுவப் பாக்குறவன்”ம்பான்… எட்டி அவன் மூஞ்சில ஒரு உதை விட்டுட்டு “ஊருக்கு ஒரு ராயுடு இருப்பான்… ஆனா காட்டமராயுடு ஒரே ஒருத்தந்தான்” ன்னுட்டு போவாரு. இதயும், அந்த intro சாங்கையும் பாத்துட்டு சிலிர்த்துப் போயி சில்லரையெல்லாம் வீசி எறிஞ்சேன். ஆனா அதுக்கப்புறம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ஒட்டஞ்சத்திரம் விநாயக்கம் கேரக்டர்ல இருந்த உயிரோட்டம் காட்டமராயுடு கேரக்டர்ல இல்லை. தம்பிகளுக்காக உழைச்சு நரைச்ச தலை.. கல்யாணமே பன்னக்கூடாது பொண்ணுங்கன்னாலே ஆகாதுங்குற பாலிஸி… இடைவேளையில ”இதான் நான்… இதான் என் வாழ்க்கை”ன்னு சொல்றப்போ இருக்க ஒரு கெத்து, “நீங்க தாடியோட அழகா இருந்தீங்க… தாடி இல்லாம ரொம்ப அழகா இருக்கீங்க”ங்குறப்போ இருந்த மகிழ்ச்சினு நிறைய விஷயம் காட்டமாரயுடுல  மிஸ்ஸிங்.
DSP ah நம்ம கிண்டல் பன்னிக்கிட்டே இருக்கோம். ஆனா  DSP இல்லாத குறை இந்தப் படம்பாக்குறப்போதான் தெரிஞ்சிது. அந்த Mass BGM தான் வீரத்தோட ஒரு முக்கியமான ப்ளஸ்ஸே.. இதுல அனூப் ரூபன்ஸ் நல்லாதான் பன்னிருகாப்ள.. ஆனா அந்த ஃபீல் வரல.ஒரு சில காட்சிகள் தமிழை விட கொஞ்சம் பெட்ட்ராவே எடுத்துருக்காங்க. Intro scene, intro song, ஒரு சில காமெடிக் காட்சிகள், பவன் சுருதிகிட்ட லவ்வ சொல்றா சீன்னு சிலவற்றை சொல்லலாம்.

தெலுங்கு படங்கள்ல வசனங்கள் எப்பவுமே ஸ்பெஷல். ஒரு சாதாரண காட்சிக்கு கூட ரொம்ப மெனக்கெட்டு எழுதுவானுங்க. கேக்கவும் நல்லாருக்கும். ஒரு படத்துல பாலைய்யா “ டேய்.. அடிச்சேன்னு வைய்யி… உன் மூணு தலை முறை சொத்த வித்தாலும் ஆஸ்பத்திரி செலவுக்கு பத்தாது”ம்பாறு. ஆத்தாடி.. ரவிதேஜா ஒருபடத்துல “டேய். நான் கேஷுவலா அடிச்சேன்னாலே எல்லாரும் casualty வார்டுக்குப் போயிருவீங்க”ன்னுவாப்ள… (எங்கடா உக்காந்து எழுதுறீங்க இதெல்லாம்)… காட்டமாராயுடுல அந்த அளவுக்கு மெனக்கெடல்லாம் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிற மத்ததெல்லாம் ரொம்ப சுமார் ரகம்.

ஒரு காட்சில பவன் ஒரு கோயில்ல நிக்கும்போது கால் இல்லாத ஒருத்தர் வந்து பிச்சை கேப்பார். உடனே இவரு பையில இருக்க காசெல்லாம் எடுத்து குடுத்து அனுப்புவாரு. அப்புறம் நாசர் வந்து “அவனுக்கு ரெண்டு காலும் இருக்கு.. உங்கள ஏமாத்திட்டான்”ம்பாறு. அப்பவும் பவன் சிரிச்சிக்கிட்டே இருக்க நாசர் “உங்கள ஏமாத்திட்டான் உங்களுக்கு கோவம் வரலயான்னு கேப்பாரு. அதுக்கு பவன் “கால் இல்லைன்னு நினைச்சி உதவி பன்னுனேன்.. இப்ப அவனுக்கு கால் இருக்குன்னு தெரிஞ்சதுக்கப்புறம் சந்தோஷம்தானே படனும்… ஏன் கோவப்படனும்பாறு.. புல்லரிச்சிருச்சி.

பவன் ஆளு செமை கெத்தா இருக்காரு… அவருக்கே உரிய அந்த ஸ்டைல் மேனரிசம்லாம் சூப்பர். படத்த சிங்கிளா தூக்கி நிறுத்துறாரு. அவருக்கு தம்பிங்களா நாலு மொக்கைப் பீசுங்களப் புடிச்சி போட்டுருக்கானுங்க. கண்றாவியா இருந்துச்சி. அதவிடக் கொடூரம் சுருதி… பாட்டுல அதுபோட்டுருக்க காஸ்டியூமுக்கும் அதுக்கும் தாரை தப்பட்டையில வரலட்சுமி கரகாட்டம் ஆடுற கெட்டப் மாதிரியே இருந்துச்சி. 

பாடல்கள்லாம் சூப்பர். ஆனா என்ன சூப்பரா போட்டாலும் நம்ம பவன் சும்மாதான் நிப்பாரு. தெலுங்குல டான்ஸ் ஆடத்தெரியாத ரெண்டு ஹீரோக்கள் பவனும், மகேஷ்பாவும். ஆனா ஒரு சின்ன மூவ்மெண்ட் பன்னாலும் தியேட்டர்ல விசில பறக்குது.

மொத்தத்துல பவனோட போன சர்தார் கப்பர் சிங்குங்குறா காட்டு மொக்கையப் பாத்துட்டு இதப் பாக்குற தெலுங்கு ஆடியன்ஸுக்கு இந்தப் படம் கண்டிப்பா ட்ரீட் தான். ஆனா வீரம் பாத்த நமக்கு இந்தப் படம் வீரத்தை விட எந்த வகையிலயும் பெட்டரா தெரியல. அம்புட்டுத்தேன்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

ஜீவி said...

என்னதான் முகம் பாடி லாங்வேஜ்ல கெத்து காட்டினாலும் பவன் பாடி பீடி மாதிரி இருக்குறதால சம்திங் மிஸ்ஸிங்.
அத்தாரிண்டிகி தாரேதி படத்திலும் இப்படிதான்... மாஸ் ஹீரோன்னா உடம்பு கொஞ்சம் முறுக்கா இருக்க வேணாமா?

ஜீவி said...

என்னதான் முகம் பாடி லாங்வேஜ்ல கெத்து காட்டினாலும் பவன் பாடி பீடி மாதிரி இருக்குறதால சம்திங் மிஸ்ஸிங்.
அத்தாரிண்டிகி தாரேதி படத்திலும் இப்படிதான்... மாஸ் ஹீரோன்னா உடம்பு கொஞ்சம் முறுக்கா இருக்க வேணாமா?

Anonymous said...

அம்மஞ்சல்லியா???? எங்க ஊர்க்காரனா இருப்பாரோ?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...